வியாழன், பிப்ரவரி 13, 2025

பொன்னூர் மலை

குந்த குந்தாச்சாரியார்

திருவள்ளுவர்  வந்தவாசியில் வாழ்ந்தவர்




அமைவிடம்

பொன்னூர் மலை, பொன்னூர் கிராமம்,

வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 604408 


பொன்னூர் மலை

பொன்னூர் மலை (அ) குந்தாச்சாரியார் மற்றும் மஹாவீரர் காண படிகளின் தொடக்கத்தில் தர்ம சக்கர ஸ்தூபி  உள்ளது.  


பொன்னூர் மலைகளில் உள்ள ஒரு சிறிய இயற்கை குகையில் குந்த குந்தாச்சாரியார் தவம் செய்து பனை ஓலைகளில் சமண மதம் குறித்து சுமார் 84 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தமிழர் இல்லை. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் பிராகிருத மொழியில் உள்ளது. 


குந்த குந்தாச்சாரியார் பெருமைகள்

01. குந்த குந்தாச்சாரியார் 11 வது வயதில் துறவு ஏற்றார். துறவற ஒழுக்கம், கடுந்தவம் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கினார்.  

02.ஆசாரியார்களும் ஆகமங்களாலும் பெரிதும் போற்றப்படும் கவியுக வைர்வஜனாக திகழ்ந்தார்.   

03. பகவான் மகாவீரரும், கௌதம கணதரருக்கும் அடுத்தவராக மூன்றாம் இடத்தில் வைத்து போற்றப்படும் முதன்மை ஆச்சாரியராக  விளங்குபவர்.  

04.தரை  பூமிலிருந்து 4 அங்குல உயரத்தில் எதையும் தொடாமல் அந்தரத்தில் செல்லும் அற்புத சக்தி பெற்றவர் 

05. திருக்குறள், சமய சாரம், நியம சாரம், சித்தாந்த பாகுடம், மோட்ச பாகுடம், தத்துவார்த்த சூத்திரம் முதலான தத்துவ நூல்களை படைத்தவர். 

06.கருதகேவலி பத்ரபாகுவிற்கு பின்னர் சமணம் இரண்டாக பிளவுபட்டது. திகம்பர சுவேதாம்பர (வெண்ணிற ஆடை மகா சாது) ஏற்பட்ட விவாதத்தின் போது (குஜராத்தில்) திகம்பர தம்மமே மூல நிர்கந்த தம்மம் என்பதை நிலைநாட்டினார். குஜராத்தில் பல சுவேதாம்பரர்களை  திகம்பரர்களாக மாறுவதற்கு காரணமாக இருந்தவர்.  

07. மேலும் பிளவுகள் இருக்கக்கூடாது என்று சாதுக்களை நான்காக பிரிக்கப்பட்டது. 01. திராவிடகணம் (தேசிய கணம்) 02. சேனகணம் 03. காலோக்கணம் 04. பலோத்ரகணம் என பெயரிட்டனர். இந்நான்கும் 01. நந்தி சங்கம் 02. சேனசங்கம் 03. வீரசங்கம் 04. தேவசங்கம் என்ற சங்கங்களாக இயங்கியது. குந்த குந்தர் நந்தி சங்கத்தை சார்ந்தவர் (திராவிட கணம்). 

08.விடுதலை பெறுவதற்கு நிர்வாணம் (ஆடையின்றி) இன்றியமையாதது.  பெண்கள் நிர்வாணமாக அலைய முடியாது. அதனால் பெண்கள் முக்தி அடைய முடியாது. 

 



குந்த குந்தாச்சாரியார் காலம்

குந்த குந்தாச்சாரியார் காலத்தை கணிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை இவர் காலத்தை குறிப்பிடுகின்றனர். 

கிபி ஆறாம் நூற்றாண்டு டாக்டர் கே வி பாடக் குந்த குந்தாச்சாரியார் கி.பி 528ல் தோன்றி இருக்கக்கூடும் என்றுரைக்கிறார். ராஷ்டிரகூட மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய மூன்றாவது கோவிந்த மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கிபி 797 முதல் 802 ஆண்டு காலத்தை சார்ந்த செப்புத் தகடுகளை ஆதாரமாக குறிப்பிடுகிறார்.  

கிபி மூன்றாம் நூற்றாண்டு பண்டிட் நாதுராம் பிரேமி அவர்கள் இந்திர நந்தி ஆசாரியரின் கருத அவதாரத்தை ஆதாரமாகக் கொண்டு மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த பின் சுமார் 683 ஆண்டுகள் கழித்து ஆசாரிய குந்தகுந்தர் தோன்றி இருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார்.  
 
மேலும் தமது சூத்திர பாகுடத்தில் பெண்கள் முக்தி அடையமுடியாது. திகம்பர துறவிகளே உண்மையான அறவோர் என்று குந்த குந்தாச்சாரியார் கூறியுள்ளார்.  
 
ஆச்சாரியர் குந்தகுந்தர் காலத்தில் அடைந்த கிரியா திகம்பர சுவேத மரங்களுக்கு இடையே வாதம் நடைபெற்றது என்று கூறுவதனால் கூறுவதைக் கொண்டே இவர் காலத்தில் சமணம் பிரிந்தது.    

கிபி முதல் நூற்றாண்டு பேராசிரியர் திரு சக்கரவர்த்தி ஐயனார் நந்தி சங்க பட்டா வழியை ஆதாரமாகக் காட்டி குந்தகுந்தர் முதல் நூற்றாண்டை சார்ந்தவர் என்று உரைக்கிறார். ஆசாரியர் தமிழகத்தை சார்ந்தவர் என்றும் கூறுகிறார்.

பொதுமறையாம் திருக்குறளை படைத்தவர் குந்த குந்தாச்சாரியார். அவரது சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும், திருக்குறளை அரங்கேற்றிய திரு உள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் ஆயிற்று. மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்று கருதும் பரவலாயிற்று என்பர் திருக்குறள் காலம் கிபி முதல் நூற்றாண்டில் என்பதால் ஆசாரிய குந்தகுந்தர் காலமும் என பேராசிரியர் குறிப்பிடுகிறார். 

டாக்டர் ஏ.என் உபாத்யே குந்தகுந்தர் முதல் நூற்றாண்டை சார்ந்தவர் ஆனால் திருக்குறளை இயற்றினார் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என குறிப்பிடுகிறார்.
 
குந்த குந்தாச்சாரியார் பிறப்பு/ வாழ்விடம்
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டக்கல் அருகே வைரகரூரில் உள்ள கொனகொண்டலா என்ற சிறிய கிராமத்தில் பத்மநந்தியாக ஆச்சார்ய குண்ட் குண்ட் பிறந்தார். ஆனால் அவர் கிராமத்தின் பெயரால் குண்ட் குண்ட் என்று அழைக்கப்பட்டார். 

திகம்பர துறவிகள் எப்பொழுது ஒரே இடத்தில் இருந்து தவம் புரிந்தார் என்று கூறமுடியாது. ஆனால் குந்த குந்தாச்சாரியார் நிலகிரி மலையில் (பொன்னூர் மலை) அதிக நாட்கள் தங்கி இருந்தார். 

திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள்

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூர் வாழ்ந்தவர், வந்தவாசியில் வாழ்ந்தவர் என்கிறார்கள் சமணர்கள். திருக்குறள் குறித்து சமண ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று காண்போம். 

திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே காலகட்டத்தில்தான் அந்த மலையில் ‘குந்தக் குந்தர்’ என்னும் சமண முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சமண மதத்தில் ‘திரி’ என்கிற சொல்லாடல் புழக்கத்தில் உண்டு. 'குந்தக் குந்தர்’ அந்த மலையில் அமர்ந்து எழுதிய ‘திரிகுறள்’ தான், திருக்குறளாக மாற்றம் அடைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள சமண கோவில்களில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. 
 
குந்தக் குந்தர் சீடர் திருவுள்ளம் நாயனார் மதுரை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றியதாகவும், திருக்குறளை அரங்கேற்றிய திரு உள்ளம் நாயனாரின் இப்பெயர் மருவி பிற்காலத்தில் திருவள்ளுவர் ஆயிற்று மேலும் அவரே திருக்குறளை எழுதினார் என்று கருதும் பரவலாயிற்று. 





தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் திருக்குறள் சம சமயத்தை சார்ந்தது என்றுரைக்கிறார்    

01.ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரர் பெயர். ரிஷபநாதர் தான் முதல் தீர்த்தங்கரர்.  

02.பொறிவாயில் ஐந்தவித்தான் மற்றும் மலர்மிசை ஏகினான்,  அறவாழி அந்தனன் (தர்மசக்கரம் அறவாழி, விதி,  வினை) சமணத்தை குறிக்கும் சொற்கள். 

03.தாமரை சமண சமய அடையாளம். தீர்த்தங்கரர் நடக்கும்பொழுது அவருடைய திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. 

04.அகிம்சை என்றால் அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை,    புலால் மறுத்தல். பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை          பயக்கும் எனின். பொய் சொல்லினால் பொய் சொல்லியாயினும் கொலையை தடுக்கலாம்.

05.பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தானம் முன் தரும். ஊழலையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது இன்று. பவர் தவிர மற்ற மதத்தினர் யாரும் திருக்குறள் எங்கள் வேதம் எங்கள் ஓட்டு என்று கூறவில்லை

06. நீலகேசி என்னும் நூலில் மொக்க சுருக்கத்தில் அறுபதாம் செய்யுள் உரையிலேயே சமய சிவஞான முனிவர் என்னும் ஜெனர் பொய்மையும் வாய்மை படர்ந்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பது எம் ஒத்து எங்கள் வேதம் என்று உரைக்கிறார்

(சமயங்கள் வளர்த்த தமிழ் - மயிலை சீனி வேங்கடசாமி-பத்தொன்பதாவது தலைப்பில் "ஜைன மதமும் திருக்குறளும்" என்ற தலைப்பு)


மறுக்க வேண்டிய தகவல்கள்

01. அற்புத சக்தி

தரை  பூமிலிருந்து 4 அங்குல உயரத்தில் எதையும் தொடாமல் அந்தரத்தில் செல்லும் அற்புத சக்தி பெற்றவர்.  க்ருத்தபிச்சர்  என்பது மற்றொரு பெயர். அவர் வான் வழியாக சென்ற போது அவரது மயில் பீலிகை தவறி கடலில் வீழ்ந்து விட அருகில் இருந்த தீவு ஒன்றில் காணப்பட்ட கழுகுகளின் இறகுகளை  பீலிகையாக  கொண்டார்.  

இது உயர்வு படுத்தி சொல்ல பயன் படுத்தியது. பௌத்தத்திலும் இலங்கை வரலாற்றை கூறும் தீபவம்சம், மகாவம்சம் நூல்கள் பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை புரிந்ததாக குறிப்பிடுகிறது. மூன்று முறையும் பகவன் புத்தர் வான்வழியாக இலங்கை சென்றதாக குறிப்பிடுகிறது. பெருபான்மையான பௌத்த அறிஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. 

02. திருக்குறள் நூலை படைத்தவர் 

01. திரி குறளை படைத்தது தமிழர் அல்ல என்பது ஏற்புடையது இல்லை. 

02. குந்த குந்தர் எழுதிய நூல்கள் இப்ராகிருத மொழில் உள்ளது. திரி குறளை மட்டும் தமிழில் எழுத கரணம் என்ன?  

03.பெண் பிறவியைத் தாழ்ந்த பிறவியாகச் சமண சமயம் சித்திரிக்கிறது. ஒருவன் யாரையாவது வஞ்சிப்பானானால் (ஏமாற்றுதல் போல்வன) அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை ஆகும். 

பெண்ணாகப் பிறந்த ஒருவர் வீடுபேறு அடைவதற்கு வழியே இல்லை என்பது திகம்பரச் சமணர்களின் முடிவாகும். எனவே, வீடுபேறு அடைய விரும்பும் பெண், அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து துறவு மேற்கொண்டு ஒழுக வேண்டும் என்பது இப்பிரிவினரின் கருத்தாகும்.  

சமணர்களுள் ஒரு பிரிவினரான சுவேதாம்பரர், பெண்கள் துறவு நெறி மேற்கொண்டு மன உறுதியுடன் செயல்பட்டால் அவர்கள் வீடுபேறு அடைய முடியும் என்று நம்பினர். 

04.சமணர்களின் கூற்றுப்படி, உயிரினங்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் வன்முறையாளர்களாகவே கருதப்படுகின்றனர். மருத்துவர்கள் தடுப்பூசிகளை வழங்குவதால், உயர் வாழ்க்கையைப் பாதுகாக்க மருத்துவர்கள் உயிரை எடுக்கிறார்கள். விவசாயிகள் உழவு மற்றும் பயிர்களை நடவு செய்யும் போது உயிரைப் பறிக்கிறார்கள்.

~திருக்குறள் மறுப்பை பிறகு பார்க்கலாம்~

குறிப்பு 
01. குந்த குந்தாச்சாரியர்  வரலாறு - திரு இ ஜம்புகுமாரன் ஜெயின் 
02.  சமயங்கள் வளர்த்த தமிழ் - மயிலை சீனி வேங்கடசாமி

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக