அயோத்திதாசர் - அம்பேத்கர் வாசகர் வட்டம் தமிழ் பௌத்த மறுமலர்ச்சி மாதம்" காணொளிக் கருத்தரங்க நேரலையின் இருபத்தி இரண்டாவது அமர்வில் "பண்டிதர் அயோத்திதாசரும் ஆத்திசூடி மீள் வாசிப்பும்" என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையினை வழங்கினார் மா.அமரேசன் அவர்கள். அவர் பீகார் மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் முதுநிலை நெறியாளர், பௌத்த ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.
பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்
01. அம்பேத்கரியச் செயற்பாட்டாளர், விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் மாநிலச் செயலாளர் கவிஞர் யாழன் ஆதி அவர்கள்
02. பௌத்த ஆய்வாளரும் பேராசிரியருமான இ.ஜெயபிரகாஷ் அவர்கள்
03. பாக்கியலட்சுமி அக்கா, ஸ்ரீதர்கண்ணன் ஐயா அவர்கள்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக