சிலையமையப்பு
செம்பு, வெள்ளி, பித்தளை ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட சிலை. நிலத்தை தொடும் முத்திரை - உயரம் 9.5 cm அகலம் 6.5 cm.12 ஆம் நூற்றாண்டு - வலது கை (Right Hand), கழுத்து மற்றும் தலையில் ஆபரணங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. நெற்றி திலகத்துடன் காணப்படுகிறது (Urna) - தாமரை அமர்வு
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம்
1966 விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக விவரப்பதிவில் (Victoria and Albert Museum) இந்த புத்தர் சிலையை பற்றி பதிவு செய்யப்பட்டது.
இந்த புத்தர் சிலை 1917க்கு முன்பு காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டு வட்டத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இச்சிலை 13 (அ) 14ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டிருக்கலாம்.
இந்த மாதிரியாக வடிவமைக்கப்பட்ட சிலை, (Pala Period) பால காலத்தின் பிற்பகுதியின் கிழக்கு இந்திய சிற்ப மாதிரியை மிக நெருக்கமாக கொண்டுள்ளது. இச்சிலை விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக