புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார்
போதிசத்துவரான சித்தார்த்த கௌதமர் புத்தரான இடம், ஞானம் பெற்ற இடம் புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார். ஒரு மதத்தின் மிகவும் தூய்மையான இடம் (புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார்) மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களால் (பார்பனர்களால் இந்து மதத்தால்) கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் புத்த மதத்தை அழித்தது பிராமணியம். பத்து அவதாரங்களில் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் புத்தர் என்ற சித்தரிப்பை எந்த பிக்குவும், பிக்குணியும், போதிசத்துவரும், அரகந்தரும், எந்த பௌத்த சங்கமும் ஏற்கவில்லை. எந்த பௌத்தரும் ஏற்காத இந்த சித்தரிப்பு மகாபோதி விகாரை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
ஐந்து புத்தர் சிலைகளை ஐந்து பாண்டவர்கள் என்றும், புத்தரின் தாயார் மகாமாயாவின் சின்னம் திரௌபதியாக மாற்றப்பட்டதாகவும் பிக்குகள் வேதனைப்படுகின்றனர். நாங்கள் பௌத்தர்கள், எங்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் பிக்குகளின் வாதம்.
புத்த கயா விகாரின் பிரச்சினை என்ன?
1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் தான் மிகப்பெரிய பிரச்சனை. சட்டத்தின்படி, மகாபோதி விகாரின் நிர்வாகம் பௌத்த சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.
01. 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட புத்தகயா கோயில் மேலாண்மைக் குழுவை (Bodhgaya Temple Management Committee (BTMC)) நிறுவியது.
02. சட்டத்தின்படி, ஒரு இந்து மட்டுமே நிர்வாகக் குழுவிற்குத் தலைமை தாங்க முடியும். மாவட்ட நீதிபதி இந்து அல்லாதவராக இருந்தால், மாநில அரசு ஒரு இந்துவை குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தக் குழுவில் மூன்று வருட காலத்திற்கு நான்கு பௌத்தர்களும் நான்கு இந்துக்களும் இருக்க வேண்டும்,
பௌத்தர்கள் கோரிக்கைகள் என்ன?03.இந்த சமமற்ற பிரதிநிதித்துவம், பௌத்தர்களுக்கு விகாரை நிர்வகிக்கும் உரிமையை மறுக்கிறது.
01. இந்த சமமற்ற பிரதிநிதித்துவம் புத்த சமூகத்தின் தூய்மை தளத்தின் மீதான உரிமையை மறுக்கிறது. எனவே விகாரின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கோரி, பிக்குகள், தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.02. பௌத்த மத விவகாரங்களில் அரசு தலையிடுதல் கூடாது.03. 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புத்தகயா கோயில் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது. மற்றும் சர்வதேச கலாச்சார சட்டங்களுக்கு எதிரானது.04. மகாபோதி மகா விகார சைத்ய அறக்கட்டளை (Mahabodhi Mahavihara Chaitya Trust) என்ற புதிய தன்னாட்சி அமைப்பை உருவாக்கி, அந்த இடத்தின் முழு கட்டுப்பாட்டையும் புத்த சமூகத்திடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்.
பௌத்தர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?
01. பௌத்த தளம் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
பௌத்த தளம் புத்தகயா பௌத்தர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு புத்துணர்ச்சி பெறத்திரும்பும் இந்த விகார் இந்தியாவின் மதிப்புமிக்க வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
02. ஊழல் நிறைந்த பிராமணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
புத்தர் விஷ்ணுவின் அவதாரம் போன்ற குப்பைகளை பார்ப்பனர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஐந்து இந்து (Hindu) உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விகாரின் நன்கொடைகளை தவறாக நிர்வகிக்கின்றனர். மகாபோதி மகா விகாரத்திர்க்கு வரும் யாத்ரீகர்களை மோசமாக நடத்துகின்றனர்.
03. பீகார் அரசு மிரட்டல் தந்திரங்களை கையாளுகின்றது
பீகார் அரசு இந்த நான்கு புத்த (Buddhist) உறுப்பினர்கள் குறைகளைப் புறக்கணித்து மிரட்டல் தந்திரங்களை கையாளுகின்றனர்.
பிக்கு பதந்த் ஆர்யா நாகார்ஜுன சுராய் சசாய்
01.இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்புவதற்காக தனது குடியுரிமையைத் துறந்த ஜப்பானிய புத்த துறவி பதந்த் நாகார்ஜுன் சுராய் சசாய் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.
02. மகாபோதி கோயிலின் "விடுதலை"க்கான இயக்கம், ஜப்பானிய துறவியான பதந்த் ஆர்யா நாகார்ஜுன சுராய் சசாய் அவர்களால் முறையாகத் தொடங்கப்பட்டது.
03. ஆர்ய சசாயி பௌத்தத்தை இந்து அடக்குமுறையிலிருந்து விடுவிக்க வேண்டிய இடம் இந்தியா என்றுரைக்கிறார்.
01. மகாபோதி மகாவிஹாரா முதலில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது அவர் இந்த பெரிய விகாரை கட்ட 100,000 தங்க நாணயங்களை செலவிட்டார்.
02. இந்தியாவின் அடையாளம் புத்தர் மற்றும் அசோகரில் வேரூன்றியுள்ளது. தேசிய சின்னமான சிங்கங்கள் மற்றும் தர்ம சக்கரத்துடன் கூடிய அசோக தூண் நமது பாரம்பரியத்தை குறிக்கிறது. இருப்பினும், அசோகர் கட்டிய 84,000 ஸ்தூபங்களில், யானையுடன் கூடிய ஒரு ஸ்தூபி (புத்தரை குறிக்கும்) காணாமல் போனது. இந்த யானை 1890 இல் மஹந்தின் இல்லத்தில் நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. புத்தரின் மரபு ஏன் அத்தகையவர்களின் கைகளில் உள்ளது?
03. புத்தகயா முற்றிலும் பௌத்த தளம், ஆனால் புத்தகயா கோயில் மேலாண்மைக் குழு (BTMC) பௌத்தர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. BTMC இன் பிராமண உறுப்பினர்கள் பிரதான கோயிலில் மணிகளை அடித்து தூபம் போடுகிறார்கள், மேலும் புத்தரின் சிலைகள் சிவன் மற்றும் பாண்டவர்களுடன் இணைத்து, இந்த இடத்தை இந்துமயமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக