புதன், மார்ச் 26, 2025

பூரி ஜகன்னாதர் கோவில் பௌத்த விகார்


அமைவிடம் : 

பூரி ஜகன்னாதர் கோவில், பூரி கடற்கரை நகரம்,

பூரி மாவட்டம், ஒடிசா மாநிலம் 752001

 


ஜெகநாதர் என்பதன் பொருள் உலகநாதர். உலகநாதர் என்பது புத்தரின் பெயர். தேர் ஊர்வலம்/ திருவிழா என்பது பௌத்த பண்பாடு. பூரியில் ஊரே சேர்ந்து தேர் இழுக்கும். வைதிகம் சாதிகளை வைத்து கட்டப்பட்ட மதம், சகிப்பு தன்மையற்ற மதம் எப்படி அனைவரையும் ஒன்றிணைத்து தேர் இழுக்கும். வைதிக கோவில் சிலைகள் கணவன் மனைவியுடன் இருக்கும். ஆனால் பூரியில் அண்ணன் தங்கையுடன். நாம் காணும் பூரி ஜெகநாதர் கோவில் 12 நூற்றாண்டில் மறுசீரமைப்பு செய்பட்ட கோவில்.    

பண்டைய காலத்தில் பூரி என்ற இடம் தந்தபுரா என்று அழைக்கப்பட்டது. அதாவது புத்தரின் புனித பல் பாதுகாக்கப்பட்ட நகரம். ஜெகநாதரின் நாவி கமலத்தில் (தாமரை - தொப்புள் ) வைக்கப்பட்டுள்ள பிரம்ம புத்தரின் பல் தவிர வேறில்லை. எட்டாம் நூற்றைன்டில் பூரி தாந்திரிக வழிபாட்டியின் இடமாகவும், ஜெகநாதர் தாந்திரிக கடவுளாகவும் கருதப்பட்டது. வஜ்ராயன பௌத்தத்தில் வெள்ளை நிற பாலபத்ரர், கருப்பு நிற ஜெகநாதர், மஞ்சள் நிற சுபத்ரா கடவுளாகவும் கருதப்பட்டது. 

கருவரையில் பல மரத்தால் ஆனா சிலைகள் உள்ளது. மூலவர் சிலை முழுமையடையாமல் வைத்து இருக்கின்றனர். மூலவர் சிலை 12 ஆண்டுக்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது.

பூரி ஜகன்னாதர் கோவில் பௌத்த விகார்

01. அறிஞர்கள் பார்வையில் பூரி ஜகன்னாதர் கோவில் : ஜெகந்நாதரின் பௌத்த வம்சாவளியை முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை ஜெனரல் ஏ. கன்னிங்ஹாம் முன்வைத்தார். பின்னர் டபிள்யூ.டபிள்யூ. ஹண்டர் Sir William Wilson Hunter - Author of the Imperial Gazetteer of India), டபிள்யூ.ஜே. வில்கின்ஸ் W.J. Wilkins (19 th.Century Hindu mythologist), ஆர்.எல். மித்ரா , எச்.கே. மஹாதாப், எம். மான்சிங் , என்.கே. சாஹு போன்ற பல அறிஞர்கள் அவரைப் பின்பற்றினர்.

இலக்கிய மற்றும் தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையில், ஜகன்னாதர் வழிபாட்டு முறைக்கும் பௌத்த மதத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்ட அறிஞர்கள் முயற்சி செய்துள்ளனர் . பகவன் ஜகன்னாதரின் பௌத்த தோற்றத்தை நியாயப்படுத்த அவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைத்துள்ளனர் . 

01.ஜகன்னாதரின் பெயர் பௌத்த வம்சாவளியைச் சேர்ந்தது: புத்த மத இலக்கியங்களில், பகவன் புத்தர் "நாத", "ஜகன்னாத", "லோகநாத", ஜீனா, புவனேஸ்வரா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவை திபெத்திய மூலங்களிலிருந்து அறியப்படுகின்றன. எனவே ஜகன்னாதரின் பெயர் பௌத்த வம்சாவளியைச் சேர்ந்தது. 

02. ஜகன்னாதர் கோவிலில் சாதி வேறுபாடுகள் இல்லை: சாதி வேறுபாடுகளை முதலில் நிராகரித்தது பௌத்தம் தான். அதேபோல் ஜகன்னாதர் கோவிலில் மகாபிரசாதம் எடுக்கும் போது சாதி வேறுபாடு இல்லை. இது புத்த மரபிலிருந்து வந்தது. 

03.மும்மூர்த்திகளின் பரிணாமம் திரி ரத்ன கோட்பாடு: ஜகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகிய மும்மூர்த்திகளின் பரிணாமம், புத்தர், தம்மா மற்றும் சங்க ஆகிய பௌத்த தத்துவத்தின் திரி ரத்ன கோட்பாட்டிலிருந்து பெறப்பட்டதாக பௌத்த அறிஞர்கள் கூறுகின்றனர் . 

04.ஜெகநாதரின் தேர் திருவிழா: வரலாற்றாசிரியர்களால் நடத்தப்படும் மகாயான பௌத்த காலத்தின் (கோட்டானில் தோன்றிய பௌத்த தேர் திருவிழாவின் கொண்டாட்டம்) புத்த தத்துவத்தால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். பௌத்தர்கள் மட்டுமல்ல, ஜைனர்களும் கூட தேர் திருவிழா தங்கள் வழிபாட்டு முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது என்று கூறுகின்றனர்.

05.பழைய பாலி இலக்கிய குறிப்பு: பழைய பாலி இலக்கியம் ஜகன்னாதரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்திரபூதி தனது 'ஞான சித்தி'யில் புத்தரை ஜகந்நாதர் என்று குறிப்பிட்டுள்ளார்.  

06.முழுமையற்ற உருவம்:  போதகாயாவில் உள்ள புத்தரின் முழுமையற்ற உருவத்தைச் சுற்றி ஒரு புராணக்கதை உள்ளது, இது ஜகன்னாதரின் முழுமையற்ற உருவத்துடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. 

07.எல்லோரா புத்தர்: எல்லோராவில் உள்ள புத்தரின் சிலை ஜகன்னாதர் என்று அழைக்கப்படுகிறது. இது ஜகன்னாதரும் புத்தரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதை நிரூபிக்கிறது. 

02.கலிங்கம்: ஒரிசாவில் சமண மதம் மிகவும் பிரபலமாக இருந்தது. கரவேலாவின் ஹதிகும்பா கல்வெட்டு கலிங்கத்தில் ஆதிஜினா வழிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. எனவே பூரி சமண சமயம் சார்ந்தது என்றுரைக்கின்றனர். கலிங்கா போருக்கு பிறகு ஒடிசாவில் பௌத்தம் ஒரு முக்கிய மதமாக இருந்தது. கலிங்கா பௌத்தத்துடன் நெருக்கிய தொடர்புடையது.
 
03.சுவாமி விவேகானந்தர்: ஜகன்னாதர் கோயில் ஒரு பழைய புத்த கோயில். இதையும் மற்றவற்றையும் நாங்கள் கையகப்படுத்தி மீண்டும் இந்துமயமாக்கினோம். இதுபோன்ற பல விஷயங்களை நாம் இன்னும் செய்ய வேண்டியிருக்கும்.
 
The temple of Jaganath is an old Buddhistic temple. We took this and others over and re-Hinduised them. We shall have to do many things like that yet. " (Swami Vivekananda, ‘The Sages of India’ in The Complete Works of Swami Vivekananda, Vol. 3, Advaita Ashram, Calcutta, p. 264.)
 
04.சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்: ஜகன்னாதரின் தொப்புளில் வைக்கப்பட்டுள்ள பிரம்மா, குஷி நகரத்தில் இருந்து கலிங்கத்திற்கு கொண்டுவரப்பட்ட பௌத்த பல்லக்குகளைத்தவிர வேறுஒன்றுமில்லை என்றுரைக்கிறார் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை கன்னிங்காம். 
 
தொல்பொருள் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தனது பில்சா டோப்ஸ் (Bhilsa Topes) என்ற படைப்பில், மறைந்திருக்கும் பொருள் உண்மையில் புத்தரின் பல்லாக இருந்தால், ஜகன்னாதர் ஒரு பிராமண (இந்து) கடவுளாக இருக்க முடியாது, ஏனெனில் உடல் உறுப்புகளை வணங்குவது இந்து மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று வாதிட்டார். இந்த நடைமுறை மிகவும் பௌத்தமானது என்பதால், ஜகன்னாதர் ஒரு பௌத்த கடவுளாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
 
In his work Bhilsa Topes, archaeologist Alexander Cunningham argued that if the hidden substance is indeed a tooth of the Buddha,  Jagannath cannot be a Brahmanical (Hindu) God, because worship of  body parts is not allowed in Hinduism. He argued that since the practice is eminently Buddhist, Jagannath must have been a Buddhist deity. 

புதன், மார்ச் 19, 2025

புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரை மீட்போம்

 


புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார் 

போதிசத்துவரான சித்தார்த்த கௌதமர் புத்தரான இடம், ஞானம் பெற்ற இடம் புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார். ஒரு மதத்தின் மிகவும் தூய்மையான இடம் (புத்த கயாவில் உள்ள மகாபோதி விகார்) மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களால் (பார்பனர்களால் இந்து மதத்தால்) கட்டுப்படுத்தப்படுகிறது.  

இந்தியாவில் புத்த மதத்தை அழித்தது பிராமணியம். பத்து அவதாரங்களில் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் புத்தர் என்ற சித்தரிப்பை எந்த பிக்குவும், பிக்குணியும், போதிசத்துவரும், அரகந்தரும், எந்த பௌத்த சங்கமும் ஏற்கவில்லை. எந்த பௌத்தரும் ஏற்காத இந்த சித்தரிப்பு மகாபோதி விகாரை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. 

ஐந்து புத்தர் சிலைகளை ஐந்து பாண்டவர்கள் என்றும், புத்தரின் தாயார் மகாமாயாவின் சின்னம் திரௌபதியாக மாற்றப்பட்டதாகவும் பிக்குகள் வேதனைப்படுகின்றனர். நாங்கள் பௌத்தர்கள், எங்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் பிக்குகளின் வாதம்.

புத்த கயா விகாரின் பிரச்சினை என்ன?

1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் தான் மிகப்பெரிய பிரச்சனை. சட்டத்தின்படி, மகாபோதி விகாரின் நிர்வாகம் பௌத்த சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. 

01. 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டம் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட புத்தகயா கோயில் மேலாண்மைக் குழுவை (Bodhgaya Temple Management Committee (BTMC)) நிறுவியது. 

02. சட்டத்தின்படி, ஒரு இந்து மட்டுமே நிர்வாகக் குழுவிற்குத் தலைமை தாங்க முடியும். மாவட்ட நீதிபதி இந்து அல்லாதவராக இருந்தால், மாநில அரசு ஒரு இந்துவை குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சட்டம் குறிப்பிடுகிறது. இந்தக் குழுவில் மூன்று வருட காலத்திற்கு நான்கு பௌத்தர்களும் நான்கு இந்துக்களும் இருக்க வேண்டும், 

03.இந்த சமமற்ற பிரதிநிதித்துவம், பௌத்தர்களுக்கு விகாரை நிர்வகிக்கும் உரிமையை மறுக்கிறது.

பௌத்தர்கள் கோரிக்கைகள் என்ன?
01. இந்த சமமற்ற பிரதிநிதித்துவம் புத்த சமூகத்தின் தூய்மை தளத்தின் மீதான உரிமையை மறுக்கிறது. எனவே விகாரின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கோரி, பிக்குகள், தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

02. பௌத்த மத விவகாரங்களில் அரசு தலையிடுதல் கூடாது. 

03. 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புத்தகயா கோயில் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது. மற்றும் சர்வதேச கலாச்சார சட்டங்களுக்கு எதிரானது.

04. மகாபோதி மகா விகார சைத்ய அறக்கட்டளை (Mahabodhi Mahavihara Chaitya Trust) என்ற புதிய தன்னாட்சி அமைப்பை உருவாக்கி, அந்த இடத்தின் முழு கட்டுப்பாட்டையும் புத்த சமூகத்திடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள். 
 
பௌத்தர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?
01. பௌத்த தளம் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
பௌத்த தளம் புத்தகயா பௌத்தர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு புத்துணர்ச்சி பெறத்திரும்பும் இந்த விகார் இந்தியாவின் மதிப்புமிக்க வரலாற்றின் ஒரு பகுதியாகும். 

02. ஊழல் நிறைந்த பிராமணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புத்தர் விஷ்ணுவின் அவதாரம் போன்ற குப்பைகளை பார்ப்பனர்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். ஐந்து இந்து (Hindu) உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விகாரின் நன்கொடைகளை தவறாக நிர்வகிக்கின்றனர். மகாபோதி மகா விகாரத்திர்க்கு வரும் யாத்ரீகர்களை மோசமாக நடத்துகின்றனர்.

03. பீகார் அரசு மிரட்டல் தந்திரங்களை கையாளுகின்றது
பீகார் அரசு இந்த நான்கு புத்த (Buddhist) உறுப்பினர்கள் குறைகளைப் புறக்கணித்து மிரட்டல் தந்திரங்களை கையாளுகின்றனர்.

 



பிக்கு பதந்த் ஆர்யா நாகார்ஜுன சுராய் சசாய்

01.இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்புவதற்காக தனது குடியுரிமையைத் துறந்த ஜப்பானிய புத்த துறவி பதந்த் நாகார்ஜுன் சுராய் சசாய் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

02. மகாபோதி கோயிலின் "விடுதலை"க்கான இயக்கம், ஜப்பானிய துறவியான பதந்த் ஆர்யா நாகார்ஜுன சுராய் சசாய் அவர்களால் முறையாகத் தொடங்கப்பட்டது.

03. ஆர்ய சசாயி பௌத்தத்தை இந்து அடக்குமுறையிலிருந்து விடுவிக்க வேண்டிய இடம் இந்தியா என்றுரைக்கிறார்.


இயக்கத்தின் முக்கிய நபரான டாக்டர் விலாஸ் காரத்

01. மகாபோதி மகாவிஹாரா முதலில் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது  அவர் இந்த பெரிய விகாரை கட்ட 100,000 தங்க நாணயங்களை செலவிட்டார்.

02. இந்தியாவின் அடையாளம் புத்தர் மற்றும் அசோகரில் வேரூன்றியுள்ளது. தேசிய சின்னமான சிங்கங்கள் மற்றும் தர்ம சக்கரத்துடன் கூடிய அசோக தூண் நமது பாரம்பரியத்தை குறிக்கிறது. இருப்பினும், அசோகர் கட்டிய 84,000 ஸ்தூபங்களில், யானையுடன் கூடிய ஒரு ஸ்தூபி (புத்தரை குறிக்கும்) காணாமல் போனது. இந்த யானை 1890 இல் மஹந்தின் இல்லத்தில் நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. புத்தரின் மரபு ஏன் அத்தகையவர்களின் கைகளில் உள்ளது?

03. புத்தகயா முற்றிலும் பௌத்த தளம், ஆனால் புத்தகயா கோயில் மேலாண்மைக் குழு (BTMC) பௌத்தர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. BTMC இன் பிராமண உறுப்பினர்கள் பிரதான கோயிலில் மணிகளை அடித்து தூபம் போடுகிறார்கள், மேலும் புத்தரின் சிலைகள் சிவன் மற்றும் பாண்டவர்களுடன் இணைத்து, இந்த இடத்தை இந்துமயமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன


இந்திய உலகில் புத்தரின் தேசம் என்று தான் அறியப்படுகிறது. இந்து வேதங்கள் புத்தரையும் பௌத்த தத்துவத்தையும் கடுமையாக விமர்ச்சித்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது மகாபோதி கோயிலின் நிர்வாகத்தை பார்ப்பனர்கள் இப்போது ஏன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்?  இது தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

வியாழன், பிப்ரவரி 20, 2025

உலக திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு

International Tipitaka Chanting in South India at Conjeevaram

உலக திரிபிடகம் உச்சரிப்பு -காஞ்சீவரம்

Tipitaka Saddhamma Sajjhayana 


உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ITCC நடத்தி வருகிறது. பெரும்பாலும் பகவான் புத்தருடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களில் லும்பினி, சாரநாத், புத்த கயா, குஷிநகர் திரிபிடகம் பாடுதல் நிகழவும். 

ITCC இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் 10/05/2008ஆம் தேதி கையொப்பமிட்டது. 18வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2023 to 12/12/2023 நடைபெற்றது. 19வது உலக திரிபிடகம் உச்சரிப்பு புத்த கயாவில் 02/12/2024 to 12/12/2024 நடைபெற்றது. அதன் பிறகு தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டது.  

ITCC 06/02/2025 முதல் 18/02/2025 வரை மூன்று மாநிலங்களில் (தெலுங்கானா, கர்நாடக மற்றும் தமிழ் நாடு) புனித திபிடக சத்தம்மா சஜ்ஜாயனத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. தெலுங்கானாவில் 07/02/2025 முதல் 10/02/2025 வரை நான்கு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. பின்னர் கர்நாடகாவில் 11/02/2025 முதல்  16/02/2025 வரை  ஆறு நாட்கள் உலக திரிபிடகம் பாடும் மாநிகழ்வு நடந்தது. தமிழகத்தில் 18/02/2025 ஒரு நாள் கஞ்சிவரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம் ஒத்துழைப்பில் பௌத்தர்கள் சங்க பேரவை சார்பில் திரிபிடகம் பாடுதல் நிகழ்வு என்று முடிவானது.  

தெலுங்கானா

01. புத்தவனம் - 07/02/2025 

02. நாகார்ஜுன கொண்டா-  08/02/2025   

03. ஹைதராபாத் மகாபோதி - 09/02/2025

04. ஹுசைன் சாகர் ஹைதராபாத் 10/02/2025

கர்நாடக

01. கலபுரகி 11/02/2025 Kalaburagi 

02. சன்னாட்டி - Sannatti  12/02/2025

03. பைலாகூப் - Bylakuppe - 13/02/2025 

04. மைசூர் - 14/02/2025 

05. வடக்கு பெங்களூரு 15/02/2025 

06. பெங்களூரு மகாபோதி 16/02/2025 

தமிழ் நாடு 

காஞ்சிபுரம் - 18/02/2025 


அமைப்புகள் 

இங்கு கலந்துகொண்ட அமைப்புகள்

01. International Tipitaka Chanting Council (ITCC) சர்வதேச திபிடகா மந்திரப் பேரவை

02. Light of Buddha Dharma Foundation International (LBDFI) புத்த தர்ம அறக்கட்டளை சர்வதேச ஒளி

03. (Government of Tamil Nadu - State minorities commission (TSMC)) தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம். 

04. Tamil Nadu Buddhist Sanga Council (TNBSC)  தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை 

ITCC  நோக்கம்

01. புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் அல்லது பிற புனித தலங்களில், பாலி திபிடகம் என்று அழைக்கப்படும் புத்தரின் புனித நூல்களை ஆண்டுதோறும் உச்சரிப்பதை ஆதரித்தல், ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்கமைத்தல்.

02. அனைத்து நாடுகளிலிருந்தும் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தேடுதல் மற்றும் ஆண்டுதோறும் திபிடக மந்திர விழாவில் தேரவாத பாரம்பரியத்தின் மகாசங்கத்தினரை ஒன்று திரட்டுதல். 

03. புத்தரின் அசல் போதனைகளை ஆர்யதேசத்தின் புனித பூமி முழுவதும் பரப்புதல் மற்றும் இந்த உலகத்திலும் முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் தகுதியை அர்ப்பணித்தல். 

04. புத்தரின் போதனைகள் மற்றும் தத்துவம் மூலம் அனைத்து மனிதகுலத்தின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை அடைய உதவுதல். 

05. அனைத்து நாடுகளிலும் உள்ள தேரவாத சங்கத்தினரிடையே ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவித்தல். 

06. ஆண்கள் மற்றும் பெண்களின் உலகளாவிய ஒத்துழைப்பு மூலம் அனைத்து உயிரினங்களிடையேயும் பரஸ்பர மரியாதையை ஊக்குவித்தல். 

07. சுகாதாரம், கல்வி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலம் சமூக நலனை ஊக்குவித்தல்.

08. சர்வதேச திபிடக மந்திரப் பேரவையின் நோக்கத்தைப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பிற அமைப்புகள், அறக்கட்டளைகள், படிப்பு மையங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மடாலயங்களுடன் ஆதரவளித்து ஒத்துழைத்தல். 

09. பௌத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் பரப்புவதற்கும் இலக்கியங்களை வெளியிட்டு விநியோகித்தல் மற்றும் பிற உதவிகளை வழங்குதல்.

வையாவூர் சாலை புத்த விகார்


புத்த விகார், காமாட்சி நகர், வையாவூர் சாலை, காஞ்சீவரம் என்ற முகவரியில் அமைந்துள்ள புத்த விகாரில் திரிபிடகம் பாடும் மாநிகழ்வு 18-02-2025 செவ்வாய் கிழமை காலை 8 மணி துவங்கி மலை 6 மணியளவில் நடந்தது. இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு.

குறைந்தபட்சம் காஞ்சீவர புத்தர் சிலையாவது காட்சிப்படுத்தி இருக்கலாம். பள்ளூர் புத்தர் சிலையை கௌதம சன்ன இங்கு கையாண்டுள்ளார்.

இந்த விகாரில் வண.போதிதர்மா, வண.மணிமேகலை சிலைகள் வைத்து வழிபடப்பட்டுள்ளது. சாஞ்சியை நினைவுறுத்தும் அளவுக்கு சாஞ்சி வடிவத்தை அமைக்கப்பட்டுள்ளது. 


 





தம்ம ஊர்வலம் 

காலை 8 மணிக்கு காஞ்சிவரம் பூக்கடை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி வையாவூர் புத்த விகார் வரை சென்றது.  பிக்கு, உபாசகர், உபாசிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.  இந்தியா, வியட்நாம், கம்போடியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, பர்மா நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் அவர்களுக்குரிய உடையுடனும், உபசகர்கள், உபாசிகள் வெள்ளை நிற ஆடையுடனும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது பஞ்சசீலக் கொடிகளை கையில் ஏந்தி, பெரிய புத்தர் சிலையை வண்டியில் வைத்து அழைத்தும், சிறிய புத்தர் சிலைகளை கையில் ஏந்தியும், குட்டையேந்தியம் ஊர்வலம் சென்றது.


 ஸ்தூபி திறப்பு விழா

இவ்விகார் முகப்பில் புத்த கயாவில் உள்ள பகவன் புத்தரின் சாம்பல் சிறு பகுதி ஒரு சிட்டிகை (இன்ச்) அளவு வைத்து ஸ்தூபி நிறுவப்பட்டுள்ளது. ஸ்தூபியை வணங்கி திரிபிடக பாடும் நிகழ்வுக்கு சென்றனர்.


திரிபிடகம் உச்சரித்தல்/பாடுதல்

திரிபிடகம் முழுவதையும் பாடுதல் என்பது இயலாது. திரிபிடகத்தில் ஏதாவது ஒரு பகுதியை படுவது வழக்கம். இங்கு தம்மபதம் எடுத்துக்கொள்ளபட்டது. தம்மபதம் 26 அத்தியாயம் கொண்டுள்ளது. அதில் காலை இரண்டும் மதியம் எட்டும்  என 10 அத்தியாயங்கள் பாடப்பட்டது. பிக்கு சோமானந்த அவர்களின் நூல் தம்ம பதம் என்ற நூல் அளிக்கப்பட்டது.  பாலியில் உள்ள பாடலை பாடும் பொழுது புத்தகத்தை கவனிக்க வேண்டும். பாலியல் பாடிய பின் அதன் பொருளை ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் விளக்கப்பட்டது. பின்னர் அடுத்த அத்தியாயம் பாடப்பட்டது. 

 காலையில் 11.30 மணியளவில் முடிந்தது

1. இரட்டைச் செய்யுட்கள் யமகவக்கம் 
2. கருத்துடைமை அப்பமாத வக்கம்
 
மதியம் 3.30 மணியளவில் முடிந்தது
3. சிந்தனை / சித்த வக்கம்
4. புஷ்பங்கள் / புப்ப வக்கம்
5. பேதை / பால வக்கம்
6. ஞானி / பண்டித வக்கம்
7. முனிவர் / அர்ஹந்த வக்கம்
8. ஆயிரம் / ஸஹஸ்ஸ வக்கம்
9. தீயொழுக்கம் / பாப வக்கம்
10. தண்டனை / தண்ட வக்கம்

 


மதியம் மத்திய உணவு, தண்ணீர் அளிக்கப்பட்டது, மலையில் தேனீர் அளிக்கப்பட்டது. பின்னர் சங்க தானம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - கௌதம சன்ன, வி சி க தலைவர் -திருமாவளவன் MP,  மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் எஸ். வசந்த, இவ்விகார் நிறுவனர் திரு திருநாவுக்கரசு    என பலரும் கலந்து கொண்டனர்

கௌதம சன்னாவின் கீழ்த்தரமான உரை: 

இவரின் உரை பலரை வெறுப்படைய செய்தது. தமிழ் நாட்டில் பௌத்தம் தழைத்தோங்க செய்த பண்டிதர் அயோத்திதாசர் மற்றும் மத மாற்றத்தில் உலக சாதனை செய்த பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் செய்யாததை இவர் செய்ததை போல தம்பட்டம் அடித்துக்கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை.    

பாபா சாகேப் அவர்கள் 1955ல் மே 5 ஆம் தேதி Buddhist Society of India (BSI) என்ற பௌத்த சங்கத்தை தோற்றுவித்ததை திரித்து பாபா சாகேப் சங்கத்தை தோற்றுவிக்கவில்லை கௌதம சன்ன தான் முதன் முதலில் பௌத்த சங்கத்தை தோற்றுவித்ததாக கூறியதை கேட்ட போது கீழ்த்தரமான உரையாக இருந்தது.

வி சி க தலைவர் -திருமாவளவன் உரை:

மிக குறைவான நேரம் எடுத்துக்கொண்டார். தமிழில் மேம்பட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தினார். அதில் சில குறைகளை கண்டேன்.      

01. தமிழகத்தில் பௌத்தம்  முற்றாக துடைத்து எறியப்பட்டது: பௌத்தம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் செழித்திருந்தது. மாமன்னர் அசோகருக்கு பின்னர் மிகஅப்பெரிய எழுச்சியை பெற்றது. இன்று தமிழகத்தில் முற்றாக துடைத்து எறியப்பட்டது.   

02. கடவுளை மறுக்கின்ற கருத்தியல்: புத்தர் காலத்திலேயே மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. புத்தரை சாத்தான், பேய், பிசாசு என்று அழைத்தனர். பௌத்தத்தை நாத்திக மதம் என்றுதான் அழைக்கப்பட்டது. கடவுளை மறுக்கின்ற கருத்தியல் தான் அதன் அடிப்படை. பௌத்தமும் ஜைனமும் இரண்டும் கடவுள் நம்பிக்கை கொண்டவையல்ல. கடவுளை பற்றிய போதனைகள், ஆய்வுகள் இல்லை. எனவே வழிபாடு சடங்கு சம்பிரதாயங்கள் பௌத்திலும்  ஜைனத்திலும்  ஏதுமில்லை.  

03. தம்மாவை வைக்க உருவம் தேவையில்லை: வழிபாட்டுக்கு உரியது அறம் என்று போதித்தவர் புத்தர். அறம் தான் தம்மம் என்று பாலி மொழியில் அழைக்கப்படுகிறது. தர்மம் என்று வடமொழிலும், அறம்  என்று  தமிழிலும் அழைக்கப்படுகிறது. கடவுள் வைக்க வேண்டிய இடத்தில் தம்மாவை வைத்தது தான் பௌத்தம். தம்மாவை வைக்க உருவம் தேவையில்லை. 

.04. கடவுளை பற்றி பேசாத புத்தரை கடவுளாகிவிட்டோம்: அக்காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவர்களை தேடி தேடி அழித்து ஒழித்தனர். கடவுளுக்கு எதிரான கருத்துக்களை கூறியவர்களை உயிருடன் வைக்கமாட்டார்கள். இந்த பூமி உருண்டை என்று சொன்ன கலிலோவை கொன்றார்கள். நீ பைபிளுக்கு எதிராக பேசுகிறாய். பைபிளில் அவ்வாறு இல்லை என்று சொல்லி கொல்லப்பட்டார். 80 வயது வரை புத்தர் வாழ்ந்தார் என்பதே ஒரு சாதனை தான். பகுத்தறிவு கருத்துக்களை போதித்தார் என்பது ஒரு புரட்சி. காலப்போக்கில் கடவுளை பற்றி பேசாத புத்தரை கடவுளாகிவிட்டோம் நாம்.    

05.கடவுள் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது: நபிகள் நாயகம் கடவுள் இல்லை. யேசுநாதரும் கடவுள் இல்லை. ஆனால் இந்துமதம் சிவன், விஷ்ணு, பிரம்மா என்று கடவுள் இருக்கிறார்கள் என்று வேறு முன்வைக்கிறார்கள். அவற்றை போதித்தது யார் என்று தெரியாது. கிருஷ்ணரை கடவுள் என்று சொன்னவர் யார் என்று தெரியாது. யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது,  சொல்லப்பட்டது என்று தெரியாது. 

06. பௌத்தம் ஒரு சங்கம் மதமல்ல: நபிகள் நாயகம் அல்லா என்று ஒருவர் இருக்கிறார் ஆனால் அவர் ஆணா பெண்ணா என்று தெரியாது என்றுரைக்கிறார். அதனால் தான் கௌதம புத்தருக்கு பின்னால் வந்தவர்கள் பௌத்தத்தை சங்கம் என்று சொன்னார்கள். மதம் என்று சொல்லவில்லை , பௌத்தம் ஒரு சங்கம் அது மதமல்ல 

07. மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் கௌதம புத்தர் மகாயானம்:  பௌத்தத்தில் பல பிரிவுகள் தோன்றியுள்ளன. தேரவாதம் ஹீனயானம் என்று அழைக்கப்படுகிறது. மகாயானம் தேரவாதம் சொன்ன அதே கருத்தை சொன்னாலும் அது மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் கௌதம புத்தர் என்று நம்பிய பௌத்தம். 

08. பௌத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை: இந்தியாவை பொறுத்தவரை பௌத்தத்தை இந்து மதத்தின் ஒரு கிளை என்று பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி பௌத்தம் இந்து மதத்தின் ஒரு கிளை என்று திருத்தம் செய்து இணைத்து இருக்கின்றனர். அதனால் தான் பௌத்தராக இருந்தால் இட ஒதுக்கீடு உண்டு. இஸ்லாத்திற்கும், கிறித்துவத்திற்கும் இட ஒதுக்கீடு இல்லை. ஆனால் பௌத்தத்திற்கு மாறினால் இட ஒதுக்கீடு உண்டு. அது நம்மீது காட்டுநின்ற கருணையில்லை. அது நம்மை விழுங்கி செரிக்கின்ற சதி. 

09. Dr.அம்பேத்கர் நவயானம் என்னும் புதிய பாதையை உருவாக்கினார்: புத்தரால் போதிக்கப்பட்ட மாதமாக பௌத்தம் இல்லை என்பதால் தான் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை அம்பேத்கர் எழுதினார். இல்லையென்றால் மகாயானம் (அ) தேரவாதம் உரைகளே போதும் என்று இருந்திருப்பர். எந்த நாட்டையும் பின்பற்றாமல்   புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும்  என்று சிந்தித்து தான் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூல்.   அது தான் நமக்கான புனித நூல். அந்த நூலுக்கு தான் நவயானம் என்று பெயர் வைத்தார்  

ஹீனயானம் - எளிய பாதை,

மகாயானம் - பெரிய பாதை

நவயானம் - புதிய பாதை 

10 சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தும்: தம்மத்தை முதன்மை படுத்தியது. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தியது, இந்திய அரசியலமைப்பு முகப்புரையில் உள்ள மூன்று சொற்கள் (சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்தும்) மீது கடுமையான விவாதங்கள் எழுந்தது. எல்லோரும் நினைத்தார்கள் இந்த மூன்று சொற்களும் பிரஞ்சு புரட்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்று. ஆனால் இந்த மூன்று சொற்களும் பகவன் புத்தரின் போதனைகளில் இருந்து எடுத்து கையாண்டேன் என்றுரைத்தார் Dr அம்பேத்கர். 

வி சி க தலைவரின் சில கருத்துக்களை ஏற்க முடியவில்லை. பௌத்தம் மதமல்ல சங்கம், மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் புத்தர் என்றது மகாயானம், நவயானம் என்னும் புதிய பாதையை பாபா சாகிப் உருவாக்கினார் என்ற கருத்துக்கள்.

01. பௌத்த சங்கம் தான் மதம்: மதம் என்றால் கடவுள் வேண்டும். கடவுள் இல்லை அங்கே தம்மம் இருக்கிறது என்பதால் தான் பௌத்தம் மதமல்ல சங்கம் என்றுரைக்கிறார். ஆனால் பௌத்தத்தை மாதமாக ஏற்றுக்கொள்ள கூடாது சங்கமாக தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது பாபா சாகேப் கருத்துக்கு முரணானது. 

02. மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் புத்தர் என்றது மகாயானமில்லை வைதி மதம். மகாயானம் புத்தரை கடவுளாகியது அவதாரமாக்கவில்லை. மகாயானம் எந்த பதிவில் உள்ளது மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் புத்தர் என்று. சாரநாத்தில்லுள்ள மகா போதி சங்க அலுவலகத்தில் பகவன் புத்தர் மகா விஷ்ணுவின் அவதாராம் என்ற பொய்யை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜகத்குரு சங்கரச்சாரியாவும் காஞ்சிபுரம் சங்கரமடத்தலைவர் ஜெயேந்திர சரசுவதிவும் விபாசன ஆசிரியர் S.N. கோயங்க  ஒரு ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட வைத்தது ஏன்? எந்த பிக்கு, போதிசத்துவர், அரகந்தர், பௌத்த சங்கம் மகாவிஷ்ணு புத்தரின் அவதாரம் என்று ஏற்று இருக்கிறது?

03. நவயானம் என்று பாபா சாகிப் உருவாக்கவில்லை: நவாயானம் புத்த மதத்தின் ஒரு  புதிய கிளையாகக் கருதப்படவில்லை. பாபா சாகிப் தனது புத்த மதப் பதிப்பை நவாயானம் அல்லது "நவ-பௌத்தம்" என்று அழைக்கவில்லை.  

அம்பேத்கர் பவுத்தம் தழுவ இருக்கும் முன்தினம் அதாவது அக்டோபர் 13 ஆம் நாளன்று பத்திரிகையாளர்களுக்கு நேருரை அளித்தார்: “நான் தழுவவிருக்கும் பவுத்தம் புத்தர் புகட்டியபடி இருக்கும். பண்டைய நாளில் ஏற்பட்ட ஈனயானம், மகாயானம் ஆகிய கருத்துச் குழப்பங்களில் நான் மக்களை ஒருபோதும் ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பவுத்தம், புத்தரின் அசலான ஒரு புதிய பவுத்தம் ஆக இருக்கும்'' என்றார். பௌத்தத்தை ஏற்கும் மக்களுக்கு இது புதிய பாதை எனக்கு பகவன் புத்தர் போதித்த போதனைகள் தான். பாபா சாகிப் பௌத்தத்தில் எந்த ஒரு பிரிவையும் உருவாக்கவில்லை

நவயானம் என்று கூறுவது வரலாற்றுப் பிறழ்வா? மறைந்த ஐயா ஜெயராஜ் அவர்களின் உரையை கேளுங்கள்.