பொன் மாற்று திட்டம் (Gold Exchange Standard) பற்றி நம் நாட்டில் பலர் தொடர்ச்சியின்றி எழுதி வந்தனர். அப்படி எழுதி வந்தவர்கள் மிகப்பெரிய தவறை பொய்யை பரப்பினர். அந்த பொய்யினை அனைவரையும் உண்மை என நம்ப வைத்தனர். அந்த மிகப்பெரிய தவறு (Gross Error) என்ன என்றால் பொன் மாற்று திட்டம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது (அ) ஆலோசிக்கப்பட்டது என்பது தான்
நம் நாட்டில் ருபாய் மதிப்பு குறைவு என்னும் பொருளாதார சீர்குலைவுக்கு கால் நூற்றாண்டு கடந்து பொன் திட்டம் (Gold Standard) தான் தீர்வு என்று உறுதிப்பாடு எடுத்தது. அந்த உறுதிப்பாடு கூட வேறு வழியின்றி 1892ல் எடுக்கப்பட்டது.
ஏன் கால் நூற்றாண்டுகள் கடந்து இந்த உறுதிப்பாட்டை எடுத்தது என்றால், ருபாய் மதிப்பு குறைவுக்கு தீர்வு இரட்டை நாணய முறையே (Double Standard) என்று இந்தியா நம்பி இருந்தது. நம்பி ஏமாந்தது. இந்த இரட்டை நாணய முறை கொண்டுவர உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாடுகளின் மாநாட்டுக்கு பல உறுதிமொழிகளை இந்தியா வாரி வாரி வழங்கியது. மூன்று பன்னாட்டு மாநாடுகள் நடந்தது. அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. ஏன் என்றால் அவை வெறும் வேற்று பேச்சுகளாக இருந்தது. இதில் பங்கு கொண்ட நாடுகள் வெள்ளி திட்டத்தை (Silver Standard) நிறுத்தி பொன் திட்டத்திற்க்கு (Gold Standard) செல்வது என்று உறுதிகொண்டது. இதில் குறிப்பாக ஜெர்மன் முனைப்பாக இருந்தது, ஜெர்மனியை பின்பற்றும் நாடுகளும் உடனடியாக வெள்ளி திட்டத்தை நிறுத்தி பொன் திட்டத்திற்க்கு சென்றது. ஆனால் இங்கிலாந்து மட்டும் இரட்டை நாணய முறைக்கு ஆதரவு அளித்து இருந்தால் பல நாடுகள் மந்தையாடுகளை போல் இங்கிலாந்தை பின்பற்றி இருக்கும். இங்கிலாந்தின் ஆதரவின்மையால் இரட்டை நாணய முறை கைவிடப்பட்டது. இப்பொழுது இந்தியாவிற்கு பொன் திட்டத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் பன்னாட்டு நாடுகளோ இந்தியாவை பொன் திட்டத்தை பின்பற்ற கூடாது. ஏற்கனவே இந்தியா பின்பற்றி வரும் வெள்ளி திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாமல் பொன் திட்டத்தை பின்பற்றுவது என்று உறுதி கொண்டது. தங்க திட்டத்தை செயல்படுத்த தங்கம் அதிக அளவில் தேவைபடுவதால் பல நாடுகள் தங்கத்தை பெற முந்தியடித்தது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது வெள்ளியின் விலை வீழ்ச்சியடைந்து.
பொன் திட்டத்தில் உறுதிகொண்டது இந்தியா
இந்தியாவிற்கு தங்க திட்டத்தை செயல்படுத்த போதுமான அளவில் தங்கத்தின் இருப்பு இல்லை. இருந்தாலும் தங்கத்தை பயன்படுத்தி தங்க திட்டத்தை செயல்படுத்த திட்டத்தை வகுத்தது. இந்த திட்டத்தை குழி தோண்டி புதைக்க இரு மாற்று திட்டங்கள் இருவர் அளித்தனர். ஒருவர் புரோபின் மற்றோருவர் லிண்ட்சே (A.M.Lindsay) இந்த இருவரில் மிக முக்கியமானவர் லிண்ட்சே.
John Maynard Keynes |
புரோபின் மற்றும் லிண்ட்சே இவர்களின் மாற்று திட்டம் என்பது தங்க நாணய உற்பத்தி இன்றி தங்க திட்டத்தை செயல்படுத்துவது. இந்தியா இந்திய அரசின் தங்க திட்டத்தையும் இந்த இருவர் அளித்த மாற்று திட்டத்தையும் பிலௌர் குழுவுக்கு (Flower Committe) அளித்தது. பிலௌர் குழு இந்த மூன்று திட்டங்களை பகுத்தாய்ந்து ப்ரோபின் மற்றும் லிண்ட்சே திட்டத்தை நிராகரித்தது. இந்திய திட்டமே சரி என்றது.
இவ்வாறு இருக்கையில் பொன் மாற்று திட்டம் என்பது இந்திய திட்டம் என்றுரைப்பது பெரிய தவறு என்று பாபா சாகிப் தமக்குரிய முறையில் பகுத்தாய்ந்து ஆதாரங்களோடு விளக்குகிறார்
திட்டமும் செயலும் வெவ்வேறாக இருந்தது
இந்திய அரசு 1898ல் பிலௌர் குழு பரிந்துரைத்த பொன் திட்டத்தை ஏற்றது. பதிமூன்று ஆண்டுகள் கழித்து 1911ல் சேம்பர்லைன் ஆணையம் ஒரு அறிக்கை அளித்தது. பிலௌர் குழு பரிந்துரைத்த திட்டமும் அதன் செயல்பாடுகளும் வேறுபடுகிறது என்று. அதோடு நிற்கவில்லை செயல்பாடுகள் எல்லாம் லிண்ட்சேவின் திட்டத்தை ஒத்திருக்கிறது என்றது. அதாவது எந்த திட்டம் பிலௌர் குழுவினால் நிராகரிக்கப்பட்டதோ அதே திட்டம் தான் இந்தியாவில் செயல்படுகிறது.
லிண்ட்சேவின் நிதியங்களின் காப்பும் போக்கும், இருப்பும் இயக்கமும் இந்தியாவின் செல்பாடுகளுடன் எவ்வாறு ஒத்து இருக்கிறது என்று விளக்குகிறார் பாபா சாகிப்.
லிண்ட்சேவின் திட்டம்
01) இருப்பிடம் அரசு செலுத்தல்களை (Govenment payments) இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று உள்நாட்டு செலுத்தல்கள் (Domestic Payments) மற்றோன்று அயல் நாட்டு செலுத்தல்கள் (Foreign Remittence). உள்நாட்டு செலுத்தல்கள் வெள்ளி நாணயம் மற்றும் காகித பணத்தின் மூலம் செலுத்துதல். அயல் நாட்டு செலுத்தல்கள் தங்க நாணயம் மூலம் செலுத்துதல்.
02) காப்பு இதனை செயல்படுத்த இரு அலுவலகம் வேண்டும். ஒரு அலுவலகம் இந்தியாவில் இயங்கும். இந்தியாவில் உள்ள அலுவலகம் ரூபாயை வைத்து இருக்கும் அதாவது வெள்ளியை (Silver Reserve). இன்னொரு அலுவலகம் லண்டனில் இருக்கும். இந்த அலுவலகம் தங்கத்தை வைத்து இருக்கும் (Gold Reserve).
இவ்வாறு ஒரு பகுதி தங்கமாகவும் ஒரு பகுதி வெள்ளியாகவும் August 1915 ஆண்டு வரை வைக்கப்பட்டிருந்தது. காகித பணம் என்பது கலப்பு தன்மை கொண்டது. அது தங்கம் வெள்ளி காப்புனை ஈடாக கொண்டது. எனவே காகித பணம் என்பது சட்ட பூர்வமான காப்பு இல்லை (Statutory Reserve).
03) இயக்கம் லண்டனில் இருக்கும் அலுவலகத்திற்கு வெள்ளி தேவைப்படும் போது இந்தியா அரசின் மீது Draft on the letter (வரைஒலைகளை) விற்கும் இதற்கு (Council) என்று பெயர். அதைப்போன்று இந்தியாவிற்கு தங்கம் தேவைப்படும் போது இந்திய லண்டன் அலுவலகத்தின் மீது Draft on the letter வரைஒலைகளை விற்கும் இதற்கு (Reverse Council) என்று பெயர். இந்த council விற்பதும் Reverse Council விற்பதும் தங்க செலாவணி இல்லாத திட்டம் அதாவது பொன் மாற்று திட்டம்.சேம்பர்லைன் ஆணையம் Vs பாபா சாகிப்
திட்டமும் அதன் செயல்பாடுகளும் வேறுபடுவது குறித்து சேம்பர்லைன் ஆணையம் என்ன தெரிவிக்கிறது என்றால், இந்தியாவின் திட்டமும் அதன் செயலும் வேறுபடுகிறது என்று சொல்வது என்பது யாரையும் கண்டிப்பது ஆகாது என்றுரைக்கிறது. பாபா சாகிப் இது ஏன் கண்டிப்புக்கு உள்ளாகாது என்று வினா எழுப்பி விளக்குகிறார்.
1878ல் இந்திய அரசால் முன்மொழிய பட்டதிட்டம் 1879ல் ஆய்வு குழுவால் கண்டிக்கபடவில்லையா என்று வினா எழுப்புகின்றார்? 1878ஆம் ஆண்டு இந்திய திட்டத்தையும் தற்பொழுது இயங்கும் லிண்ட்சே திட்டத்தையும் ஒப்பிட்டு விளக்குகிறார்.
01) நாணய சாலை (Mint) மக்களுக்கு மூடல்
1878 திட்டத்தில் நாணய சாலை பொது மக்களுக்கு திறந்து இருந்தது. லிண்ட்சே திட்டத்தில் நாணய சாலை அரசுக்கு திறந்து இருந்தது. அரசின் தனி உரிமையாக (Monopoly) இருந்தது. இங்கு ஒரு வினா எழுகிறது, நாணயம் அச்சிட்டு வெளியிடுவது என்பது அரசின் கடமை தானே. ஏன் 1878ஆம் ஆண்டு திட்டத்தில் நாணயத்தை பொதுமக்கள் நாணய சாலையில் கொடுத்து அடித்துக்கொண்டனர் .
(1873-1893) 20 ஆண்டுகள் இந்தியா தொழில் துறை வேகமாக முன்னேறியது. இது நாணயத்தின் தேவையை அதிகரித்தது. எனவே பொது மக்கள் நாணயமடித்தல் நிறுத்தப்பட்டால், நாணயமடித்தல் அரசின் கடமையாகிவிடும். அப்பொழுது இருந்த சுழ்நிலையில் நாணயமடித்தலை அரசு ஏற்க முடியாத சூழ்நிலை. அப்படியே ஏற்றாலும் புல்லின் வாங்குவது இருப்பு வைப்பது என்ற வகையில் கொடுக்கல் வாங்கல் பெரும் சிக்கலாக இருக்கும். எனவே நாணயமடித்தல் பொது மக்களுக்கு திறந்து இருந்தது.
02) நாணய வரி (Seignorage) நாணயமடித்தலின் மீது இலாபம்
1878ஆம் ஆண்டு திட்டத்தின் படி நாணயமடித்தலிலும் தற்பொழுது இந்தியா செலயல்படுத்தும் லிண்ட்சே திட்டத்திலும் இலாபம் உள்ளது. ஆனால் 1878 ஆம் ஆண்டு திட்டத்தில் இலாபத்தின் அளவு சிறிது. இது இலாபத்தை ஊக்குவிக்கவில்லை. ஆனால் இந்தியா செயல்படுத்தியும் லிண்ட்சே திட்டத்தில் இலாபத்தை தேடி அலையும் நிலை. சந்தை விலைக்கும் நாணய சாலை விலைக்கும் (Mint and Market Price) உள்ள வேறுபாடு இலாபம்.
II மாற்று திட்டத்திற்கு நம்பிக்கை ஊட்டவே சாம்பர்லைன் ஆணையம் வாதிடுகிறது.
மாற்று திட்டம் என்பது புறந்தள்ளப்பட்ட ஒரு திட்டம். புறந்தள்ளப்பட்ட திட்டத்தை மறுபடியும் உயிரூட்ட சாம்பர்லைன் ஆணையம் வாதிடுகிறது.எப்படி வாதிடுகிறது என்றால் இந்த செலவாணி முறை (Currency System) ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வேறு சில இடங்களிலும் உள்ள செலவாணி முறையுடன் நெருங்கிய சாயல் உள்ளது என்று வாதிட்டது. சரி அந்த சாயல்கள் என்ன?
மாற்று திட்டம் என்பது புறந்தள்ளப்பட்ட ஒரு திட்டம். புறந்தள்ளப்பட்ட திட்டத்தை மறுபடியும் உயிரூட்ட சாம்பர்லைன் ஆணையம் வாதிடுகிறது.எப்படி வாதிடுகிறது என்றால் இந்த செலவாணி முறை (Currency System) ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வேறு சில இடங்களிலும் உள்ள செலவாணி முறையுடன் நெருங்கிய சாயல் உள்ளது என்று வாதிட்டது. சரி அந்த சாயல்கள் என்ன?
திரு கெய்ன்ஸ் அவர்கள் இந்திய செலவாணி மற்றும் நிதியங்கள் என்ற நூல் எழுதியுள்ளார். அதில் இயல் IIல் (Chapter II) அந்த சாயல்கள் என்ன என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செலுத்தல்களுக்கு (Foreign remittance) வங்கிகள் Foreign Bill of Exchange வைத்து இருக்கிறது. Foreign Exchange Billய் விற்பதும் இந்தியா Reverse Council விற்பதும் ஒன்று தான் என்றுரைக்கிறார்.
ஆனால் பாபா சாகிப் கெய்ன்ஸ் அவர்களின் கருத்தை மறுக்கிறார். அவரின் கருத்தை தவறு என்று சுட்டி காட்ட முதலில் பேராசிரியர் கெமரர் கருத்தை சுட்டி காட்டி பின் தம்முடைய கருத்தை பதிவிடுகிறார்
Kemmerer |
பேராசிரியர் கெமரர் (Kemmerer) என்ன சொல்கிறார் என்றால் England Foreign Countries Bill of Exchange வைத்து இருப்பதும் இந்தியா Reverse Council விற்பதும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை, இவைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது என்றுரைக்கிறார்.
ஆகவே திரு கெய்ன்ஸ் நம்மை நம்ப சொல்வதை ஏற்க முடியாது. இந்திய செலாவணி முறை ஐரோப்பிய செலாவணி முறையுடன் எவ்வகையிலும் ஒத்தது இல்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஒப்புமை ஒன்று தேவைப்பட்டால் இங்கிலாந்தில் (1797 -1824) 25 ஆண்டுகள் அதாவது கால் நூற்றாண்டு வாங்கி இடை நிறுத்த காலத்தில் (Bank suspension period) நிலவிய செலாவணி முறையை தான் இந்திய செலாவணி முறையுடன் ஒத்து இருக்கிறது என்றுரைக்கிறார்.
இந்திய செலாவணி முறை01. தங்க சவரன் முழுமையான சட்ட செலாவணி
02. வெள்ளி ரூபாய் முழுமையான சட்ட செலாவணி
03.அரசு சவரங்களுக்கு வெள்ளி ரூபாயை அளிக்கும். ஆனால் வெள்ளி ரூபாய்க்கு தங்க சவரனை அளிக்காது.
இங்கிலாந்து செலாவணி முறை01. தங்க சவரன் முழுமையான சட்ட செலாவணி
02. இங்கிலாந்தில் காகித நோட்டுகள் சட்ட செலாவணி இல்லை. ஆனால் அது பொதுப்படையான ஏற்புடைய பணமாக புழக்கத்தில் சுற்றியன.
03. இங்கிலாந்து வங்கியானது தங்கம், Mercantile Bills, ஆகியவைக்கு காகித நோட்டுகளை தர பொறுப்பு ஏற்றுள்ளது. ஆனால் காகித நோட்டுகளுக்கு தங்க சவரனை அளிக்காது.
இது தான் இந்திய செலாவணி முறைக்கும் இங்கிலாந்து செலாவணி முறைக்கும் இருந்த ஒற்றுமை. அது கூட வாங்கி இடை நிறுத்த காலத்தில் நிலவிய செலாவணி அமைப்பு என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஆனால் திரு கெய்ன்ஸ் இதனை நம்ப மறுக்கிறார்.
வரம்புக்கு உட்பட்ட அளிப்பு (Limited Supply) தான் அதன் மதிப்பை காத்துக்கொள்ளும்
மாற்றத்தக்க செலாவணி மற்றும் மாற்ற முடியாத செலாவணிக்கும் (Convertable and Non Convertable currecny) உள்ள வேறுபாடு செலாவணி வெளியிடும் உரிமை விவேகத்துடன் ஆள்வதற்கும் விவேகமின்றி ஆள்வதற்கும் உள்ள வேறுபாடு தான். வாழைப்பழங்களை ஆப்பிள் பழங்களாக மாற்றினால் தான் வாழைப்பழங்களின் மதிப்பை காக்க முடியும் என்று எவரும் சொல்வதில்லை. வாழைப்பழங்களுக்கான தேவை (Demand) இருப்பதாலும் அவற்றின் அளிப்பு (Supply) வரம்புக்கு உட்பட்டு (Limited) இருப்பதாலும் அவை தம் மதிப்பை காத்துக்கொள்கின்றன. ஒன்றின் மதிப்பை காப்பதற்கு அவசியமானது அதன் (Limited Supply) அளிப்பு வரம்பு தான்.
மாற்றத்தக்க செலாவணி மற்றும் மாற்ற முடியாத செலாவணிக்கும் (Convertable and Non Convertable currecny) உள்ள வேறுபாடு செலாவணி வெளியிடும் உரிமை விவேகத்துடன் ஆள்வதற்கும் விவேகமின்றி ஆள்வதற்கும் உள்ள வேறுபாடு தான். வாழைப்பழங்களை ஆப்பிள் பழங்களாக மாற்றினால் தான் வாழைப்பழங்களின் மதிப்பை காக்க முடியும் என்று எவரும் சொல்வதில்லை. வாழைப்பழங்களுக்கான தேவை (Demand) இருப்பதாலும் அவற்றின் அளிப்பு (Supply) வரம்புக்கு உட்பட்டு (Limited) இருப்பதாலும் அவை தம் மதிப்பை காத்துக்கொள்கின்றன. ஒன்றின் மதிப்பை காப்பதற்கு அவசியமானது அதன் (Limited Supply) அளிப்பு வரம்பு தான்.
நாணய சாலை பொது மக்களுக்கு திறந்து இருந்ததால், பொது மக்கள் வெள்ளியை நாணய சாலையில் கொடுத்து, நாணயமாக்கி கொள்கின்றனர். இங்கு நாணயத்தின் அளிப்பு (Supply) என்பது வரம்பின்றி உள்ளது. எனவே நாணயத்தின் மதிப்பு சரிகிறது. ஆனால் நாணய சாலையை பொதுமக்களுக்கு மூடிவிட்டால், நாணயம் வெளியிடுதல் அரசின் கடமையாகி விடுகிறது. அரசும் தம்மிடம் உள்ள எல்லா வெள்ளியையும் நாணயமாக்கிவிடுவதில்லை. மாற்றத்தக்க மற்றும் மாற்ற முடியாத செலாவணியை வைத்து இருக்கிறது. இந்தியாவில் நாம் வைத்து இருக்கும் போலித்தனமான மாற்றத்தக்க செலாவணி ரூபாய் விட மாற்ற முடியாத செலாவணி உலகுக்கு எத்தனையே மேலானதாக இருக்கும். நாணயத்திற்கு மாற்றாக காகித நோட்டும் வெளியிடுகிறது. காகித நோட்டுகள் வெள்ளியை ஈடாக வைத்து வெளியிடுகிறது. எனவே நாணய சாலையை பொது மக்களுக்கு மூடுவது என்பது நாணயத்தின் அளிப்பை வரம்புக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே நாணயம் வெளியிடு வரம்புக்கு உட்பட்டு இருக்கும் போது அதன் மதிப்பு சரிவதில்லை.
வரைமுறை அற்ற பெருக்கம் ஏற்படும் சாத்தியபாட்டுக்கு எதிராகத்தான் கவனமாக இருக்கவேண்டும். மதிப்பிடும் முறை திட்டமான உலோக பணமாய் இருக்கும் போது மிக அதிகமாக பெருக்கம் ஏற்பட்ட முடியாது. ஏன் என்றால் உற்பத்தி செலவே போதிய வரம்பு கட்டும் காரணியாக செயல்படுகிறது. மற்றதக்க காகித பணமாக இருக்கும் போது சேம வைப்பு தொடர்பான வழி வகைகள் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறது. வரைமுறையற்ற பெருக்கம் என்பது மதிப்பு குறைவு (அ) விலையேற்றத்திற்கு மறு பெயராகும்}
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக