சத்யநாத சுவாமி கோவில்
அமைவிடம்சத்யநாத சுவாமி கோவில், திருக்காலி மேடு, காஞ்சீவரம், காஞ்சீவரம் வட்டம் 631501. காஞ்சீவரம் பேருந்து நிலையம் (அ) தலைமை அஞ்சல் நிலையத்தில் (Post Office) இருந்து 40 அடி கடந்ததும் இடது புறம் செல்லும் சாலையில் உள்ளது. காஞ்சிவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி .மீ தூரத்தில் அமைந்துள்ளது.
பம்மல் சம்பந்தம்
இதற்கு சித்திரபுரம் என்றும் பெயருண்டு. இது திருக்காலிஸ்வரர் கோவில் என தற்காலம் அழைக்கப்படுகிறது. ஆட்டிசன் பேட்டைலிருக்கும், தேருக்கு வட கிழக்கில் 3/4 மயில் தூரத்தில், கொல்லை வெளியில், வேப்பங்குளத்திற்கு அருகாமையிருக்கிறது. ஆதியில் இவ்விடம் காரைவனமாய் இருந்தது. தீர்த்தம் இந்திர தீர்த்தம். கல்வெட்டுகளில் சுவாமி பெயர் திருக்காரைக்காடுடையார் என்றிருக்கிறது. (சிவாலயங்கள் இந்தியாவிலும் அதற்க்கப்பாலும் பகுதி 2 (1946) பக்கம் 12)தீர்த்தங்கள்
இக்கோவிலின் அருகாமையில் சத்திய விரத தீர்த்தம் என ஒரு குளம் உள்ளது (Temple Tank) இருக்கிறது. இத்தலத்திற்கு இந்திரபுரம் என்றும் தீர்த்தத்திற்கு இந்திர தீர்த்தம் என்றும் வழக்கத்தில் உள்ளது. இது தற்போது “பெரிய வேப்பங்குளம் என வழங்கப்படும். இக்குளம் பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது.சிலையமைப்பு
தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் புத்தரின் திருவுருவங்களை காணலாம். ஒரு அடி உயரம் கொண்ட இரண்டு புடைப்பு சிற்பங்கள் தட்சணா மூர்த்தி சிலைக்கு கீழே உள்ளது. இரு சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. சீவர ஆடை - ஞான முடி -நீண்ட காது
காஞ்சீவரத்தில் மழை அளவு அதிகமாக இருக்கும்போது, நீர்வரத்து அதிகரித்து, சின்னவேப்பங்குளம் நிரம்பி, உபரிநீர் மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும்.
தட்சிணாமூர்த்தி
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருவது வழக்கம். ஆனால் இங்கே ஏழு சீடர்களுடன் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள். தட்சிணாமூர்த்தி சின் முத்திரை உடன் உள்ளார். தாமரை மலர்மீது அமர்ந்துள்ளார்
ஆலயம் அமைந்தப் பகுதியில் முன்காலத்தில் காரைச்செடிகள் அதிகமாக வளர்ந்து காணப்பட்டுள்ளன. இதனால் இத்தல இறைவன் ‘காரைத்திருநாதர்’ என்று அழைக்கப்பகிடுறார். சத்தியநாதர் என்ற பெயருடன் அழைக்கப்பகிடுறார்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக