ஞாயிறு, டிசம்பர் 30, 2018

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIX ஒட்டியம்பாக்கம்

அமைவிடம் :
கோவில் : ஒட்டிஸ்வரர் சிவன் கோவில்
இடம்        : ஒட்டியம்பாக்கம் ஏரி சாலை மேடவாக்கம் அருகில்
வட்டம்    : தாம்பரம்
மாவட்டம் : காஞ்சிவரம் 600130.
கிழக்கு தாம்பரம் மற்றும் சென்னை புற நகர் பேருந்து நிலையத்திலிருந்து  (CMBT) இங்கு செல்லலாம்.

28/12/2018 வெள்ளிக்கிழமை மாலை ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் சென்றேன். பகவன் புத்தரின் சிலை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அக்கோவில் நிர்வாகத்தினர் ஒருவரிடம் பகவன் புத்தரின் சிலை இங்கு காணவில்லை, அச்சிலை  எங்கிருக்கிறது என்று வினாவினேன். அச்சிலை இக்கோவில் பின்பக்கம் வைக்கப்பட்டது. இன்னேரம் யாரவது உடைத்து இருப்பார்கள் என்றார். பிறகு இருவரும் சென்று சிலையை பார்த்தோம்.

இச்சிலை இக்கோவிலின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் (மூன்று வீடுகள் தள்ளி உள்ள வீடு) இருந்து பெறப்பட்டது, நின்ற நிலையில் உள்ள சிலை என்ற தகவல் தான்  புத்தரின் சிலையை பார்த்து கூறினார். பிறகு அங்குள்ள சிவன் கோவில் மற்றும் கட்டி எழுப்ப உள்ள பெருமாள் கோவில் பற்றியே அவரின் பேச்சு இருந்தது. 

மழையிலும் வெயிலிலும் காற்றிலும் சேதமடையும் இந்த புத்தர் சிலை உங்களுக்கு தேவையில்லையா என்ற வினாவிற்கு அவரின் மௌனம் தான் பதிலாக இருந்தது. இந்த நிலை நீடித்தால் சிலை அழிந்து போய்விடும். 

சிலையமைப்பு: 
நின்ற நிலை. தலைப்பகுதியை சுற்றி ஒரு தோரணம். மேலும் தலைப்பகுதி மேலிருந்து கால் பகுதிவரை மலர் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. முன்னங்கைகள் இரண்டும் உடைந்துள்ளது. பகவன் புத்தரை இரு கரம் உயர்த்தி வணங்கி மகிழும் ஒருவர் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் உள்ள படத்தை கவனிக்கவும் http://veludharan.blogspot.in/2016/09/a-heritage-visit-to-madambakkam_13.html எனேவ இச்சிலை காக்கும் கையுடன் உருவாக்கியிருக்கலாம் என கருதுகிறேன். பகவன் புத்தரின் முகம் சிதைந்துள்ளது. சிலை உயரம் 4 அடி, அகலம் 1.5 அடி.

தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
இச்சிலை 10-11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவிலின் தென் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றில் இச்சிலை கண்டறியப்பட்டது. பின்பு இச்சிலை கோவிலில் வைக்கப்பட்டது. (Buddhist Remains in South India -Dr.D.Dayalan Page no 158)







கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக