வியாழன், ஜனவரி 23, 2025

காஞ்சீவரம் தொன்மையான பௌத்த தளம் XXVII தேவரியம்பாக்கம்

 தேவரியம்பாக்கம்

அமைவிடம் 

ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், தேவரியம்பாக்கம் கிராமம்

தேவரியம்பாக்கம் ஊராட்சி, வாலாஜாபாத் வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம் 631605


இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். 

புத்தரின் சிலை தேவரியம்பாக்கத்தில் பஜனைக் கோவில் எனப்படும் பெருமாள் கோவிலில் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுடன் கிடத்தப்பட்டிருந்தது. பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. 



சிலையமைப்பு

அழகிய வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன புத்தர் சிலை. அமர்ந்த நிலையில் தியானத்தில் உள்ள சிலை. ஓரடி உயரமுள்ள சிலை. காதுகள் இரண்டும் தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. சுருள் சுருளான தலைமுடி. இடப்புறத் தோள்பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடை உள்ளது. இச்சிலையின் தலையில் சுருள் முடி போன்ற அமைப்பும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால், இடது தொடையின் மீதும், இடது கை, வலது கால் மீதும் வைத்த நிலையில் காணப்படுகிறது. மேலும், வலது கையின் விரல்கள் தரை நோக்கி உள்ளது (நிலத்தை தொடும் முத்திரை - புமிஸ் பரிசா முத்திரை).

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை. காலம் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும்  பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர்.

ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்
புத்தர் சிலை கிடைக்கப்பெற்ற தேவரியம்பாக்கம் பெருமாள் ஆலயம் 100 ஆண்டுகளுக்கு முன் ஓலைக் குடிசையாக இருந்ததாகவும், அதில் சீனிவாச பெருமாள் புகைப்படத்துடன் இச்சிலையை வைத்து வணங்கி வந்ததாகவும் முன்னோர்கள் சொல்லியதாக இவ்வாலயம் அருகே வசித்துவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தெரிவித்தார். 

 

புதன், ஜனவரி 22, 2025

தீண்டாமை அடிமை முறையை விட மிக கொடுமையானது



அடிமையும் தீண்டாமையும் சமூக ஒழுங்கு இல்லாதது. அடிமையும் தீண்டாமையும் ஒன்று என்று குழப்பிக்கொள்கிறார்கள். தீண்டாமை அடிமை முறையை விட மிக கொடுமையானது

A.ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை 

01. பெரும் எண்ணிக்கை: ரோமப் பேரரசில் பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள்.

02. பன்மொழித் திறமை பெற்றிருந்த அடிமைகள்:  கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும். வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர். பேரரசில் சுருக்கெழுத்து பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். 

03. பல கலைகள் நிகழ்த்துவோராக இருந்தனர்:  சமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர்.

04.வர்த்தகத்தில் அடிமைகள்: முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர். வர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். அடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். வர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.

05.ராணுவத்தில் அனுமதிக்கப்படவில்லை:  பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகிவிடும். எனவே ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

B.அமெரிக்காவில் அடிமைகள் (நீக்ரோக்கள்) 

01.வேறுபாடின்றி ஒன்றாக இருந்தனர்: புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர். 

02.அடிமைகள் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள்: அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

03.அடிமைகள் சுதந்திரத்தை வாங்கினார்கள்: தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். பல அடிமைக்கைத்தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.  

 C.அடிமை முறை தீண்டாமை கொடுமையை எவ்வாறு வேறுபட்டது

01.ஊதியம்: அடிமை வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவனுக்குரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

02.உணவு: பணியில்லை என்றால் அடிமைக்கு உணவில்லை என்பதில்லை, தமக்கே உணவில்லை என்றாலும் அடிமைக்கு உணவளிக்க வேண்டியது முதலாளியின் கடமை. 

02.அனுமதி: அடிமை இராணுவ பயிற்சி தவிர பிற எந்த துறையிலும் பயில அனுமதி மறுக்கப்படவில்லை. 

03.பாதுகாப்பு: அடிமையை பாதுகாப்பது முதலாளியின் மிக முக்கிய பணி. அடிமைக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் அளிக்கவேண்டியது முதலாளியின் கடமை.

04.அதிக ஊதியம்: அடிமைகள் பிற தொழிலாளியை விட அதிக ஊதியம் பெறுபவர்கள்

05.உரிமை: சொத்துரிமை, கல்வி உரிமை, ஏதும் மறுக்கப்படுவதில்லை. கல்வி, செல்வம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் அடிமைக்கு சாத்தியம்.

06.விடுதலை: அடிமை, அடிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் அடிமைதனத்திலிருந்து விடுதலை பெற முடியும்.

07.கீழ்படிதல்: அடிமை தன் முதலாளிக்கு மட்டுமே கீழ்படிய வேண்டுமே தவிர பிறருக்கு அவன் அடிமை இல்லை.

08.இலபம் இட்டுதல்: வணிக ஒப்பந்தங்களில் அடிமை தம் முதலாளியுடனோ (அ ) மூன்றாம் நபருடன் சேர்ந்து இலபம் இட்டலாம். 

09.கட்டாயம்: ஒருவர் அடிமையை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனால் அவர் அடிமையை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

10.அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்: அடிமையை ஒரு முதலிடகவே பார்க்கப்படுகிறது. அடிமைக்கு கல்வி அளிப்பதால் அடிமையின் சந்தை மதிப்பு உயர்கிறது. அடிமைகள் அதிக மதிப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுவதால், மேய்ச்சல் நிலங்களில், வயல்களில் அடிமைகளை பயன்படுத்துவதில்லை. மாற்றாக குறைந்த ஊதியத்தில் சுதந்திர மனிதர்கள் வேலைக்கமர்த்ப்படுகின்றனர்.

11.கடமை: தீண்டாமை கடமையாக்கப்பட்டுள்ளது. அடிமை அவ்வாறு கடமையாக்கப்படவில்லை.


BAWS - பாபா சாகிப் பேசும் எழுத்தும் - தமிழ் - தொகுதி 9 - இயல் 3 

புதன், ஜனவரி 01, 2025

மகாபோதி சத்துவர் - அவலோகிதேஸ்வர் (I)


போதிசத்துவர்கள் 

புத்தராக முனையும் ஒரு மனிதரே போதிசத்துவர். புத்தராய் ஆவதற்கு தம்மை தகுதியாக்கிகொள்ள 10 வாழ்வுகளில் போதிசத்துவராய் இருந்தாக வேண்டும். கௌதம புத்தர் போதிசத்துவராய் இருந்து புத்தரானார்

 போதிசத்துவர்கள் மூன்று விதம்

01. அதிவிரைவில் புத்தநிலையை அடைய விழைபவர்கள்

02. மற்ற உயிர்கள் புத்தநிலை அடைகையில் தானும் புத்தநிலை அடைய விழைபவர்கள் 

03.அனைத்து உயிர்களும் புத்தநிலை அடையும் வரையும் தனது புத்தநிலை அடைவதைத் தாமதப்படுத்துபவர்கள்

மகாபோதி சத்துவர் அவலோகிதேஷ்வரர் மூன்றாவது வகையை சார்ந்தவர். 

புத்தர், அரகந்தர், போதிசத்துவர் வேறுபாடுகள்

பௌத்தத்தில் புத்தம், தம்மம் மற்றும் சங்கம் என்னும் மும்மணிகள் உள்ளது. சங்கத்தில் உள்ளவர்களை புத்தர், அரகந்தர், போதிசத்துவர் மற்றும் பிக்குகள் என்று வகைப்படுத்தலாம்.  புத்தர், அரகந்தர், போதிசத்துவர் வேறுபாடுகள். 

01. போதிசத்துவ மற்றும் புத்தர் நிலை

புத்தராக முனைபவரே போதிசத்துவர். போதிசத்துவராக இல்லாமல் புத்தராக முடியாது. தேரவாத தத்துவத்தின் படி, புத்தர் தன்னை போதிசத்துவர் என்று அழைத்தார். முழு ஞானம் பெற்ற பின்னரே அவர் தன்னை புத்தராக அறிவித்தார்.

02. நிப்பாணம்

நிப்பாணத்தை அடையும் தருவாயில் அதனை மக்களுக்காக தள்ளிபோட்டவர் போதிசத்துவர். எனவே போதிசத்துவர் இறப்பு  இறப்பு என்று அழைக்கப்படும். அரகந்தரின் இறப்பு பரிநிப்பணம் என்றும் புத்தரின் இறப்பு மகாபரிநிப்பணம் என்று அழைக்கப்படும்

03.நிப்பாண வழிமுறைகள்

பிக்குகள், போதிசத்துவர்கள், அரகந்தர்கள்  நிப்பாணத்தை அடைய பகவன் புத்தர் அளித்த வழிமுறைகள் பின்பற்றி நடப்பவர்கள். இவர்களுக்கு ஆசிரியர் புத்தரே. புத்தருக்கு ஆசிரியர் யாரும் இல்லை. அவரின் போதனைகள் பகவன் புத்தரின் போதனைகள். பரிநிப்பாணத்தை அடையும் வழியை கண்டறிந்தவரும் புத்தரே.  

 04.தூய்மையின் அடையாளம் தாமரை

பகவன் புத்தர் தாமரையின் மீது நின்றோ, அமர்ந்தோ அல்லது கிடந்தோ இருப்பார். ஆனால் போதிசத்துவர்கள் தாமரையை தம் கரங்களில் தங்கியிருப்பர். 

 05. பற்று அற்றவர்கள் - ஆபரங்கள்

புத்தர் ஆபரங்கள் ஏதுமின்றி இருப்பார். ஆனால் போதிசத்துவர்கள் பல ஆபரங்களை அணிந்து இருப்பர். புத்தரும் போதிசத்துவரும் பற்று அற்றவர்கள் எனினும் சிற்ப முறையில் வேறுபடுத்தி காண்பிக்க இவ்வணிகலன்கள் கொடுக்கப்பட்டது   

06. வரிசை எண்ணிக்கை 

28 ஆவது புத்தர் தான் கௌதம புத்தர். போதிசத்துவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் சிறப்பு பெற்ற போதிசத்துவர்கள் எட்டு பேர்.  

01. Avalokiteshvara - அவலோகிதேஸ்வர  

02. Manjushri - மஞ்சுஸ்ரீ 

03, Maitreya - மைத்ரேய 

04. Vajrapani - வஜ்ரபாணி 

05. Mahasthamaprapta - மஹாஸ்தமபிராப்தா, 

06. Samantabhadra - சமந்தபாட்ரா 

07. Ksitigarbha - க்ஷிதிகர்பா 

08.Sarvanivaranaviskambhi - சர்வநிவாரணவிஷக்கம் 

போதிசத்துவர்களிலே மிக சிறப்பு பெற்ற போதிசத்துவர் தான் அவலோகிதேஸ்வரர். அவல குரல் கேட்டாலே உதவுபவர் அவலோகிதேஸ்வரர்.     

 07. பெயர்களின் எண்ணிக்கை

பகவன் புத்தர் 1000 பெயர்களை கொண்டவர். மகாபோதி சத்துவர் அவலோகிதேஸ்வர 108 பெயர்களை கொண்டவர்   

அவலோகிதேஸ்வர உருவமைப்பு 


01. வடிவங்களின் எண்ணிக்கை
அவலோகிதேஸ்வர் 33 வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. தாந்திரிக் முறையில் அவலோகிதேஸ்வர் 108 வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.   

02. அமிதாபா புத்தர்: அவலோகிதேஸ்வர் தலைக்கவசத்தில் அமிதாபா புத்தரின் ஒரு சிறிய உருவம் அமைந்திருக்கும். அமிதாபா என்றால் “எல்லையற்ற ஒளி” என்று பொருள். அவர் ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர் தான் அமிதாபா புத்தர்.

03. தலைப்பாகை: மூன்று முனை தலைப்பாகை.

04. பார்வை: கீழ் நோக்கிய பார்வை

05பல கைகள்: இரண்டு, நான்கு, எட்டு, ஆயிரம்  கைகளைக் கொண்டவர். 

இரண்டு கைகள் - 

இடது கையில் தாமரை 

வலது கை வரத முத்திரையுடன் (அ) அபய முத்திரையுடன்.

நான்கு கைகள் :  

அவரது முதல் இரண்டு கைகள் அவரது இதயத்தில் ஒன்றாக அழுத்தப்பட்டுள்ளன. 

-மேல் கை : இடது கையில் தாமரை,  வலது கையில் ஜெபமாலை

-கீழ் கை : இடது கையில் ஜெபமாலை வலது கையில் வரத முத்திரை

06. பல தலைகள்: கருணையின் போதிசத்துவரான அவலோகிதேஸ்வரர் பெரும்பாலும் பதினொரு தலைகளுடன் சித்தரிக்கப்படுகிறார். எட்டு தலைகள் திசைகளையும், மூன்று தலைகள் செங்குத்து பிரிவுகளான மேல், நடு மற்றும் கீழ் ஆகியவற்றை குறிக்கிறது.

07. ஏழு நகைகள்: அவர் வளையல்கள், கழுத்தணிகள், கணுக்கால்கள், நீண்ட காது குழாய்கள், ஒரு விலையுயர்ந்த நீண்ட நகைச் சங்கிலி போன்ற ஏழு நகைகள் அணிந்துள்ளார். அவரது தலையில் ஐந்து நகைகள் கொண்ட கிரீடம் உள்ளது. இது ஐந்து புத்த குடும்பங்களைக் குறிக்கிறது. 

08. பாலினம் : .அழகிய இளம் உடல். மென்மையான உடல். போதிசத்துவத்தின் வடிவம் பாலினத்தை மீறி பல பிரதிநிதித்துவங்களைக் கொண்டுள்ளது. ஆணாகவும், பெண்ணாகவும் ஆண் பெண்ணாகவும் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில், அவலோகிதேஸ்வரா பெரும்பாலும் குவான்யின் என அழைக்கப்படும் ஒரு பெண் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார்.

09. தாமரையைத் தாங்கியவர்தாமரையை வைத்திருக்கும் பெரிய கருணையாளர். பத்மபாணி என்று அழைக்கப்படுகிறார். இடது கையில் வெள்ளை தாமரை முழுமையாகப் பிடித்திருப்பார்.

10. ஆடை: அவலோகிதேஸ்வரர் இந்திய அரச தோற்றத்தை சித்தரிக்கும் வகையில் பட்டு ஆடைகளை அணிந்துள்ளார்.  

11. திரிபங்கா தோரணை: அமர்ந்திருக்கும் மற்றும் நிற்கும் அவலோகிதேஸ்வரரின் இரண்டு பொருட்களும் திரிபங்கா தோரணையில் சற்று வளைந்த வளைவு உருவத்தை நேர்த்தியாக எதிரொலிக்கின்றன. 
 
12.பதினைந்து வடிவங்கள்: பௌத்த உருவகத்தின் படி, அவர் பின்வருமாறு பதினைந்து வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளார். 01. சடாக்சாரி 02. சிம்ஹானாதா 03. கசர்பனா 04. லோகநாதா 05. ஹலாஹலா 06. பத்மநார்தேஸ்வரர் 07. ஹரிஹரிஹரிவாஹனா
08. ட்ரைலோக்யவசங்கரா 09. ரக்தலோகேஸ்வரர் 10. மாயாஜாலக்ரம 11. நீலகண்டா 12. சுகதி சந்தர்சனம் 13. பிரேதசந்தர்பிதா 14. சுகாவதி லோகேஸ்வரா 15. வஜ்ரதர்மம் .


அவலோகிதிஸ்வரர்  வைதிக கடவுள் உருவ வேறுபாடுகள்

(A) அவலோகிதிஸ்வரர் – சிவன் / தட்சிணா மூர்த்தி

01. இணை: அவலோகிதிஸ்வரரும் தாராவுடன் அமர்ந்த நிலையில் இருப்பது சிவன் மற்றும் உமாவை நினைவுறுத்துவதாக உள்ளது.
 
02. ஈஸ்வரர்: அவலோகிதிஸ்வரர் என்னும் பெயர் அவலோகித +ஈஸ்வரர் ஆகிய சொற்களின் கூட்டுச் சொல். இப்பெயரின் பிற்பகுதி, ஈஸ்வரர் என்பது சிவனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றான மகேஷ்வரரை வழக்கமாகக் குறிக்கும்.
 
அவலோகிதேஸ்வரரின் 108 வடிவங்களின் பெயர்களை கவனித்தால் அப்பெயர்கள் அனைத்தும் லோகிதேஷ்வரா என்று முடியும். தேராவதா பௌத்தம் பாலி மொழி கொண்டது. மகாயான பௌத்தம் சம்ஸ்கிருத மொழியை கொண்டது. எனவே சம்ஸ்கிருத மொழியில் இருந்தால் அவை வைதிகம் சார்ந்தது என்று பொருள் கொள்ள முடியாது.
 
03.தாமரை செண்டு: சிவன் தாமரையை தாங்கியிருக்கமாட்டார்  சீலத்திற்கும் (தாமரைக்கும்) சிவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை  தக்கிணாமூர்த்தி வடிவங்கள் கடக ஹஸ்த முத்திரையுடன் அமைக்கப்படவேண்டும் என்ற சிற்ப  விதியுண்டு. தாமரை பூவை கையில் பிடிக்க ஏற்ற முத்திரை கடக ஹஸ்த. தாமரை பௌத்த அடையாளம். இது தூய்மையை குறிக்கும் அடையாளம். இத்தூய்மை அடையாளத்தை வைதிகம் களவாடி பல கடவுள்களுக்கு கொடுத்துள்ளது 

04.சிவனிடமிருந்து அகஸ்தியர் தமிழ் மொழியைக் கற்றார்:  சைவர்கள் - பொதிகை மலையில் முருகன் அ சிவனிடமிருந்து அகத்தியர் தமிழ் கற்றதாக குறிப்பிடுகின்றனர். முருகனும் சிவனும் புனைவு, வரலாறு இல்லை.  

பௌத்தர்கள் - அகத்தியர் தமிழை அவலோகித்தாரிடமிருந்து கற்றதாக குறிப்பிடுகின்றார். அவையடக்கம் - வீரசோழியம் பாயிரம் 

ஆயும் குணத்து அவலோகிதான் பக்கல் அகத்தியன் கேட்டு 

ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்கு உரக்க   (புத்தமித்ரரனார் எழுதிய வீர சோழியம்) 

05. தமிழ் நாடு / பௌத்த நாடுகள்இளமை கோலத்துடன் கல்லால மர நிழலில் தக்கிணாமூர்த்தி ஆகிய சிவபிரான் தமிழக கோவில்களில் மட்டுமே காணமுடியும். தக்கிணாமூர்த்தி வடிவங்கள் கடக ஹஸ்த முத்திரையுடன் அமைக்கப்படவேண்டும் என்ற சிற்ப  விதியுண்டு. தாமரை பூவை கையில் பிடிக்க ஏற்ற முத்திரை கடக ஹஸ்த முத்திரை. அவலோகிதேஸ்வரர் பௌத்த நாடுகளில் எல்லாம் காணலாம்.   

06. சிவபெருமானின் காமதான மூர்த்தி வடிவம்  : சிவபெருமானின் காமதான மூர்த்தி வடிவம் கலையுலகில் மாரன் (காமன்) புத்தரின் துறவறத்தை கலைக்க முயலும் சிற்பங்களை பார்த்து உருவானது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த "மன்மதன் துறவியாம் புத்தரை தாக்குதல்" சிற்பம் இன்றும் பரிசு தொல்பொருளகத்தில்   உள்ளது (குறிப்பு 1) 

07. அவதாரம் தேவாரத்தில் அவலோகிதான் சிவபெருமானின் ஒரு வடிவம் என்றும், வர்த்தமான மகாவீரர் சிவபெருமானே என்றும் கூறுகிறது. 

08. காந்தார கலை : காந்தார கலையில் மூன்று போதிசத்துவர்கள் 01. மைத்ரேயா 02. அவலோகிதேஸ்வரா 03. மஞ்சுஸ்ரீ சித்தரிக்கப்படுகிறார்கள். மதுர இந்திய கலை. காந்தார கலையை பார்த்து மதுர கலை தம்மை வளர்த்து செழுமைப்படுத்திக்கொண்டது. காந்தார காலையில் தான் முதன் முதல் பகவன் புத்தரின் சிலை மற்றும் போதிசத்துவர்களின் சிலைகள் உருவாக்கப்பட்டது. காந்தார கலையில் வைதிக கடவுள் ஏதும் உருவாக்கப்படவில்லை.

(B) அவலோகிதிஸ்வரர் – விஷ்ணு

புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக இருந்தால் ஏன் பௌத்தர்களால், பௌத்த சங்கத்தால் மறுக்கப்படுகிறது? 

01. அவதாரம்

விஷ்ணு புத்தரின் அவதாரம் என்றும் சொல்லப்படுகிறது. களவாடுதில் கை தேர்ந்த வைதிகம் பகவன் புத்தரின் மகாபரிநிப்பான சிலை வடிவத்தையும் விஷ்ணுவிற்கு படைத்துள்ளது. சீலத்திற்கும் (தாமரைக்கும்) விஷ்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

02. பலகைகள் 

விஷ்ணு

மேல் கைகள் - சக்காவையும் சங்கையும்

கீழ் கைகள்- கடாவையும் வில்லையும் (அ) தாமரையையும் தங்கியிருப்பார் விஷ்ணு

 

அவலோகிதேஸ்வரர்

மேல் கைகள் - இடது கையில் தாமரையும் வலது கையில் ஜெபமாலையும்

கீழ் கைகள் -இடது கையில் ஜெபமாலையும் வலது கையில் வரத முத்திரையும் தங்கியிருப்பார் அவலோகிதேஸ்வரர்.  

அவலோகிதேஸ்வரர் போன்று இரண்டு, நான்கு, எட்டு, என பல கைகளை கொண்டவர் விஷ்ணு. ஆயுதங்களை தம் கரங்களில் தங்கிருந்தால் அவர் விஷ்ணு, தாமரை செண்டை தங்கிருந்தால் அவர் அவலோகிதேஸ்வரர் என்றுரைக்கிறார் திருப்பதி பாலாஜி ஒரு பௌத்த தளம் என்ற நூலின் ஆசிரியர்  J J Jamanadas 


வாழ்விடம்- பொதிகை மலை 

பொதிகை மலை கேரள மாநிலத்தில் ஒரு பகுதியாகவும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால் இரண்டு வழிகளில் இந்த மலையை அடைய முடியும். அவை தமிழ்நாட்டின் திருநெல்வேலி வழி, கேரளத்தின் திருவனந்தபுரம் வழி.

01.பொதிகை மலை மேற்குபகுதி: இந்தியா, கேரளம், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், திருவனந்தபுரம் மாவட்டம், வட்டியூர் காவு, பிடிபி நகர், போகணக்காடு, கரமனையாறு, அதிருமலை, சங்கு முத்திரை, பொங்காலைப்பாறை, பொதிகை மலை 

02. பொதிகை மலை கிழக்குபகுதி: இந்தியா, தமிழ்நாடு, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், திருநெல்வேலி மாவட்டம், முண்டந்துறை, பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பொதிகைமலை

03. பொதிகை மலை தெற்குபகுதி: இந்தியா, தமிழ்நாடு, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், கன்னியாகுமரி மாவட்டம், பொதிகைமலை

2009ல் தமிழக வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச்செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்றுவர அனுமதி வழங்குகின்றனர்.

குறிப்பு 1- தமிழகத்தில் தட்சிணா மூர்த்தியும் பத்மபாணி  அவலோகிதரும் - டாக்டர் நா.கணேசன்