வெள்ளி, நவம்பர் 22, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXV பல்லவமேடு (அ) பாலி மேடு


அமைவிடம்
பாலி மேடு (அ) பல்லவமேடு, பிள்ளையார்பாளையம் அருகில், காஞ்சிவரம் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம் 631501. இவ்விடம் புத்த காஞ்சியில் அமைந்துள்ளது.

விரிவாக அறிய இந்த வலைத்தளத்தை பார்க்கவும் பல்லவமேடு

பாலி மேட்டினை பல்லவர் மேடு என்றே பல அறிஞர்கள் கூறுகின்றனர். உதாரணமாக வரலாற்று ஆசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கம் பல்லவர் வரலாறு  பக்கம் 329 கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

டாக்டர் மா.இராசமாணிக்கம்  
பல்லவமேடு இன்று ‘பாலி மேடு’ எனக் கூறப்படுகிறது. இந்த இடம் பெரிய காஞ்சிக்கும் சிறிய காஞ்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது பண்டைக் காலத்தில் பல்லவர் அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும்.  
இம்மேடு காஞ்சி நகரமட்டத்திற்கு மேல் ஏறத்தாழ 30 அடி உயரம் உடையது. இதன்மீது நின்று நாற்புறமும் காணின், சுற்றிலும் பள்ளமான நிலப்பரப்புண்மையை உணரலாம். மேட்டின்மீது தென்னை மரங்கள் வளர்ந்துள்ளன. ஒரு பால் சிறிய கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் உள்ள ஆவுடையார் செங்கல்லாலும் சுதையாலும் அமைந்தது. லிங்கம் கல்லால் இயன்றது. அக்கோவிலை அடுத்து இரண்டு கல் மண்டபங்கள்.  
ஒரு மண்டபம் மகேந்திரன் தூண்களை கொண்டது. அம்மண்டபத்தில் இரண்டு வரிசை தூண்கள் உள்ளது. மண்டபத்தை அடுத்து சில அறைகள் உள்ளது. ஒன்று மிக சிறிய அறை. அது புஜை அறை. அதனை அடுத்த அறை இருண்டது. அதன் ஒரு மூலையில் சுரங்கம் ஒன்று படிக்கட்டுகளை உடையதாக இருக்கிறது. அச்சுரங்கம் கைலாசநாதர் கோவிலுக்கு செல்கிறது. மற்றோரு மண்டபம் இடிந்தது. அதில் உள்ள தூண்கள் ஐவகைபட்டது. பல்வேறு காலத்தவை. இப்பல்லவ மேடு அகழப்பெறும் நாளே பல்லவரை பற்றி நற்குறிப்புகள் கிடைக்கும் நாள் என்று 1944 ல் குறிப்பிட்டுள்ளார். 
ஒன்பது ஆண்டுகள் கழித்து டாக்டர் மா.இராசமாணிக்கம் விரும்பியது போன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1953-54ல் அகழாய்வு மேற்கொண்டது. ஆனால் இங்கு எந்த பல்லவ பழங்கதைகளும் மீட்கப்படவில்லை. அவர் இயற்க்கை எய்தியபின் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் 1970-71ல் ஆர்.நாகசாமியின் வழிகாட்டுதலின் கீழ் ஏ. அப்துல் மஜீத் மற்றும் கே.தாமோதரன் ஆகியோர் அகழாய்வு பணியை மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் பல்லவர் கால கற்றளி மற்றும் மட்கலன்கள் வெளிக்கொணரப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தெற்கு வட்டம் 1953-54 (Southern Circle of Archaeology Survey of India)  
பல்லவமேடு பல்லவர்களின் நினைவுச்சின்னங்களைக்கொண்டது என்று நம்பிக்கை கொண்டுள்ளது. தொல்லியல் துறை தெற்கு வட்டாரத்தினால் இங்கு ஒரு சோதனையை (Trial) மேற்கொள்ளப்பட்டது. அகழ்வாராய்ச்சி நான்கு தொடர்ச்சியான கட்டமைப்பு காலத்தை வெளிப்படுத்தியது.

அவற்றில் மிகக் குறைவானது கட்டமைப்பு காலம் I, சில வளைய-சுவர்களைக் கொண்டிருந்தது. மூன்று கட்டங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன, அவை கட்டமைப்பின் மிகைப்படுத்தலின் அடிப்படையில் மட்டுமே வேறுபடுகிறது. மட்பாண்டங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.
கிளிஞ்சல் சிப்பி வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தளத்தை கிளிஞ்சல் சிப்பி வளையல்கள் உற்பத்திக்கு ஒரு தொழிற்சாலையாக வழங்கியுள்ளது. ஒரு பல்லவ காலம் தீர்த்தப்படவில்லை என்றாலும், எந்த பல்லவ பழங்கதைகளும் மீட்கப்படவில்லை. (பக்கம்12)

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு 1970-71
இந்த அகழாய்வு மூன்று பண்பாட்டுக் காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வகழ்வாய்வில், சிவப்பு மட்கலன்கள், பளிங்குக் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் எனப் பலவகையான தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு கி.பி. 600 முதல் கி.பி. 900 வரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்
அகழாய்வு தொல்பொருட்கள்: வட்ட உறைகிணறு, செங்கல் தரைத்தளம், கோயில் விமானம் கட்டட உறுப்புகள் (உடைந்த நிலையில் புதையுண்டது), வீரபத்திரர் கற் சிற்பம்
விளக்கம் பல்லவமேடு அகழாய்வில் பல்லவர் கால கற்றளியின் தள உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. வட்ட உறைகிணறு, மற்றும், செங்கல் கட்டடப்பகுதியும் வெளிக்கொணரப்பட்டது. மிக அதிக அளவில் பானையோடுகள் கிடைக்கப்பெற்றன. இவை பல்லவர் காலத்திய (கி.பி.600-900) பயன்பாட்டு மட்கலன்களாகும். பல்லவ ஆட்சிக் காலங்களை தொடர்புபடுத்தியுள்ளது
அகழ்வாராய்ச்சி நடந்த இடங்கள் கடுமையான ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. பாலி மேடு ஆக்கிரமிப்பில் முழுமை சில மாதத்திற்குள் அடையப்போகிறது. அரசும் அகழ்வாராய்ச்சியும் இந்த ஆக்கிரமைப்பை கண்டுகொள்வதில்லை (அ) துணையாக உள்ளது. தொல்லியல் துறை அறிவிப்பு பலகையை கண்டுபிடிப்பதே கடினமானதாக உள்ளது. சிலர் அதனை அழித்து விட்டதாக கூறுகின்றனர்.



பாலி மேடு என்று அழைத்தாலும் பல்லவ மேடு என்று அழைத்தாலும் அது பல்லவர் மேடு என்று பொருள் கொள்ள முடியாது. காரணம் 


01. பாலி (Pali) மொழியாகும்.
பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் (திரிபிடகம்) கொண்ட மொழி பாலி. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். மேலும் காஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம், தச சீல பல்கலைக்கழகம்  இருந்தது. இது பாலி மேட்டில் இருந்தது என்றுரைக்கின்றனர்.  
பாலி என்ற தொன்மையான பெயரில் பல கிராமங்கள், மலை, மாவட்டம் என இந்தியா முழுவதும் உள்ளது.
01. பாலி நாகா, பாலி  மலை, மும்பை, மகாராட்டிணம் (Pali Naka, Pali Hill, Mumbai, Maharashtra) 
02. பாலி, இரத்தனகிரி,  மகாராட்டிணம் (Pali, Ratnagiri, Maharashtra)
03.  பாலி, பாட்னா, பீகார்  (Pali, Patna, Bihar)
04.  பாலி மோகன், பீகார் 
05. பாலி, இராய்கர், சத்தீஸ்கர்  (Pali, Raigarh, Chhattisgarh)
06.  இராய்ப்பூர், பாலி, ராஜஸ்தான்  (Raipur, Pali, Rajasthan)
07.  இராணி, பாலி, ராஜஸ்தான்   (Rani, Pali, Rajasthan)
08.  பாலி, ரேவரி, ஹரியானா   (Pali Rewari Haryana)
09. பாலி மூக்கு ,கொல்லம், கேரளா  (Palimukku Kollam, Kerala)  
02. மணிபல்லவ மேடு 
"மணிபல்லவ மேடு" என்பதை "பல்லவ மேடு" என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றுரைக்கிறார் பேராசிரியர் அ.மு பரமசிவானந்தம். (சொர்ணாம்பாள் நினைவு சொற்பொழிவுகள்- Page 69-70, 1972 )
மணிமேகலை வரவை முன்னமே அறிந்த மன்னன் மணிபல்லவத்தை போன்ற திட்டு, புத்த பீடிகை, கோமுகி பொய்கை முதலியவற்றை இயற்றி மணிமேகலை வந்தால் தங்க தக்க ஏற்பாடுகளை செய்தான். மணி பல்லவத் திட்டில் மணிமேகலை அறவண அடிகளிடம் மாதவியுடன் அறம் கேட்டு புத்த நெறி போற்றி வாழ்ந்து வந்தாள். இந்த மணிபல்லவம் இன்றும் பல்லவமேடு என்ற பெயரால் வழங்குகின்றது.
இதைச் சிலர் பல்லவர் ஆட்சி செய்த மேடு எனக் குறிப்பினும் மணிபல்லவமாகிய மேடு எனக் கொள்வதே சாலப் பொருந்துவதாகும். தீவகம் போன்ற காவகம்' எனச் சாத்தனர் கூறியபடியே இன்றும் இம் மணிபல்லவமாகிய பல்லவமேடு தீவகமென விளங்குகின்றது. 
03. மணிபல்லவம்
தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி  
மணிமேகலையில் மணிபல்லவம் வருகிறது. இந்த மணிபல்லவத்திற்கும் பல்லவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மணிமேகலை பல்லவர் வருகைக்கு முன் இயற்றப்பட்ட நூல். பல்லவர் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டது 
சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப்பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாக, தமிழ் நாட்டு வேந்தர்களை ஆங்காங்கு குறிப்பிட்டுச்செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. 
பல்லவர்கள் காஞ்சீபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் வடபகுதியை அரசாண்ட பேர்பெற்ற மன்னர். இவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. பல்லவர் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டிருக்கவேண்டும்.
அழிசி வலைத்தளம்
புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச் சென்று காப்பாற்றியதாகக் கூற்றப்படும் தெய்வம் இது. மணிபல்லவம் என்பது இன்றைய நயினாதீவு ஆகும். இத்தீவைச் சிங்களத்தில் நாகதீப, அதாவது நாகர்தீவு என அழைக்கப்படுகிறது.
இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம் மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’ என்று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. ஆகவே, ‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே
மணிபல்லவம் என்பது மணிபல்லங்கம் என்பதன் திரிபு எனத் தோன்றுகிறது. பல்லங்க என்னும் பாலி மொழியின் பொருள், பலகை அல்லது ஆசனம் என்பது. மணிபல்லங்க என்றால் மணியாசனம் எனப் பொருள்படும். மணிபல்லங்க என்னும் சொல் தமிழில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கியது போலும். இலங்கையிலேயுள்ள பௌத்தர்கள் பாராயணம் செய்யும் செய்யுள்களில் ரத்னத்திரய வந்தனர் காதா என்பதும் ஒன்று. இத்தோத்திரச் செய்யுள்களில் ஒன்று இது:
பஹினி ஸத மாது லேஹி தின்ன
மணிபல்லங்க வரே யஹிங் நிஸின்னோ
முனி தம்ம மதேஸயீ முனீனங்
ஸிரஸாதங் பணமாமி நாகதீபங் 
இந்தப் பாலிமொழிச் செய்யுளின் பொருள் வருமாறு
பாஹினி ஸத - தங்கையின் மகனும்
மாது லேஹி - மாமனும்
தின்ன - கொடுத்த
வரே- உத்தமமான
மணிபல்லங்க - மணி ஆசனமானது
யஹிங் - எந்த இடத்தில் உள்ளதோ அங்கு
நிஹின்னோ - அமர்ந்து
முனி - புத்தபகவான்
முனீனம் - பிக்ஷக்களுக்கு
ஸிரஹா - தலை வணங்கி
பணமாமி - வணங்குகிறேன்
மேலும் விரிவாக அறிய உதவும் வலைத்தளம் அழிசி
04. மஞ்சள் நீர் கால்வாய்
இக்கால்வாய், பிள்ளையார்பாளையம், பல்லவமேடு, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு, நேதாஜி நகர் வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இக்கால்வாய், படிப்புகள் மொத்தம் ஆறு கி.மீ. இக்கால்வாய், தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது. 
காஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம் இருந்தது. பிக்குகளும் பிக்குணிகளும் இங்கு வந்து பௌத்தத்தை கற்று தேர்ந்தார். தமிழகத்தில் மகாயானம் காஞ்சியில் நாகர்ஜுனா அவர்களால் கொண்டுவரப்பட்டது. எனவே பௌத்தர்களின் எண்ணிக்கை மற்றும் புத்த விகாரங்கள் பெருமளவில் இருந்தது. பிக்கு மற்றும் பிக்குணிகள் நீராடவும், சீராவ ஆடையை துவைக்கவும் மற்றும் சாயமிடும் இடமாக இருந்தது. பௌத்தர்களுக்கு உடல் நிலை சரியற்று பின்னர் தேர்ச்சி பெற்று நலமடைந்தால், மொட்டை அடித்து மஞ்சள் ஆடை அணிந்துகொள்வர் என்றுரைக்கிறார் மகா பண்டிதர் அயோத்திதாசர். எனவே தான் இந்த நீரோடை மஞ்சள் நீர்  என்ற பெயர் பெற்றது.   

குறிப்புகள் 
பல்லவர் வரலாறு.pdf/349

01. மணிபல்லவம் என்னும் தீவகம் - மணி. 21- ஆம் காதை

02. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது - மணி. 6-ஆம் காதை

03. சாவக நாடு (ஜாவா தீவு), காழக நாடு (பர்மா நாடு) முதலிய கீழ் நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு மரக்கலம் ஓட்டிச்சென்ற தமிழ் வணிகர், இடைவழியிலே மணிபல்லவத் துறைமுகத்தில் தங்கிச் செல்வது வழக்கம். இதனை, மணிமேகலை 14ஆம் காதையினால் அறியலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக