பீகாருக்கு காஞ்சியின் கொடை
பீகார் என்ற ஒரு மாநிலத்தின் சொல்லே விகார் என்ற சொல்லின் மருவு. காஞ்சீவரம் (Conjeevaram) என்ற சொல்லும் சீவரம் என்ற சொல்லின் மருவுதான். காஞ்சீவரத்தில் இன்றும் பழைய சீவரம் என்ற இடம் இருக்கிறது.
சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை. சீவரம் மூன்று ஆடைகளை கொண்டது.
சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை. சீவரம் மூன்று ஆடைகளை கொண்டது.
ஒன்று உள்ளாடை (Antarvasaka)இந்த மூன்று சீவர ஆடையை திரிசீவரம் என்பவர். இந்த திரி சீவரம் என்ற சொல் தான் மருவி திருச்சி (திரிசீ- திரி சீவர பள்ளி) யாக மாறியிருக்கலாம் என்பது என்கருத்து. 01. திரி 02. சீவரம் 03.பள்ளி இந்த சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை. இவை பாலி மொழி சொற்கள். இது மேலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
மற்றோன்று மேலாடை (UttaraSanga)
மூன்றாவது வெளியாடை (Sanghati).
குர்கிஹார்க்கு காஞ்சியின் கொடை
குர்கிஹார் ஒரு மலை கிராமம். இது கயா மாவட்டத்தில் உள்ளது. பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த இடமாக இருந்தது. இது கயாவில் இருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
சீன அறிஞர்கள் பாகியான் மற்றும் யவங் சுவாங் இங்கு வந்து இருக்கின்றனர். ஜெனரல் டிட்டோ (Ditto) இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார். அவர் இங்கிருக்கும் தொல்பொருள்களை முதன் முதல் (1847) கவனத்திற்கு கொண்டுவந்தார். இரண்டாவது முறை இந்திய தொல்பொருள் துறையை உருவாக்கிய ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் அவருடன் இணைந்து அகழாய்வு குழிகள் எடுத்து பல பௌத்த சிற்பங்களை வெளி கொண்டுவந்தார். ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காமும் இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார் (1861-62 மற்றும் 1879-80).
சீன அறிஞர்கள் பாகியான் மற்றும் யவங் சுவாங் இங்கு வந்து இருக்கின்றனர். ஜெனரல் டிட்டோ (Ditto) இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார். அவர் இங்கிருக்கும் தொல்பொருள்களை முதன் முதல் (1847) கவனத்திற்கு கொண்டுவந்தார். இரண்டாவது முறை இந்திய தொல்பொருள் துறையை உருவாக்கிய ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் அவருடன் இணைந்து அகழாய்வு குழிகள் எடுத்து பல பௌத்த சிற்பங்களை வெளி கொண்டுவந்தார். ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காமும் இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார் (1861-62 மற்றும் 1879-80).
திடீர் என 1930 ஆம் ஆண்டு இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல்பொருள்களும் 5 பிற பொருள்களும் குர்கிகரில் உள்ள ஒரு அறையில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. ஒரு சில மட்டும் தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பூசப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தும் பாட்னா பொருட்காட்சியாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. .
இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. பல எழுத்துக்கள் தெளிவாக இல்லை. சில இரண்டு அல்லது நான்கு எழுத்துக்கள் மட்டுமே இருக்கிறது. எனவே அவ் எழுத்துக்களை கொண்டு கொடை அளித்தவர் மற்றும் எங்கிருந்து அளிக்கப்பட்டது என அறிய முடியவில்லை.
கொடை அளித்த பௌத்த பிக்குகளின் பெயர்களும் கொடையின் விவரங்களும்.
01. அம்ருதவர்மன்
02. புத்தவர்மன் 03. தர்மவர்மன்
நாகரி எழுத்தில் இருந்து அறியப்படும் செய்தி : இவர் அகிலா (Akkila) என்று தொடங்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். தலைமை பொருளாளர் அவதத்த நாகாவை (Avadata Naga) போன்று பிரபலமானவர் இவர் காஞ்சியில் நன்கு அறியப்பட்டவர்
கொடை: நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, காக்கும் கை பஞ்ச ரத பீடத்தின் மேல் இரு தாமரை பீடம் (Double Lotus Pedestal). நெற்றி திலகம், ஞான முடிமீது சுடர் - உயரம் : மூன்று அடி பத்து அங்குலம் ( 3' 10") - அகலம் ஒரு அடி ஏழு அங்குலம் ( 1' 7") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9589 - நூல்
குறிப்பு S.No 6 பக்கம் .No 126
Accession No 9589
02. புத்தவர்மன் 03. தர்மவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி அரை அங்குலம் (1' 1/2") - அகலம் ஒன்பது அங்குலம் ( 9") - தொல்பொருள் பதிவு எண் : 9597 - நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு S.No 20 பக்கம் 130
Accession Number 9597 |
04. தூதசிம்மன்
கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஐந்து முக்கால் அங்குலம் ( 5 3/4") - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") - நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9602 - நூல் குறிப்பு : S.No 114 பக்கம் 14605. பிரபாகரசிம்மன்
(A) கொடை:அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை - ஒரு தாமரை பீடம் - மூன்று ரத பீடம் - உயரம் : எட்டு அங்குலம் ( 8" ) - அகலம் : மூன்று அங்குலம் ( 3") - நூற்றாண்டு பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9637 - நூல் குறிப்பு : S.No 50 பக்கம் 135
Accession Number 9637 |
(B) கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஆறு அங்குலம் ( 6" ) - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") -நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9604 - நூல் குறிப்பு - : S.No 115 பக்கம்146
06. மஞ்சுஸ்ரீ வர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : பன்னிரண்டு அரை அங்குலம் ( 12 1/2" ) - அகலம் : ஏழரை அங்குலம் ( 7 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9618 - நூல் குறிப்பு : S.No 79 பக்கம் 139
Accession Number 9618 |
(B) கொடை: நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலாம் ( 1' 1" ) அகலம் ஆறரை அங்குலம் ( 6 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9619 - நூல் குறிப்பு : S.No 79 பக்கம் 139
Accession Number 9619 |
07. வீரியவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் :பத்து அங்குலம் (10") - அகலம் ஐந்து அங்குலம் ( 5") - தொல்பொருள் பதிவு எண் : 9633 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : ஒன்பது அங்குலம் (9") - அகலம் : ஐந்து அங்குலம் (5") - தொல்பொருள் பதிவு எண் :9725 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 17 பக்கம் 129(B)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, அறவழி முத்திரை - உயரம் : ஏழு அங்குலம் (7") - அகலம் நான்கு அங்குலம் ( 4") - தொல்பொருள் பதிவு எண் : 9634 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : எட்டு அங்குலம் (8") - அகலம் : நான்கு அங்குலம் (4") - தொல்பொருள் பதிவு எண் :9810 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 14 பக்கம் 128
Accession Number 9810 |
08. புத்தவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஐந்தரை அங்குலம் (5 1/2") - அகலம் மூன்றே கால் அங்குலம் ( 3 1/4 ") - தொல்பொருள் பதிவு எண் : 9775 - - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 11 பக்கம்128
Accession No 9775 |
(B) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9650 நூல் குறிப்பு: S.No 207 பக்கம் 15909 புத்த ஞானர் 10. சுகசுகர்
கொடை: பீடம் - அளவு : 11" x 5 1/2" x 8" தொல்பொருள் பதிவு எண்: 9728 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 166 பக்கம்156
Accession Number 9728 |
11. விரோசன சிம்ம ஸ்தவிரர்
கொடை: பீடம் - அளவு : 13" x 7" x 7 1/2" தொல்பொருள் பதிவு எண்: 9729 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 164 பக்கம் 155 -
Accession Number 9729 |
இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்
12. நாகேந்திரவர்மன்கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலம் (1' 1") - அகலம் ஏழு அங்குலம் (7")- தொல்பொருள் பதிவு எண்: 9789 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 15 பக்கம் 129
Accession No 9789 |
13. சந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒன்பதே கால் அங்குலம் (9 1/4") - அகலம் ஐந்து அங்குலம் (5")- தொல்பொருள் பதிவு எண்: 9759 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 21 பக்கம் 130
Accession Number 9759 |
Accession No 9759 |
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : எட்டரை கால் அங்குலம் (8 1/2") - அகலம் நான்கரை அங்குலம் (4 1/2")- தொல்பொருள் பதிவு எண்: 9752 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 49 பக்கம் 134
Acession No 9752 |
15. வீரவர்மர்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை- உயரம்: பத்து அங்குலம் (10 ") - அகலம் நான்கு அங்குலம் (4")- தொல்பொருள் பதிவு எண்: 9632 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 9 பக்கம் 127
Accession No 9632 |
16. அவலோகித சிம்மர்
கொடை: பீடம் - அளவு : 2 1/2" x 4" தொல்பொருள் பதிவு எண்: 9806 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல் குறிப்பு : S.No 165 பக்கம் 156
இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்17. புத்தவர்மன் (கந்த குடி )
(1) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9648 நூல் குறிப்பு: S.No 205 பக்கம் 159இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.
(2) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9649 நூல் குறிப்பு: S.No 206 பக்கம்159
(3) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9651 நூல் குறிப்பு : S.No 208 பக்கம் 159
~*~
01. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் .என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.
02. நூல் குறிப்பு பக்கம் Patna Museum Catalogue of Antiquities (1965)
நூல் குறிப்புகள் 01. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் .என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.
02. நூல் குறிப்பு பக்கம் Patna Museum Catalogue of Antiquities (1965)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக