சனி, நவம்பர் 02, 2024

புத்தவர்மன்

The Indian Antiquary 1880
குணபதேச செப்பேடு இது சர் வால்டர் எலியட்டுக்கு (Sir Walter Elliot) சொந்தமான அசல் தட்டுகளிலிருந்து உரை எடுக்கப்பட்டது. அவர் பக்தவாட்சலியா (Baktavatchaliah) என்பவரிடமிருந்து இந்த தட்டை பெற்றார். பக்தவாட்சலியா அவர்கள் குண்டூர் மாவட்டத்தில் உள்ள 'கோண்டகூரில்' 'குணபாதேயா'வில் இந்த தட்டை கண்டுபிடித்தார். ( The Indian Antiquary – A Journal of Oriental Research Vol IX- 1880 by JAS. BURGESS, LL.D., F.R.G.S., M.R.A.S. பக்கம் 100)  
டாக்டர் மா.இராசமாணிக்கம் 1944 
பிராக்ருத மொழிகளில் தங்கள் பட்டயங்களை வெளியிட்ட பல்லவர் முதற்காலப் பல்லவர் ஆவர் (கி.பி. 300-340). இவர்கள் பட்டயங்களைக் கொண்டு முதற்காலப் பல்லவர் பெயர்கள் 
01. சிவஸ்கந்தவர்மன்
02. விஜயஸ்கந்தவர்மன்
03. இளவரசன் புத்தவர்மன்
04. புத்யங்குரன்.
விஜய ஸ்கந்தவர்ம ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தவர் புத்தவர்மன். புத்தவர்மனின் மனைவி சாருதேவி மகன் புத்யங்குரன். இச்சாருதேவி தெலுங்க நாட்டில் தாலூராக் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நிலதானம் செய்தாள். அதனைத் தெரிவிப்பதே ‘குணப தேயப் பட்டயம்’ என்றுரைக்கிறார். (பல்லவர் வரலாறு 1944 5. முதற்காலப் பல்லவர் பக்கம் 43-49)
இந்திய வரலாற்று காலாண்டு  தொகுதி 31ல் 1955 பக்கம் 118
கோவிலில் உள்ள ஆண்டவர் நாராயணாக்கு நிலம் வழங்கப்பட்டது. தங்களின்  வாழ்க்கை மற்றும் வலிமையின் அதிகரிப்புக்காக இந்த நில தானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தின் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் வேத சடங்குகள் மற்றும் பலியிடுதல் செயல்பட்டனர் என கூறப்பட்டாலும் மேற்கண்ட பதிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்றன. மறுபுறம் சில பெண் உறுப்பினர்கள் 4-ஆம் நூற்றாண்டில் வாசுதேவ வழிபாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

T.A கோவிந்த ராவ் 1979
இந்த தட்டுகளிலிருந்தும் ஆரம்பகால சங்கிருத கதாபாத்திரங்களிலிருந்தும் விஜயஸ்கந்தவர்மனுக்கு விஜய புத்தவர்மன் மற்றும் விரவர்மன் என்ற இரண்டு மகன்கள் இருந்ததாகத் தெரிகிறது, விஜய புத்தவர்மன் மூத்தவர். விஜய புத்த வர்மானுக்குப் பின் வந்த புத்தங்குரரின் ஆட்சி பற்றி எதுவும் தெரியாது. (Buddhisim in Tamil Country Page 168)
டாக்டர் மு.ராஜேந்திரன் 
ஓர் அரசகுல பெண் பிராமணர் அல்லாத ஒரு விவசாயிக்கு வழங்கிய நில தானம் என்றுரைக்கிறார்.
குணபதேச செப்பேடு (Gunapadeya Copper Plate) 
100 வருடங்களுக்கு முன்பு சர் வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்ற ஆங்கில ஆட்சியாளர் பழைய பொருட்கள் பலவற்றை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். அந்தக் குவியலில் இந்தச்  செப்பேடு இருந்தது. பின்னர்  செப்பேடு டாக்டர் ஹூல்ஸ், டாக்டர் ப்ளிட் என்பவர்களால் படிக்கப்பட்டு கட்டுரையாக வெளிவந்தது.
முதல் ஏட்டின் முன்பக்கம் இரண்டாம் ஏட்டின் இருபக்கம் மற்றும் மூன்றாம் ஏட்டின் உட்புறம் என 16 வரிகள் எழுதப்பட்டு இருந்தது. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
ராஜாதடாகத்தின் அருகிலுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் ஆதுகன் என்பவன் பயிரிட்டு வந்த நிலத்தில் நாலு நிவர்த்தனம் பூமியை தாதுரம்  என்ற இடத்தில் கட்டப்பட்டிருக்கும் நாராயணனுடைய கோயிலுக்கு தனது ஆயுள் பலம் கூடுவதற்கு அளிக்கப்பட்டது. இந்நிலத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. 
அரசர்கள் மட்டுமே நிலதானம் வழங்குவது, வரி விலக்கு அளிப்பது என்று இருந்தது. மேலும் (செப்பேட்டின் மூலம்) தானங்கள் பிராமணருக்கு மற்றும் கோவிலுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனது புகழையும் ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் அளிக்கப்படும்.
இந்த நடைமுறையை தகர்த்த மிகப் பழமையான செப்பேடு குணபதேச செப்பேடு. இராணி சாருதேவி (Charudevi) தனது இளம் வயது மகனின் சார்பாக ஆட்சி நடத்திய போது இந்த தானம் வழங்கப்பட்டது. நிலதானமும் பிராமணருக்கோ அல்லது கோவிலுக்கோ அளிக்காமல் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. 
முதலாம் யுவமகாராஜா சிவஸ்கந்தவர்மனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் புத்தவர்மன், இளைய மகன் முதலாம் குமார விசுணு. புத்தவர்மன் அரசனாகவில்லை என்பதற்கு ஆதாரமகா இருப்பது குணபதேச செப்பேடு. இச்செப்பேடு தற்பொழுது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது (The British Museum Plates of Queen Charudevi) .
சாருதேவி தன்னை யுவமகாராஜாவின் (யுவமகாராஜா விஜய புத்தவர்மன்-Yuvamaharaja Sri Vijaya Buddhavarman)  மனைவி என்றும் புத்தயன் குராவின் (Buddhayankura) தாய் என்றும் அறிவித்து குணபதேச செப்பேட்டை அளித்து உள்ளாள். 
அரசி நில தானம் வழங்கியதாக சொல்லும் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பழமையான  குணபதேச செப்பேடு. தனது புகழையும் ஆயுளையும் அதிகரிப்பதற்காக தானம் என்று சொல்லாததிலிருந்து புத்த வர்மன் அரசனாக இல்லை என்பது உறுதியாகிறது.  
குணபதேயம்- கொண்டக்கூர் தாலுக்கா, குண்டூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  (பல்லவர் காலச் செப்பேடுகள்)

வெள்ளி, நவம்பர் 01, 2024

காஞ்சீவரம் தொன்மையான பௌத்த தளம் XXVI சத்யநாத சுவாமி கோவில்


சத்யநாத சுவாமி கோவில் 

அமைவிடம் 
சத்யநாத சுவாமி கோவில், திருக்காலி மேடு, காஞ்சீவரம், காஞ்சீவரம் வட்டம் 631501. காஞ்சீவரம் பேருந்து நிலையம் (அ) தலைமை அஞ்சல் நிலையத்தில் (Post Office) இருந்து 40 அடி கடந்ததும் இடது புறம் செல்லும் சாலையில் உள்ளது. காஞ்சிவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி .மீ தூரத்தில் அமைந்துள்ளது.

பம்மல் சம்பந்தம்
இதற்கு சித்திரபுரம் என்றும் பெயருண்டு. இது திருக்காலிஸ்வரர் கோவில் என தற்காலம் அழைக்கப்படுகிறது. ஆட்டிசன் பேட்டைலிருக்கும், தேருக்கு வட கிழக்கில் 3/4 மயில் தூரத்தில், கொல்லை வெளியில், வேப்பங்குளத்திற்கு அருகாமையிருக்கிறது. ஆதியில் இவ்விடம் காரைவனமாய் இருந்தது. தீர்த்தம் இந்திர தீர்த்தம். கல்வெட்டுகளில் சுவாமி பெயர் திருக்காரைக்காடுடையார்  என்றிருக்கிறது. (சிவாலயங்கள் இந்தியாவிலும் அதற்க்கப்பாலும் பகுதி 2 (1946) பக்கம் 12)
தீர்த்தங்கள்
இக்கோவிலின் அருகாமையில் சத்திய விரத தீர்த்தம் என ஒரு குளம் உள்ளது (Temple Tank) இருக்கிறது. இத்தலத்திற்கு இந்திரபுரம் என்றும் தீர்த்தத்திற்கு இந்திர தீர்த்தம் என்றும் வழக்கத்தில் உள்ளது. இது தற்போது “பெரிய வேப்பங்குளம் என வழங்கப்படும். இக்குளம் பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது.
சிலையமைப்பு
தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் புத்தரின் திருவுருவங்களை காணலாம். ஒரு அடி உயரம் கொண்ட இரண்டு புடைப்பு சிற்பங்கள் தட்சணா மூர்த்தி சிலைக்கு கீழே உள்ளது. இரு சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. சீவர ஆடை - ஞான முடி -நீண்ட காது 














































காஞ்சீவரத்தில் மழை அளவு அதிகமாக இருக்கும்போது, நீர்வரத்து அதிகரித்து, சின்னவேப்பங்குளம் நிரம்பி, உபரிநீர் மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும்.

தட்சிணாமூர்த்தி
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருவது வழக்கம். ஆனால் இங்கே ஏழு சீடர்களுடன் காட்சி தருகிறார்.  தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள். தட்சிணாமூர்த்தி சின் முத்திரை உடன் உள்ளார். தாமரை மலர்மீது அமர்ந்துள்ளார்

ஆலயம் அமைந்தப் பகுதியில் முன்காலத்தில் காரைச்செடிகள் அதிகமாக வளர்ந்து காணப்பட்டுள்ளன. இதனால் இத்தல இறைவன் ‘காரைத்திருநாதர்’ என்று அழைக்கப்பகிடுறார். சத்தியநாதர் என்ற பெயருடன் அழைக்கப்பகிடுறார். 




வெள்ளி, அக்டோபர் 18, 2024

அசோக தூண் (Ashok Pillar) சென்னை ( பகுதி I)


அசோக் நகர் என்று பெயர் வைத்தபின் அசோகர் தூண், கலிங்கா காலனி, கலிங்கா பூங்கா, அசோகா காலனி என்று பௌத்தத்தை அடையாளப்படுத்தும் பெயர் வைக்கப்பட்டது. கலிங்கா காலனி அடுத்து அசோகா காலனி இருந்தது. இன்று நன்கு வளர்ச்சியடைந்த பின் அவ்வடையாளங்கள் பல மறைந்து போனது. 

வடபழனி 100 அடி சாலை வழியாக அசோக தூண் சென்றடைய முடியும். PT ராஜன் சாலை முடிவிலிருந்து (முதல் நிழற்சாலை, ஒட்டகப்பாளையம்)  லக்ஷ்மன் சுருதி இடையில் இருந்த பல வீடுகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லமுடியும். இச்சாலையில் இருந்த அசோகா காலனி (அசோகா தூண் - வடபழனி 100 அடி சாலை) காணாமல் போனது. தற்பொழுது ஜவாஹர்லால் நேரு சாலையாக மாற்றப்பட்டது.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி, அரசு குடியிருப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் ஆகியவை அசோகா காலனியில் அமைந்தவை.   

ஏ வி எம், வடபழனி ஆலயம், வடபழனி அரசு பள்ளி, கோடம்பாக்கம் போன்றவை அசோக் நகர் உருவாக்குவதற்கு முன் அமைந்திருந்தவை. AVM இருந்து ஒட்டகப்பாளையம் வரை நீர் நதி போன்று ஒட்டிக்கொண்டு இருந்தது. இங்கு மீன் பிடிப்பர், பாம்புகள் அதிகம். 

கோடம்பாக்கம் ஆற்காட் நவாப் அவர்களின் குதிரை கோட்டையாக இருந்தது. நல்ல காட்டு பகுதியாக இருந்த கோடம்பாக்கம் குதிரைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலமாக இருந்தது. உருது மொழியில் குதிரை தோட்டம் என்பது கோடபாக் என்று அழைக்கப்படும். கோடா பாக் என்பது கோடம்பாக்கம் என்று மருவியது. ஆற்காட் சாலை என்பது ஆற்காட் நவாபை குறிப்பிடும் சொல்.

வடபழனி என்பது தற்பொழுது உள்ள கோவில் பெயர். பழநி என்றால் தென்பழனியை குறிக்கும். எனவே இந்த ஆலயத்தை வடபழனி என்று குறித்தனர். 1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. வடபழனி சிவன் கோவில் அருகில் உள்ள சைதாப்பேட்டை சாலை தான் வடபழனி செல்ல இருந்த இடம்.
 

பெருந்தலைவர்  காமராஜர்

பெருந்தலைவர்  காமராஜர் அவர்களால் தான் சென்னை, அசோக் நகர் உருவானது. அசோக் நகர், அசோகா தூண், கலிங்கா காலனி, கலிங்கா பூங்கா, அசோகா காலனி என்று பௌத்தத்தை அடையாளப்படுத்தும் பெயர் வைத்தார். இன்று இங்கு அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது காமராஜர் அவர்களால் உருவானது.

ராணி எலிசபெத் சென்னை துறைமுகத்தை விரிவுபடுத்த, சென்னை கடற்கரை சாலை குடிசை பகுதியில் (அண்ணா சதுக்கம் ஆற்று ஓரம் இரும்பொறை, இரும்பொறையை இரும்பாறை, இரும்பாரவாதி என்று மக்கள் அழைத்தனர்) நேப்பியர் பாலம் -Nepir Bridge அருகில் கன்னியப்பநகர் பகுதியில் இருந்தவர்களுக்கு மாற்று இடத்தில் குடியேற்ற கேட்டுக்கொண்டார்.

இரும்பொறை என்பது மன்னரின் பெயர். சங்க கால அரசர்களில் இரும்பொறை என்னும் பெயருடன் 7 அரசர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் பெயர்கள் 

    • 01. பெருஞ்சேரல் இரும்பொறை, 02. இளஞ்சேரல் இரும்பொறை, 03. குட்டுவன் இரும்பொறை, 04. அந்துவஞ்சேரல் இரும்பொறை, 05. கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, 06. குடக்கோச் சேரல் இரும்பொறை, 07. சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை  

அம்மக்களை அசோக் நகரில் குடியமர்த்தினார் காமராஜர். காமராஜர் குடியமர்த்திய இப்பகுதி புதூர் என்றழைக்கப்பட்டது. மல்லிகைப்பூ நகர் என்பது பழைய பெயர். தென்னை ஓலையில் கட்டப்பட்ட கூரை வீடு, கழிப்பறை, குளியலறை, கழிவு நீர், இரு வீடுகளுக்கு ஒரு கிணறு என கட்டி தரப்பட்டது. பேருந்து பணிமனை அமைத்து பேருந்து வசதிகள், அரசு மருத்துவமனைகள், அஞ்சலகம், பள்ளிகள், காவல் நிலையம், மின்சாரம் என வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார்.  

புதூரை மேல் புதூர் மற்றும் கீழ் புதூர் என்று அழைக்கப்பட்டது. மேல் புதூர் மேல் சேரி என்றும் மற்றும் கீழ் புதூர் கீழ் சேரி என்றும் அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்று முல்லை. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். முல்லை நிலத்தின் ஊர் சேரி. சேரி என்பது வாழ்விடம். இவ்வாழ்விடத்தை கீழ்த்தரமான சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. மூதேவி என்பது மூத்த தேவி இச்சொல்லை  கீழ்த்தரமான சொல்லாக மாற்றியது போன்று தான் சேரி  என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.

கீழ் புதூர்/கீழ் சேரி :- மல்லிகைப்பூ நகர், மல்லிகைப்பூ சேரி  

மேல் புதூர்/மேல் சேரி:- கலிங்கா காலனி, சிவலிங்கபுரம் 

அசோக் நகர் என்று பெயரிட்டபின் அசோக் தூண் (1962) மற்றும் கலிங்கா காலனி உருவாக்கப்பட்டது. கலிங்கா காலனி என்ற பெயரில் தான் பேருந்துகள் இயங்கின. பெருநகர போக்குவரத்து கழகம் 1972ல்  தமிழக அரசால் தொடங்கப்பட்டது. கே.கே. நகர் பேருந்து பணிமனை 1973ல் நிறுவப்பட்டது. கலிங்கா காலனி பேருந்து பணிமனை பிறகு கே. கே நகர்பேருந்து பணிமனை என்று மாற்றப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. மருத்துவம், பள்ளிகள், காவல் நிலையம், சாலைகள் என பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. 

மல்லிகைப்பூ சேரி மற்றும் மல்லிகைப்பூ நகர் என்பதே இதன் பழைய பெயர். மல்லிகைப்பூ சேரி என்பது 40 குடிசை பகுதி. மல்லிகைப்பூ நகர் என்பது புதூர் பள்ளி அமைந்திருக்கும் இடம். இந்த இடங்களில் மல்லிகை பூ அதிகமாக வளர்க்கப்பட்டது. 40 குடிசை பகுதி என்பது அனுமதி அட்டை பெற்று கட்டப்பட்ட இடம். ஆனால் அனுமதி அட்டை இல்லாமல் கட்டப்பட்ட இடமான ஒட்டகப்பாளையம் அட்டையில்லா நகர் என்று அழைக்கப்பட்டது. ஒட்டகப்பாளையம் முதல் தெரு முதல் பத்தாவது தெரு வரை உள்ளது. சாமியார் மாடம் அருகில்  கீரை மற்றும் முள்ளங்கி அதிகமாக பயிரிடப்பட்டது. காமராஜர் காலனி, Dr அம்பேத்கர் சாலை, சாமியார் மாடம், சுப்புராயன் நகர் எல்லாம் கொய்யா தோப்பாக இருந்தது. வீடுகள் மற்றும் தோப்பு இடங்களை காலிசெய்து தான் காமராஜர் காலனி, Dr அம்பேத்கர் சாலை உருவானது அசோக தூண் அருகில் மாந்தோப்பு  இருந்தது.  

மாந்தோப்பு எல்லை 8ஆவது நிழற்சாலை முதல் அசோகர் தூண் வரை, 8 ஆவது நிழற்சாலை முதல் போஸ்டல் காலனி வரை, அசோகர் தூண் முதல் ராம் காலனி வரை, போஸ்டல் காலனி முதல் ராம் காலனி வரை.    

1964 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1970களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. கேரம் போர்டு மற்றும் கபடி தான் இங்கு விளையாட்டு.  

இங்கு பல கிணறுகள் இருந்தது. உதாரணமாக இரண்டாவது நிழற்சாலை முடிவில் ஒரு பெரிய கிணறு இருந்தது. 8, 11, 12, 13, 14 தெருக்களில் கிணறு இருந்தது. நான் இருந்த 11 வது தெருவில் இருந்த கிணறு 2000 வரை இருந்தது. ஜவஹர் வித்யாலயா அமைந்திருக்கும் இடத்தில் ஒரு கிணறு, புதூர் பள்ளியில் ஒரு கிணறு இருந்தது. ஆனால் இன்று ஒரு கிணறு கூட காணமுடியவில்லை.  

மாடுகள் அதிகமாக வளர்க்கப்பட்டு இருந்தது. எங்கள் தெருவில் 20 க்கு மேற்பட்ட மாடுகளை நானே பார்த்து இருக்கிறேன். அதிகாலையில் மாட்டு சாணம் எடுத்து வந்து தண்ணீரில் கரைத்து அதனை வாசலில் தெளித்தது பெருக்கி சுத்தம் செய்யப்படும். வெள்ளிக்கிழமை மாட்டு சாணத்தில் வீடு மெழுகப்படும். போதி பொங்கல் அன்று வீட்டு வாசலில் பழைய துணி, பாய் ஆகியவற்றை நெருப்பிலிட்டு எரிக்கப்படும். சிறிய பறைகள் ஏராளமாக விற்கப்படும். கிளிஞ்சல்கள் வாங்கி வந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி வீட்டிற்க்கு வெள்ளையடிக்கப்படும்   

அசோகா தூண் பகுதி

அசோகா தூண் அருகில் வேலிகாத்தான் முள் மரங்கள் அதிகமகா இருந்தது. வேலிகாத்தான் முள் மரங்கள் அதிகப்படியான நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை. இங்கு பெரிய கிணறு ஒன்று வெட்டப்பட்டது. குடி நீர் தேவையை தீர்க்கும் கிணறாக இருந்தது. தண்ணீர் எடுத்துச்செல்ல அவ்வளவு கூட்டம் இருக்கும் இங்கு.  

அசோகா தூண் அங்கு தான் தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. அசோகா தூண் சுற்றி இருந்த சுற்றளவு பெரியதாக இருந்தது. இன்று மிகக்குறிக்கியதாக உள்ளது மற்ற இடங்கள் மண் சாலைகள் தான். களிமண் அதிகம் அடிக்கடி வண்டி சக்கரம் இந்த மண்னில் மாட்டிக்கொள்ளும்.

சைதாப்பேட்டை தான் நன்கறியப்பட்ட இடமாக இருந்தது. இங்கிருக்கும் இடங்களையும் சைதாப்பேட்டை இடமாக அறியப்பட்டது. சைதாப்பேட்டை இருக்கும் ஆற்று நீர் மக்கள் பயன்படுத்தினார்கள். இன்று கழிவு நீர் செல்லும் ஆறாக கூவம் ஆறு மாறியுள்ளது. நீர் போக்குவரதாக, நீர் தேவையை பூர்த்தி செய்த கூவம் ஆறு கழிவு நீர் செல்லும் ஆறாக மாற்றிய மக்களுக்கும் அரசுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள். வட இந்தியாவில் புண்ணிய நதி என்று சொல்லும் இடங்களில் இறந்த உடல்கள் இருக்கிறது. தமிழகம் நீர் தேவையை அளித்த கூவம் நதியை சாக்கடை நீராக்கிய பெருமையை கொண்டுள்ளது. ஆற்று ஓரம் இருந்த மக்களை பாதுகாப்புக்கு என்று இடம் பெயரவைத்து பல்வேறு கட்டிடங்கள், கல்லுரிங்கள் கட்டிய அரசுக்கும் நன்றிகள். இது போன்ற செயல்களை இன்றும் நிறுத்தாமல் மக்களை காக்க கூவம் ஆற்றை மூடும் பணியை செம்மனே செய்யும் அரசுக்கு நன்றிகள்.  

கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் கலங்கரை விளக்கம் (Light House). பெரிய கட்டிடங்கள் ஏதும் அப்பொழுது அசோக் நகரில் இல்லை. மிகப்பெரியதா இருந்தது அசோக் தூண் தான். அசோக் தூணில் இருக்கும் சிங்கங்கள் கலங்கரை விளக்கம் போன்று வழிகாட்டியாக அமைந்து இருந்தது என்று வயது முதிர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் குறிப்பிட்டார்.  
  
Dr அம்பேத்கர் சாலை (660 மீட்டர்) துவங்கி அசோக் நகர் 4 நிழற்சாலை (1250 மீட்டர்) அசோக் நகர் முதல் நிழற் சாலை (300 மீட்டர்) என 2210 மீட்டர் தொலைவில் உள்ளது அசோகர் தூண். அசோகர் தூண் சந்திப்புக்கு அருகில் உள்ள சமீபத்திய புதிய வசதி சென்னை ரயில் மெட்ரோ நெட்வொர்க்கின் அசோக் நகர் ரயில் நிலையம் ஆகும்.

   A) பள்ளிகள்

  • கன்னியப்ப நகர், உயர் நிலைப்பள்ளி
  • புதூர், அரசினர் மேல்நிலை பள்ளி
  • அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி
  • நடேசன் சாலை, கேந்திரிய வித்யாலயா

1. சென்னை உயர் நிலைப்பள்ளி கன்னியப்ப நகர் 

அமைவிடம்: எண் 46, 83வது தெரு,  கன்னியப்ப நகர், அசோக் நகர், சென்னை 600 083.

அசோக தூண் அமைப்பதற்கு முன் கட்டப்பட்ட பள்ளி. சென்னை கடற்கரை சாலை கன்னியப்பநகர் பகுதியில் இருந்தவர்களுக்கு கன்னியப்ப நகர் என்ற இடப்பெயரும் அதே பெயரில் பள்ளியும் அமைத்து கொடுக்கப்பட்டது. அசோக் நகரில் உள்ள பழையான பள்ளிக்கூடம் கன்னியப்ப நகர் பள்ளி தான். ஓலை கூரை பள்ளியாக துவங்கப்பட்டது. மாணவர்கள் அமர்வதற்கு எந்த வசதிகளும் இல்லை. அங்கிருக்கும் மணலை மேடாக்கி அதன் மேல் அமர்ந்து இருப்பர். பள்ளி கூரையை மாற்றும்பொழுது பள்ளி ஒட்டகப்பாளையம் இடத்திற்கு மாற்றப்படும்.  மதில் சுவர் கிடையாது. பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கியது. பள்ளியில் சேர அடிப்படையான தகுதி கையை தலை மேல் வைத்து காதை தொடவேண்டும். காதை தொட்டால் பள்ளியில் சேர அனுமதி. 2 Cent இடத்தைக்கொண்ட  பள்ளி.  இது ஒரு மாநகராட்சி பள்ளி (Corporation High School).  பயிற்று மொழி தமிழ்
 
இந்த பள்ளிக்கூடத்தில் தான் என் அம்மா படித்தார்கள். அம்மா படித்த அதே பள்ளிக்கூடத்தில் தான் நான், என் அண்ணன், தங்கைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை படித்தோம். கன்னியப்ப நகர் கூரை பள்ளி 1970ல் பள்ளி கட்டிடமாக கட்டப்பட்டது. நாங்கள் படிக்கும் போழுது முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி இயங்கியது. நான் படிக்கும் போது பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. மதிற் சுவர் கட்டப்பட்டு இருந்தது. சத்துணவு வழங்கப்பட்டது. விளையாட பள்ளி மைதானம் இருந்தது.
தற்பொழுது இப்பள்ளி ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ளது. தற்பொழுது விளையாட்டுமிடங்கள் பள்ளி அறைகளாக மாறியுள்ளது. இப்பொழுது விளையாட்டு மைதானம் இல்லை

 2. புதூர் அரசினர் மேல்நிலை பள்ளி

அமைவிடம்:  எண் 46, 3வது நிழற்சாலை,  மல்லிகை பூ சேரி, புதூர்,  மேற்கு மாம்பலம், அசோக் நகர், சென்னை 600 083. 

அசோக தூண் அமைப்பதற்கு முன் கட்டப்பட்ட பள்ளி. இப்பள்ளி மாநில அரசு பள்ளி. இப்பள்ளி 1961 தொடங்கியது. பொன்விழா (50 ஆண்டு) 11-11-2011 அன்று கொண்டாடப்பட்டது ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளிக்கூடம் மதில் சுவர் இன்றி கட்டப்பட்டது.இந்த பள்ளிக்கூடத்தில் தான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படித்தேன் (1983 to  1987). பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி. புதூர் பள்ளி மேற்கு மாம்பலம் பள்ளி என்று தான் அழைக்கப்பட்டது.  நான் படிக்கும் பொழுது  மதில் சுவர் கட்டப்பட்டு இருந்தது.  பள்ளியில் ஒரு நூலகம் உள்ளது.
 
3வது நிழற்சாலை 8 ஆவது தெரு இணையும் இடத்தில் IJK அலுவலகம் உள்ளது. இங்கு SRM டியூஷன் மையம் ஒன்று கூரை கோட்டையில் துவங்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பொதுக்கூட்டம் நடைபெறும். பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து மேடை பேச்சுகளை தந்துள்ளனர். நடிகர் அசோகன், நடிகர் ஆனந்தன், நடிகர் SSR பேசி முடித்த பின் தான் MGR அவர்கள் பேசுவார். திரும்பி செல்ல கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு கூட்டம் மிகுந்து இருக்கும். MGR பேச்சை விட கலைஞர் மேடை பேச்சு இங்கு அதிகம்.

 


3. அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி
அமைவிடம்: எண்13, 9ஆவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை 600083
அசோக் நகர் அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி சிறந்த அரசு பள்ளியாக உள்ளது. 1962 காமராஜர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட பள்ளி. இப்பள்ளி அசோகர் தூண் அருகே உள்ளது. 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ளது. குடி நீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம் ஆகிய வசதிகள் உள்ளது. மகளிர் பள்ளியில் ஆண் மற்றும் பெண் ஆசிர்யர்கள் உள்ளனர்.

     

4. கேந்திரிய வித்யாலயா

அமைவிடம்: 26P5+QPV, நடேசன் சாலை, அசோக் நகர், சென்னை 600083.

இப்பள்ளி மத்திய அரசு பள்ளி. இப்பள்ளி 1981 இல் நிறுவப்பட்டது. பள்ளியின் அலுவலக புகைப்படக் கலைஞர் சுகுமாரால் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும் பகவான் புத்தரை காணும் படி புத்தர் சிலையை 2003ல் நிறுவினார். பெரிய விளையாட்டு மைதானம் கொண்ட பள்ளி.

B) முதலமைச்சர்  பெயரில் உள்ள சாலைகள் 

01. காமராஜர் சாலை, காமராஜர் தெரு, காமராஜர் காலனி 

02. கலைஞர் கருணாநிதி  நகர் - க.க நகர் (அ) KK Nagar

03. M G ராமசந்திரன் நகர், M G ராமசந்திரன் சந்தை (Market)

04. P T ராஜன் சாலை 

05. அண்ணா பிரதான சாலை 

06. Dr அம்பேத்கர் சாலை (மே தின தந்தை, இந்திய அரசியலமைப்பு தந்தை) 

1. காமராஜர் சாலை

காமராஜர் சாலை P.T. ராஜன் சாலை நாகாத்தம்மன் கோவில் இருந்து ESI அடையும் வரை உள்ள சாலை காமராஜர் சாலை. இரும்பொறையில் இருந்த கன்னியப்ப நகர் என்ற அதே பெயரில் இடமும் பள்ளிக்கூடமும் இங்கு அமைத்தார் காமராஜர். தெரு விளக்கு வைத்தவர். தெரு விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கை எரியவைக்கும் முறை. காமராஜர் தான் மின்சாரம் தந்தது தன் கரங்களால் பொத்தானை அழுத்தி புதூர் மக்களுக்கு மின்சாரம் அளித்தவர்.

காமராஜர் தெரு திருச்செந்தூர் முருகன் கோவில் MGR நகர் அருகில் உள்ளது 

காமராஜர் காலனி Dr அம்பேத்கர் சாலை என்று அழைக்கப்படும் சாலை முன்பு காமராஜர் காலனி என்று அழைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை அருகில் உள்ள காமராஜர் காலனிக்கு பழைய பெயர் புகழ் நகர்.

2. கலைஞர் கருணாநிதி  நகர் - (க.க நகர் -K K Nagar)

1966 ஆம் ஆண்டு சென்னையில் முப்பெரும்  விழா (17 செப்டம்பர் பெரியார், 15 செப்டம்பர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம்) நடத்தி கட்சிக்கான நிதி 10 இலட்சம் திரட்ட இலக்கு வைத்து முடிவு செய்தார் கலைஞர்.  

சென்னை அசோக தூண் அருகே நாடகம் நடத்தி அந்த இலக்கினை அடைய முயற்சி செய்யப்பட்டது.  கட்சிக்கான நிதி 10 லட்சம் இலக்கு ஆனால் 11 லட்சத்தை எட்டியது.

அண்ணா பிறந்தநாள் விழாவுக்காக கலைஞர் காகிதப்பூ என்ற நாடகம் எழுதி அரங்கேற்றினார். அதில் அவரும் ஒரு பாத்திரத்தில் நடித்தார். நாடகங்களில் நடிப்பதை தன் தொழிலாக மேற்கொண்ட இராஜாத்தி அம்மாள் கலைஞருடன் நடித்தார். 

1966ல் “காகிதப்பூ“ மற்றும் பல நாடகங்களில் இராஜாத்தி அம்மாளும், கலைஞரும் ஒன்றாக இணைந்து நடித்ததின் விளைவாக இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது. 1966இல் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி இருவரும் இரகசியத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் கலைஞரின் மூன்றாம் திருமணம் ஆகும்.

கலைஞர் இவ்விடங்களுக்கு பலமுறை வந்து இருக்கிறார். பல மேடை பேசசுகளையும் தந்து இருக்கிறார். 

  3. M G ராமசந்திரன் நகர் - MGR சந்தை

01.அசோக் நகர் அடுத்து கே கே நகர் அடுத்து MGR நகர் மற்றும் MGR சந்தை உள்ளது. 

02) எம். ஜி. ஆர் தலைமையில் 18-10-1973 அன்று வியாழக்கிழமை கீழ்கண்ட இருவருக்கும் திருமணம் புதூர் அசோக் நகரில் 14 வது தெரு மணமகன் இல்லத்தில் நடைபெற்றது. MGR வந்து தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.  

01. திரு ச. தேவதாஸ் BA ( Income Tax Administrative Officer) 115 வது அண்ணா தி.மு.க அமைப்பாளர்  

02. A . தமிழ்செல்வி

வாழ்த்துரை வழங்கியோர் 

01. நாஞ்சில் கி. மனோகரன் MA MP 

02. S D சோமசுந்தரம் MP - அண்ணா தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர்

03. பாவலர் மா. முத்துசாமி BA  BT MP 

04. SM துரைராஜ் MLA - அண்ணா தி.மு.க பொருளாளர் 

05. KM சுப்பிரமணியன் MLA 

06. பம்மல் நல்லதம்பி தலைமை நிலைய பொறுப்பாளர் 

07. கவிமுரசு இ முத்துராமலிங்கம் B Sc 

13 மற்றும் 14 வது தெரு இருபக்கமும் நீண்ட தென்னை ஓலை கீற்று பந்தல் போடப்பட்டு இருந்தது.  1972 ல் அண்ணா தி மு க கட்சி துவங்கப்பட்டது. 1973 ல் திருமணம் நடத்தி வைத்தார்.  திரு ச. தேவதாஸ்   அவர்கள் MGR அவர்களின் தலைமையில் திருமணம் நிகழ வேண்டி திருமண அழைப்பை MGR அவர்களுக்கு அளித்து இருந்தார். ஆனால் அன்று இடைத்தேர்தல் என்பதால் திருமண நிகழ்வை மறந்து இடைத்தேர்தலுக்கு சென்றுவிட்டார். பின்னர் தாஸ் அவர்கள் பேசிய போது தான் நினைவுக்கு வந்தது. MGR அவர்கள் இரு வழிகளை தந்தார். 

01 14-10-1973ல் அன்றே திருமணம் நடக்கட்டும் வேறு ஒரு நாள் வந்து வாழ்த்து தெரிவிக்கிறேன் அல்லது

02 வேறு ஒரு நாள் திருமணத்தை தள்ளி வைப்பது 

தாஸ் அவர்கள் MGR வந்து தாலி எடுத்து கொடுத்தால் தான் தனக்கு திருமணம் என்றதால் திருமண நாள் 14 அக்டோபர் 1973ல் இருந்து 18 அக்டோபர் 1973 அன்று மாற்றப்பட்டு திருமணம் நடந்தது. தகவல் தொழில் நுட்பம் இன்று போல் அன்று இல்லை என்றாலும், MGR  வருகையறிந்ததும்  காட்டு தீ போன்று பரவியது. புதூர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் வந்தனர். அன்று பள்ளிக்கு சுற்று சுவர் இல்லை. 8, 9, 10, 11, 12, 13, 14 தெரு மக்கள் மற்றும் II & III நிழற்சாலை மக்கள், அண்ணா தி மு க கட்சி மக்கள்,  திருமண உறவுக்காரர்கள் என கூட்டம் அலைமோதியது. 

MGR இத்திருமண நிகழ்வில் இருந்து வெளியேற நீண்ட நேரம் ஆனது அவ்வளவு கூட்டம். இரவு ஏழு மணி அளவில் திரைப்பட விருந்து அளிக்கப்பட்டது. திரையரங்கம் போன்று வெள்ளை நிற பெரிய துணை கட்டி திரைப்படம் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.      

 
18-10-1973 அன்று எம் ஜி ர் - தலைமையில் நடந்த திருமணம் (தேவதாஸ்  மற்றும் கலைச்செல்வி)  

4. P T ராஜன் சாலை  (பொன்னம்பல தியாகராஜன்) 

P T ராஜன் 1920-ல் நீதிக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937-ல் தோல்வியைத் தழுவும்வரை அவர் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். 1939-ம் அந்த ஆண்டுதான் சென்னை மகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.1944 வரை அப்பதவியில் நீடித்துள்ளார்.

P T ராஜனுக்கு ஒருகட்டத்தில் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக நீதிக்கட்சியிலிருந்து விலகி, போட்டி நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1952-ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர் ஆனார். 1957-ல் அவரது உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்ததிலிருந்து அவர் தீவிர அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்க ஆரம்பித்தார். பி.டி. ராஜன் திராவிட கொள்கையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

பி.டி. ராஜன் அவர்களின் பெயரில் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கே.கே. நகரில் இருக்கும் பி.டி. ராஜன் சாலை அசோக் நகர் இரண்டாவது நிழற்சாலையும் அசோக் தூண் சாலையும் இணைக்கிறது.

5 அண்ணா பிரதான சாலை

அண்ணா பிரதான சாலை கே.கே நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலை. அண்ணா மதி வளர்ச்சி மையம் இரண்டாவது நிழற்சாலையில் அமைக்கப்பட்டிருந்தது. இது எங்கள் வீட்டிற்க்கு பின்புறம். இரண்டாவது நிழற்சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது.  

சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் (SSR) எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் அண்ணா மதி வளர்ச்சி மையத்திற்கு பல முறை வருகைதந்துள்ளார். SSR இங்கு வருகை புரிந்த புகைப்படம் இணைத்துள்ளேன். என் சித்தப்பா சிவமணிசேகர் கைத்தறி (Co-optex) பணிபுரிந்தவர். அவர் இந்த புகைப்படத்தை தரும் பொழுது இப்படத்தில் உள்ளவர்களில் நான் மட்டும் தான் உள்ளேன் மற்றவர்கள் அனைவரும் இயற்கை எய்தினர் என்றுரைத்து கொடுத்தார். கொடுத்த சில மாதங்களில் அவரும் இயற்கை எய்தினார். இப்படத்தில் நின்று கொண்டு இருப்பவர் தான் சித்தப்பா சிவமணி அவர்கள்..

 06. Dr அம்பேத்கர் சாலை (மே தின தந்தை, இந்திய அரசியலமைப்பு தந்தை)  

G.அம்பேத்கரிஸ்ட் பேரவை  மற்றும் தியான மையம்

அமைவிடம்:  அசோக் நகர் காவல் நிலையம் அருகில் (அ)  Dr அம்பேத்கர் சாலை முடிவில் அமைந்துள்ளது. 

1967 இல் அண்ணல் அம்பேத்கர் மன்றம் இரவுப் பள்ளி துவங்கப்பட்டது. இந்த மன்ற துவங்க காரணமாக இருந்தவர் அன்பு பொன்னோவியம் அவர்கள்.ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான இரவுப் பள்ளியாக நடத்தப்பட்டதுஇன்றும் இரவுப் பள்ளி நடந்துகொண்டு இருக்கிறது. ஓவிய பயிற்சியையும் அளித்துக்கொண்டு இருக்கிறது.  

அண்ணல் அம்பேத்கர் மன்றம் இரவுப் பள்ளி என்ற பெயரை 1974ல் அம்பேத்கரிஸ்ட் பேரவை என மறுபெயரிடப்பட்டது. 2003ல் அம்பேத்கரிஸ்ட் பேரவை என்ற பெயரை அம்பேத்கரிஸ்ட் பேரவை மற்றும் தியான மையம் என மறுபெயரிடப்பட்டது. மகா பண்டிதர் அயோதீதாசர், எம்.சி.ராஜா, மேயர் சிவராஜ், அன்னை மீனாம்பாள் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை மன்ற சுவரில் வரையப்பட்டன. இந்தச் சங்கம்தான் பூனா ஒப்பந்தம் பற்றிய புத்தகத்தை முதலில் தமிழில் வெளியிட்டது. 

C. பேருந்து நிலையம்

இங்கு பேருந்துகள் கலிங்கா காலனி என்றே இயங்கியது. பின்னர் கலிங்கா காலனி என்பது கே கே நகர் பணிமனை என்று மாற்றப்பட்டது. இங்கு இயங்கிய பேருந்துகளில் தற்பொழுது வரை புதூர் அரசு பள்ளி வழியாக செல்லும் பேருந்து தடம் எண் 17D மட்டுமே (கே கே நகர் - பிராட்வே).  

கீழ் கண்ட வழித்தட எண்கள் தற்பொழுது இயக்கப்படவில்லை. 

25E (கே கே நகர்- அண்ணா சதுக்கம்),

37D (கே கே நகர்-வள்ளலார்  நகர்) 

28D (கே கே நகர்- திருவொற்றியூர்)  

அப்பொழுது தார் சாலை வசதில்லை. எல்லாம் மண் சாலை தான். பேருந்துகள் சென்றால் புழுதி பறக்கும். புது ஊர் வழியாக பேருந்துகள் செல்லும். பேருந்துகள் சிவப்பு வண்ணம் கொண்டது. சாலைகள் செம்மண் மற்றும் களிமண் கலந்திருந்தது. இதனால் போக்குவரத்தின் போது அதிக புழுதி மற்றும் தூசு பறக்கும். பேருந்துகள் R3 காவல் நிலையம் வழியாக செல்லும். 17D, 37D இரண்டாவது நிழற்சாலை வழியாக சென்றது.

ESI மருத்துவமனை அடுத்து பேருந்து பணிமனை அமைந்துள்ளது. இப்பகுதிகள் நல்ல வளர்ச்சியை நோக்கி இருந்தது. அதற்க்கு அடுத்து இருக்கும் MGR நகர், MGR சந்தை நெசப்பாக்கம் பெருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது. இங்கு அதிகமாக குடிசைகள், மாடுகள், புள் வேலிகள் இருந்தது. நெசப்பாக்கம் பெரிய புல் மைதானம் இருந்தது அங்கு தான் மாடுகள் அழைத்து சென்று மேய்த்து விட்டு வருவார்.  இங்கு பேருந்து வசதிகள் தரப்படவில்லை. பேருந்துகள் ESI அடுத்து பேருந்து மணிமனை சென்றுவிடும். ஆனால் தற்பொழுது ESI அடுத்து காமராஜர் சாலை, PT ராஜன் சாலை, சிவன் பூங்கா, நெசப்பாக்கம், MGR நகர் சென்று பணிமனை செல்கிறது.     

1954 ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. ஆனால் அவ்வழியாக பேருந்துகள் செல்லாது. அவ்விடங்களுக்கு குட்டை கடை என்று பெயர். அதிகமான குட்டைகள் இருந்தது. மழை வந்தால் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்கும். இன்றும் இந்நிலை மாறவில்லை.

பேருந்து நிலையம். கலைஞர் கருணாநிதி நகர் (க.க நகர் -K K Nagar) பேருந்து நிலையம் 22/01/1973 நிறுவப்பட்டது. கலைஞர் கருணாநிதி நகர் க.க நகர் என்பது கேலியாக போனதால் K.K நகர் என அழைக்கப்படுகிறது.  

D. காவல் நிலையம்

01. அஞ்சுகம் - நல்லான்குப்பம் பகுதியில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இன்று அமைந்திருக்கும்  அஞ்சுகம் பள்ளி (64, ஜூபிலி ரெட், கோகுலம் காலனி, ராமகிருஷ்ணாபுரம், மேற்கு மாம்பலம், சென்னை, 600033) இடத்தில் தான் முன்பு R3 காவல் நிலையம் அமைந்திருந்தது. 

02. அதன் பின்னர் ஓட்டக்கப்பாளையம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் R3 காவல் நிலையம் இயங்கியது. இன்று ஜவஹர்லால் நேரு சாலை என்று அழைக்கப்படும் இடத்தில் லட்சுமணன் சுருதி அருகில் காவல் நிலையம் இயங்கியது.  

03.இறுதியாக அதன் பின் R3 காவல் நிலையம் II நிழற்சாலையில் நான்கு பிரிவுகளில் இயங்குகிறது.  

01. மகளிர் காவல்
02. போக்குவரத்து  காவல்
03. சட்டம் ஒழுங்கு காவல் (Law and Order) 
04. குற்றவியல் காவல் (Crime)

காவலர் பயிற்சி கல்லூரி 2, நடேசன் சாலை, அசோக் நகர், சென்னை     600083. இது 1974 இல் நிறுவப்பட்டது.

E.கோவில் மற்றும் பூங்கா

1.அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம் :

2. அருள்மிகு மல்லிகேசவரர் திருக்கோயில்

3. கலிங்கா பூங்கா / சிவன் பூங்கா

  1.அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம் : 


அமைவிடம்: அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலயம், 8 வது, அசோக் நகர், சென்னை 600083.

அசோக் நகர் இரண்டாவது தெருவில் பெரிய பொது கிணறு ஒன்று இருந்தது. அம்மன் சிலை ஒன்றை அசோகர் தூண் நிறுவுவதற்கு முன் ஓலை கூரையில் கோவில் இருந்தது.  தற்பொழுது கும்பா அபிஷேகம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

 2. அருள்மிகு மல்லிகேசவரர் திருக்கோயில்

அமைவிடம்: அசோகா தூண் மற்றும் நடேசன் சாலைக்கும் இடையில் (அ) அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பழமையான கோவில் அருள்மிகு மல்லிகேசவரர் திருக்கோயில்.
  

3. கலிங்கா பூங்கா / சிவன் பூங்கா

அமைவிடம்:  பி.வி. ராஜமன்னார் சாலை, 3 செக்டர், கே கே நகர், சென்னை78 

A V மெய்யப்பன் அவர்கள் ஒரு திரைப்பட காட்சிக்கு கலிங்கா பூங்காவில் சிவன் சிலையைமைத்தர். அக்காட்சிகள் முடிந்த பின் சிவன் கட்டுமானத்தை அகற்றும் பொழுது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சிவன் சிலையை அகற்றாமல் சென்றனர். இதனால் தான் இங்கு கலிங்கா பூங்கா சிவன் பூங்காவாக உருவானது. கலிங்கா பூங்கா தன்னுடைய பெயரை மட்டுமல்ல அங்கிருந்த அடையாளங்களை இழந்தது. 

சிவன் பூங்கா, ஜீவா பூங்கா, கலைஞர் பூங்கா MGR பூங்கா என்று கலிங்கா பூங்கா பெயர் மாறிக்கொண்டே வந்து தற்பொழுது சிவன் பூங்கா என்று பெயர் பெற்றுள்ளது. கலிங்கா காலனி சிவன் பூங்காவில் இருந்தது தொடர்கிறது. சிவன் பூங்கா அருகில் சிவலிங்கபுரம் என்ற இடம் உள்ளது. சிவலிங்கபுரத்திர்க்கும் சிவன் பூங்காவிற்கும் எந்த தொடர்பூம் இல்லை. சிவலிங்கபுரம் மொழி போர் தியாகின் நினைவாக வைக்கப்பட்டது.

    F.அரசு புறநகர் மருத்துவமனை

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைசர் திரு ஆர்.சௌந்தரராசன் தலைமையின் கீழ் மாண்புமிகு  கல்வி அமைச்சர் திரு செ அரங்கநாயகம் அவர்களால் 30-04-1979 மலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கப்பற்று திரு இரா ஆதிமூலம் தலைமை கொத்தன்னார் அவர்களால் அரசு புறநகர் மருத்துவமனை  அசோக் நகர் திறக்கப்பெற்றது. 100 படுக்கைகள் கொண்ட புற மருத்துவமனையின் கட்டுமானம் நான்கு மாடிகளுக்கு செலவு 29.80 லட்சம்  4256 சதுர மீட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை இம்மக்களுக்கு பேருதவியாக இருந்தது. ஆனால் இன்று வரை அவசர சிகிச்சை மருத்துவ உதவிகள் ஏதும் இங்கில்லை.   

- -  - >>> தொடரும் 

வியாழன், ஜூன் 27, 2024

சபரிமலை கோவில் புத்த விகாராகும்


01. உச்ச நீதிமன்றம் சபரிமலை கோவில் தடைகளை நீக்கியது

01. இந்துக்கள் அல்லாதவர்கள், சபரிமலை ஐயப்பன் சிலைகளை வழிபடாதவர்களுக்கும் சபரிமலை கோவில்களுக்குள் செல்ல உரிமை இல்லை.  

02. இந்துவாக இருந்தாலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல உரிமை இல்லை. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு பழங்காலத்தில் தடை ஏதும் இல்லை. சபரிமலை கோவில் புத்த கோவிலாகும் என கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் இந்தத் தடைகளை நீக்கியுள்ளது.  

02.சரணம் மந்திரத்துடன் தொடர்புடைய வேறு எந்த கடவுளும் இந்து  மதத்தில் இல்லை.

சரணம் என்ற சொல் பௌத்த மதத்தில் இருந்து உருவானது. திரி சரணம் வழிபாடு.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
புத்தரை, அறிவொளியை, பௌத்த சங்கத்தை அடைக்கலம் புகுகிறேன் என்பது அதன் பொருள். இது துறவு மற்றும் மன ஒழுக்கத்தை பரிந்துரைக்கும் பௌத்த கொள்கை. இன்று இவை சபரிமலையில் சுவாமி சரணம் அய்யப்போ என மாறிவிட்டன.

03. இந்து மதத்தில் சாதிய வேறுபாடே முதன்மையானது.

சபரிமலையில் வர்க்கப் பாகுபாடு இல்லை. ஐயப்ப பக்தர்கள் தங்களை மற்றும் ஒருவரையொருவர் அய்யப்பாக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இது பௌத்தத்தின் அம்சமாகும். சமத்துவத்தை குறிப்பிடுகிறது. 

 04. சாஸ்தா வழிபாடு புத்தரின் வழிபாட்டிலிருந்து உருவானது

சாஸ்தா வழிபாடு புத்தரின் வழிபாட்டிலிருந்து உருவானது.  சாஸ்தா என்பது புத்தரின் பெயர்சாஸ்தா என்பதை தமிழில் சாத்தான் என்று குறிப்பிடப்படுகிறது. சாத்தான் என்பது இழிவான சொல் என்பது போன்று உருவாக்கப்பட்டுவிட்டது. மூதேவி என்பது மூத்த தேவி என்று பொருள். மூதேவி என்ற சொல் இழிவான சொல்லாக பார்க்கப்படுகிறது. இந்து மத நூல்களில், புராணங்களில் தர்ம சாஸ்தா கடவுளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. சுவாமி சரணம், தர்மசாஸ்தா சரணம் என மாறிவிட்டன. அய்யப்பன் பெரும்பாலும் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். சாஸ்தா என்பது புத்தரின் மற்றொரு பெயர். இந்த ஐயப்ப வழிபாட்டு முறை இந்தியாவின் வட பகுதிகளில் காணப்படவில்லை. டி.ஏ.கோபிநாத ராவ் ஆரம்பகால இந்து இலக்கியங்களில் ஐயப்பனைப் பற்றிய குறிப்பு இல்லை என்றுரைக்கிறார்.

05. சீலம்

அய்யப்ப பக்தர்கள் புனித யாத்திரைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் சீலத்தை கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள். சீலம் (சீல) என்னும் பாலி மொழிச்சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். சீலத்தை  பஞ்ச சீலம் (ஐவகையொழுக்கம்), அஷ்ட சீலம் (எட்டு ஒழுக்கங்கள்) தசசீலம் (பத்து ஒழுக்கங்கள்) என்று மூவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

01 . பஞ்ச சீலம் - இல்லறத்தாருக்கு உரியது 

02 . அஷ்ட சீலம் - சற்று உயர் நிலை அடைந்தவருக்கு உரியது

03 . தச சீலம் - இல்லறம் துறந்த பிக்குக்கு உரியது. 

 

உடலால், நாவினால், மனதால் தவிர்க்க வேண்டிய தீவினைகள்

உடலால்  01. கொலை 02.களவு 03.காமம்

நாவினால் 04.பொய் கூறல் 05.புறங் கூறல் 06. கடுஞ் சொல் கூறல் 07.பயனில் சொல் கூறல்

மனதால் 08.வெஃகல் - பிறர் பொருள் விழையாமை 09. பொல்லாக் கட்சி 10.வெகுளல். 

அய்யப்ப பக்தர்கள் களவு,  பொய், உல்லாசப்பயணங்கள், சூதாடுதல், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல், விளையாட்டு வேடிக்கைகள் தவிர்த்தல், படுக்கை, தலையணைகளை நீக்கி தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுத்தல் போன்றவை பௌத்தர்கள் கடைப்பிடிக்கும் சீலத்தை ஒத்திருக்கிறது. இந்த சீலங்களை இந்து/வைதீக கடவுள்களே பின்பற்றுவதில்லை பக்தர்கள் பின்பற்றுகின்றனர் என்றால்  சபரிமலை  புத்த விகாரக இருந்தது என்பதற்கு சான்று. 

 06. சபரிமலை முதலில் பழங்குடியினரின் வழிபாட்டுத் தலம்

இன்றும் அய்யப்ப பக்தர்கள் அணியும் ஆடைகள் அட்டவணை படுத்தப்பட்ட/பழங்குடியினரைப்(SC/ST) பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

07. ஐயப்பன் முத்திரை (கற்பிக்கும் கை) புத்தரின் முத்திரை

அய்யப்பனுக்குக் கூறப்படும் முத்திரை கற்பிக்கும் கை. கையின் ஆள்காட்டி விரலை கட்டை விரலுடன் இணைத்து, மற்ற மூன்று விரல்களும் வானோக்கிய வண்ணம் நீண்டிருக்கும்.  கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒரு வட்டம் உருவாகும். இம்முத்திரையை வியக்கான முத்திரை, பாதி அறவாழி கை (தம்ம சக்கர முத்திரை) எனவும் அழைக்கப்படுகின்றது. புத்தர் தனது போதனைகளை விளக்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்பட்டது கற்பிக்கும் கை. கற்பிக்கும் கை அறிவுசார்ந்த வாத, விவாதத்திற்கான குறியீடு.

புதன், மே 08, 2024

பழவேற்காடு புத்தர் சிலை

 பழவேற்காடு கடலில் ஐம்பொன் புத்தர் சிலை கண்டெடுப்பு



பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் 17/01/2017 காணும் பொங்கலை முன்னிட்டு திரளான பொதுமக்கள் குவிந்து இருந்தனர். மீஞ்சூரை அடுத்த திருநிலை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் அவரது உறவினரான சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெண் காவலர் சுமதி ஆகியோர் குடும்பத்தினருடன் பழவேற்காடு வந்து இருந்தனர்.


இவர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம் குப்பம் (Light House) பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம பொருள் அவர்களின் காலில் தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்தபோது சுமார் 3 அடி உயரம் உள்ள ஐம்பொன் புத்தர் சிலை என்பது தெரியவந்தது.

கடலில் கண்டெடுத்த புத்தர் சிலையை திருப்பாலைவனம் காவல் ஆய்வாளரிடம் (Police Inspector) ஒப்படைத்தனர். அவர், பொன்னேரி தாசில்தாரிடம் ஒப்படைத்தார். அந்த சிலையை பெற்றுக்கொண்ட தாசில்தார், இதுபற்றி தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.


தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே இந்த புத்தர் சிலை எந்த காலத்தில் செய்யப்பட்டது?, அதன் மதிப்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்பொழுது காஞ்சீவரம்  அருங்காட்சியகத்தில் உள்ளது இச்சிலை.




வியாழன், ஏப்ரல் 11, 2024

குடியரசு தினமே உண்மையான சுதந்திர தினம்


நம் நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர். இந்திய சுதந்திர தினத்திலிருந்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யமாட்டார்கள். ஆனால் அவர்களின் அரசியலமைப்பு தான் இந்தியாவை ஆளும். 1947லிருந்து 1950வரை ஆங்கிலேயர் அரசியலமைப்பு படி இந்தியா இயங்கியது. 1950லிருந்து இந்தியா இந்திய அரசியமைப்பு படி இந்தியர்கள் ஆட்சி செய்கின்றனர். குடியரசு தினமே உண்மையான சுதந்திர தினம். இந்தியாவிற்கு வருட பிறப்பு என்பது 26 ஜனவரி (குடியரசு தினம்).         

உதாரணமாக அண்டை நாடான சிறிலங்கா சுதந்திரம் அடைந்தது 1948ல் ஆனால் அவர்களின் அரசியமைப்பு 24 ஆண்டுகள் கடந்து 1972ல் நடைமுறை படுத்தப்பட்டது. சுதந்திரமடைந்து 24 ஆண்டுகள் ஆங்கிலேயர் அரசியலமைப்பு படி சிறிலங்கா இயங்கியது. 

தேசியக் கொடி

கொடி உருவான வரலாறு 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை, நியமிக்க விவாதித்தது.

23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம், மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது.  இந்திய தேசியக் கொடி, முதல் முதலாக சுதந்திர இந்தியாவில், 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் ஏற்றப்பட்டது. இந்தியா குடியரசு நாடான பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய கொடியின் வண்ணம் மூன்று (காவி, வெண்மை, பச்சை) என்று தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.  தேசிய கொடியின் நடுவில் இடம் பெற்றுள்ள நீல நிற அசோக சக்கரம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. தேசிய கொடியில் அசோக சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வேறுபாடுகள்.

  • 15 ஆகஸ்ட்  1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் சுதந்திரதினம்.
    • இந்திய அரசியலமைப்பு 26 ஜனவரி  1950 இல் நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கிறது குடியரசு தினம்.
  • பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நள்ளிரவில் விடுதலை பெற்றது. ஆனால் நம் நாடு பிரிட்டிஷ் அரசியலமைப்பைப் பின்பற்றி பிரிட்டிஷ் மன்னரை அதன் தலைவராக அங்கீகரித்தது.
    • இந்திய அரசியலமைப்பைப் பின்பற்றி இந்திய குடியரசு தலைவர் அதன்  தலைவராக அங்கீகரித்தது. இந்தியாவில் அனைவரும் சமம் (ஆண்/ பெண், சாதி, மதம், மொழி, கலாச்சாரம்) என்று சொல்லும் ஒன்று.
  • செங்கோட்டை, புது தில்லியில் இந்தியப் பிரதமரால் கொடி ஏற்றுதல். சுதந்திர தினத்தில் நடைபெறும். கம்பத்தின் அடிப்பகுதியில் கொடி கட்டப்பட்டு செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுவார்.
    • ராஜ்பாத் , புது தில்லியில் இந்திய ஜனாதிபதியால் குடியரசு தினத்தன்று கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டு முடிச்சை இழுப்பதன் மூலம் ஜனாதிபதி கொடியை இறக்குகிறார்.
  • சுதந்திர தினத்தில் பெரிய தேசிய இராணுவ அணிவகுப்பு இல்லை.
    • குடியரசு தினத்தன்று இராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
  • சுதந்திர தினத்தில் பொதுவாக தேசிய விருதுகள் வழங்கப்படுவதில்லை.
    • ஆனால் குடியரசு தினத்தன்று  தேசிய விருதுகள் வழங்குதல் நடைபெறும்
இந்திய குடியரசுதினத்தில் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை ஏன்?
இந்திய குடியரசு தினத்தில் குடியரசு தின படைப்பை பற்றி பேசப்படுகிறது. ஆனால் அதை படைத்தவர் பற்றி பேசுவதில்லை. இப்படி பேசாமல் இருந்தால் உயிரில்லா உடம்பு போன்றது, அது இயக்கமற்றது. அரசியல் சாசனம் எழுதியது SC இனத்தை சேர்ந்தவர் எனவே பேசுவதில்லை. அரசியல் சாசனம் SC இன மக்களுக்கா எழுதப்பட்டது? - S.ஜெயராஜ் MA ML.

குடியரசு நாளுக்கும் காந்திக்கும் எந்த தொடர்புமில்லை
01) இரண்டு வாரமாக செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தமிழக தலைவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வாகனங்கள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டதை விவாதமாக நடத்தப்பட்டுள்ளது. குடியரசு நாள் தினத்திற்கும் நிராகரிக்கப்பட்ட தலைவருக்கும் எந்த தொடர்புமில்லை. 

02) 1967லிருந்து சமூக ஆட்சியை அமைத்தோம் என்னும் திராவிட ஆட்சி குடியரசு நாள் அன்று காந்தி படத்தை வைத்து கொடியேற்றியதும் உண்டு. 15/08/1947 சுதந்திரம் பெற்ற நாள். 5 மாதம் கழித்து 30/01/1948ல் காந்தியின் வாழ்வு முடிந்துவிட்டது. 26/01/1950 குடியரசு நாள். காந்தியின் இறப்புக்கு பின் குடியரசு நாள். காந்திக்கும், குடியரசு நாளுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் காந்தி படத்தை வைத்து இன்றும் கொடியேற்றி குடியரசு தினம் கொண்டாடி வருகின்றனர். - (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங் 

TT கிரிஷ்ணமாச்சாரி - இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும்-  
அரசியலமைப்பு தினம் என்று சொன்னால் Dr அம்பேத்கரை தவிர வேறு யாரையும் சொல்லமுடியாது. அரசியல் நிர்ணய சபையில் 7 பேர் கொண்ட உறுப்பினர்களை கொண்டது. ஒரு உறுப்பினர் பதவி விலகினார் (Resigned). ஒரு உறுப்பினர் இயற்க்கை எய்தினார் (Death). ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றுவிட்டார் (America). இரு உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவேயில்லை. ஒரு உறுப்பினர் உடல் நலம் குறைவு (Sick). இந்திய அரசியமைப்பு என்பது (One Man Job) ஒருவரால் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நாடே Dr அம்பேத்கருக்கு நன்றி சொல்லவேண்டும். (BSP) மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங்

திங்கள், ஏப்ரல் 08, 2024

திருவள்ளுவரின் திருவுருவம்



பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்  ( Francis Whyte Ellis) (1777–1819) 

19 ஆம் வயதில் சென்னைக்கு வந்தார் எல்லிஸ். பின்னர் மாவட்ட ஆட்சியாளரானார். 1812ல் Madras Literary Society சென்னைக் கல்விச் சங்கம் உருவாக்கினார். திருவள்ளுவருக்கு முதன் முதலில் உருவம் கொடுத்தவர் எல்லீஸ். திருவள்ளுவரின் உருவம் பொறித்து பத்து ரூபாய் தங்கக் காசு வெளியிட்டார் எல்லீஸ். சென்னையின் நாணயசாலை எல்லீஸ் பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியிட்டார். எல்லீஸ் துரை தமிழை நன்கு கற்றவர். தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார். திருக்குறளில் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1819-ல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார்.   அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும். திருக்குறள் சொற்ப பிரதிகளே அச்சிடப்பட்டது. அவர் பழங்குடியினரிடையே  அதிகம் வாழ்ந்தார் அவர்களின் சிந்தனை பழக்க வழக்கங்கள் முழுமையான அறிவை கொண்டிருந்தார்.


 

திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு

இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. காசின் முன்புறத்தில் ஒரு பீடத்தின் மீது தியான நிலையில் அமர்ந்திருக்கிறார்.  வலது கை தொடை மீதும் இடது கை ஒரு சுவடியை ஏந்தியும் உள்ளது.  இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை. பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது.

 நாணய காலம்

அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்

  திருக்குறள் மூல சுவடியை கொடுத்தது யார்?

திருவள்ளுவர் யார் என்ற நூலின் ஆசிரியர் கௌதம சன்ன பதிவு. கொடியாண்டி என்ற கந்தப்பன் (மகா பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) மைலாப்பூரில் இருந்த மருத்துவர். அவர் கந்தப்பனார், கந்தப்பன் பிள்ளை எனவும் அழைக்கப்பட்ட்டர். அவர் ஏராளமான தமிழ் ஓலை சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்தார்அவர் George Harrington ஆரிங்க்டன் என்னும் ஆங்கில அதிகாரியிடம் பட்லராக பணியாற்றினார். 1810  ஆரிங்க்டன் அவர்களுக்கு திருக்குறள் ஓலை   சுவடியை கொடுத்தார். 

ஆரிங்க்டன் எல்லிஸ் அவர்களுக்கு தான்  கந்தப்பனாரிடம் இருந்து  பெற்ற திருக்குறள் ஓலை சுவடியை கொடுத்தார்.  திருக்குறள் ஆரிங்க்டன் மற்றும் எல்லிஸ் ஆகியோரால் அச்சில் ஏறியது.

எல்லிஸ் அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் பதிப்பு எல்லிஸ் என்பது தவறு. 

வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) லத்தின் மொழியில் 1730ல் திருக்குறளை வெளியிட்டார்.


என். ஈ கின்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley) 1794ல்   ஆங்கிலத்தில் வெளியிட்டார். 


Dr ஆகஸ்ட் பிரடெரிக்   காமரர் Dr August Friedrich Caemmerer 1803ல்  ஜெர்மனில் திருக்குறளை வெளியிட்டார்.

திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்ட ஆங்கிலேயர்l

ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை