சனி, அக்டோபர் 26, 2019

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XXIV கட்டவாக்கம்


கட்டவாக்கம்
கட்டவாக்கம், (தென்னேரி அருகில்)
வாலாஜாபாத் வட்டம்,
காஞ்சிவரம் மாவட்டம் 631604.

கட்டவாக்கம் வாலாஜாபாத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது (அ) காஞ்சிவரத்திலிருந்து 17  கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி
காஞ்சிவரம் ஏனாத்தூர் சந்திரசேகரேந்திர விசுவ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் (SCSVMV University) பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு கட்டவாக்கத்தில் 2001-02 அகழாய்வு செய்தது. இந்த ஆய்வில் கீழ்க்கண்டவை கண்டறியப்பட்டது

01. பௌத்த கட்டிட அமைப்பு (Stupa)
02. திரிரத்தினம் (Triratna)
03. மெல்லிய துணியில் பீடத்துடன் கிண்ணங்கள்
04. கருப்பு  மற்றும் சிவப்பு  மட்பாண்டங்கள்
   
இங்கு மேட்டின் உச்சியில் (விளைநிலம் அருகில்) இலிங்க வடிவத்தில் சிவாபெருமான் காணப்படுகிறார். இந்த இலிங்கம் 1.75 மீ அளவு உடையது, இன்றும் காணப்படுகிறது. இந்த ஆய்வு முதல் கட்டம் (Phase I) மற்றும் இரண்டாம் கட்டம் (Phase II) என வகைப்படுத்துகிறது.  

முதல் கட்டம் I  (Phase I)
இது பௌத்த தளம் என்றுரைக்கிறது. இங்கு பௌத்த அமைப்பு (Buddhist Structure), நீண்ட எரிந்த செங்கற்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது. சுவரின் சீரமைப்புகள் மட்டுமே முதல் கட்டமைப்பில் காண முடிந்தது. செங்கற்கள் ( 38 x 28 x 7 cm), நடைமேடை (Platform) மூன்று பக்கங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட மட்பாண்டங்கள் உள்ளன. 

குடியிருப்பு மற்றும் வழிபாட்டுப் பகுதிகள் கொண்டுள்ளது, பானைகளுடன் செங்கல் தளம் உள்ளது, மெல்லிய துணியில் பீடத்துடன் கிண்ணங்கள் உள்ளது. பழுப்பு நிறம் பூசப்பட்ட பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என ஆய்வில் கிடைத்துள்ளது. கட்டவாக்கத்தில் ஒரு பிராமி எழுத்து கண்டறியப்பட்டது.

இரண்டாம் கட்டம் I  (Phase II)
இரண்டாம் கட்ட மக்கள் முதல் கட்டமைப்பை (Phase I) விரிவாக மீண்டும் பயன்படுத்தி இருக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டது. கட்டம் I மற்றும் கட்டம் IIன் பிற விவரங்கள் தெரியவில்லை. காரணம் அவை மோசமாக சேதமடைந்தும், கல் செதுக்கல்கள் மற்றும் செங்கற்கள் மீண்டும் நவீன குடியேற்றங்களால் பயன்படுத்தியதால் தான் பிற விவரங்கள் தெரியவில்லை. செங்கற்கள் ( 28 x 7 x 5 cm ).

ஆய்வு செய்யும்பொழுது, பல மறுபயன்படுத்திய புத்தர் கற்சிற்பங்கள் வெவ்வேறு தோரணையில் சுவர்கள் மற்றும் தூண்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டவாக்கம் மட்பாண்டம் காலம் 200 - 100 BCE. 
கட்டவாக்கம் அகழ்வாராய்ச்சியிலிருந்து ஒற்றை அச்சு தகடு (A Single Mould Plaque) கண்டறியப்பட்டது. (ஆனால் பிள்ளையார்பாளையம் இரட்டை வார்ப்பட பொருள்கள் மனித மற்றும் விலங்கு வடிவங்களில் காணப்பட்டன). வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டது.

கட்டவாக்கத்தில் கண்டறியப்பட்ட சுடுமண் சிற்பம் 

மேலும் விரிவாக அறிய 
National Seminar on Pristing Glory of Kanchipuram

02. Early Historical Archaeology of Kanchipuram: A Study of Pre-Pallava culture. Thesis submitted for partial fulfillment of the degree of Doctor of Philosophy in Archaeology- Research Scholar S.Shanmigavel Supervisor Prof.S.Ramakrishna Pisipathy
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக