திரு தி இராசகோபாலன் எழுதிய போதி மாதவர் என்ற நூலில் வயலக்காவூர் புத்தர் சிலை என்று குறிப்பிட்டிருந்தார். வயலக்காவூர் சிலையை மார்ச் 2016 சென்று பார்த்தேன். அச்சிலை புத்தர் சிலையா அல்லது தீர்தங்கர் சிலையா என்ற ஐயம் எழுந்தது. தெளிவு பெற ஐயா ஜம்புலிங்கம் அவர்களின் உதவியை நாடினேன்.
சிலை அமைவிடம்: வயலக்காவூர், நெய்யாடு பாக்கம், வாலஜாபாத் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம்.
ஐயா அவர்களின் பதிலுரைக்கு பின் அங்கம்பாக்கம் சிலையும் பகவன் புத்தர் சிலை என்றுணர்ந்தேன். ஆனால் வலைபதிவில் மாற்றம் செய்யவில்லை. திரு மகாத்மா செல்வபாண்டியன் (அரும்பாவூர்) அவர்கள் இரு வாரத்திற்கு முன் அங்கம் பக்கம் சிலை பகவன் புத்தர் சிலையில்லை என்றுரைத்தார். அவர் அளித்த கூடுதல் விவரம் என்னவென்றால் உடல்கூறு மூலம் (Anatomy) புத்தரா அல்லது தீர்த்தங்கரா என்று அடையாளப்படுத்தலாம் என்று. உடல்கூறு அடிப்படையில் கட்டுடல் (Fittest Body) கொண்டவர் பகவன் புத்தர்.
சிலை அமைவிடம்: வயலக்காவூர், நெய்யாடு பாக்கம், வாலஜாபாத் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம்.
காஞ்சிவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வயக்காவூருக்கு பேருந்து இருக்கிறது. ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. அல்லது வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் சென்று அங்கிருந்து மூன்று கி.மீ தொலைவு நடந்து செல்லவேண்டும் (ஆற்றங்கரை அடுத்துள்ளது வயலக்காவுர்). வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் செல்ல அடிக்கடி பேருந்து உள்ளது.
திரு வேங்கடசாமி செட்டியார் (11-09-1906 to 19-04-1977) வயலக்காவயலக்காவூர் ஆற்றங்கரை அருகில் பாதுகாப்பின்றி இருந்த சிலையை தமது வயலுக்கு எடுத்து சென்றுவிட்டார் என்றுரைத்தார் திரு வீரராகவன் (80 வயது). இச்சிலைக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற தம் கனவை அவரது மகன் வேணு கோபால் செட்டியார் (03-06-1942 to 02-11-2013) அவராலும் செயல்படுத்த முடியவில்லை. தற்பொழுது இச்சிலைக்கு அவரின் வயலில் தம் பேரன் இலட்சுமிபதி அவர்களின் பாதுகாப்பில் உள்ளது.
சிலையமைப்பு
கை சிந்தனை கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, சிலை உயரம் 2 1/4 அடி.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக