செவ்வாய், மே 18, 2021

வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ்


S. ஜெயராஜ்  ABI  அறக்கட்டளை தலைவர் அவர்களின் சிற்றுரை: 

நமோ புத்தாய!

ஜெய்பீம்!


வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் (Ven.Ashwagosh)

வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் கடந்த 20-09-2020 அன்று இயற்கை எய்தினார். அவர் புத்த தம்ம மற்றும் சமத்துவ சமூக மீட்புக்கு Dr. அம்பேத்கர் வழியில் பணி ஆற்றினார். அவர் பணியை  என்றும் நினைவு கூறும் வகையில் அவரின் பெயரால் வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் நினைவு தியான மண்டபம் மற்றும் அவரது திரு உருவச் சிலை நிறுவப்பட்டது 11 ஏப்ரல் 2021 அன்று காலை 11.30 மணிக்கு  நந்திமங்கலத்தில், சோளிங்கர், ராணிப்பேட்டை (வட்டம்), வேலூர்  மாவட்டத்தில் நிறுவப்பட்டது.


 

தீக்சா பூமியின் தலைமை பிக்கு வணக்கத்திற்குரிய  சுராய் சசாய் (Bhadante Arya Nagarjuna Shurei Sasaiji) அவர்களின் வாழ்த்துக்களுடனும் ஆசியுடனும் அனுமதியுடனும் ABI அறக்கட்டளை வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ் நினைவு தியான மண்டபம் 11 ஏப்ரல் 2021 திருநதுவைத்தது.


பொது மக்களின் பார்வைக்கும் பௌத்தர்களின் வழிபாட்டுக்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதுபௌத்தத்தை அதன் தம்மத்தை பரப்பிடுவதற்கு இது வரலாற்றில் ஒரு சிறு ஆவணமாக அமையும் என்பதில் பௌத்தர் அனைவரும் மகிழ்வடைவர்.  தம்மம் பரவட்டும்! பௌத்தம் மிளிரட்டும்.!! S. ஜெயராஜ் சேர்மன் ABI  அறக்கட்டளை


தியான மண்டப திறப்பு பெரிய அளவில் நிகழ்த்த எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. காரோண நோய் தொற்று இரண்டாவது அலையின் கடுமையினால், தியான மற்றும் உருவ சிலை திறப்பு அழைப்பின்றி மிக சிறிதாக மேற்கொள்ளப்பட்டது.

\



வணக்கத்திற்குரிய பிக்கு அஸ்வகோஷ்
தந்தை அண்ணாமலை தாய் கோவிந்தம்மாளுக்கும் கழிஞ்சூர் கிராமத்தில் மகனாக 20-03-1941ல் பிறந்தார்.  பெற்றோர் பூபாலன் என்று பெயரிட்டனர். இராணுவத்தில் பணியாற்றி பின்னர் தமிழக அரசின் நில அளவை துறை (Survey) பணியாற்றி ஓய்வு பெற்றார்.

 

தீக்சா பூமியின் தலைமை பிக்கு வணக்கத்திற்குரிய  சுராய் சசாய் (Bhadante Arya Nagarjuna Shurei Sasaiji) பிக்கு அஸ்வகோஷ்க்கு உபசம்பதா வழங்கினார். ஜப்பானில் பிறந்து இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பௌத்தத்தை பரப்பியவர் சுராய் சசாய். தனது குருவின் அகில இந்திய தம்ம சேவையில் தம்மை இணைத்துக்கொண்டு அவர் வழியில் புத்தகயா மகாவிகாரை பௌத்தர்களிடம் ஒப்படைக்க தொடர்ந்து போராட்டங்கள் தன்னை அர்பணித்துக்கொண்டார். தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையத்தில் பௌத்தர்களின் சார்பாக நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் ஆவார். இது அவரது குருவின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டது,
 


இந்திய குடியரசு கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டார் பிக்கு அஸ்வகோஷ். சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த திரு.மூர்த்தி அவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். Dr அம்பேத்கர் கருத்துக்களை பட்டி தொட்டியெல்லாம் முழங்கினார். அம்பேத்கரிய மற்றும் பௌத்த அறிஞர்கள் (ABI) அறக்கட்டளையின் பிக்குவாக சம்மதித்து அறக்கட்டளைக்கு வழிகாட்டியாக இருந்துவந்தார். புத்த துறவியான ஒருவர் எந்தவித உடமைகளை வைத்துக்கொள்ளாமல் புன் செய் நிலத்தை ABIக்கு தனமாக வழங்கினார்