மாமல்லபுரம்
தொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன் ( இயக்குநர்)
காணாமல் போன சிலைகள்
தொல்லியல் துறை அறிஞர் Dr.D.தயாளன் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது அவர் அளித்த விளக்கங்கள்.
1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் (Draupathi Bath) அகழாய்வு மேற்கொண்டபொழுது மூன்று அடி உயரமுள்ள தலையில்லா ஒரு சிலை கண்டெடுத்தார். இச்சிலையை புத்தராகவோ அல்லது தீர்த்தங்கராகவோ இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். (D.Dayalan, computer application in Indian Epigraphy, Vol III, Bharatiya Kala Prakashan, Delhi 2005 Page 1273 ) ஆனால்
திரு Dr.K.சிவராமலிங்கம் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 77) அவர்கள் திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்ட சிலையை பல்லவர் காலத்து புத்தர் சிலை என்றுரைக்கிறார்..
சிலையமைப்பு
மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு (Archaeological Survey of India - Mahabalipuram Sub-Circle) 21/03/2016 அன்று சென்று அந்த சிலையை பார்த்தேன். மூன்று அடி உயர சிலை இரு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதி கழுத்தில் இருந்து சிந்தனை கை வரை இருந்தது. மற்றொரு பகுதி செம்பாதி தாமரை அமர்விலிருந்து பீடம் வரை இருக்கிறது. திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று புத்தரா (அ) தீர்த்தங்கரா என மயக்கம் ஏற்பட்ட காரணம்
மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு (Archaeological Survey of India - Mahabalipuram Sub-Circle) 21/03/2016 அன்று சென்று அந்த சிலையை பார்த்தேன். மூன்று அடி உயர சிலை இரு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதி கழுத்தில் இருந்து சிந்தனை கை வரை இருந்தது. மற்றொரு பகுதி செம்பாதி தாமரை அமர்விலிருந்து பீடம் வரை இருக்கிறது. திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று புத்தரா (அ) தீர்த்தங்கரா என மயக்கம் ஏற்பட்ட காரணம்
திரு Dr D தயாளன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அச்சிலை புத்தர் சிலை என்று குறிப்பிடுகிறார் //The torso of Buddh image at Mamallapuram was noticed by me while I was doing excavation there//
- சிலை தலை பகுதியின்றி இருந்தது
- தோள்பட்டையில் இருந்து முன்னங்கை வரை கைகள் காணப்படவில்லை
- தொடைமீதிருக்கும் முழங்கை சிந்தனை கையில் இருக்கிறது. பகவன் புத்தர் மற்றும் தீர்த்தங்கருக்கு சிந்தனை கை என்பது பொதுவான முத்திரை.
- பீடத்தில் தீர்தங்கருக்கான எந்த அடையாள சின்னமும் காணப்படவில்லை
- சிலையின் உடல் பகுதி அதிகமாக சிதைவுற்று இருந்தது. எனவே சீவர ஆடையுடன் செதுக்கப்பட்டதா என்று அறிய முடியவில்லை.
Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் குறிப்பிடும் மூன்று அடி உயரமுள்ள ஐந்து புத்தர் சிலைகளும் மகாபலிபுரம் அருங்காட்சியகத்தில் காணப்படவில்லை. இச்சிலைகள் தேசிய அருங்காட்சியாகத்திற்கு கொண்டுசென்றிருக்கலாம் என்று சிலரும் அவைகள் விற்கப்பட்டு விட்டன என்று சிலரும் குறிப்பிட்டனர்.
தொல்லியல் துறை அறிஞர் Dr.D.தயாளன் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது அவர் அளித்த விளக்கங்கள்.
ஜமேஸ் பெர்சுசன் (James Fergusson) அவர்கள் மாமல்லபுரத்தை அசைக்கமுடியாத பௌத்த இடம் என்றுரைக்கிறார். காரணம் மாமல்லபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் நினைவு சின்னங்களின் அமைப்பின் முறை அமராவதி இச்துபத்தை ஒத்து இருக்கிறது என்று.Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் குறிப்பிடும் ஐந்து புத்தர் சிலைகளும் மாமல்லபுரத்தில் கிடைத்தவை அல்ல. வேறு எங்கேயோ இருந்து கொண்டு வந்து அர்ஜுன தபசு அருகில் வைக்கப்பட்டவை. (தனியார் அருங்காட்சியகம்). இச்சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவில்லை. மேலும் அந்த சிலைகள் எல்லாம் தனியாருக்கு சொந்தமானவை (Private Collections), தற்காலத்து சிலைகள். அந்த சிலைகள் வேறு எங்கேயாவது கொண்டு சென்றிருக்கலாம் அல்லது விற்க்கபட்டிருக்கலாம்.
C.சிவராமமூர்த்தி தொல்லியல் அறிஞர் மகாபலிபுரத்தில் கண்டறியப்படும் பல உருவங்கள் அமராவதி சிற்ப தூண்டுதலில் உருவானவை. என்றுரைக்கிறார் (Amaravati Sculptures in the Chennai Government Museum by C.Sivarama Murthi M.A., 1998)
01. விந்தையான உயிரினங்கள் (Queer Animals) (Govardhana Giridhara Krshna Mandapa) கோவர்த்தன கிரிதர கிருஷ்ண மண்டபத்தில் ஒரு பகுதியின் முடிவில் காணப்படும் மனித தலையுடைய சிங்கம் மற்றும் கழுகு தலையுடைய சிங்கம் (Plate iii, Fig 7 பக் 53)
02. சிம்மாசனம் (Lion Throne)
(Mahisha Sura Mardani Cave ) மகிச சூரா மர்தனி குகையின் மையப் பகுதியில் சோமஸ்கந்த குழு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என்பது அமராவதி போதி சத்துவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை ஒத்திருக்கிறது (Plate iii, Fig 8)
03.ஞான முடியும் சுருள் முடியும்Krshna Mandapa கிருஷ்ண மண்டபம் கால் நடை மேய்ப்பவரின் தலையில் தலை முடி சுருள் சுருளாகவும், ஞான முடியும் காணப்படுகிறது. இது அமராவதி சிற்ப மரபை கொண்டுள்ளது (Plate iii, Fig 9). இது பகவன் புத்தரின் ஞான முடி மற்றும் சுருள் முடியை ஒத்துள்ளது.
04. ஆடையின்றி நின்றிருக்கும் பெண்
ஆடையின்றி நின்றிருக்கும் பெண், அமராவதி மற்றும் அஜந்தாவில் காணப்படும் பெண்ணை ஒத்திருக்கிறது. (plate 1, Fig 3a(Amaravathi) 3b (Ajantha) 3c (Mahabalipuram)
05. இடையாடை மற்றும் வழிந்தோடும் குஞ்சம் அணிந்திருக்கும் குள்ள மனிதர் (Udarabandha) உதர பந்தா என்ற யாசகர் என்னும் குள்ள மனிதர் அணிந்திருக்கும் இடையாடை மற்றும் வயிறு பகுதி வழியாக வழிந்தோடும் குஞ்சம் (Plate iii, Fig 2a 3b(Amaravati) 2c(Mahabalipuram)
ஆனால் இவைகள் வலுவான ஆதாரங்களாக இல்லை.
புஞ்சேரி
புஞ்சேரி மாமல்லபுரத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.
Dr K. சிவராமலிங்கம்
புஞ்சேரியில் பல புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டது. அவைகள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார். (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக் 76 and 127)
Dr K. சிவராமலிங்கம்
புஞ்சேரியில் பல புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டது. அவைகள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார். (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக் 76 and 127)
தொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன்
தமிழத்தின் தொன்மையான துறைமுகம் புஞ்சேரி
புஞ்சேரி மிக பழமையான துறைமுகம். பொருட்களை ஏற்றவும் இறக்கவும் இங்கு தான் கப்பல்கள் வந்து நிற்கும், புஞ்சேரி என்ற சொல் புகும் சேரி ~*~ என்ற சொல்லில் இருந்து மருவி இருக்கலாம். புஞ்சேரியை கடற்கழிவிடம் (Back Water Area) என்றுரைக்கிறார். (Articles "New light on the location of the Ancient seaport of Mamallapuram")
கடற்கழிவிடம் (Back Water Area) என்பது கடல் நீரை கொண்ட இடம். கடற்கழி (Back Water) என்பது கடல் நீர். இது உப்பு நீரை கொண்டது. உப்பு தயாரிக்க உதவுகிறது. கடல் மட்டம் உயரும்பொழுது நிலத்தை நோக்கி கடல் நீர் புகுவதும், கடல் மட்டம் குறையும் பொழுது, நிலத்தில் வந்தடைந்த கடல் நீர் மீண்டும் கடலில் சேர்வது தான் கடற்கழி. இங்கு அலைகள் ஏற்படாது. புஞ்சேரி இயற்கையான கடற்கழிவிடம் என கப்பல் துறை அறிஞர் திரு சிவசாமி எனக்கு விளக்கம் அளித்தார் .தேசிய அருங்காட்சியகம் புது டெல்லி
~*~ அதாவது கடல் நீர் முதலில் உட்புகும் சேரி
இணைப்புகள்
1990-91 Dr.D.தயாளன் மாமல்லபுரம் அகழாய்வு இணைப்புகள்
தமிழத்தின் தொன்மையான துறைமுகம் புஞ்சேரி