சனி, டிசம்பர் 30, 2017

ரூபாயின் பிரச்சனை II -பாபா சாகிப்

இயல் 4  தங்க திட்டத்திற்கு வழிகோலுதல்
உலகில் உள்ள நாடுகளை நாணய முறை அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம்.
  • ஒன்று தங்க நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்
  • இரண்டாவது வெள்ளி நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள் 
  • மூன்றாவது தங்கம் வெள்ளி ஆகிய இரண்டு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்.
தங்க நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதால் அந்த நாடுகளின் வாங்கும் திறன் (Purchasing Power) அதிகரிக்கிறது. அதாவது அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே அவர்கள் தங்க நாணயங்களை விரும்புகின்றனர். 

வெள்ளி நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்: தங்கத்திற்கு தலைகீழானது வெள்ளி. வெள்ளியின்  விலை தொடர்ந்து  வீழ்வதால்  அந்த நாடுகளின் வாங்கும் திறன் குறைகிறது. அதாவது அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைகிறது. எனவே வெள்ளியை பயன்படுத்தும் நாடுகள் பல தங்க நாணயத்தை பயன்படுத்த முடிவு செய்தது. இதனால் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது.
தேவையும் அளிப்பும்  (Demand and Supply)
விலை என்பது தேவை மற்றும் அளிப்பு இந்த இரண்டையும் பொறுத்து அமையும். பொருளின் தேவை அதிகமாக இருக்கும் பொழுது அதன் அளிப்பு குறைவாக இருந்தால் அந்த பொருளின் விலை அதிகரிக்கும்.
அளிப்பு அதிகமாக இருக்கும் பொழுது அதன் தேவை குறைவாக இருந்தால் அந்த பொருளின் விலை வீழ்ச்சியடையும்.
அளிப்பும்  தேவையம் சமமாக இருக்கும் பொழுது விலையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது   
வெள்ளியை பயன்படுத்தும் நாடுகள் தங்கத்தை இறக்குமதி செய்ய முந்தியடித்தது. அதற்க்கு இரண்டு கரணங்கள் இருந்தது
01. தங்கத்தின் அளிப்பு/இருப்பு (Supply) குறைவாக (limited) இருக்கிறது ஆனால் தேவை அதிகரித்து கொண்டே இருந்தது. 
02. வெள்ளியின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் அரசின் செலவு அதிகரிக்கும். போர், பஞ்சம் மற்றும் வறட்சி காலத்தில் ஏற்படும் இழப்புகள் எல்லாம் தற்காலிகமானது, அதனை சரிசெய்து கொள்ளமுடியும். ஆனால் நாணய வீழ்ச்சியில் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
உலகில் உள்ள முக்கிய நாடுகள் தங்க திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்தியா தங்க திட்டத்திற்கு செல்லவில்லை ஏன்னென்றால் இரட்டை நாணய முறைதான் தீர்வு என்று கருதியது. மேலும் இரட்டை நாணய முறையை கொண்டு வர அமைக்கப்பட்ட பன்னாட்டு மாநாட்டை நம்பி இருந்தது. நம்பி ஏமாந்தது.

தங்கம் வெள்ளி ஆகிய இரண்டு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள்: இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மூன்று  பன்னாட்டு மாநாடுகள் நடந்தது.
  • முதல் மாநாடு 1878ல் நடைபெற்றது.
  • இரண்டாவது மாநாடு மூன்று ஆண்டுகள் கழித்து 1881ல் நடைபெற்றது. 
  • மூன்றாவது மாநாடு 11 ஆண்டுகள் கழித்து 1892ல் நடைபெற்றது.
இந்த மூன்று பன்னாட்டு நாணய முறை மாநாட்டால் எந்த பயனும் விளையவில்லை. அவை வெறும் வெட்டி பேச்சாக  இருந்தது.  எந்த மாற்று திட்டமும் அவர்கள் முன்வைக்கவில்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஏன் அவர்களால் எந்த திட்டமும் முன்வைக்க முடியவில்லை என்றால், வெள்ளியின் உற்பத்தி விகிதத்தில் வேறுபாடு காணப்பட்டாலும் அதன் பரிமாற்று விகிதம் (Exchange Rate)ல்  வேறுபாடு அதிகம் இல்லை. எனவே அவர்களால் எந்த திட்டமும் முன்வைக்க முடியவில்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப்.

இரட்டை நாணய முறை ஆதரவாளர்களின் கருத்து என்னவாக இருந்தது என்றால் வெள்ளி விகிதத்தில் ஏற்படும் உயர்வும் தாழ்வும் வாங்கி இருப்பை (Reserve) தான் பாதிக்கும் அது பொது மக்களை பாதிக்காது என்று.  பாபா சாகிப் இதனை வெறும் கண்துடைப்பு என்றுரைக்கிறார். கிரோசம் விதி மூலம் விளக்குகிறார். 

பண பயன்பாட்டிற்கு தேவையான நாணய அளவு, உலோக உற்பத்தி அளவு இவற்றினை சார்ந்து தான் கிரோசம் விதி செயல்படுகிறது எனவே இரட்டை நாணய முறை ஆதரவாளர்களின் கருத்து வெறும் கண் துடைப்பு. இரட்டை நாணய முறை ஆதரவாளர்களுக்கு இரு வழிகள் மட்டுமே இருந்தது.
  • ஒன்று  நிலையான மாற்று விகிதம் Fixed Exchange Ratio
  • மற்றோன்று இரட்டை உலோக முறை Double Standard.
நிலையான மாற்று விகிதம் தேர்ந்து எடுத்தால் இரட்டை நாணய முறை பயன்பாடு இல்லாமல் போய்விடும். இரட்டை உலோக முறை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம்.

கிரோசம் விதி 
ஹென்றி டுனிங் மெகிலாட் (Henry Dunning Macleod) என்பவர் தான் கிரோசம் விதி (Gresham's Law) என்று பெயரிட்டார். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் தாமஸ் கிரேஸ்ஹாம் (Sir Thomas Gresham) என்பவரின் நாணயவில் குறித்த கருத்தை தான் Gresham's Law என்று பெயரிட்டார். இது இரண்டு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகளுக்கான விதி (Double Standard).

கிரோசம் விதி என்பது ஒரு கெட்ட நாணயம் நல்ல நாணயத்தை அழித்து விடும் என்பது தான் அல்லது மதிப்பற்ற நாணயம் மதிப்பு மிக்க நாணயத்தை அழித்து விடும் என்பது தான். (Bad money drives out good money).

கிரோசம் விதி என்பது நமக்கு புதிதல்ல நம் தாய் தந்தை, தாத்தா பட்டி, மற்றும் முன்னோர்கள் குறிப்பிடுவது தான், அவனோடு சேராத அவன் ஒழுங்கீனமாக இருக்கிறான். அவனோடு நட்பு கொண்டால் நீயும் ஒழுக்கமில்லாதனவா மாறிவிடுவாய் என்று.   இந்த விதியை மோடி அரசு கொண்டுவந்த GSTல் கூட காணலாம்.
01. ஒருவர் வரி விதிப்புகுள்ளான ஒரு பொருளை (Taxable Supply) வாங்கும் பொழுது, GST வசூலிக்கப்படுகிறது. ஒருவர் வரி விலக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை (Exempted Supply) வாங்கும் பொழுது GST வசூலிக்கப்படுவதில்லை. ஒருவர் வரி விதிப்புக்குளான பொருளையும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருளையும் வாங்கும் பொழுது வரி விலக்கு பெற்ற பொருளும் சேர்த்து GST வசூலிக்கப்படுகிறது. 
01. ஒருவர் 5% GST பொருளை வாங்கும் பொழுது 5% GST வசூலிக்கப்படுகிறது.  ஒருவர் 12% GST பொருளை வாங்கும் பொழுது 12% GST வசூலிக்கப்படுகிறது.  ஒருவர் 5% மற்றும் 12% பொருளை வாங்கும் பொழுது 12% GST வசூலிக்கப்படுகிறது.  (Refer Mixed Supply Section 8(b))
மதிப்பிடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.
01. உண்மையான மதிப்பு (Real value). சந்தை விலையோடு வேறுபடாமல் இருக்கும் விலைக்கு உண்மையான மதிப்பு (Real value)
02. அதிகமாக மதிப்பிடப்பட்டவை (Over Value).உண்மையான மதிப்புவை விட சந்தை மதிப்பு (Market Value) அதிமாக இருந்தால் அது அதிகமாக மதிப்பிடப்பட்டவை (Over Value)
03.குறைவாக மதிப்பிடப்பட்டவை (Under value).உண்மையான மதிப்புவை விட சந்தை மதிப்பு (Market Value) குறைவாக இருந்தால் குறைவாக மதிப்பிடப்பட்டவை (Under value)
இந்த Over valued நாணயத்தை கெட்ட நாணயம் என்றும் Under valued நாணயத்தை நல்ல நாணயம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரிடம் overvalued coin இருந்தால் அதனை அவர் வைத்து இருக்க விரும்புவதில்லை. அவருக்கு under valued coin கிடைக்குமானால் முதலில் அதனை வாங்கி வைத்துக்கொள்வார். பயன்பாட்டிற்கு Money Circulationக்கு அனுப்பாமல் பதுக்கி வைத்துக்கொள்வார். எனவே ஒவ்வொருவரும் இதை போன்று செய்வதால் under valued coin என்று அழைக்கப்படும் நல்ல நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்து போய்விடும்.

இரு நாணய முறை கைவிடல்
இரு நாணயங்களை பயன்படுத்தும் நாட்டில் தங்க நாணயம் அதிக அளவு பயன்பாட்டிற்கு வந்தால் பாதிப்பு ஏதுமில்லை. ஆனால் நடந்தது என்னவென்றால் வெள்ளி நாணய பயன்பாடு அதிகரித்தது. இதனால் அச்சறுபட்ட பெருநாடுகள் இரு உலோக நாணய முறையை செயல்படுத்தாமல் விட்டது. 

இங்கிலாந்து மட்டும் இரு உலோக நாணய முறையை கடைபிடிக்க முன்வந்திருக்குமானால் ஏனைய நாடுகள் செம்மறி ஆடுகளை போன்று அதனை தொடர்ந்து இருக்கும். எனவே இரு நாணய முறை கைவிடபட வேண்டியதாக இருந்தது. இங்கிலாந்தின் பிடிவாதம் காரணமாக இரு உலோக நாணய திட்டம் நிறுவ இயலாமல் போனது.  இரட்டை உலோக முறை தான் தீர்வு என்று நம்பியிருந்த இந்தியாவின் நம்பிக்கைக்கு பலத்த அடிவிழுந்தது. மேலும் 1893 ஆம் ஆண்டு வெள்ளியின் மதிப்பில் 35% அளவுக்கு குறைந்து விட்டது. இந்தியாவிற்கு இது பெரும் அடியாக இருந்தது.

இந்தியாவிற்கு  தங்க திட்டத்தை கொண்டுவருதல் 

(I) 1872 Sir Richard Temple 
1872 இந்தியாவின் நிதியமைசராக இருந்த Sir Richard Temple இந்தியாவிற்கு தங்கத்தை கொண்டுவருவதற்க்கான திட்டத்தை அளித்தார். இவருக்கு முன்பிருந்த அமைச்சர்கள் இந்தியாவிற்கு பிரிட்டன் சவரனை (பிரிட்டன் நாணயத்தை) இந்திய நாணய முறையாக கொண்டு வர முயன்றனர்.  ஆனால் சர் டெம்பிள் இந்தியாவுக்கு என்று தனி தங்க நாணயம் மேகரா என்னும் பெயரில் வேண்டும் என்றார். ஏனெனில் இந்தியா நெடுங்காலமாக மெகார் என்னும் தங்க நாணயத்தையே பயன்படுத்தி வந்தது. அதனை சரியாக மதிப்பீடும் வந்தனர்.  ஆனால் பிரித்தானிய சவரன் நாணயத்தை இந்தியருக்கு மதிப்பிட தெரியாது.
சர் டெம்பிள் திட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ஒரே நாணய முறை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. 10 ரூபாய் வெள்ளி நாணயம் 120 குண்டுமணி (கிராம் சவரனுக்கு) 1/12 கழிவு நீங்கி 110 குண்டுமணி கிராம் சவரனுக்கு சமம் என்ற விகிதத்தை கொண்டுவந்தார். இவரது திட்டம் வெள்ளி நாணயம் வீழ்ச்சியடைவதற்கு முன்பு அளிக்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை 
(II) 1876 Colonel JT Smith Plane கர்னல் சுமித் திட்டம்
1876ல் வெள்ளியின் மதிப்பு திடீர் வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது இந்திய நாணய சாலை தலைவராக இருந்தவர் (Mint Master) கர்னல் சுமித் அவர்கள். கர்னல் சுமித் அவர்களின் திட்டம் வெள்ளியின் வீழ்ச்சியின் போது பெருமளவு ஆதரவு கிடைத்தது.
அவரது திட்டம் என்பது செயற்கையாக (Artificial) இந்தியாவின் ரூபாயை அதிக மதிப்பு உடையதாக்குவது. (Over value than the real value of the silver reserve). புழக்கத்தில் ஒரு தங்க நாணயம் கூட இல்லாமல், தங்கத்தின் இருப்பின் அடிப்படையில் காகித நாணயம் மற்றும் வெள்ளி நாணயத்தை வெளிடுதல் (Transition stage). தங்க நாணயங்களை வார்க்க முடியும் என்ற நிலை வரும் வரை வெள்ளி நாணயத்தையே பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு  வெள்ளி நாணயத்தை நிறுத்த வேண்டும். தங்க நாணய சாலையை திறக்க வேண்டும். அவரது திட்டம் என்பது வெள்ளி நாணயத்தை நிறுத்தாமல் தங்க நாணயத்தை நிறுவுதல். 
இந்திய வணிகத்தின் மூலம் கிடைக்கும் தங்கத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அளித்தார். இந்தியாவின் உள்நாட்டு வணிகம் (Domestic Trade) தொடர்ந்து அதிகரித்து வந்தது. 38 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு சராசரி 50 Lakhs ஸ்டெர்லிங் பவுண்ட் அளவுக்கு பெருகியது. அயல் நாட்டு வணிகத்தில் (Foreign Trade) 20  ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு சராசரி 40 Lakhs ஸ்டெர்லிங் பவுண்ட் அளவுக்கு பெருகியது.  எனவே நாணய புழக்கம் அதிகரித்தது. இந்த இரண்டவது திட்டத்தையும் செயல்படுத்தவில்லை 
1877- Sir William Muir சர் வில்லியம் மூர் 
சர் வில்லியம் மூர் கர்னல் சுமித்  திட்டத்தை ஏற்கவில்லை. வெள்ளி நாணய உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் அந்த நாணயம் சட்ட பூர்வமான தகுதியை இழக்கும். புதிய நாணயத்தை புகுத்துவதன் மூலம் ஏற்கனவே இருக்கும் நாணயம் அதன் சட்ட பூர்வ தகுதியை இழக்கும் என்று  இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை . 
இது தான் உண்மையான கரணம் என்றால் இந்த பரிந்துரையை உள்ளடக்கிய கர்னல் சுமித் திட்டத்தை ஏன் ஏற்கவில்லை என்ற வினாவை எழுப்புகிறார் பாபா சாகிப். உண்மையான கரணம் என்னவென்றால் நாணய குழப்பத்திற்கு வேறு கரணம் இருக்கிறது என்று அரசு கருதியது. சர் வில்லியம் மூர்க்கு சிந்தனை வறண்டு இருந்தது என்றுரைக்கிறார் பாபா சாகிப். மேலும் நாணய சீர்திருத்தத்திற்கு பரிந்துரைப்போருக்கு அரசு எச்சரிகை விட்டது.  அரசின் நிலைப்பாடு என்னவென்றால் தங்கத்தின் மதிப்பு உயர்வதால், தங்க திட்டம் உள்ள நாடுகளே சீர்திருத்தம் செய்யவேண்டும். இந்தியா வெள்ளி திட்டத்தை கொண்டது, எனவே நாணய சீர்திருத்தம் ஏதும் செய்யவேண்டியதில்லை என்று கருதியது. 
செலவாணியில் சீர்திருத்தம் செய்யாமல் இருப்பது தவறு என்றுரைக்கிறார்  பாபா சாகிப். போரில் ஒருவரின் வலிமை குறைவு மற்றவரின் வலிமையாக இருக்கும். ஆனால் செலாவணி என்பது அது ஒரு நாட்டின் வீழ்ச்சி. எனவே போதுமான நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் இந்தியாவை பேரா. நிக்கல்சன் கூறுகிறார் நான் இருக்கும் அறையில் துளைகள் ஏதும் இல்லை. கப்பல் முழுவ வாய்ப்பு இல்லை என்று நிம்மதியாக உறங்க செல்வவனோடு தான் ஒப்பிட முடியும்.
1878ல் மீண்டும் இந்திய அரசு செயல் படுத்த விரும்பிய திட்டத்தை அறிவித்தது  
01. முதன் முதலில் வெள்ளி நாணய உற்பத்தியை குறைக்கலாம் என்று முடிவெடுத்தது 
02. ரூபாயின் மதிப்புக்கு ஈடாத் தங்கமாக பரிமாற்றம் செய்தலை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டது 
03. தங்கம் வெள்ளி இவற்றின் ஏற்றம் இறக்கம் இவற்றை பொருட்படுத்தாமல் ரூபாய் ஸ்டெர்லிங் நாணயங்களுக்கு இடையே நிலையான மாற்று வீதத்தை (Fixed Exchange Ratio) நிறுவியது. 
04. ரூபாயை இரண்டு ஷில்லிங்க்கு சமமாக புழங்கவிட்டு, சிறுபகுதி தங்க நாணயங்களை புழக்கத்தில் விட்டு, தங்க திட்டத்தை செயல்படுத்து என்று முடிவு செய்தது.   
கர்னல் சுமித் திட்டம்  Vs சர் வில்லியம் மூர்
சுமித் அவர்களின் திட்டம் எளிமை, சிக்கனம், பாதுகாப்பு ஆகிய நலன்களை அடங்கியிருந்தது. எனினும் முழுமையான வடிவில் புகுத்தபட்டிருந்தால் தோல்வியை அடைந்திருப்போம் என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஏன் என்றால் உலகில் தங்கத்தின் இருப்பு குறைந்து கொண்டு வருகிறது. குறைந்து கொண்டு வரும்  தங்கத்தின் இருப்பில் இருந்து இந்தியாவிற்கு தேவையான தங்கத்தை பெறமுடியாது என்பதால் சுமித் அவர்களின் திட்டம் புகுத்தபட்டிருந்தால் தோல்வியை அடைந்திருப்போம் என்றுரைக்கிறார். 
அரசின் இந்த திட்டம் (Sir William Muir) வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என்றுரைக்கிறார். ஆனால் இந்த திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. குழு உறுப்பினர்கள் இந்த திட்ட முன்மொழிவுகளை செயற்கையாக தூக்கி நிறுத்த அரசு முனைவதாக கருதி குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செயற்கை நாணய கட்டுப்பாட்டு முறைக்கு பதிலாக இயற்க்கை நாணய கட்டுப்பாட்டை குழு ஏற்றது என்று குழு கருதியது.  இந்த வெள்ளை குப்பையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது.  
இந்தியாவின் தேக்க நிலை 
இரு உலோக நாணய முறை வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இந்தியா இருந்தது.  இரட்டை நாணய முறைதான் வரும் என்று நம்பி பல உறுதிமொழிகளை வாரிவழங்கியது இந்தியா. பன்னாட்டு நாணய முறை மாநாடு தோல்வியில் முடிந்தது. எனவே இந்தியா தங்க திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியாய் நின்றது. 
வெள்ளி திட்டத்தையே பின்பற்றுமாறு இந்தியாவை வலிந்து பணியவைத்தது. 1893 ஆம் ஆண்டு வெள்ளியின் மதிப்பில் 35% அளவுக்கு குறைந்து விட்டது. நாட்டில் ஏராளமான அளவில் ரூபாய் நாணயங்கள் பழக்கத்தில் விட்டமையால் சுமித் திட்டம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கூட மங்கிவிட்டது. 1878 ஆண்டிலே அத்திட்டம் நடைமுறை படுத்தபட்டியிருந்தால் புதிய நாணயங்கள் தங்கத்தில் உற்பத்தியாகிருந்தால் 1893 (15 வருடத்தில்) தாங்க நாணயங்கள் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்திருக்குமானால் தங்க திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும். தங்க திட்டத்தை ஏற்கனவே கொண்டுள்ள நாடுகளுக்கு இணையாக நிலைப்பாட்டை பெற்று இருக்க முடியும். மாறாக 1893 ஏராளமான வெள்ளி நாணயங்களை புழக்கத்திற்கு வரவிடப்பட்டதால் இனி வெள்ளி நாணய உற்பத்தியை நிறுத்தி ருபாய் நிலைப்பாட்டுக்கு கொண்டுவர பல பத்தாண்டுகள் தேவைப்படும். 
இந்த தேக்க நிலையில் இருந்து இந்தியா மீள கிட்ட தட்ட ஆறு திட்டங்கள் அளிக்கப்பட்டது.  இந்த திட்டம் எதையும் இந்தியா ஏற்கவில்லை. ஆனால் இந்த ஆறு திட்டங்களின் மைய நோக்கத்தை ஏற்றது. அதாவது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ருபாய் நாணயத்திற்கு பதிலாக தங்கத்தை பயன்படுத்தாமல் இந்தியவில் தங்கத்தை கொண்டுவருதல்.
மீண்டும் கர்னல் சுமித் திட்டம் ஹர்செல் குழு
எனவே கர்னல் சுமித் அவர்களின் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. வெள்ளி உற்பத்தியை நிறுத்தபடுவதற்கு முன் தங்க வெள்ளி உலோகங்கத்தின் மதிப்பு விகித அடிப்படையில் நாணய மாற்று விகிதம் நிறுவப்படவேண்டும். இந்த விகிதத்தை நிர்ணயம் செய்த பிறகு நாணய சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். தங்க நாணய உற்பத்தி தொடங்கவேண்டும். தொடர்ந்து எல்லா தொகைக்கும் தங்க நாணயங்கள் சட்ட பூர்வமாக நிறுவப்படவேண்டும். இந்த முன்மொழிகள் ஆய்வுக்கு வைக்கப்பட்டது. 
ஹர்செல் குழு
இக்குழு இத்திட்டத்திற்கு திருத்தம் ஒன்றையும் கூறியது. போதுமக்களிடையே வழங்குவதற்கான வெள்ளி காசு உற்பத்தி தான் நிறுத்தப்படுகிறது. அரசு பரிமாற்றத்தில் வெள்ளி நாணய உற்பத்தி தொடரும்.  இம்மாற்று விகிதம் 1 ரூபாய்க்கு 1 ஷில்லிங் 4 பொன்னாக இருக்கலாம். 1893 ஜூன் 26 ல் செயல்பட்டது. இந்திய நாணய வரலாற்றில் மிக முக்கிய கட்டமாக இருந்தது.
1893 சட்டம் (VIII)
01) 1870 ஆம் ஆண்டு நாணய சட்டத்தை இரத்து செய்தது. 02)  நாணய சாலைக்கு வரும் வெள்ளியணைத்தும் நாணயங்களாக வார்க்க நாணயசாலை அதிகாரிகளை பணித்தது. 03) பொது மக்கள் நாணய வற்புக்காக கொண்டுவரும் தங்கம் முழுவதையும் நாணய வார்ப்புக்காக பயன்படுத்த இச்சட்டம் வகைசெய்தது 04). 1882  காகித நாணய சட்டத்தில் சில பிரிவுகள் இரத்து செய்யப்பட்டது.
04.01-வெள்ளி நாணயத்திர்ற்கு பதிலாக காகித நாணயம் அச்சிட வேண்டும் என்ற சட்ட பிரிவு இரத்து செய்தது.
04.02 மொத்த காகித நாணய இருப்பில் 25% தங்க இருப்பு தேவை என வரையறுத்தது.
வங்கிகளில் பொது கடன் செலுத்தல்களுக்கு ஒரு சவரன் அரை சவரன் தங்க நாணயங்களை ஏற்றுக்கொள்ளும். ஒரு சவரன் 15 ரூபாய் அரை சவரன் 7 ரூபாய் 8 அனா.    
கருவுலத்திற்கு அதிக அளவில் தங்கம் வந்தால், அதற்க்கு ரூபாய் நோட்டுகளை தரவேண்டும் ஒரு சவரனுக்கு 15 ரூபாய் என்று நாணய சாலையில் கொடுக்கப்படும் தங்க நாணயம் அல்லது தங்க கட்டிகளுக்கு தங்க சாலை அதிகாரிகள் உடமையாளர்க்கு ஒரு பற்றுசீட்டு தருவார். எவ்வளவு ருபாய் நோட்டுகளை தரலாம் என்ற சான்றிதழை வழங்குவார். இந்த சான்றிதழை கல்கத்தா, கருவுலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து  காட்டி உரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் வெற்றி பெரும் முன்பே அதனை குழி தோண்டி புதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய மீண்டும் பாலி காடாக ஆகா மறுத்துவிட்டது. தங்க திட்டத்திற்கு மாறிவிடுவது  என்று இந்தியா உறுதியாய் இருந்தது.

மாற்று திட்டம்
இந்தியாவின் திட்டம் தங்க நாணய உற்பத்தி மூலம் தங்க நாணய முறையை நிறுவுதல். இந்தியாவிற்கு தங்க நாணய உற்பத்தியின்றி தங்க திட்டத்தை நிறுவுதல் என்னும்  மாற்று திட்டம் அளிக்கப்பட்டது. ஒன்று திரு ப்ரோபின் மற்றோன்று  திரு லிண்ட்சே. 

திரு ஹென்றி பிளார் தலைமையில் 1898 குழு ஒன்றை அமைத்தது. இந்திய அரசின் திட்டமே ஏற்றது என்று குழு பரிந்துரைத்தது

வெள்ளி, டிசம்பர் 29, 2017

வயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை

திரு தி இராசகோபாலன் எழுதிய போதி மாதவர் என்ற நூலில் வயலக்காவூர் புத்தர் சிலை என்று குறிப்பிட்டிருந்தார். வயலக்காவூர்  சிலையை மார்ச் 2016 சென்று பார்த்தேன். அச்சிலை புத்தர் சிலையா அல்லது தீர்தங்கர் சிலையா என்ற ஐயம் எழுந்தது. தெளிவு பெற ஐயா ஜம்புலிங்கம் அவர்களின் உதவியை நாடினேன். 

ஐயா அவர்களின் பதிலுரைக்கு பின்  அங்கம்பாக்கம் சிலையும் பகவன் புத்தர் சிலை என்றுணர்ந்தேன். ஆனால் வலைபதிவில் மாற்றம் செய்யவில்லை. திரு மகாத்மா செல்வபாண்டியன் (அரும்பாவூர்) அவர்கள் இரு வாரத்திற்கு முன் அங்கம் பக்கம் சிலை பகவன் புத்தர் சிலையில்லை என்றுரைத்தார். அவர் அளித்த கூடுதல் விவரம் என்னவென்றால் உடல்கூறு மூலம் (Anatomy) புத்தரா அல்லது தீர்த்தங்கரா என்று அடையாளப்படுத்தலாம் என்று. உடல்கூறு அடிப்படையில் கட்டுடல் (Fittest Body)  கொண்டவர் பகவன் புத்தர்.

சிலை அமைவிடம்: வயலக்காவூர், நெய்யாடு பாக்கம், வாலஜாபாத் வட்டம், காஞ்சிவரம்  மாவட்டம். 

காஞ்சிவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வயக்காவூருக்கு பேருந்து இருக்கிறது. ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. அல்லது வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் சென்று அங்கிருந்து மூன்று கி.மீ தொலைவு நடந்து செல்லவேண்டும் (ஆற்றங்கரை அடுத்துள்ளது வயலக்காவுர்). வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் செல்ல அடிக்கடி  பேருந்து உள்ளது. 

திரு வேங்கடசாமி செட்டியார் (11-09-1906 to 19-04-1977) வயலக்காவயலக்காவூர் ஆற்றங்கரை அருகில் பாதுகாப்பின்றி இருந்த சிலையை தமது வயலுக்கு எடுத்து சென்றுவிட்டார் என்றுரைத்தார் திரு வீரராகவன் (80 வயது). இச்சிலைக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற தம் கனவை அவரது மகன் வேணு கோபால் செட்டியார் (03-06-1942 to 02-11-2013) அவராலும் செயல்படுத்த முடியவில்லை. தற்பொழுது இச்சிலைக்கு அவரின் வயலில் தம் பேரன் இலட்சுமிபதி அவர்களின் பாதுகாப்பில் உள்ளது. 

சிலையமைப்பு 
கை சிந்தனை கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, சிலை உயரம்  2  1/4 அடி. 

திங்கள், நவம்பர் 20, 2017

ரூபாயின் பிரச்சனை -பாபா சாகிப்


1923ல் The Problem of the Rupee – Its origin and its solution ரூபாயின் பிரச்சனை தோற்றமும்  தீர்வும் என்ற ஆய்வு கட்டுரைக்கு பாபா சாகிப்புக்கு  லண்டன் பொருளாதார கல்லூரி Doctor of Science பட்டத்தை அளித்தது. இந்த ஆய்வு  கட்டுரையை நூலக பி எஸ் கிங் அன் கம்பெனி வெளியிட்டது. இந்நூல் முழுவதும் விற்கப்பட்டுவிட்டது. மேலும் இந்நூலின் தேவை அதிகமாக இருந்தது என்றுரைக்கிறார் பாபா சாகிப். எனவே ரூபாயின் பிரச்சனை என்ற ஆய்வில் 1923 வரை உள்ள இந்திய நாணயத்தின் வரலாற்று ஆய்வை அளித்ததை, இரண்டவது பதிப்பில் இந்திய நாணயத்தின் வரலாற்று ஆய்வை 1924லிருந்து அன்றுவரை (1947) அளித்தார். ரூபாயின் பிரச்சனை என்ற பெயரை மாற்றி  இந்திய  நாணயம் மற்றும் வாங்கியின் வரலாறு History of Indian Currency and Banking என்று வெளியிட்டார்.

ரூபாயின் பிரச்சனை என்ற நூலின் தேவை அதிகரித்தது ஏன்?
பாபா சாகிப் எழுதிய ஆய்வு கட்டுரைகளில் இந்த பொருளாதார ஆய்வு கட்டுரை மட்டும் தேவையை அதிகரித்ததற்க்கு காரணம்.    
01. நம் நாட்டின் பொருளாதாரத்தை  பற்றி அறிய  வேண்டுமென்றால் நமக்கு கிடைக்கும் அறிஞர்கள் அனைவரும் வெளி நாட்டு அறிஞர்கள் தான். இந்த சூழ்நிலையில் நம் நாட்டில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர் பாபா சாகிப். 
பொருளாதாரத்திற்க்காக 1998 நோபல் பரிசும் 1999 பாரத் ரத்னாவும் பெற்ற Dr. அமர்த்தியா சென் சொல்கிறார் என் பொருளாதாரத்தின் தந்தை Dr.Ambedkar, பொருளாதாரத்தில் அவரது பங்களிப்பு வியக்கத்தக்கது மற்றும் எப்பொழுதும் நினைவு கூறப்படுவது என்று . 
02. இந்திய நாணயத்தில் (Indian Currency) 1893 சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. சீர்திருத்தம் கொண்டுவந்ததற்கான சூழல் என்ன என்று எந்த அறிஞரும் சொல்லவில்லை. 1800 இருந்து சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட 1893 வரை உள்ள 93 ஆண்டுகளை பாபா சாகிப் புறக்கணிக்கப்பட்ட காலம் (Negated Period) என்று கூறுகிறார். இந்த 93  ஆண்டு இந்திய செலாவணி பற்றி ஆய்வு செய்து இருக்கிறார். 
03. இந்த காரணங்கள் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இந்திய செலாவணியினால் ஏற்பட்ட பொருளாத சீர்கேட்டை சரி செய்ய பாபா சாகிப்பின் ஆய்வு நூல் தேவையாய் இருந்தது. ராயல் குழு (Royal Commission on Indian Currency and Finance) இருந்த ஒவ்வொரு உறுப்பினரும் பாபா சகிப்பின் Problem of Rupee என்ற நூலை வைத்து இருந்தனர்.
ராயல் குழு    
இந்திய பிரிடிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இந்திய நாணயம் வெள்ளி நாணயமாக இருந்தபோது, பிரிடிஷ் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து இந்தியாவிற்கு  இறக்குமதி செய்யும்பொழுது அவர்களுக்கு தங்க நாணயத்தில் மதிப்பிட்டு செலுத்த வேண்டி இருந்தது. ஏனெனில் இங்கிலாந்து நாட்டின் நாணயம் தங்க நாணயமாக இருந்தது. அப்படி கணக்கிடப்படும் போது அதிகப்படியான பரிமாற்று விகிதம் (Overvalued Exchange Rate) கணக்கிடப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் ஏற்றுமதியாளர்கள் பெரும் பயனடைந்தனர். இந்தியர்கள் பெரும் நட்டத்தை அடைந்தனர். இது பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கும் இந்தியா வணிகருக்கும் இடையே மிகப்பெரிய மோதலை உருவாக்கியது. இந்த பிரசாணைக்கு தீர்வு காண பிரிட்டிஷ் அரசு ராயல் குழு ஒன்றை 1925ல் அமைத்தது. ராயல் குழு என்ற பெயரில் வந்த ஹில்டன் குழு (Hilton Young Commission) க்கு பாபா சாகிப் இந்த சிக்கலுக்கு தீர்வைஅளித்தார். பாபா சகிப்பின் வழிகாட்டுதல், வேலை செய்யும் முறை, கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)  உருவாக்கப்பட்டது. 

இந்திய ரிசர்வ் வங்கி
இன்று இயங்கும் RBI பாபா சகிப்பு அளித்த வழிகாட்டுதல் மூலம் உருவாக்கப்பட்டதே. ஆனால் RBIயும், பொருளாதார மேதைகளும், பொருளாதார சீர்கேற்றிற்காக பிரிட்டிஷ் உடன் போராடிய வணிகர்களும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக RBI உருவாக காரணமாக இருந்த பாபா சாகிப்பை மறைக்கின்றனர்.  RBI உருவாக காரணமாக இருந்த இந்திய நாணய சீர்திருத்தவாதி (Reformer of Indian Currency) பாபா சாகிப்பின் படத்தை ருபாய் நோட்டுகளில் அசிட்டாமல் RBI உருவாவதற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத காந்தியை அனைத்து நோட்டுகளிலும் அச்சிடபட்டு வெளியிடப்படுகிறது.

நாம் நினைக்கலாம் பாபா சாகிப்பின் ஒளிப்படம் பதித்த நாணயங்களை RBI  வெளியிட்டுள்ளது என்று. பாபா சாகிப்பின் 100வது பிறந்தநாளுக்களாக ஒரு ருபாய் நாணயம் வெளியிடப்பட்டது. பின்னர் பாபா சாகிப்பின் 125 வது பிறந்தநாளுக்களாக 10 ருபாய் நாணயம் வெளியிடப்பட்டது.

நாணய வெளியிடும் உரிமை RBIக்கு இல்லை. நாணய வெளியிடும் உரிமை  இந்திய அரசுக்கு (Government of India) மட்டுமே உண்டு. நாணயம் பல தலைவர்களை நினைவுகூரவும், பல நிகழ்வுகளை நினைவுகூரவும் நாணயத்தில் தலைவர்களின் உருவங்களும் வரலாற்று நிகழ்வுகளும் வெளிடப்படுகிறது. உதாரணத்திற்கு  நேரு, காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரா போஸ், லால் பகதூர் சாஸ்திரி, சுவாமி விவேகானந்த, பால கங்கா திலகர், ராஜேந்திர பிரசாத் என நீட்டிக்கொண்டே போகலாம். எனவே நாணய வெளியிடு என்பது  இதற்க்கு முன் குறிப்பிட்டவர்களில் பாபா சாகிப்பும்  ஒருவர் அவ்வளவு தான்.

 

நாணயத்திற்கும் ருபாய் நோட்டுக்கும்  உள்ள  வேறுபாடுகள் 
01.நாணயம் (Coins) என்பது சொத்து. அது நாணயத்தை வைத்து இருப்போரின் சொத்து.
ஆனால் ருபாய் நோட்டு என்பது பொறுப்பு (Liability). அது வைத்து இருப்பவரின் பொறுப்பு இல்லை அது RBIயின்  பொறுப்பு. அதனால் தான் ருபாய் நோட்டில் I promise to pay the bearer என்ற வார்த்தை உள்ளது. 
02. நாணயம் என்பது அதன் மதிப்பிற்கு உரிய பொருட்களை (உலோகத்தை) பெற்று உள்ளது. ருபாய் நோட்டு என்பது காகிதம். அதற்குரிய மதிப்பை RBIயிடம் உள்ளது. 
RBI வெளியிடும் பணத்தாள் 
RBI நோட்டுகளை இரண்டு வகையாக பிரித்து பார்க்கலாம் ஒன்று சுதந்திரத்திற்கு முன் RBI நோட்டு சுதந்திரத்திற்கு பின் RBI நோட்டு என்று. சுதந்திரத்திற்கு முன் ஜார்ஜ் VI (George) அவரின் உருவம் பதித்து நோட்டுகள் வந்தது, சுதந்திரத்திற்கு பின் ஜார்ஜ் VI அவரின் உருவத்தை நீக்கி விட்டு இந்திய தேசிய சின்னம் (Ashoka Lion Capital) பதித்து நோட்டுகள் வந்தது. Ashoka Lion Capitalலை தேசிய சின்னமாக கொண்டுவந்தவர் பாபா சாகிப். காந்தியின் நூறாவது பிறந்த நாள் 1969 வந்ததும், காந்தியின் படம் நோட்டின் பின்புறம் பதியப்பட்டது. 1996 இருந்து பின் பக்கம் இருந்தவர் முன் பக்கம் தோன்றி இன்றுவரை மாற்ற முடியவைத்தவராக Monopoly யாக இருக்கிறார்.
RBI = Problem of Rupee, Its origin and  solution by Dr.Ambedkar in 1923 + Evidence before the Royal commission  by Dr.Ambedkar in 1926.

நாணயத்தின் தேவை  
பண்டைய இந்தியா பல்வேறு குறு நில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. பண்ட மாற்று முறையில் இயங்கியது. கால்நடைகளும், தானியங்களும் தான் பண்டமாற்று பொருளாக இருந்தது. உள் நாட்டு வணிகம் பண்ட மாற்று முறையில் பெரிய சிக்கல் எதையும் உருவாக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு வணிகம் என்பது பண்ட மாற்று முறையில் இயங்குவதில் பெரும் சிக்கலாக இருந்தது. அதைப்போன்று குறு நில மன்னர்களின் ஆட்சி மாறி பேரரசு ஆட்சி மாறியபொழுது பண்ட மாற்று முறையில் இயங்குவதில் பெரும் சிக்கலாக இருந்தது. எனவே நாணயத்தின் தேவை ஏற்பட்டது. 

முத்திரை நாணயங்கள்
வணிக தேவையை நிறைவேற்ற முத்திரை நாணயங்கள் (Punched Mark Coins) உருவானது. இந்த நாணயங்களை அரசும் வணிக குழுவும் பயன்படுத்தியது. முத்திரை நாணயங்கள் பெதுமக்களின் பயன்பாட்டில் இல்லை. பெதுமக்கள் பண்ட மாற்று முறையில் தம் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர். அதாவது முத்திரை நாணயங்கள் வணிகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. முத்திரை நாணயங்களை முதன் முதல் வெளியிட்டது  மகத பேரரசன் அஜசசத்ரு 552 - 520 BC. ஒரு புறம் மட்டும் முத்திரை சின்னங்கள் இருக்கும். இதனை முன் புறம் என்று கொள்ளலாம். மௌரிய பேரரசு வீழ்ச்சிக்கு பிறகு முத்திரை நாணயங்கள் நிறுத்தப்பட்டது. இந்த முத்திரை நாணயங்கள் முதன்மையாக வெள்ளி மற்றும் செப்பு  நாணயங்களை கொண்டிருந்தது. 

இந்தியாவின் முதல் நாணயம்
குஷானர்கள் முதன் முதலில் தங்க காசுகளை வெளியிட்டவர்கள்.  (வீமா காட்பீஸ்). நம் நாட்டில் முதன் முதல் பகவன் புத்தரின் உருவம் பதித்த நாணயம் வெளியிட்டவர் கனிஸ்கர். 

இயல் 1 இரட்டை உலோக நாணய மதிப்பில் இருந்து வெள்ளி நாணய மதிப்பீடு

உலக நாடுகள் பெரும்பான்மையாக பயன்படுத்திய நாணயங்கள் தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள்.
Single Standard ஒற்றரை தர மதிப்பு : தங்க நாணயத்தை அல்லது வெள்ளி  நாணயத்தை பயன்பாட்டில் கொண்டிருந்தால் Single Standard or Monometallism அல்லது ஒற்றரை தர மதிப்பை கொண்டவை என்று பெயர்.  தங்க நாணயங்கள் தரத்தை கொண்ட நாடுகள் Gold Standard பின்பற்றும் நாடுகள் என்றும் வெள்ளி நாணயங்கள் தரத்தை கொண்ட நாடுகள் Silver Standard பின்பற்றும் நாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று Silver Standardஐ பின்பற்றும் நாடுகள் ஏதும் இல்லை.

Double Standard இரட்டை தர மதிப்பு : தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்தையும் பயன்பாட்டில் கொண்டிருந்தால் Double Standard அல்லது Bimetallism அல்லது இரட்டை தர மதிப்பை கொண்டவை என்று பெயர். தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் இரண்டும் ஒரே மதிப்பை கொண்டது இல்லை. தங்கத்தின் மதிப்பு அதிகம் எனவே இவ்விரு நாணயத்திற்கும் ஒரு விகித (Ratio) தொடர்பை நிர்ணயம் செய்து இருக்கவேண்டும்.

முகலாயர்களின் பேரரசு செர்ஷா சூரி ஆட்சி
செர்ஷா சூரி ஆட்சிக்கு முன் நம் நாடு தங்க நாணயங்களை பயன்பாட்டில் பெருமளவு கொண்டிருந்தது. தங்க நாணயங்கள் பகோடா, வராகன் என்ற பெயரில் பயன்பாட்டில் இருந்தது. 
01. செர்ஷா சூரி தான் முதன் முதலில் வெள்ளி நாணயத்தை நம் நாட்டில் அறிமுகப்படுத்தினான். செர்ஷா சூரி ஆட்சியில் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் இரண்டும் பயன்பாட்டில் இருந்தது. தங்க நாணயங்கள் மெகர் எனவும் வெள்ளி ருபாய் என்றும் அழைக்கப்பட்டது. வெள்ளி நாணயங்களை பெரிய அளவில் பயன்படுத்தினர். 
02. தங்கத்தின் மதிப்பு அதிகம் எனவே இவ்விரு நாணயத்திற்கும்  ஒரு விகித (Ratio) தொடர்பை நிர்ணயம் செய்து இருக்கவேண்டும்.  அப்படி செய்து இருந்தால் Single Standard  என்பது  Double Standard ஆகா மாறியிருக்கும். ஆனால் அவர்கள் இந்த இரு நாணயத்திற்கும் விகிதம் எதையும்  பின்பற்றவில்லை.
03. தங்க நாணயம் வெள்ளி நாணயம் இரண்டும் ஒரே எடை அளவில் அதாவது 175 கிராம் (22 சவரன்) வைத்திருந்தனர். ஒரே எடை மற்றும் ஒரே மதிப்பில் இந்த இரு நாணயத்தையும் பயன்பாட்டில் வைத்து இருந்ததால் இது Double Standard இல்லை Parallel Standard  இணை மதிப்பை கொண்டது என்கிறார் ஜோவன்ஸ். 
04.தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையோ விகிதம் பயன்படுத்தவில்லை என்றாலும் செப்பு Copper Coins நாணயத்திற்கு விகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுரைக்கிறார் பாபா சாகிப்.  
05. காசுகளை அச்சடித்து வெளியிடும் உரிமை அரசர்களுடையது என்று கருதினர். அதனை பொறுப்புடன் செய்தனர். நாணயத்தில் ஏதாவது குறை இருந்தால் உடனே அது சரி செய்தனர்.    
06. பல்வேறு நாணய சாலைகளை (Mint) உருவாக்கினார். பல்வேறு நாணய சாலைகளை உருவாக்கினாலும் அவைகள் வெளியிடும் நாணயம் ஒரே தரத்துடன்  வேறுபாடு இன்றி இருந்தது.    
07. ஆனால் தென்னிந்தியாவை பொறுத்த வரை பண்டைய காலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி வரை  தங்க நாணயத்தை பயன்படுத்தியது. ஏன் எனில் முஸ்லீம்களின் ஆட்சி தென்னிந்தியாவில் வலுவாக இல்லை.  
08. செர்ஷா சூரிக்கு பின் வந்தர்களும் இந்த நடைமுறையை பின்பற்றினர்.  எனவே முகமதியர்களின் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து இருந்தது. வாங்கி தொழில்கள் சிறப்பாக இருந்தது.
முகலாயர்களின் பேரரசு பல தனியராக சீர்குலைந்த போது இந்திய நாணயம்
அதிகாரம் பெற விரும்புவோர் ஆசைப்படும் முதல் உரிமை நாணயம் அச்சிடும் உரிமை. எனவே நாணயம் வெளியிடும் உரிமை அரசரிடம் இருந்து அரசியல் சூதாடிகளின் உரிமையானது. எல்லா இடங்களிலும் நாணய சாலை முழுமையாக செயல்பட்டது. பல்வேறு பட்ட நாணயங்கள் தோன்றியது. பணத்தாசை பிடித்ததால் இஸ்லாமியர் பயன்படுத்திய மூல தரத்தை பயன்படுத்தவில்லை. தன்னால் தயாரித்த நாணயங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதால் தங்கள் விரும்பியதை எல்லாம் செய்தனர். எனவே பல்வேறு நாணய சாலைகள் (Mint) தொழில் கூட்டங்கள் ஆனது.

நாணயத்தின் அடக்கம் (Cost) அந்த அளவுக்கு (Weight) பொய்யாக்கப்பட்டதால் நாணயங்கள் வணிக சரக்காக மாறியது. நாணயம் என்ற மதிப்பை இழந்ததது. தரக்குறைவான நாணயத்தின் அதன் உண்மையான மதிப்பை அறிய வேண்டியது அவசியமானது. இதனால் ஷ்ராப் என்ற வர்க்கம் தோன்ற காரணமாக இருந்தது. ஏழைகளும் அறியாமையில் உள்ளவர்களும் ஏமாற்றப்பட்டனர். இஸ்லாமியர் ஆட்சி மறைவுக்கு பின்னர் நாணயத்தின் மதிப்பும் மறைந்தது  

இந்திய நாணயம் பிரிட்டிஷ் ஆட்சியில்
18ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. கெட்ட நாணயத்தை நல்ல நாணயமாக மற்ற வேண்டிய கடமை கிழக்கிந்திய கம்பெனியின்  தோள்களில் விழுந்தது.

கிழக்கிந்திய கம்பெனி செய்த சீர்திருத்தங்கள் 
நிர்வாக காரணங்களுக்காக மூன்று மாகாணங்களாக இந்தியாவை பிரித்தனர். 01.சென்னை மாகாணம் 02.வங்காளம் 03.பம்பாய் என்று.
01. இஸ்லாமியர்கள் பயன்படுத்திய இணை தரத்தை  தடை செய்தனர் (Parallel Standard). ஒரு தங்க நாணயம் எத்தனை வெள்ளி நாணயத்திற்கு சமம் என்று கணக்கிடபட்டது. இதனால் இணை மதிப்பு  மறைந்து இரட்டை மதிப்பு உருவானது . 
02.ஒரு கிராம் தங்கம் 14 கிராம் வெள்ளிக்கு சமம் என்று நிர்ணயித்தனர். சட்ட ரீதியான விகிதமும் சந்தை விகிதமும் பெரிதும் வேறுபட்டதால் இந்த (Double Standard) இரட்டை தர மதிப்பு தோல்வியில் முடிந்தது. மீண்டும் நாணயத்தின் எடையையும் அதன் விகிதத்தையும் மாற்றி (1:16) வெளியிடப்பட்டது (1769). இரண்டவது முறையும் படு தோல்வியை அடைந்தது. மூன்றாவது முறையும் (1793) தோல்வியை தழுவியது. மூன்று மாகாணத்தில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை.   
இரட்டை மதிப்பு ஏன் தோல்வியை தழுவியது? 
மூன்று மாகாணங்களுக்கு இடையே நிதி சுதந்திரம் இல்லை. மூன்று மாகாணங்களுக்கு இடையே  ஒரு பொதுவான செலவாணி இல்லை. ஒரு மாகாணத்தின் நாணயத்தை மற்ற மாகாணத்தில் சட்ட ரீதியான நாணயமகா உபயோகபடுத்த முடியவில்லை.
உலகங்களின் ஏற்ற இறக்கத்தை தடுக்க முடியாது எனவே நாட்டமின்றி இரு நாணயங்களும் பயன்பாட்டில் இருக்க முடியாது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. எனவே தங்க நாணயத்தை நிறுத்தி வெள்ளி நாணயத்திற்க்கு சென்றனர்.  

தங்க நாணயத்தை நிறுத்தி வெள்ளி நாணயத்திற்க்கு  செல்லுதல் (From Double Standard to Single Standard -Silver Standard)

01. ஒற்றை உலோக நாணய முறைக்கு லார்டு விவர்பூல் அவர்களின் கருத்தை கேட்டப்பட்டது. அவர் தங்க ஒற்றை நாணய முறையை இந்தியாவிற்கு பரிந்துரைத்தார். உலக முழுவதிலும் நிலவிய நடைமுறை வெள்ளி நாணயமகா இருந்தது.  வெள்ளி நாணயத்தை பெருமளவில் பல நாடுகள் பயன்படுத்தி கொண்டு வந்தது. பொது மக்களின் முன்னுரிமை வெள்ளிக்கு அளித்தனர். எனவே லார்டு விவர்பூல் அவர்களின் பரிந்துரையை நடைமுறை படுத்தாமல் வெள்ளி நாணயத்தை நடைமுறை படுத்தினர்.

02.இந்தியா முழுவதும் கணக்கிடும் நாணயமாக வெள்ளி நாணயத்தை கொண்டுவந்தனர். தங்க நாணய பயன்பாட்டை தடை செய்தனர்.

03.வெள்ளி நாணயத்தின் எடையை 180 கிராம் என்றும் கழிவு Wastage 15 கிராம் (1:12) நிகர எடை 165 கிராம் என்றும் நிர்ணயத்தினர். இந்த 180 கிராம் என்பது இஸ்லாமியர்கள் முதன் முதலில் பயன்படுத்திய மூல அளவு. எனவே பழைய மூல அளவையே மீண்டும் கொண்டுவந்தனர்.

04. ஒரு தங்க மோகருக்கு சமமாக 15 வெள்ளி ரூபாய் என அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பினால் தங்கம் ஏதும் அரசுக்கு வரவில்லை. கரணம் தங்கத்தின் மதிப்பை மிக குறைவாக மதிப்பிட்டதால் யாரும் இதனை விரும்வில்லை. ஆஸ்திரியாவிலும் கலிபோர்னியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் நிலைமை மாறியது. தங்கம் இரு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் 15 ரூபாய் என்பது உயர் மதிப்பானது. எனவே தங்கம் அரசுக்கு அதிக அளவில் வந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானர். நிலைமையை புரிந்து கொண்டு 1841ல் வெளியிட்ட பிரகடனத்தை 1852 ல் திரும்ப பெற்றது.

05.நாட்டின் வெள்ளி நாணயத்தின் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு போதுமான வெள்ளி இல்லை. மேலும் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வந்தது. வெளியின்  தேவை அதிகரிக்க இரண்டு  காரணங்கள் இருந்தது.
R1. பண்ட மாற்று பொருளாதாரம் பண மாற்று பொருளாதாரமாக மாறியது.
01. பிரிட்டிஷ் வருமானம் எல்லாம் பணமாக செலுத்தபட்டது  02. உள் நாட்டு ராஜாக்களால் பெருமளவு பண்டமாற்று முறையில் செலுத்தபட்டதை பணமாக  செலுத்தபட்டது 03. ராணுவத்திற்க்கு சம்பளம் பணமாக அளிக்கப்பட்டது- 04. இராணுவ செலவு பணமாக அளிக்கப்பட்டது 05.  விவசாயிகளுக்கு கூலி பண்டத்திற்க்கு பதில் பணமாக அளிக்கப்பட்டது. 06.தொழிலாளிளுக்கு சம்பளம் பண்டத்திற்க்கு பதில் பணமாக அளிக்கப்பட்டது. 07. போலீஸ், அதிகாரிளுக்கு சம்பளம் பணமாக கொடுக்கப்பட்டது. 08 வரி, கடன், வட்டி எல்லாம் பணமாக மாறியது. பணத்தை தவிர வேறு எதையும் பெற முடியாது என்ற நிலைமை உருவாக்கியது.  இதனால் பணத்தின் தேவை அதிகமானது.
R2 இந்தியா மக்களிடம்  ஏற்பட்ட பொருளாதார மாற்றம் வணிகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி. 
(இங்கிலாந்து) தன் நாட்டின் உற்பத்தி பொருட்களை பெயரளவுக்கு 2.5% இறக்குமதி தீர்வையில் (Import Duty)  பெறும்படி இந்தியாவை கட்டாயப்படுத்தியது. அதே சமயம் இந்தியாவில் உற்பத்தியான அத்தகைய பொருள்களுக்கு ஏற்றுமதி வரி 50%லிருந்து 500%விதித்து. இங்கிலாந்தை போன்று இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு இங்கிலாந்திற்கு சாதகமாகவும் (Favourable), இந்தியாவிற்கு பாதகமாகவும் கொள்கையை கையாண்டது. இந்த அநீதிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது .
1842  ஏற்றுமதி இறக்குமதி வரி விதிப்பில் சீர்திருத்தம் கொண்டுவந்தனர். அதன் படி சர் ராபர்ட் பீல் குறைந்த தீர்வையில் (Duty) இந்திய பொருள்களை அனுமதித்தார். கப்பல் வணிக சட்டமும் இரத்தானது.  இதனால் இந்திய வணிகம் விரிவடைந்தது, இந்திய உற்பத்தி பொருள்களின் தேவை அதிகரித்தது.
1854 கிரிமிய யுத்தம் ரஷ்ய பொருள்களின் வரத்து துண்டித்தது. அந்த இடத்தை இந்திய பிடித்தது. 1853 ஐரோப்பா முழுவதும் பட்டு உற்பத்தியில் தோல்வி அடைந்தது இது இந்திய பாட்டுக்கு தேவையை அதிகரித்தது   
06.இந்திய எந்த உயர் உலோகங்களையும் தயாரிக்க வில்லை. வெள்ளியின் இறக்குமதி பெருமளவில் இருந்தது. அதே போன்று இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியை நாணயமாக்குவதும் பெரிய அளவில் இருந்தது. அப்படி இருந்தும் பணம் நெருக்கடி ஏற்பட்டது. அது ஏன் என்று விளக்குகிறார் Mr.காசல்ஸ் .
அச்சிட்டு வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் எல்லாம் அப்படியே வெள்ளி நாணய பரிமாற்றத்துக்கு பயன்பட்டு இருந்தால் பண முடக்கம் ஏற்பட்டு இருக்காது.  நாணய சாலையில் கஷ்டப்பட்டு உருக்கி அதிக பொறுமையுடன் திறமையுடன் ஒருவர் நாணயமாக உற்பத்தி செய்யும் பொழுது வெள்ளி தட்டாரும், நகை வியாபாரியும் அதை மிக விரையாக வளையங்களாக வடித்து விடுகின்றனர்.
எனவே இந்த பிரச்சனையை தீர்க்க இருந்த ஒரே வழி பணம் சம்பந்தப்பட்ட தேவைக்கும் பணம் சாரதா தேவைக்கும் போதுமான அளவு வெள்ளியை இறக்குமதி செய்வது தான். ஆனால் வெள்ளியின்  இறக்குமதி ஏற்கனவே உச்ச கட்டத்தில் இருந்தது. வெள்ளி உலக உற்பத்தியில் பெருமளவு இந்தியா எடுத்துக்கொண்டது
07. இந்த சிக்கலை தீர்க்க பத்திரங்கள் (Bond) வெளியிடப்பட்டது. அவையும் தோல்வியில் முடிந்தது காரணம் 12 மாதங்களுக்கு மேல் அவை பெறக்கூடாது எங்கே வாங்கப்படுகிறதோ அங்கே தான் பத்திரத்தை கொடுக்கவேண்டி இருந்தது. இதனால் கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக இருந்தது வட்டியின் காலம் குறைவாக இருந்தது.

08. இந்த பிரச்சனையை தீர்க்க முடியாததால் மக்கள் கேள்வி கேட்டனர்.  ஒற்றை உலோக செலாவணி வெள்ளிக்கு பதில் ஒற்றை உலோக செலவாணி தங்கத்திற்கு மாறவேண்டி. 

09.இந்த தங்கத்திற்க்கான கிளர்ச்சிக்கு எதிர் தாக்குதலாக இருந்தது திரு வில்சன் அவர்களால் முதன் முதலில் பரிந்துரைக்க பட்ட காகித நாணயம். ஆனால் திரு லியாவ் இந்திய செலாவணியில்  இருந்து தங்கத்தை ஒதுக்குவது என்பது காட்டுமிராண்டித்தனம் என்றுரைத்தார். 
11. திரு வில்சன் இறந்ததால் அதனை செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்தார் திரு லியாவ். காகித நாணயம் வெளியிட்டனர். அதுவும் பயனளிக்கவில்லை. எனவே மொத்த முழு பளுவும் வெள்ளியின்  மேல் விழுந்தது. 
12. தங்க நாணயம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது.
13. திரு சார்லஸ் டிரிவெலின் காகித நாணயத்தில் இருந்த பலவீனமனா அம்சத்தை கண்டுபிடித்தார்.தங்கத்தை இந்தியாவில் பின் கதவு வழியாக அனுமதிப்பதற்கு பதில் அது இந்தியாவின் நாணய மதிப்பாக மாற்றவேண்டும் என்றார். காகித நோட்டுகளை பொன் அல்லது வெள்ளி கட்டிகளுக்கு நாணய பரிமாற்றம் செய்யக்கூடாது  என்று பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது

இயல் 2 வெள்ளி நாணய மதிப்பும் அதன் நாணய சம மதிப்பில்குலைவும்

எல்லா நாடுகளிலும் நாணய சாலையில் இருந்து வெளிவரும் நாணயங்கள் சட்டத்திற்கு ஏற்றதாக என்பதை உறுதி செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.  அந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக நாணயங்கள் குறைபாடு உடைய இருந்தால் அந்த நாணயங்கள் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் இது போன்று எந்த அமைப்பையும் இந்தியாவில் நாணய தரத்தை பார்க்க அமைக்கவில்லை. எனவே நாணய சாலை சுதந்திரமாக இந்தியாவில் இயங்கியது.

இது போன்ற சுதந்திரத்தை காகித நாணயத்திற்கு அளிக்க முடியாது  என்பதால் இந்த சுதந்திரம் காகித நாணயங்களுக்கு இல்லை. இந்தியாவை நிர்வாக காரணங்களுக்காக மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மாகாணங்களில் 01. Bank of Bengal 02. Bank of Bombay and 03.Bank of Madras இயங்கியது. இவைகள் தான் நோட்டுகளை வெளியிடும் உரிமையை கொண்டிருந்தது.

இந்த காகித நோட்டுகளை வெளியிடும் போது அதில் வெளியிடும் வட்டாரத்தின் (Circle) வட்டாரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இது ஏன் என்றால் இந்த நோட்டுகளை அதை வெளியிட்ட வட்டத்தின் சொந்த counterல் தான் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த நோட்டுகளை அந்த வட்டாரத்திற்கு வெளியே பணமாக மாற்றிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு வட்டாரமும் பலஉப வட்டாரங்களை (Sub-Circle) கொண்டிருக்கும். ஒரு வட்டாரத்தின் நோட்டை அதன் உபவட்டாரத்திலும் மாற்ற முடியாது. ஆனால் ஒரு உப வட்டாரம் வெளியிடும் நோட்டுகளை அந்த உப வட்டாரத்திலும், அந்த வட்டாரத்தில் உள்ள பிற வட்டாரத்திலும், ஏன் அதன் வட்டாரத்திலும் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த வட்டரங்கள் மற்றும் உப வட்டரங்களுக்கு ஏற்படும் பண தேவைக்கு ஏற்ப நிதியை அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. ஒரு வட்டாரத்தின் எல்லைக்கும் மற்றோரு வட்டாரத்தின் எல்லைக்கும் 700 மைல்கல் தூரம் இருந்தது. பணத்தை கொடுக்க இங்கும் அங்கும் நிதியை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த மையங்களுக்கு விரையாக அனுப்பி வைக்க வசதிகள் மிக குறைவாக இருந்தது. எல்லா இடங்களிலும் பணமாக மாற்றக்கூடிய ஏற்பாடு இல்லை. மேலும் பணமாக மாற்றிக்கொள்ளும் மையங்கள் சிறு எண்ணிக்கையை கொண்டிருந்தது.

இந்திய செலவாணி சட்டம் 1861
இந்த சிக்கலுக்கு தீர்வு காண 1861 ஆம் ஆண்டு இந்திய செலவாணி சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய செலவாணி சட்டம் என்பது ஆங்கில வாங்கி சட்டத்தின் (1844) முழு மறுபதிப்பு.

01. இந்திய செலவாணி சட்டம் 1861 சட்டத்தின் படி காகித நோட்டுகளை வெளியிடும் உரிமையை Bank of Madras, Bank of Bombay and Bank of Bengal இந்த வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளபட்டது. இது இந்திய வங்கிகள் நோட்டுகளை வெளியிடும் உரிமையை பறித்துக்கொண்டு இந்திய வங்கிகளை கழிவு (Commission) பெரும் வங்கியாக மாற்றியது.
02. தேசிய அளவிலான காகித நாணயத்தை வெளியிடும் அமைப்பை நிறுவியது. அதன் படி ரூ 10 20 50 100 500 1000 என்று வெளியிட்டது. பின்னர் 1871 ஆம் ஆண்டு ரூ 5 நோட்டை வெளியிட அனுமதியளிக்கப்பட்டது.
 பணத்தின் தேவையும் அளிப்பும் (Demand and Supply of Money)
எல்லா இடங்களிலும் பணமாக மாற்றக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் பணத்தின் தேவைக்கு ஏற்ப அளிப்பை கணக்கில் கொள்ளவில்லை. 


01. திரு வான்டென் மெர்கின் உரைப்பது என்னவென்றால் பருவ மறுபாடுகளுக்கு (Seasons) ஏற்ற இறக்கங்களை உட்படுவதில் புகழ்பெற்ற நாடு இந்தியா. உலகின் எந்த ஒரு பகுதியிலும் எந்த பண சந்தையிலும் ஏற்படாதவை இந்தியாவில் ஏற்படுகிறது என்று. 

நாடு முழுவதும் தீவிரமான காலம் (Busy period) மந்தமான காலம் (Slak Period) என்று ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. இதற்கு கரணம் பருவ கால நிலை (Seasons) மட்டுமல்ல சமூக பொருளாதார நடவடிக்கைகளும் கரணம் என்றுரைக்கிறார். அதாவது திருமண காலம், திருவிழா காலம், விடுமுறைக்காலம் என பல இருக்கின்றன.

தென்னிந்தியா (Chennai) பொறுத்தவரை பிப்ரவரி முதல் ஜூலை மதம் வரை ஆறு மதம் தீவிரமான சமூக பொருளாதார நடவடிக்கை காலம். அதாவது பணத்தின் தேவை அதிகமாக இருக்கும் காலம். மேற்கு இந்தியா (Bombay) பொறுத்த வரை ஜனவரி மதம் முதல் ஏப்ரல் மதம் வரை நான்கு மதம் மற்றும் நவம்பர் மதம் முதல் டிசம்பர் மதம் வரை இரண்டு மாதங்கள் ஆகா ஆறு மாதங்கள் தீவிரமான சமூக பொருளாதார நடவடிக்கை காலம். அதாவது பணத்தின் தேவை அதிகமான காலம்.

எனவே பணத்தின் தேவை என்பது ஓரிடத்தில் அதிகமாகவும் பிறிதொரு இடத்தில் குறைந்தும் காணப்படும். இது நமக்கு உரைப்பது என்னவென்றால் பணத்தின் தேவைக்கு ஏற்றார் போல் பணத்தின் அளிப்பு இல்லை என்பது.

இங்கிலாந்தில் சிறப்பாக இயங்கிய செலவாணி சட்டம் இந்தியாவில் மோசமாக இயங்கியது ஏன்?.

01. இங்கிலாந்தில் காசோலை (Cheque) சிறப்பாக இயங்கியது, இந்தியாவில் தோல்வியை தழுவியது. இந்தியாவில் தொல்வியை தழுவ இரு கரணங்கள் இருக்கிறது. 
01. காசோலை பயன்படுத்த கல்வி அறிவு வேண்டும். இந்தியாவில் கல்வி கற்றவர்கள் மிக குறைவு. அதிலும் ஆங்கில அறிவு உடையவர்கள் மிக அரிது. வங்கிகள் ஆங்கில மொழியில் மட்டுமே இயங்க விரும்பியது ஒரு காரணம்.
02. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் காசோலையை வாங்கியில் சமர்பிக்க வேண்டும் இல்லை எனில் அது மதிப்பற்றதாகிவிடும் என்பது இரண்டாவது காரணம். தற்பொழுது காசோலை செல்லுபடியாகும் காலம் மூன்று மாதங்கள்.
இங்கிலாந்து வங்கிகளை விட கழிவு அளவை அதிகமாக வெட்டி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின இந்திய வங்கிகள்.
வங்கிகளின் வருமானம் என்பது கடன் அளித்து அதன் மூலம் வட்டி பெறுதல்.  வங்கிகள் தாங்கள் பெரும் Cash Deposit and Credit Deposit முலமாக தான் கடன் அளிக்கிறது. சேமிப்புகளின் பெரும்பகுதி பட்டியங்களாக (Bills) உள்ளன. அவற்றிக்கு ரொக்கமாக கொடுப்பது என்பது வங்கி தொழில். கையில் குறைந்தபட்ச Cash Reserve கையிருப்பை வங்கி எப்பொழுதும் வைத்து இருக்கவேண்டும். எனவே கடன் அளிப்பதற்கு முன் Cash Reserve எந்த அளவுக்கு வங்கி இருக்கிறதோ அதை பொறுத்து தான் வங்கி கடன் வழங்கும். Cash Deposit குறைவாக இருந்தால் அல்லது Credit Deposit அதிகமாக இருந்தால் கடன் வழங்குவதை குறைத்திடும், கழிவு தள்ளுபடி கொடுப்பதை (Bills Discounting) நிறுத்திவிடும்.

Cheque பயன்பாடு இல்லாததால் Cash Reserve அதிகமாக தேவைபட்டது. ரொக்க தொகைக்கும் கடன் தொகைக்கும் தேவைப்படும் விகிதத்தை பாதுகாக்க வங்கி தங்களின் வருமானத்தை அதிக அளவு வெட்டி குறைக்க வேண்டியிருந்தது.    

1873 ஒன்று படுத்தப்பட்ட புதிய நாணய சாலை சட்டம் 
01.  நாணய எடைகள்,  நாணய அளவுகள், காசுகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த நிலை (Uniformity) ஏற்படவேண்டும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஒன்றிணைந்த சரவதேச நாணய முறைக்காக உலகத்தின் முதன்மையான செலவாணியாக தங்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. நாணய சாலை வெளியிடும் நாணய பட்டியலில் (List) இருந்து வெள்ளி டாலர் எடுக்கப்பட்டது. 

02. வெள்ளியின் மதிப்பை குறைக்கும் வேலை தீவிரம் ஆனது. களத்தில் முதலில் இறங்கியது ஜெர்மனி. வெள்ளி காசுகள் அசசடிப்பதை நிறுத்தியது. வெள்ளிக்கும் தங்கத்திற்கும் விகிதம் (15: ½  (அ) 15:1) என நிர்ணயித்தது. ஜெர்மனி கலாசாரத்தை பின்பற்றும் நாடுகள் எல்லாம் உடனே இந்த கொள்கையாக காப்பி அடித்தது.

தங்கத்தின் உற்பத்தி முன்பு எப்பொழுதும் கண்டிராத உச்சத்தை எட்டியது, வெள்ளி வீழ்ச்சியடைந்து. 

இயல் 3 வெள்ளி நாணய புழக்கமும் அதன் நிலையற்ற தன்மையின் தீமையும்

1873 ஆம் ஆண்டுக்கு முன் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் எவ்வளவு அளவு வெள்ளிக்கு சமம் என்று இருந்தது. இது சர்வேதேச பரிவர்த்தனையில் ஒரு சிறிய விஷயமாக இருந்தது. எவ்வளவு தங்கம் எவ்வளவு வெள்ளிக்கு சமம் என்று மதிப்பிடுவதில் சூதாட்டமாக இருந்தது. 

அரசின் வருமானம்
அரசின் வருமானம் என்பது வரி விதிப்பின் மூலம் பெறுதல் தான். இந்த வரி விதிப்பை பார்த்தால் அதிகமான வரிவிதிப்பு இல்லாத ஆண்டே இல்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். இருக்கிற வரி சுமையோடு வருமான வரியையும் சேர்த்தனர். (வருமான வரியை  முதன் முதலில் இந்தியாவில் 1860ல்  ஜேம்ஸ் வில்சன் கொண்டுவந்தார்) செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் வரி சுமை அதிகமானது.

இந்தியாவில் அதிக அளவு மூலதனத்தை முதலீடு செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியாவில் முதலீடு செய்வது ஆபத்து என்று கருதினார்கள். வெள்ளி நாணயத்தை பயன்படுத்தும் நாட்டில் முதலீடு செய்வதால் வெள்ளி மதிப்பு குறையும் பொழுது தங்களின் முதலீட்டின் மதிப்பும் குறைந்து விடுகிறது. எனவே இந்த நிசசயமற்ற தன்னமையை கண்டு அஞ்சினர்.


செலவாணி வீழ்ச்சி காலம் முழுவதும் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வேகமாக வளர்ந்தது. பருத்தி பஞ்சாலைத் தொழில், சணல் தொழில் துறை, விவசாயிகள் வீட்டு தேவையை வீட சந்தை விலையை வைத்து பயிரிட்டனர். தங்க நாணயம் பயன்பாட்டில் உள்ள நாடுகளின் தொழில் துறை இஸ்தமித்து பொய் இருந்தது.

அரசின் செலவு

வெளிநாட்டில் இருந்து பணியாளர்களை பெறுவதற்கு பதில் உள் நாட்டிலே இந்திய பணியாளர்களை நியமனம் செய்தனர். இதனால் அரசு பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் பெற்ற அதே அதிக அளவு சம்பளத்தை இந்தியர்கள் பெற்றனர். இதனால் இந்த சீர்திருத்தம் உதவவில்லை. 1870 ஆண்டு சட்டம் திருத்தபட்டு இந்தியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஒப்பந்த பணியாளர்களுக்கான பணி இடங்களில் ஒப்பந்தமற்ற பணியார்களை நியமித்து 22% செலவை குறைத்து.

இந்தியாவில் பணியாற்றிய ஆங்கிலேயர்கள் தங்களின் சம்பளத்தை வெள்ளியில் பெற்றனர். அவர்கள் இங்கிலாந்தில் இருந்த தங்கள் குடும்பத்திற்கு சம்பளத்தை வெள்ளியில் அனுப்பமுடியாது. ஏன்னெனில் இங்கிலாந்து தங்க நாணயத்தை கொண்டது. எனவே அவர்கள் தங்களின் சம்பளத்தை தங்கத்தில் அனுப்ப வேண்டியிருந்தது. வெள்ளியின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் நிலையான சம்பளத்தை அவர்களால் அனுப்பமுடியவில்லை. எனவே அரசு இவர்களுக்கு சலுகை அளித்தது. இந்த வித்தியாச தொகை இந்திய கருவூலத்தின் செலவில் ஈடுகட்டப்பட்டது. செலவாணி வீழ்ச்சியால் நஷ்ட ஈடு கேட்டனர். பலர் மாமூல் வாங்கி கொழுத்தனர்.

வெள்ளி செலவாணி வீழ்ச்சி இந்தியாவிற்கு சாதகமாகவும் இங்கிலாந்திற்கு பாதகமாகவும் இருந்தது. தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையிலான விகிதம் என்பது தங்க விலைக்கும் வெள்ளி விலைக்கும் இடையிலான தலைகீழ் விகிதம்.
ஜெய் பீம் 

புதன், செப்டம்பர் 13, 2017

பரிநிப்பாணமும் மரணமும் ஒன்றா?


நிப்பாணம் (Nibbana) என்பது பாலி மொழி சொல். நிர்வாணம் (Nirvana) என்பது வடமொழி சொல். இந்த இரு சொற்களையும் பௌத்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. நிப்பாணம் என்னும் பாலிமொழி சொல்லை தேராவத பௌத்தத்திலும் நிர்வாணம் என்னும் வடமொழி சொல்லை மகாயானா பௌத்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பௌத்தத்தில் சொல்லப்படும் நிப்பாணம்/நிர்வாணம் என்ற இரு சொற்களின் பொருள் ஒன்றே. ஆனால் பௌத்தத்திலும் வைதீகத்திலும் சொல்லப்படும் நிர்வாணம் என்ற சொல்லின் பொருள் வேறுபாடு கொண்டது.

நிப்பாணம்
நிப்பாணம் என்றால்  கம்மாக்கள் அழிவுறுத்தல். கம்மாக்கள் அழிவுறுகிறது ஆனால் உடல் எஞ்சியுள்ளது. விளைவுகளை ஏற்படுத்தும் செயல்கள் அழிவதால் துன்பங்களும் முற்றுப்பெறுகிறது (End of sufferings). கனவுகளற்ற நல்லுறக்கம் மனமாசுகளையற்ற உள்ள சமநிலையில் இருப்பது நிப்பாணம்.

கம்மா என்பது விளைவுகளை ஏற்படுத்தும் செயல்கள். கம்மாவை மேலும் விரிவாக பார்க்க  . மனிதர்களை   பற்றுடையவர்கள்  மற்றும்  பற்றறுத்தவர்  என  இரு வகையாக பிரிக்கலாம். 
01.பற்றுடையவர்கள் அதாவது சம்சார (Samsara) வாழ்வில் இருப்பவர்கள். பற்றுடையவர்களின் செயல்கள் தமக்கும் பிறருக்கும் நன்மையை அல்லது தீமையை அளிக்கும். நற்செயலை செய்யும் பொழுது நன்மையையும் தீய செயலை செய்யும் பொழுது தீமையையும் பெறுபவர்கள்.
02.பற்றறுத்தவர் அதாவது நிப்பாணத்தை அடைந்தவர்கள். நிப்பாணத்தை அடைந்தவர்களின் செயல்கள் எதிர்வினையற்ற செயல். எனவே பற்றறுத்தவர்களின் செயல்கள், செய்பவருக்கு நன்மையையோ அல்லது தீமையையே அளிக்காது, ஆனால் பெறுபவருக்கு நன்மையை அளிக்கும்.  
பரிநிப்பாணம்
நிப்பாணம் அடைந்தவரே பரிநிப்பாணத்தை அடைய முடியும். பரிநிப்பாணம் என்றால் முழு அழிவு. கம்மாக்கள் அழிவுற்று எஞ்சியிருக்கும் உடலும்  அழிந்து போதல்  பரிநிப்பாணம். 

மரணத்திற்கும் பரிநிப்பாணத்திற்கும் உள்ள வேறுபாடுகள்
01. பற்றுடையவர்கள் உயிர் நீத்தல் மரணமாகும். மக்களும் போதி சத்துவர்களும் உயிர் நீத்தல் என்பது மரணமாகும் (Death). போதி சாத்துவார்கள் முழு நிப்பாணத்தை அடையவில்லை. அவர்கள் நிப்பாண பேற்றை மக்களின் நலனுக்காக தள்ளிப்போட்டவர்கள். எனவே அவர்களின் மரணமும் மரணம் தான் பரிநிர்வாணமாகாது. 
(பற்றறுத்தவர்) நிப்பாணத்தை அடைந்தவர்களின் மரணம் தான் பரிநிப்பாணமாகும். அரகந்தர்கள் மற்றும் சம்மாசம்புத்தா அவர்களின் மரணம்  பரிநிப்பாணமாகும்.

The 14-metre statue of Buddha in Mahaparinibbana  in Bhamala Stupa in Khanpur, Haripur district, Pakistan -1800 years old 

பகவன் புத்தரின் மரணம் என்பது மகாபரிநிப்பாணமாகும். மகாபரிநிப்பாணம் என்பது பகவன் புத்தருக்கு மட்டுமே உரிய சொல் ஏனெனில் அரகந்தர்கள் பகவன் புத்தர் காட்டிய வழி சென்று நிப்பாணம் அடைந்தார்கள். பகவன் புத்தரோ தாம் கண்டறிந்த வழியில் சென்று பரிநிப்பாணம் அடைந்தார். எனவே புத்தரின் பரிநிப்பாணம் மகாபரிநிப்பாணம் என்று அழைக்கப்படுகிறது
02.பற்றுடையவர்களின் மரணம் என்பது உடல் அழிந்து அதன் மூலப்பொருள்கள் அதனை ஒத்த மூலப்பொருள்களுடன் இணைந்து விடும். எனவே பற்றுடையவர்களின் மரணம் மறுபிறப்பை உருவாக்கும். (மக்கள் மற்றும் போதி சத்துவர்கள்). 
பற்றறுத்தவர்களின் மரணம் என்பது உடல் அழிவது போன்று அந்த உடலின் மூலப்பொருள்களும் முழுமையாக அழிந்து விடுகிறது. எனவே பரிநிப்பாணத்தை அடைந்தவர்கள் மறுபிறப்பு அற்றவர்கள்.

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

மத்த விலாசப் பிரகசனம் (The farce of drunken sports)

மத்த விலாசப் பிரகசனம்

(அ) 

   தான் தோன்றி ஈஸ்வரர் கோவில்

(அ) 

மகேந்திரவர்மன்


தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் அமைவிடம் : எண் 10, தான்தோன்றி ஈஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு, காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் 631 501.

இக்கோவிலின் சுவரில் மகேந்திரவர்மனின் நாடக ஆடல் சிற்பங்கள் உள்ளது என்றறிந்து 26/11/2016 அன்று சென்று பார்த்தேன். இந்த சிற்பங்களை மத்த விலாசப்பிரகசன  நாடகத்தின் எந்த பகுதியை குறிப்பிடுகிறது என்பது சரியாக பொருத்தி பார்க்க முடியவில்லை. அக்கோவில் நிர்வாகி திரு சந்திரசேகர் இங்கு மட்டும் ஏன் மத்த விலாச நாடக சிற்பங்கள் அமைந்துள்ளது என்ற வினாவிற்கு அளித்த விளக்கம், இங்கு தான் காபாலிகர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர் என்றுரைத்தார்.

 மகேந்திரவர்மனின்  நாடகங்கள்    
மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தை (வடமொழியில்) எழுதியவர் மகேந்திரவர்மன் (571-630). கி.பி 620ல் வடமொழியில் இரு நாடகங்களை எழுதியிருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
01. மத்த விலாசப் பிரகசனம் (Mattavilasa Prahasanam)
02. பாகவதஜ்ஜுகம் (Bhagavadajjukam )
ஆனால் இக்கருத்திலிருந்து முரண்படுகிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்கள். மகேந்திரவர்மன் மத்த விலாசப்பிரகசனம் என்ற நாடகத்தை எழுதியவர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. ஆனால் பாகவதஜ்ஜுக என்னும் நாடகத்தை எழுதியதற்கு ஆதாரம் ஏதுமில்லை. எனவே மகேந்திரவர்மன் பாகவதஜ்ஜுக  எழுதவில்லை என்று குறிப்பிடுகிறார். அந்த நாடகத்தின் ஆசிரியர் யார் என்றும் தெரியவில்லை என்று மேலும் குறிப்பிடுகிறார்.
மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தை எழுதியவர் மகேந்திரவர்மன் என்பதற்கான ஆதாரம்.
01. மகேந்திரவர்மன் பல சிறப்பு பெயர்களை கொண்டவன். அப்பெயர்களில் ஒன்று  மத்தவிலாசன் என்பது. 
  • மகேந்திரவர்மன் தமிழகத்தில் அரசனாக இருந்தபொழுது (600-630) இருந்த சிறப்பு பெயர்கள் 01. மகேந்திர விக்கிரவர்மன் 02. மகேந்திர போத்தரசன் 03. மகாப்பிடுகு 04.லளிதாங்குரன் 05.குணபரன் 06.மத்தவிலாசன் 07.அவணிபாஜனன் 08.சத்தியசாந்தன் 09.புருஷோத்தமன் 10.சத்தரு மல்லன் 11.சங்கீர்ண ஜாதி 12.சித்திர காரப்புலி 13.சேத்தகாரி 14.விசித்தர சித்தன் 15.அலுப்த காமன் 16.கலகப்பிரியன் 17.அபி முகன் 18.மகா மேகன் 19.நரேந்திரன் 20.பிணபிணக்கு
  • ஆந்திராவில் இளவரசனாக இருந்தபோது (கி பி 600 வரை) இருந்த தெலுங்கு சிறப்பு பெயர்கள் 01.சிவிபந்து 02.நில்விலோனையம்பு 03.வேந்துலவித்து 04.வசரம்பு 05.சிலம்பு 06.மலாயு 07.கடுந்தரம்பு 08.நயம்பு
02.மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பு உள்ளது. அதைப்போன்று திருச்சிராப்பள்ளி மற்றும் பல்லாவரம் குகைக்கோயில் கல்வெட்டில் குறிப்பு உள்ளது.   
மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் ஆறாவது வரியில் மத்தவிலாச என்ற சொல் வருகிறது அந்த சொல்லுக்கு முன் உள்ள பாகவதஜ்ஜுகம் என்ற சொல்லை மாகவதஜ்ஜுகம் (Magavadajjukam) என்று தவறாக குறிப்பிட்டுவிட்டனர் என்றுரைக்கிறார் T.R. சிந்தாமணி (அடையாறு நூலகர்) (குறிப்பு தென்னிந்திய கல்வெட்டுகள் - தொகுதி நான்கு 1888  ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது ARE Report)  (The Journal of Oriental Research - A Note on the date of the Tattvasamasa -Madras - 1928 - Page no 145) 
மத்த விலாசப்பிரகசனம்  நாடக  பெயரின் பொருள் 
ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் அளிக்கும் விளக்கம் மத்த விலாசப்பிரகசனம்  என்றால் பைத்தியக்காரனின் நகைசுவை நாடகம். மத்த விலாச என்றால் பைத்தியக்காரன் பிரகசனம் என்றால் நகைசுவை.

மத்த விலாசப்பிரகசனம்  நாடக வெளியிடு
இந்நாடகம் தமிழ்நாட்டில் காஞ்சிவரத்தில் மகேந்திரவர்மனால் எழுதப்பட்டது. ஆனால் இந்நூல் கேரளா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வடமொழி வெளியிட்டில் முதன்முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. கேரளா நாட்டில் இந்நூல் கிடைத்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார் மயிலை சீனி வேங்கடசாமி. பல்லவ நாட்டை கேரள மன்னன் ஆண்டு இருக்கிறான். நாடகம் மற்றும் கூத்தாடும் கலையை தம் தொழிலாக செய்யும் கேரளா நாட்டை சேர்ந்த சாக்கியர் என்பவர்கள் மத்த விலாச நாடகத்தை தம் கலைக்காக எடுத்து சென்றுவிட்டனர் என்றுரைக்கிறார்.
நாடகத்தில் வரும் நபரும் அவர்களின் சமயமும் 
01. சத்தியசோமன் 02. தேவசோமை இருவரும் கணவன் மனைவி. இந்நாடகத்தின் தலைவனும் தலைவியும் ஆவர். இருவரும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் (காபாலிக பிரிவு).
கபாலிகர் என்பவர் பைரவரை வழிபடுபவர். மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பவர்கள். மண்டை ஓட்டில் மதுவை அருந்துபவர்கள். மாட்டுக்கொம்பு ஒன்றையும் ஏந்தி திரிபவர்கள். எல்லா உயிர்களையும் பைரவருக்கு பாலியிடுபவர்கள். இறைச்சியையும் மதுவையும் எடுத்துக்கொள்பர்கள், உடம்பெங்கும் சாம்பல் பூசி கொள்பவர்கள். கள்ளும் காமமும், ஆடலும் பாடலும் வாழ்க்கையாக கொண்டவர்கள். பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பார்கள். பிராமணனுக்கு பூணுல் எத்துணை சிறந்ததோ அத்துணைச் சிறந்தது கபாலிகானுக்கு கபால பாத்திரம். (வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்)
03. நாகசேனன் (Nagasena) பௌத்த சமயத்தை சார்ந்த இளம் பிக்கு.
பௌத்தர்: பகவன் புத்தரின் போதனைகள் அனைத்தும் மூன்று பிரிவுகளாக (திரி பிடகமாக) பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று பிடகத்தில் வினாய பீடகம் பிக்குகளுக்குரியது. பிக்குகளுக்கு நடத்தை விதி கட்டாயம். நாகசேனன் இல்லறம் துறந்து துறவறம் மேற்கொண்டவர். பகவன் புத்தரை வழிகாட்டியாக (தாதகர்) ஏற்றுக்கொண்டவர். சீவர ஆடை அணிந்து தானம் ஏற்கும் பாத்திரத்துடன் துறவு வாழ்வை மேற்கொண்டவர். தலைமுடியை மழித்து இருப்பவர். தலைமுடியை மழிக்க சவரக்கத்தி வைத்திருப்பவர். சீலத்தை (அ) ஒழுக்கத்தை கடைபிடிப்பவர். சீவர ஆடையையும் பாத்திரத்தையும்  தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
04. பாசுபதன் (Pashupathas) சைவ சமயத்தின் இன்னொரு பிரிவை சேர்ந்தவர்.
பாசுபதர்: என்பவர் திருநீறு பூசி லிங்கத்தை வழிபாடு செய்பவர்கள். சிலர் மொட்டை அடித்தும் சிலர் குடுமி வைத்தும் இருப்பர், உயிர்களை பாலியிட்டு அதனையே உணவாக கொள்பவர்கள், (வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்)
05. பைத்தியக்காரன் - சைவரா வைணவரா, பௌத்தரா சமணரா என்பது இங்கு அவசியமற்றது. ஏனெனில் பைத்தியக்காரன் மனநிலைசரியில்லாதவன்.

A1. சமணர்: இந்த நாடகத்தில் நாடக பாத்திரமாக வராமல் ஆனால் நாடகத்தில் பேசப்படும் ஒரு சமயமாக சமணம் வருகிறது. சமணரின் தத்துவங்களையும் அவர்களின் செயல்களையும் இழித்து கூறுவதால் இல்லறம் துறந்தவர்கள் (அ) தத்துவ போதகர்களை பார்ப்போம்.
தலை முடியை உபகரணம் ஏதுமின்றி தம் கையால் பிடுங்கி எடுப்பவர்கள், பற்றறுக்க அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் 01. ஆடையும் மிகை என்று ஆடையை அணியாதவர்கள் 02. உடலில் உள்ள அழுக்கு மற்றும் வியர்வையை நீக்கினால் உடல் மீது பற்று ஏற்படும் என்றும் நீரினால் குளிப்பதானால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள் அழியும் என்றும் குளிக்காமல் இருப்பவர்கள் 03. பல் விலக்குவதால் பல் மீது பற்று ஏற்படும் மேலும் பல்லில் உள்ள நுண்ணுயிர்கள் அழியும் என்று பல் விலக்காமல் இருப்பவர்கள் 04.உணவு ஏற்க பாத்திரம் வைத்திருந்தால் பற்று ஏற்படும் என்று உணவை தம் கைகளில் பெற்று நின்று உணவை உண்பவர்கள். (தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி - சமணமும் தமிழும்) சுருங்க சொல்லின் உயிர்களை துன்புறுத்தாதவர்கள், ஊன் உணவை ஏற்காதவர்கள், ஆடையணியாதவர்கள், பற்றறுப்பவர்கள் 
A2. கலாமுகர்: இந்த நாடகத்தில் வராத சைவ சமயத்தை சேர்ந்த இன்னொரு பிரிவு கலாமுகர். இவர்கள் சிறந்த படிப்பாளிகள், சமய நூல்களை கற்றறிந்தவர், இறைவனை பற்றி பாடி ஆடி மகிழ்வர். மந்திரம் சொல்பவர்கள், கடும் நோன்பிருப்பவர்கள், மண்டை ஓட்டில் உணவு எடுத்துக்கொள்பவர்கள். உடல் முழுவதும் பிண சாம்பலை பூசிக்கொள்பவர்கள், அச்சாம்பலை தின்பார்கள், மதுபாத்திரம் வைத்து இருப்பார்கள், தட்டேந்தி திரிப்பார்கள். (வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்)

நாடக சுருக்கம்
காபாலிகன் சத்தியசோமன் தன் மனைவி தேவசோமையுடன் குடித்து மயங்கி பேசிக்கொண்டு வருகின்றனர். இருவரும் மோட்சம் (அ) விடுதலைக்கான வழி பற்றி பேசும் போது அருகதர் (ஜைனர்) அவர்களின் பெயரை தவறி சொல்லிவிடுகின்றனர். இதனால்  பெரிய பாவம் ஏற்பட்டு விட்டது என கருதுகின்றனர். அந்த பாவத்தை போக்கிக்கொள்ள தங்கள் நாக்கை மதுவினால் கழுவ நினைக்கின்றனர். அதனால் இலவசமாகப் மதுபானம் கிடைக்கும் கள்ளுக்கடையை தேடிச்சென்று குடித்து விட்டு செல்கின்றனர்.  

பிறகு பிச்சை பெறப்போகும் போது கபால பாத்திரம் (Skull-bowl) அவர்களிடம் இல்லாதது உணர்ந்து தங்களிடம் இருக்கும் மாட்டுக் கொம்பில் பிச்சையை பெற்றுக்கொள்கிறார்கள். கபால பாத்திரம் இல்லையென்றால் கபாலிகனாக முடியாது என்பதால் இருவரும் கபால பாத்திரத்தை தேடி கள்ளுக்கடைக்கு செல்கின்றனர். கள்ளுக்கடையில் அவர்களின் கபால பாத்திரம் கிடைக்காததால் அந்தக் கபாலபாத்திரத்தை யார் எடுத்திருப்பார்கள் என்று சிந்திக்கின்றனர். அந்தக் கபாலபாத்திரத்தில் வறுத்த இறைச்சியை வைத்திருந்ததால் அதை ஒரு நாயோ அல்லது ஒரு பிக்குவோ தான் எடுத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். 

இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நாகசேனன் என்ற ஒரு இளம் பௌத்த பிக்கு இராசவிகாரைக்கு செல்ல நடந்து வந்துகொண்டு இருக்கிறார். தானம் ஏற்கும் பாத்திரத்தை சீவர ஆடையால் மறைத்து எடுத்து கொண்டு வருதல் பிக்குகளின் மரபு. சீவர ஆடையால் மறைத்து கொண்டு வருவதால், கபால பாத்திரத்தை பிக்குதான் திருடியிருக்கவேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பிக்குவை வழி மறிக்கின்றனர்.

பிக்குவின் சீவரத்தை விலக்கி அவரின் தானம் ஏற்கும் பாத்திரத்தை காண்பிக்க வலியுறுத்துகிறார்கள். தான் வைத்திருக்கும் உணவு ஏற்கும் பாத்திரம் தம்முடையது என்று பிக்கு பதிலுரைத்தார். தம் கபால பாத்திரத்தை திருடி விட்டு பொய் சொல்கிறாய் என்று வாதம் செய்கின்றனர். பிக்கு மீண்டும் பதிலுரைக்கிறார் சீலத்தை பின்பற்றுவார்கள் நாங்கள், திருடுவதுமில்லை பொய் உரைப்பதுமில்லை என்று. பிக்கு உரைப்பதை ஏற்க மறுத்து பிக்கு வைத்திருக்கும் தானம் ஏற்கும் பாத்திரத்தை சத்தியசோமன் பிடுங்க முயற்சிக்கும் போது பிக்கு அவனை காலால் உதைக்கிறார். தேவசோமை பிக்குவின் தலையை பிடிக்க முயற்சித்து தவறி விழுகிறாள். இதனால் சத்தியசோமன் மற்றும் தேவசோமை இருவரும் உதவி கேட்டு கூச்சலிடுகின்றார்.

அவர்களின் பிரச்சனையை தீர்க்க அங்கு ஒரு பாசுபதன் வருகிறான். பாசுபதனிடம் பிக்கு நடந்தவற்றை விளக்குகிறார். மேலும் தன்னிடமிருக்கும் பாத்திரத்தை காண்பிக்கிறார். பிக்கு வைத்திருக்கும் பாத்திரத்தின் நிறம் செந்நிறமாகயிருக்கிறது. ஆனால் கபாலிகானின் பாத்திரத்தின் நிறம் வெண்ணிறம். பிக்கு அணிந்திருக்கும் அழுக்கு துணியால் கபாலிகனின் வெண்ணிற பாத்திரம் செந்நிறமாக மாறிவிட்டது என்று மீண்டும் வாதம் செய்கிறனர்.

பிக்கு மீண்டும் பதிலுரைக்கிறார் பாத்திரத்தின் நிறத்தை மாற்றினாலும் அதன் உருவத்தையும் அளவையும் மாற்ற முடியாது. எனவே இப்பாத்திரம் கபாலிகானுடையது இல்லை என்று பிக்கு பதிலுரைத்தார். பாத்திரத்தை மாற்றும் மாயக்காரன் பிக்கு என கபாலிகனின் வாதம் மீண்டும் நீண்டது.

எனவே பாசுபதன் நியாய மன்றத்திற்கு (Court) சென்று இவ்வழக்கை தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை அளித்தான். நீதி மன்றம் செல்வதாக இருந்தால் இந்த பாத்திரமே வேண்டாம் என்றனர். ஏனெனில்  நியாய மன்றத்திற்கு செல்ல தம்மிடம் பணம் இல்லை. காஞ்சிவரத்தில் இருக்கிற பல விகாரைகளில் இருந்து அதிக தானங்கள் பிக்குவிற்கு கிடைக்கிறது. தானங்களில் இருந்து கிடைக்கிற பணத்தை பிக்கு இராஜவிகாரையில் குவித்து வைத்திருக்கின்றனர். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களிடம் அந்தப் பணத்தை அளித்து நீதியரசர்களின் வாயை அடக்கி விடுவார் என்று வாதம் செய்தனர். பாசுபதன் நியாய மன்றத்தில் இருக்கிறவர்கள் நேர்மையானவர்கள் என்று விளக்கிய பிறகு அனைவரும் நீதி மன்றத்திற்கு சென்று கொண்டுடிருக்கின்றனர்.

அப்பொழுது ஒரு மனநிலை சரியில்லாதவன் அருகில் வந்து காபாலிகனை அணுகி, மண்டையோட்டை அவன் முன்பு வைத்து அவனை வலம் வந்து காலில் விழுந்து கும்பிடுகிறான். அப்பொழுது சத்தியசோமனும் தேவசோமையும் அந்த மண்டை ஓடு கிடைக்க பெற்று மகிழ்கின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள மகேந்திரவர்ம பல்லவன் 

மனதில் தோன்றும் ஐயங்கள்  

I. மகேந்திரவர்மப் பல்லவன் பிறப்பினால் வைணவன் என்பதனை மறைக்கும் மாரணம் என்ன ? 
மகேந்திரவர்மன் சமண சமயத்தை சார்ந்தவர். பின்னர் சைவத்திற்கு மாறினார் என்றே கிட்டதட்ட அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் கூறுகின்றனர். ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் இதில் விதிவிலக்கல்ல.
மகேந்திரவர்மன் சமணனாக இருந்ததற்கான அளிக்கப்படுகின்ற ஆதாரங்கள்
01. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சித்தன்னவாசல் கிராமத்தில் சித்தன்னவாசல் குகைக்கோயில் கட்டினான். தீர்த்தங்கரின் 3 சிலைகள் உருவாக்கப்பட்டது. அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது.   
02. மகேந்திரவர்மன் திருநாவுகரசரை சைவத்தை தவிர்த்து சமணம் ஏற்க முயற்சி செய்தார். அதில் தோல்வியடைந்த  மகேந்திரவர்மன் சைவத்தை ஏற்றார். 
முனைவர் க.நெடுஞ்செழியன் : சித்தண்ண வாயில் சமணர்களுடையது இல்லை அது ஆசீவக மதத்தினருக்கு உரியது என்றுரைக்கிறார். அவரின் விளக்கங்களை விரிவாக அறிய சித்தண்ண வாயில் நூல் பாலம் பதிப்பகம் பேருதவியாக இருக்கும். 
01.01. காரணப்பெயர். சித்தண்ண வாயில் மலையின்  பின்புறத்தில் 17 கற்படுக்கைகள் உள்ளது. தலைமை துறவி கற்படுக்கையில் கல்வெட்டு  பொறிக்கப்பட்டுள்ளது.  இந்த கல்வெட்டின் மூலம் அறியப்படும் செய்தி குமிழூரை சேர்ந்த தலைமை பிக்குவிற்கு சிறு போசில் என்ற ஊரை சேர்ந்த மாணவரால் (இளைய துறவி) அமைக்கப்பட்ட கற்படுக்கை. சிறு போசில்  தான்  சித்தண்ண வாயில் என்றழைக்கப்படுகிறது. சித்தர்களை அண்ணல் என்றும் அறிவர் என்றும் அழைப்பது தமிழ் மரபு.  சித்தர் அண்ணல் வாயில் என்பதே அதன் பொருள்.  அண்ணலம் பெருந்த வத்து ஆசீவர்கள் - சிலப்பதிகாரம்   
01.02. கல்வெட்டு : இக்குடைவரை கோவிலின் தென்புறத்தில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ள பாண்டிய பேரரசன் வரகுணன் சிரிவல்ல பாண்டியன் கல்வெட்டு அமணன் காணி என்றுரைக்கிறது அமணன் என்பது ஆசீவக சமயத்தை குறிப்பது. சித்தண்ண வாயில் குடைவரை என்பது பாண்டியர்களின் கலை கருவூலம்.  
01.03. மூன்று சிலைகளும் ஓவியங்களும் : இம்மூவரும் ஆசீவக மரபுபடி கழிவெண் பிறப்பினை கடந்தவர்கள்.  01. மற்கலி கோசலர் 02.பூரணர் 03. கணிநந்தாசிரியன் (பாண்டிய பேரரசன் வரகுணன் தந்தையின் நண்பர்  கணிநந்தாசிரியன்). சமணர்களுக்கு முக்குடை இருக்கும். ஆனால் இங்கே  இடையில் உள்ளவர் முக்குடையும், வலதுபுறம் உள்ளவர் இரு குடையும் இடது புறமுள்ளவர் கணிநந்தாசிரியன் ஒரு குடை கொண்டுள்ளார். தாமரை பொய்கையில் வரையப்பட்டுள்ள மூவரும் கருவறையில் உள்ள மூவரும் ஒருவரே (வேறுபட்டவர்கள் இல்லை)
சமணர்கள் ஆடையற்றவர்கள். அமணர்கள் அரை கோமணம் அணித்தவர்கள். சமணர்கள் தலை முடியை மழித்தவர்கள். அமணர்கள் அழகிய தலைமுடியை கொண்டவர்கள் ஓவியத்தில் இதனை எளிதாக கண்டறியலாம். கழுத்தினில் கயிறு உள்ளது எனவே இம்மூன்று சிலைகளும் ஓவியங்களும் ஆசீவகத்தை குறிப்பது
01.04. காலம் : சித்தண்ண வாயில் குகை கோவிலும் ஓவியத்தின் காலம் கி.மு 450. அதாவது மகேந்திர வர்மா பல்லவனுக்கு முற்பட்டது. இன்னும் பல ஆதாரங்களை அளித்துள்ளார் முனைவர்  க. நெடுஞ்செழியன். 
02. மகேந்திரவர்மன் திருநாவுகரசரை சைவத்தை தவிர்த்து சமணம் ஏற்க முயற்சி செய்தார். அதில் தோல்வியடைந்த  மகேந்திரவர்மன் சைவத்தை ஏற்றார். 
திருநாவுகரசர்  சைவர். அவர் இல்லறம் துறந்து சிவன் கோவில் கோவிலாக சென்று பணிசெய்தார். சிவனின் பார்வை அவர் மீது படவில்லை, அல்லது தாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதனை உணர்ந்து சைவத்தை விட்டு சமணம் ஏற்றார். சமண பள்ளியின் தலைமை பதவியையும் பெற்றார். 
சூலை நோயினால் துன்புற்றபொழுது சமண சமயத்தால் அந்நோயினை போக்க முடியவில்லை. எனவே சமண சமயத்தை துறந்து சைவம் ஏற்றார். சைவம் ஏற்ற உடன் நோயும் தீர்ந்தது. நோய்களை போக்கும் மதம் என்று உலகில் ஒன்று இருந்தால், உலகில் அந்த மதம் மட்டுமே நிலைத்திருக்கும். 
பகவன் புத்தர் நோயுற்று பரிநிர்வாணம் எய்தினார். வண. போதி தருமனுக்கு நெஞ்சு கலந்த உணவு கொடுக்கப்பட்டது. நோயை போக்கி கொள்ள முடியவில்லை என்பதனால் மதம் மாறினார் என்பது ஏற்புடையதாக இல்லை. சைவத்திலிருப்பவர்கள் அல்லது சிவனை வழிபடுப்பார்கள் நோயுறுவதில்லையா? நோயை போக்குகிறோம் இங்கே வாருங்கள் என்று சமணர்கள் அழைத்தனரா? திருநாவுகரசர் சமணராக துறவியாக மாறியது மனமுவந்தா அல்லது வற்புறுத்தலா?  சமண துறவி கோலம் பற்றி ஏதும் அறியாது சமண துறவு கொண்டாரா? சமண துறவியாக இருந்த போது பெண்களை கண்டு நாணத்தக்க கோலம் கொண்டார், தெருக்களில் இவர் வருவதைக்கண்டு பெண்கள் தம் வீட்டிற்கு விரைந்து வீட்டை பூட்டிக்கொள்வார் என்றால் சமண சமயத்தில் பெரும்பகுதியை கழிக்க கரணம் என்ன? 
சமணர்கள் மகேந்திரவர்மனிடம் சென்று முறையிடுகின்றனர். மகேந்திரவர்மன் திருநாவுகரசரை சைவத்தை தவிர்த்து சமணம் ஏற்ககட்டளையிடுகிறான். அதனை மறுத்ததால் மகேந்திரவர்மன் திருநாவுகரசரை கொல்ல பல முயற்சிகள் செய்கிறான்.  
01. திருநாவுகரசரை நன்றாக எரிந்து கொண்டிருந்த நீற்றறையில் அடைத்து கதவை முடிவிடுகின்றனர். 02. நஞ்சு கலந்த பால் சோற்றை திருநாவுகரசருக்கு கொடுக்கின்றனர். 03. யானையை கட்டவிழ்த்து திருநாவுகரசரை கொள்ள முயற்சிக்கின்றனர். 04. திருநாவுகரசரை படகில் ஏற்றிச்சென்று கல்லில் கட்டி கடலில் போட்டுவிடுகின்றனர். இத்தனை கொடுஞ் செயல்களும் அவரை பாதிக்காததற்கு கரணம் அவர் சிவனை பாடியதே என்பது புராணத்திற்கு பொருந்தும் வரலாற்றுக்கு பொருந்தாது. இது உண்மை என்றால் கீழே குறிப்பிடுவது   உண்மையல்ல. 
மகேந்திரவர்மன் போரை பற்றி குறிப்பிடும் போது இரண்டாம் புலிகேசி உயிருடன் சாளுக்கிய நாட்டை அடையாந்ததே  பெரியது என்றும் கங்கனையும் சாளுக்கியனையும் துரத்தி அடித்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது. மகேந்திரவர்மன் சிறப்பு பெயர்களானாக பாகப்பிடுகு (பகைவர் மீது இடிபோல என பாய்பவன்) கலகப்பிரியன் (போர் விரும்பி) என்று குறிப்பிடப்படுவது உண்மையல்ல.
மகேந்திரவர்மப் பல்லவன் சமணத்தை விட்டு சைவம் மாறினார் என்பதற்கு வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம் அளிக்கும் விளக்கங்கள்.
01. மகேந்திர வர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவனாக மாறியதாக பெரியபுராணம் கூறுகிறது 02. அப்பரால் (திருநாவுகரசர்) சைவ சமயத்தைப் பின்பற்றினார் 03. திருப்பதிபுலியூரில் இருந்த சமண பள்ளிகளை இடித்து அக்கற்களை கொண்டு திருவதிகையில் ஒரு சிவன் கோவிலை கட்டினார். அக்கோவிலுக்கு குணபரம் ஈச்சாரம் என்று தன் பெயரை சூட்டினார். 04. திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டு மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தபொழுது இலிங்க வழிபாடு செய்தான் என்று கூறுகிறது. 05. வல்லம், தளவனூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோவிலை அமைத்துள்ளார். பல சிவா லிங்கங்களை உருவாக்கியுள்ளார். 06. சமணரை பற்றியும் ஓரளவு இழித்து மத்த விலாசப் பிரகசனத்தில் (கி .பி 620) கூறுவதால் மகேந்திர வர்மன் சைவம் மாறிய பிறகே எழுதப்பட்ட நூல் மத்த விலாசப் பிரகசனம்.
மகேந்திரவர்மப் பல்லவன் பிறப்பினால் சமணரா?   சமணத்தை விட்டு சைவம் மாறினார் என்பது இருக்கட்டும் அவர் பிறப்பினால் சமணரா? மகேந்திரவர்மன் தந்தை சிம்ம விஷ்ணு வைணவத்தை சேர்ந்தவர். மகேந்திரவர்மன் வைணவத்தில் இருந்து சமணத்திற்கு மாறினார் என்பதை மறைக்கும் காரணம் என்ன? வைணவன் என்றுரைத்தால் 35 ஆண்டுகாலம் வைணவனாக இருந்தவன் சமணம் ஏற்றதற்கான காரணத்தை விளக்கவேண்டிவரும் என்பதனால் மறைக்கின்றனரா? 35 ஆண்டுகாலம் வைணவனாக இருந்த மகேந்திரவர்மப் பல்லவன் வைணவத்தை பற்றி மத்த விலாச பிரகாசனம் என்னும் நாடகத்தில் ஏன் ஏதும் கூறவில்லை? 20 ஆண்டுகள் சமணனாக ஆட்சி செய்த காலத்தை பற்றி ஏதும் குறிப்பிடாமல் சைவனாக 10 ஆண்டுகள் ஆட்சி காலத்தை பற்றிய தகவல்கள் மட்டுமே அதிகம் குறிப்பிடப்பட்டுகிறது ஏன்? 
மகேந்திர வர்மா பல்லவன் சமணத்திற்கு செய்தது ஒன்றுமில்லை. எனவே அவர் சமணர் இல்லை. வைணவத்தில் இருந்து சைவம் மாறியவர். சைவத்திற்கு புகழ் வேண்டி புனையப்பட்டதாவே இருக்கலாம். 10 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் செய்தது 
சிவன் கோவில் : 01. திருச்சிராபள்ளி குகைக்கோயில்- பல்லாபுரம் (சமணத்திலிருந்து சைவத்திற்கு வந்தபொழுது இலிங்க வழிபாடு செய்தான்) கல்வெட்டு 1890 02. வல்லத்துக் குகைக்கோயில் - திருக்கழுக்குன்றம் - வல்லம் கிராமம் கல்வெட்டு 1892 03. தளவனூர் குகைக்கோயில் திண்டிவனம் வட்டம் - தளவானூர் கிராமம் கல்வெட்டு 1905 04. மேலைச்சேரி குகைக்கோயில் - செஞ்சி வட்டம், மேலைச்சேரி 05. சியாமங்கலம் குகைக்கோயில் - வந்தவாசி வட்டம் -சியமங்கலம் கிராமம்  கல்வெட்டு  1900 06.  பல்லாவரம் குகைக்கோயில்- சென்னை 07. கபோதேசுவரன் கோவில் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் சேர்ஜன விஷ்ணு (அ) திருமால் கோவில் 07. மகேந்திரவாடி குகை கோவில் -வாலாஜாபேட்டை வட்டம் -  மகேந்திரவாடி கிராமம் கல்வெட்டு  1896
சிவா மற்றும் விஷ்ணு கோவில் : 01. மண்டகப்பட்டு குகைக்கோயில் - விழுப்புரம் வட்டம் - தளவனூர் -மும்முர்த்தி கோவில் 02. மாமண்டூர் குகைக்கோயில்- காஞ்சிவரம் மாவட்டம் சிவன் மற்றும் திருமால் கோவில்
மகேந்திரவர்மன் தந்தை சிம்ம விஷ்ணு வைணவத்தை சேர்ந்தவர் என்று வரலாற்று அறிஞர் இராசமாணிக்கம்  அளிக்கும் விளக்கங்கள்.
01. சிம்ம விஷ்ணு என்னும் பெயரே அவரை வைணவன் என்றுரைக்கிறது. 02. மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராக கோவிலில் சிம்ம விஷ்ணு  கட்டியது என்று பலர் கூறுகின்றனர். இங்கு  சிம்ம விஷ்ணுவின் சிலை உள்ளது. 03. நந்திவர்மன் II கல்வெட்டு சிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தன் என்றுரைக்கிறது.  
II. மத்த விலாசப் பிரகசன நாடகத்திலிருந்து வரலாற்று அறிஞர்கள் அளிக்கும் விளக்கங்கள் உள்ள சமநிலையற்று   இருக்கிறது.

பௌத்தத்தை பற்றி  வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது : 01. பிக்குகள் ஒழுக்கமின்றி இருந்தனர், விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை தனது சுய நலனுக்குச் செலவிட்டுள்ளனர் 02. நீதிமன்றங்களிலும் ஊழல் புரையோடியிருந்தது 03. பிறமொழி, பிற சமய ஆதிக்கம் இருந்தது
II.01. பிக்குகள் ஒழுக்கமின்றி இருந்தனர் இந்த நாடகத்தில் எவ்வாறு காபாலிகர், பாசுபதர் ஒழுக்கத்துடன் இருந்தனர் என்று விளக்கம் அளித்து விட்டு பௌத்தர்கள் எவ்வாறு ஒழுக்கமின்றி இருந்தனர் என்று   குறிப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நாகசேனன் என்ற பிக்குவை இரண்டு விதமாக காட்டப்படுகிறது. தம் செயலினால் வெளிப்படுத்துவது ஒன்றாகவும் மனதினில் நினைப்பது ஒன்றாகவும். நாடக ஆசிரியரின் காழ்ப்புணர்வை நாகசேனன் மனதினில் நினைப்பதாக காட்டி அகமகிழ்ந்து இருக்கிறார். பகவன் புத்தரை குடிகாரன் அருவருக்கும் சொல்லால் கூறுவது பௌத்தத்தின் மீது மகேந்திரவர்மனுக்கு இருந்த காழ்ப்புணர்வை உறுதிசெய்கிறது. 
வரலாற்று அறிஞர்கள் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பது, மது அருந்துவது, உயிர்களை  பாலியிடுவது, அதனையே உணவாக கொள்பவது, கள்ளும் காமமும் வாழ்க்கையாக கொண்டது இவைகள் எல்லாம் ஒழுக்க செயல்கள் என்று கருதுகின்றனரா?   
விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை தனது சுய நலனுக்குச் செலவிட்டுள்ளனர். உலகில் எந்த ஒரு மதமும் அதன் போதகருக்கு பகவன் புத்தரை போன்று கட்டுப்பாடுகளை விதித்தது இல்லை. புத்த விகாரைகளையும், புத்தபிக்குகளையும் மகேந்திரவர்மப் பல்லவனால் தம் கட்டுப்பட்டிருக்கு  கொண்டுவர முடியவில்லை, வைதிகத்திற்கு எதிராக இருக்கும் பௌத்தத்தை அழித்தொழிக்க முடியவில்லை என்பதனால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டே இது. காடுகளை அழித்து புதிய விளை நிலங்களை உருவாக்கி கொடுத்தது சங்கம். மிகப் பெருமளவில் நிலங்களை நிர்வகித்தது. பௌத்தம் தனியுடமையை அழித்தது என்பதற்கு சான்று களப்பிர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அளித்த நிலங்களை எல்லாம் பொது நீக்கியது  பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது. ஒரு ஊரையே இரு பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்பட வரலாறு இருக்கிறது. இவர்கள் பிக்குகள் விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை  சுய  நலனுக்குச் செலவிட்டுள்ளனர் என்றுரைப்பது விந்தையாக உள்ளது.  
02. பௌத்த சமண சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த பல்லவ நாட்டில், நீதிமன்றங்களிலும் ஊழல் புரையோடியிருந்தது.  
நீதி அரசர்களுக்கு பணம் அளித்து அவர்களின் வாயை பிக்கு அடைத்து விடலாம் என்று கபாலிகன் கூறியதற்கு பசுபதான் நீதி அரசர்கள் நேர்மையானவர்கள் என்று உரைக்கிறான். வரலாற்று அறிஞர்கள் ஒரே சமயத்தை சார்ந்த இருவர் வெவ்வேறு கருத்து கொண்டிருந்தாலும் குடிகாரனின் சொல் மட்டுமே உண்மை என்று எவ்வாறு கண்டறிந்தனர்? 
03 பிறமொழி, பிற சமய ஆதிக்கம் 
பௌத்தமும் சமணமும் தமிழ் நாட்டில் தோன்றியவை இல்லை எனவே இவ்விரண்டும் பிற மொழி, பிற சமயம்,  பிற சமய ஆதிக்கம்.
காபலிகம், பாசுபதம், காலாமுகம் இம்மூன்றின் பிறப்பிடம் தமிழ் நாட?  அது தமிழ் பண்பாடா? சைவம் மற்றும் வைணவத்தின் மொழி என்ன தமிழா? வேதங்களை ஆகமங்களை அடிப்படையாக கொண்ட சைவம் மற்றும் வைணவம். வேதங்களின் மொழி என்ன தமிழா? வேதங்கள் உரைப்பது தமிழ் பண்பாடா? கடவுளின் மொழி என்றழைக்கப்படும் வடமொழி பிறந்த இடம்  தமிழ் நாட? வடமொழி இயற்கையான மொழியா? தமிழ் மொழியை நீச மொழி என்றுரைத்தவர்கள் யார் சமண மற்றும்  பௌத்த சமயத்தவரா?  
தமிழை உலகறிய செய்தது சைவமா பௌத்தமா? இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்தின் மூலம் களப்பிரர் உருவாக்கிய வரிவடிவம். களப்பிரர் சைவரா பௌத்தரா? தமிழ் பண்பாடு என்பது வைதிக பண்பாடா?