வியாழன், ஏப்ரல் 04, 2024

இந்தியாவில் சாதிகள்

இறுதி உரை

ஒவ்வொரு மாதம் மூன்றாவது ஞாயிறு மாலை அபியில் (BAWS)  பாபா சாகிப் எழுத்தும் பேசும்  ஒரு தலைப்பில் உரை நிகழ்த்தப்படும். பின்னர் அந்த உரையில் இருந்தது சந்தேகங்கள் கேட்கப்படும். கொரோனவால் நீண்ட நாள் உரை நிகழ்த்தப்படவில்லை. அபி உரை இந்த முறை அம்பேத்கர் அறிவாலயம், 40, பாரதி நகர், ஜாமின் பல்லாவரத்தில் 20/08/2023 அன்று இந்தியாவில் ஜாதிகளின் தோற்றம் இயக்கம் வளர்ச்சி - தொகுதி 1 முதல் அத்தியாயம்  உரையை அளித்தார் மகா உபாசகர் திரி ஜெயராஜ் MA ML அவர்கள். இந்த உரையே அவரின் இறுதி உரையாக அமைந்து விட்டது.

01) அம்பேத்கரிஸ மாற்றும் பௌத்த அறிஞர்கள் அறக்கட்டளை (ABI)ன் நோக்கம் என்ன?

இன்றுவரை எவரும் பாபா சாகிப் கட்டுரைக்கு எதிர்ப்பு கருத்தை அல்லது மாறுபட்ட கருத்தை சொன்னதில்லை. அதனால் பாபா சாகிப் எழுத்துக்களும் பேச்சுக்களும் மாறுதலிக்கமுடியாதவை. பாபா சாகிப் அம்பேத்கர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என யாரும் நினைக்கக்கூடாது. அவரின் தத்துவங்களை வைத்துதான் நான் அவரை நேசிக்கிறேன். பகவன் புத்தர் மற்றும் பாபா சாகிப் போதித்த தத்துவங்களுக்கு ஈடு இணை ஏதுமில்லை. ஆகா இப்படிபட்டவரை LKG மற்றும் UKG படித்தர்களுடன் ஒப்பிட்டு, இறுதியில் இவர்களை பாபா சாகிப் அவர்களுக்கு கீழே வைத்துவிடுகின்றனர். அம்பேத்கரிஸ்ட் என்று சொல்பர்களும் இந்த தவறை செய்கின்றனர். இது கூடாது என்பதால் தான் ABI இந்த சிரமத்தை எடுத்துக்கொள்கிறது.

பாபா சாகிப் எப்படி பட்டவர், இந்த சமூகத்திற்கு எப்படி அற்பணித்துக்கொண்டார், என்னென்ன தியாகங்கள் கொண்டுவந்தார் என்பதை பாபா சாகிப் எழுத்தும் பேச்சும் படித்தால் போதும் புரிந்து கொள்ள முடியும்

02. இந்தியாவில் சாதிகள் இந்த தலைப்பில் பாபா சாகிப் ஆய்வு என்ன?

1916 (Caste in India) இந்தியாவில் சாதிகள் - பாபா சாகிப் எழுத்தும் பேச்சும் (English Volume 1 First 26 Pages தமிழ் தொகுதி1 35-40 பக்கங்கள்).

இந்த உரை 1917 அன்றே பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 107 ஆண்டுகள் கடந்தும் இந்த மாபெரும் தலைப்பு "இந்தியாவில் சாதிகள்" கவுண்டர், பறையர், நாயக்கர், ஐயர் என்று பேசுவதில்லை. கீழ் கண்ட தலைப்புகளில்  தான் பாபா சாகிப் ஆய்வு செய்கிறார்.

  • சாதி எவ்வாறு துவங்கப்பட்டது? 

  • சாதி உருவானதற்க்க்கான கரணங்கள் என்ன?

  • சாதியை இயக்கக்கூடிய வழிமுறைகள் என்ன?

  • இந்த நாட்டை ஆட்டி படைப்பதற்கான ஒரு கொடூரமான தத்துவமாக எவ்வாறு வந்தது?

மகாராஷ்டிராவில் பண்பாடு பழக்கவழக்கங்கள் இதைபற்றி பாபாசாகிப் ஆய்வு செய்ய இருந்தார். ஆனால் இந்தியாவின் பொதுநலன் கருதி இந்தியாவில் சாதிகள் அதன் அமைப்புத் தோற்றம் வளர்ச்சி என்று எழுதி அதனை சமர்ப்பித்தார். இக்கட்டுரை பார்த்தால் சாதாரண கட்டுரை போன்று தெரியும். ஆனால் அன்றைக்கு ஜாம்பவான் என்று அறியப்பட்ட (Nesfield)  நேசபையில்ட் (Risley) ரைசீலி கேட்கர் (Ketkar) ஜாம்பவான்களை என்ன பெரிதாய் சொல்லிட்டா பெரிய சுண்டைக்காய் மாதிரி என்று சொல்லி இந்த கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். 

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பொருளிலும் யார் யார் மிகப்பெரிய தத்துவங்களை அளித்தார்களோ அவர்களின் எழுத்துக்களை பார்ப்போம் என்றால் குறை சொல்லிவிட்டு பேசுவார். இந்த குறை ஏன் என்றால் காரண காரிய கோட்ப்பாடு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்து இருக்கிறார். இப்படி ஆழமான கருத்துக்கை அறிவுக்கு உட்படுத்தி அந்த கருத்துக்களை பாபா சாகிப் பின்னால் வைத்து பின்னர் அவர்களின் கருத்துக்களை பாபா சாகிப் கருத்துக்களுக்கு முன்னால் எடுத்து செல்வது மிக மோசமானது. 

03. ஜாதி என்றால் என்ன?

முதன்முதலில் இதனை வருணம் என்று சொன்னார்கள். இந்த வர்ணம் தான் ஜாதியாக பிரிந்து பிரிந்து செல்கிறது (Sub Division). பார்பனர்களில் 1300 + ஜாதிகள் இருக்கிறது. (பாபா சாகிப் தொகுதி 5ல் அதன் பட்டியலை தருகிறார்) தென் திசையில் உள்ள பேச்சு "எள்ளுவகை எண்ணாலும் பல்லுவகை எண்ணமுடியாது". ஜாதிகள் அவ்வளவு இருக்கிறது. 

Scheduled Caste (SC) என்ற சொல்லால் தான் பாபா சாகிப் நம்மை பயன்படுத்தார். தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஹரிஜன் என்ற சொல்லாடலை பயன்படுத்தியதில்லை. 118 துணை பிரிவு 4 வருணங்கள். நான்கு வருணங்கள் தான் 6000 ஜாதிகளாக வந்துள்ளது. இந்தியா பிளவு பிளவு நோக்கி தான் சென்றுகொண்டு இருக்கிறது.

இந்த ஒவ்வொரு அலகும் (Unit  Enclosed) தனக்குள் மூடிக்கொள்வது. இந்த ஒரு அலகுக்கும் மற்றோரு அலகுக்கும் எந்த தொடர்பும் இல்லை (Gated Community) இந்த 6000 ஜாதிகள் லட்சமாக கூட போகும்.

ஜாதி என்பது பன்மை. ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தால் தான் அது பிரிவினையாகும். இந்திய மக்கள் தொகை செயற்கை முறையில் பிரிவினை செய்கின்றனர். அதனால் இது ஒவ்வொன்றும் ஒரு அலகு (unit ) இந்த அலகு சிறிதாகவும் இருக்கலாம், பெரிதாகவும் இருக்கலாம். உதாரணமாக ஒவ்வொரு ஜாதி மக்கள் தொகை ஒவ்வொரு விதமாக இருக்கும் (வேறுபட்டு இருக்கும்). ஒவ்வொரு ஜாதியும் ஒரு அலகு. இந்திய மக்கள் தொகை செயற்கை முறையில் பிரிக்கப்பட்ட ஒரு அலகு. இந்த அலகு தான் ஜாதி.

04. இந்து திருமண சட்டம் கொண்டுவந்தர் யார் ?

இந்து திருமண சட்டம் கொண்டுவருவதற்கு முன் சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்டால் நீதி மன்றம் அந்த திருமணம் செல்லாது என்று 1955 வரை தீர்ப்பு வழங்கிருக்கிறது. நீதி மன்றத்திலும் ஜாதி என்பது அங்கிரரிக்கப்பட்டது. இது இந்து மத கோட்பாட்டின் படி தீர்மானித்தது. 1955ல் தான் பாபா சாகிப் அம்பேத்கர் இந்து திருமண சட்டம் கொண்டுவந்தார். 

 


05. ஜாதி எப்பொழுது உருவானது?
இந்தியாவில் பல்வேறு இனக்குழுக்கள் இருந்தன. திராவிடர்கள், ஆரியர்கள், மங்கோலியர்கள், சிந்தியர்கள். இது போன்று பல்வேறு இனக்குழுக்கள் உள்ளது. இவைகள் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வைத்துகொன்று இருந்தனர். ஜாதி என்று ஒன்று வருவதற்கு முன் அவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டனர். புறமணம் (Exogamy)

அலகு மூடிக்கொண்டது, தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டது. இதற்கான அடையாளம் தான் பல சாதிகள் பிரிந்தது. இவர்கள் பிற அலகுடன் சேரமுடியாமல், சேராமல் அகமணம் (Endogamy) ஏற்பட்டது.  

தத்துவத்தை புரிந்துகொண்டு ஒரு மனிதனை தத்துவ ரீதியாக எடை போடவேண்டும் என்றைக்கிறார் பாபா சாகிப். வாழ்வியலை பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக சொல்வது தான் தத்துவம். இந்துவின் தத்துவம் இந்துத்துவா. இந்துவின் கோட்பாடு ஜாதி.  ஜாதி தான் இந்துத்துவ கோட்பாடு. கிறித்துவர்கள் யேசுநாதரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஜாதி கிடையாது இதை போன்று தான் இஸ்லாம்.

பகவான் புத்தர் (Sutta Nibatha) சுத்த நிபாத அதற்கு மேல் அசலாய சுத்தா, வசுத்தே சுத்தாவில் இன விருத்தி என்பது பெண்ணின் கருவுக்கும் ஆணின் விந்துவுக்குமான உறவு தான் பிறப்பு. இந்த கருத்தை எந்த மதமும் சொல்லவில்லை. ஜாதி என்பது இங்கு செயற்கை.

இது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று இந்து மதம் போதிக்கிறது. இந்து என்று சொன்னால் அவன் ஜாதியை ஏற்றுக்கொண்டவன் என்று பொருள். இதனை மீற இந்துவுக்கு உரிமை இல்லை.  சமத்துவம் பேசும் யாரும் இந்துவாக இருக்க முடியாது. 

ஒரு குழு அந்த குழுவுக்குள் திருமணம் செய்துகொள்வது தான் ஜாதி என்றுரைக்கிறார் (Ketkar) கேட்கர். பௌத்தத்தில் ஜாதி என்றால் பிறப்பு என்று பொருள். இந்த பாலி மொழி சொல்லை வைதிகம் களவாடி கோச்சையாக  பயன்படுத்தி இருக்கிறது. பாபா சாகிப் இங்கே ஒரு தர்க்கம் (logic ) பயன்படுத்துகிறார். 

(A) ஒரு குழுவில் ஆண் மற்றும் பெண் சம எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்றால் அந்த குழுவில் அகமண  திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.  (ஆண் 50 =  பெண் 50) 

(B) இந்த குழுவில் ஒரு ஆண் இறந்து விடுகிறான் என்றால் ஒரு பெண் உபரியாக (Surplus) உள்ளார்.  (ஆண் 49 (50-1) =  பெண் 50). உபரி பெண்ணுக்கு  துணை கிடைக்காமல் போய்விடும்- அந்த பெண்ணிற்கான இணை வேறு ஒரு குழுவில் இருந்து தான் பெறமுடியும். புறமணத்திற்கு சென்றுவிடக்கூடாது. இதனை தடுக்க மூன்று வழிகள் பயன்படுத்தபடுகிறது.

  • (1) உபரியாக உள்ள பெண்ணை கொல்வது. கணவனை இழந்த பெண்ணை உடன்கட்டை (சதி) மூலம் கொல்வது. 

  • (2) கணவனை இழந்த பெண்ணை விதவையாக வைத்து இருத்தல்.  

  • (3) சிறுமி திருமணம். சிறு வயதிலே திருமணம் ஏற்பாடு (அ) துணையை நிச்சயம் செய்துவிடுதல்.  சிறுமி வயது அடைவதற்கு முன் துணையார் இறந்துவிட்டால் அச்சிறுமியும் விதவையாகிவிடுவாள். சாதியை நிலை நிறுத்த இந்த சமூக கொடுமைகளை புனிதமாக கருதுகின்றனர் 

(C) இந்த குழுவில் ஒரு பெண் இறந்து விடுகிறாள் என்றால் ஒரு ஆண் உபரியாக (Surplus) உள்ளார். (ஆண் 50 = பெண் 49 (50-1)). அந்த ஆணுக்கான இணை வேறு ஒரு குழுவில் இருந்து தான் பெறமுடியும். இதனை தடுக்க பெண்ணிற்கு பயன்படுத்திய முறையை பின்பற்ற முடியாது. ஏன் என்றால் ஆண் அதிகாரம் மிக்கவன். கட்டுப்பாட்டை மீறுவான்.  உபரியாக உள்ள ஆண் கட்டாய துறவு மேற்கொள்ளவேண்டும். உண்மையான சாமியாரால் எந்த பிரச்சனையும் இல்லை. கட்டாய துறவில் அவர்கள் ஒழுங்கீனமாக இருக்கிறார்கள். ஆண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவன்.  

சாதி என்பது அகமணமுறை. இந்த அகமணமுறை என்று சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டதோ  அன்று தான் சாதி தோற்றுவிக்கப்பட்டது. சாதி என்பது அகமணமுறை (சதி, விதவை, சிறுவர் திருமணம் மற்றும் துறவு) துறவு என்பது வலுவானது இல்லை. துறவு வாழ்வு மிகக்குறைவு. துறவு வாழ்வில் ஒழுங்கீனம் தான் நடைபெறும் எனவே அகமண முறைக்கு இது உதவாது.

06. அகமண முறை இயக்கி எது?

இப்பொழுது இடுப்புக்கு கீழே தான் கால்சட்டை (Pant) வருகிறது. இதில் அணியும் பனியன் எல்லாம் வெளியே தெரியும். இதனை பார்க்க அருவெறுப்பாக இருக்கும். இது தான் பாணி (Style ஸ்டைல்) என்று ஒருவர் சொல்கிறான். அதனை அப்படியே காப்பி அடிக்கிறோம். இதற்கு முன்பு (Tight pant) இறுக்கமான பேண்ட் அணிந்துகொண்டு இருந்தோம். அதற்க்கு முன்பு பெல் பேண்ட்  அணிந்துகொண்டு இருந்தோம். அதற்க்கு முன்பு (Correct Fitting) சரியாக பொருத்தமாக அணிந்துகொண்டு இருந்தோம். இது எப்படி மாறுகிறது என்றால் காப்பி அடித்தல் முறையினால். காப்பி அடித்தல் முறையினால் சாதி அபிவிருத்தி அடைகிறது.

அவா வந்தா, அவா ஆபீஸ்க்கு வந்துட்டா என்று பெருமையாக பேசுவார். இந்த பேச்சு முறை பிராமணர்களின் பேச்சு முறை. பிராமணர்களை போல பேசுவதால் அவர்களை போன்று உயர்ந்தவர்கள் என்று தோற்றத்தை ஏற்படுத்துவர்   (Imitation) ஒருவரைப்போல் இன்னொருவர் மாற்றிக்கொள்வது காப்பி. இது (காப்பி) தான் அகமண முறை இயக்கி  (Mechanism)

07. முழுமையாக சதி, விதவை குழந்தை திருமணம் ஆகியவற்றை பின்பற்றுபவர் யார்?

ஆங்கில ஆய்வாளர் (Gabriel Tarde) கேப்ரியல் டார்டே காப்பி அடித்தலை மிக விஞ்சான பூர்வமாக ஆய்வு செய்து வெளியிட்டுருக்கிறார். எது உயர்வாக இருக்கிறதோ அதை தான் பின்பற்றுவர். எப்போதும் காப்பி அடித்தல் Higher to Lower. தரம் குறைந்தால் அதனை பின்பற்றுவதில்லை. பிசைக்காரன் போல் ஆடை அணிந்து கொண்டு செல்வார்களா? சாதி தெரிந்துவிடக்கூடாது, உயர்வான மதிப்பு அடையவேண்டும் என்று தான் காப்பி அடிக்கப்படுகிறது. 

அருகில் உள்ளவர்கள் காப்பி அடித்தல் அதிகமாகவும் தொலைவில் உள்ளவர்கள் காப்பி அடித்தல் குறைவாகவும் இருக்கும். பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்பது தான் நான்கு வருணம். இதில் SC மற்றும் ST இனமக்கள் இந்த வருண கோட்பாட்டில் வரவில்லை.

பிராமணனுக்கு மிக அருகில் இருப்பது சத்திரியன். ஆகா சத்திரியன்  பிராமணனை 80% to 90 % காப்பி அடிப்பர். சத்திரியனுக்கு அடுத்து வைசியன். வைசியன் பிராமணனை 60% to 70% காப்பி அடிப்பர். இந்த வருணைக்கோட்பாட்டில் இறுதில் உள்ளது சூத்திரன். சூத்திரன் பிராமணனை 30% to 40% காப்பி அடிப்பர்.

அருகில் இருப்பவர் வீரியமாகவும், அதிகமாகவும் (Higher) காப்பி அடிப்பர். தொலைவில் உள்ளவர்கள் வீரியமின்றி குறைந்த அளவு (Lower ) காப்பி அடிப்பர்.

பிராமணன் முழுமையாகவும், சரியாகவும் சதி, விதவை குழந்தை திருமணம் ஆகியவற்றை பின்பற்றுவான். அருகில் உள்ள சத்திரியன் சதியை பின்பற்றமாட்டான், ஆனால் விதவை மற்றும் குழந்தை திருமணத்தை பின்பற்றுவான். பின்னர் உள்ள வைசியன் சதி, விதவை முறையை பின்பற்ற மாட்டார்கள் ஆனால் குழந்தை திருமணத்தை பின்பற்றுவர். பின்னர் உள்ள சூத்திரன் சதி, விதவை முறையை பின்பற்ற மாட்டார்கள் ஆனால் குழந்தை திருமணத்தை பின்பற்றுவர்     

08. சாதியை  உருவாக்கியது யார்
இந்த அகமண முறையில் உள்ள மூன்று முறைகளை (சதி, விதவை, குழந்தை திருமணம்) உறுதியாக பின்பற்றுகின்றனரோ அவர் தான் சாதியை உருவாக்கி இருப்பர். அவர்கள் ஏற்படுத்திய சாதியை அவர்களே நீத்து போகசெய்யமாட்டார்கள். விதவைக்கு மொட்டை அடித்து, தலைக்கு முக்காடு போட்டு விடுவார்கள். நல்லது கேட்டது எதிலும் கலந்து கொள்ள செய்யமாட்டார்கள். அதை தாண்டி சென்றால் சமூகத்தில் மதிப்பளிக்க மாட்டார்கள்.  புழுங்கி புழுங்கி விதவை கோலத்தில் சாகவேண்டும். 

இப்பூ உலகில்    அதிக அனுகூலங்களை அனுபவிப்பவர்கள் பிராமணர்கள். அவர்கள் பூலோக கடவுள். அவர்களை வீட்டுக்கு அழைத்து நம்மை ஆசிர்வதிக்க வேண்டுவோம். 

சோனியா காந்தி கிறிஸ்துவமதத்தை சார்ந்தவர். பிராமணர்களை கூப்பிட்டு வேள்வி வளர்த்து பிரமணரிடம் ஆசீர்வாதம் பெற்றார். ஆசிர்வாதம் பெற்ற பின் MP பதவிக்கு மனு தாக்கல் செய்கிறார். நாங்கள் தான் (பிராமணர்கள்).புலோக கடவுள். நல்ல நாள் கெட்ட நாள் மற்றும் திருமண செய்துவைப்பர்.

09. சாதிய வளர்ச்சிக்கு கரணங்கள் யாவை?
01. காப்பி அடித்தல் (Imitation)

02.  சாதிய வன்மங்கள் (வன்முறைகள்) - Punishment

  
10.  சாதிய வன்மங்கள் (வன்முறைகள்) என்பது எப்படி தெரிகிறது?

அகமண முறையை மீறினால் கொலை செய். சாதி விட்டு சாதி திருமணம் செய்வது அகமண முறையை தகர்கின்ற செயல். எனவே (திருச்செங்கோடு கோகுல்ராஜ்) அவர் கொல்லப்பட்டார்.

சாதியால் ஒவ்வொரு சாதியும் என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறது. 

    1.  ஒவ்வொரு சாதியும் என்ன தொழில் செய்யவேண்டும்? 
    2. எந்த விதமான ஆடையை அணிய வேண்டும்? 
    3. எந்தெந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்? etc 

    இதனை மீறக்கூடாது. நாங்குநேரியில் பள்ளி மாணவரை ஏன் அடித்தனர்? அவன் நன்றாக படிக்கிறான் என்பதால். SC இன மாணவன் நன்றாக படிக்கக்கூடாது. அதானல் சிகரெட் வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா, அதை வாங்கிட்டு வா என்று எடுபிடி வேலையை கொடுத்து செய்ய செய்தார்கள். அதனால் அம்மாணவன் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இது தான் இந்து மனப்பான்மை.

    பாலத்தின் மேல் ஒரு SC இனத்தை சேர்ந்த ஒருவன் உட்கார்ந்து இருந்தான். அவ்வழியாக சென்ற வேறு சமூகத்தினர் அவனை அடித்து கொன்றனர். 

    இன்னொரு SC இனத்தை சேர்ந்த ஒருவன் சபரிமலை அருகில் சண்டை போட்டவர்களை விலக்கிவிட்டான். ஏண்டா விலக்கிவிட்டாய் என்று அவனை அடித்து துன்புறுத்தினர். இது எல்லாம் சாதி வன்மங்கள்   

    மகாராஷ்டிரத்தில் பிராமணர் வேட்டி அணிவது போன்று வேறு ஒரு சமூகம் அணிந்தது. இந்த இமிடேஷன் (காப்பி அடித்தல்) கூடாது என்று அரசு வரை கொண்டு சென்று தடுத்தனர்.

    நமஸ்காரம் என்பது பிராமணர்கள் பயன்படுத்திடும் சொல். இதை வேறு ஒரு சமூகம் பயன்படுத்த கூடாது என்று அரசு வரை சென்று தடுத்தனர்.

    இந்த சாதியினரை இப்படித்தான் புதைக்கவேண்டும் என்று இருக்கிறது. இறந்த உடலை எரிப்பது உயர் சாதிக்கு உரியது.  மீறி எரித்தால் பழிவாங்குவர்.  இந்த இமிடேஷன் சாதிக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.

    சாதி இருக்கும் வரை SC இன மக்களுக்கு முன்னேற்றம் இல்லை என்றுரைக்கிறார் Dr.அம்பேத்கர். இந்துக்கள் என்போர் சாதி வன்மனத்தில் திளைத்தோர்.  இதில் இருந்து விடுதலை பெற உங்களை இழிவு படுத்தும் மாதத்தில் இருந்து நீங்கள் வெளியேறவேண்டும். 

11. Gated Community 
    சாதியை படைத்தான் பிராமணன். அவன் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டான். கதவுக்கு வெளியே இருப்பவர்கள் அவர்களும் பிராமணன் செய்வது போன்று இமிடேட் காப்பி அடித்து தங்கள் கதவுகளையும் மூடிக்கொண்டனர்.  இப்படி ஒன்றை பார்த்து ஒன்று காப்பி அடித்து தங்கள் கதவுகளை மூடிக்கொண்டது.   சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டால் அவர்களை சமூகத்தில் இருந்து விலக்கிவைத்து விடுவர்   
12. சாதியை ஒழித்தது யார்?
1955 க்கு முன் அகமண முறையே சட்டமாக இருந்தது. 1955 இந்து திருமண சட்டம் வந்த பின்பு புறமணம் சட்டம் ஆனது. சாதியை ஒழித்தது Dr.அம்பேத்கார். சாதி மறுப்பு திருமணத்திற்கு சட்டம் இயற்றியது 
Dr.அம்பேத்கார். வேறு ஒருவரையும் சாதி மறுப்பு திருமணத்திற்கு நாம் சொல்வோம்.  அவர் எங்கே என்ன செய்தார்?  எந்த சட்டத்தை கொண்டுவந்தார்? இதை நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஏன் என்றால் இதை கஷ்டப்பட்டு பாடுபட்டவர்க்கு பெருமை சேர்க்கவேண்டும் ஒழிய நிடுவில் நின்று விட்டு போனவருக்கு எல்லாம் பெருமை சேர்க்கக்கூடாது

13. இந்து திருமண சட்டம் எதிர்த்தவர் யார் யார்? ஏன்?

அன்று இருந்த இந்து பெண்கள் இந்து திருமண சட்ட சட்டத்தை எதிர்த்தனர். காரணம் சாதி என்ற காரணத்தை தவிர வேறு ஏதும் இல்லை.

Parliamentல் முஸ்லிம்கள் இந்து திருமண சட்ட சட்டத்தை  எதிர்த்தனர்.  காரணம்  Dr.அம்பேத்கர் மதத்தில் தலையிடுகின்றார். எங்களுடைய பழக்கவழக்கங்கள் தலையிடுகின்றார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று எதிர்த்தனர். 

14. இந்து திருமண சட்டம் யார் யாருக்கு?
அம்பேத்கர் 1916 ல் கொடுத்த கட்டுரைக்கு 1955 ல் இந்த அகமண முறையை தகர்த்து சட்டம் கொண்டுவருகிறார். புறமண முறைக்கு கொண்டுசென்று விட்டார். இந்து திருமண சட்டம் என்பது  கலப்பு திருமணம்  மதங்களுக்கு இடையிலான திருமணம். 21 வயது அடைந்த ஒரு ஆண் 18 வயதை அடைந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அப்பெண் எந்த சாதியாகவும் இருக்கலாம், வருணத்திற்கு வெளியே உள்ள SC இனமாகவும்  இருக்கலாம், 

01. இந்து திருமண சட்டத்தில் விதவை மறுமணம் செய்துகொள்ளலாம் 
02. விவாகரத்து மனு Divorce Petition பெண்களும் போடலாம்   

இந்து, சீக்கியர், ஜைனர் மற்றும் பௌத்தம் ஆகிய நான்கு மதத்தவர்க்கும் தான் இந்து திருமண சட்டம். 21 வயது அடைந்த ஒரு இந்து ஆண் 18 வயது அடைந்த ஓர் இந்து பெண் அல்லது ஓர் சீக்கிய பெண் அல்லது ஜைன பெண் அல்லது பௌத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆகவே இது Inter Religious Marriage  

இந்து மதம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக புரட்சி வேடம் போட்டவர்கள், கம்யூனிஸ்ட் எல்லாம் இந்து என்று சட்டம் சொல்கிறது என்று எதிர்த்தனர். ஒருவர் இதில் இணைக்கப்பட்ட காரணத்தால் அவர் இந்து எனக்கருத முடியாது என்னும் ஒரு விதி இந்த சட்டத்தில் உள்ளது. Section 5A Hindu Marriage Act  

Article 25 இந்து என்ற இடத்தில் சீக்கியர் என்று போட்டுக்கொள்ளுங்கள். அவன் என்று நீங்கள் எது எழுதினாலும் அது பெண்ணாக இருக்கும் பொது அவள் என்பதையும் குறிக்கும். இந்து சீக்கியர் ஜைனர் மற்றும் பௌத்தர் திருமண சட்டம் என்று பெயர் கொள்ளவேண்டும். அனால் அப்பெயர் மிகப்பெரியது. பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொல்கின்றனர்.  அம்பேத்கர் 22 உறுதிமொழிகளை ஏன் கொடுத்தார்? அவை இந்து மதத்திற்கு எதிரானவை. குஜராத் மோடி 22 உறுதிமொழிகளை படமாக இருந்ததை ஏன் நீக்கினார்? பௌத்தம் இந்து மதத்தின் ஒரு பகுதி அல்ல. பௌத்தத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல் அது. பௌத்த மத அடையாளங்கள், சான்றுகள் அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

  


ஜெய் பீம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக