அடிமையும் தீண்டாமையும் சமூக ஒழுங்கு இல்லாதது. அடிமையும் தீண்டாமையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கிறார்கள். தீண்டாமை அடிமை முறையை விட மிக கொடுமையானது
A.ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை
01. பெரும் எண்ணிக்கை: ரோமப் பேரரசில் பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள்.
02. பன்மொழித் திறமை பெற்றிருந்த அடிமைகள்: கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும். வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர். பேரரசில் சுருக்கெழுத்து பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள்.
03. பல கலைகள் நிகழ்த்துவோராக இருந்தனர்: சமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர்.
04.வர்த்தகத்தில் அடிமைகள்: முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர். வர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். அடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். வர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.
05.ராணுவத்தில் அனுமதிக்கப்படவில்லை: பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகிவிடும். எனவே ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
B.அமெரிக்காவில் அடிமைகள் (நீக்ரோக்கள்)
01.வேறுபாடின்றி ஒன்றாக இருந்தனர்: புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர்.
02.அடிமைகள் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள்: அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
03.அடிமைகள் சுதந்திரத்தை வாங்கினார்கள்: தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். பல அடிமைக்கைத்தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.
C.அடிமை முறை தீண்டாமை கொடுமையை எவ்வாறு வேறுபட்டது
01.ஊதியம்: அடிமை வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவனுக்குரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
02.உணவு: பணியில்லை என்றால் அடிமைக்கு உணவில்லை என்பதில்லை, தமக்கே உணவில்லை என்றாலும் அடிமைக்கு உணவளிக்க வேண்டியது முதலாளியின் கடமை.
02.அனுமதி: அடிமை இராணுவ பயிற்சி தவிர பிற எந்த துறையிலும் பயில அனுமதி மறுக்கப்படவில்லை.
03.பாதுகாப்பு: அடிமையை பாதுகாப்பது முதலாளியின் மிக முக்கிய பணி. அடிமைக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் அளிக்கவேண்டியது முதலாளியின் கடமை.
04.அதிக ஊதியம்: அடிமைகள் பிற தொழிலாளியை விட அதிக ஊதியம் பெறுபவர்கள்
05.உரிமை: சொத்துரிமை, கல்வி உரிமை, ஏதும் மறுக்கப்படுவதில்லை. கல்வி, செல்வம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் அடிமைக்கு சாத்தியம்.
06.விடுதலை: அடிமை, அடிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் அடிமைதனத்திலிருந்து விடுதலை பெற முடியும்.
07.கீழ்படிதல்: அடிமை தன் முதலாளிக்கு மட்டுமே கீழ்படிய வேண்டுமே தவிர பிறருக்கு அவன் அடிமை இல்லை.
08.இலபம் இட்டுதல்: வணிக ஒப்பந்தங்களில் அடிமை தம் முதலாளியுடனோ (அ ) மூன்றாம் நபருடன் சேர்ந்து இலபம் இட்டலாம்.
09.கட்டாயம்: ஒருவர் அடிமையை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனால் அவர் அடிமையை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
10.அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்: அடிமையை ஒரு முதலிடகவே பார்க்கப்படுகிறது. அடிமைக்கு கல்வி அளிப்பதால் அடிமையின் சந்தை மதிப்பு உயர்கிறது. அடிமைகள் அதிக மதிப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுவதால், மேய்ச்சல் நிலங்களில், வயல்களில் அடிமைகளை பயன்படுத்துவதில்லை. மாற்றாக குறைந்த ஊதியத்தில் சுதந்திர மனிதர்கள் வேலைக்கமர்த்ப்படுகின்றனர்.
11.கடமை: தீண்டாமை கடமையாக்கப்பட்டுள்ளது. அடிமை அவ்வாறு கடமையாக்கப்படவில்லை.
BAWS - பாபா சாகிப் பேசும் எழுத்தும் - தமிழ் - தொகுதி 9 - இயல் 3
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக