புத்தவேடு
அமைவிடம்விகார் : புத்தவேடு தியான புத்தர் திருமேனித் திருத்தலம்
ஊர் : சி.கே. எஸ் சாலை, புத்தவேடு, இரண்டாம் கட்டளை ஊராட்சி
வட்டம் : சிறிபெரும்புதூர் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம் 600128வட்டம் : சிறிபெரும்புதூர் வட்டம்
சென்னைலிருந்து 20 கி. மீ தொலைவில் குன்றத்தூர் அருகில் (அ) போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையின் இடது புறத்தில் அமைந்துள்ளது புத்தவேடு கிராமம்.
D.C.அகிர்
புத்தவேட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் சான்றுகள்
01. ஒரு புத்தர் சிலை
02. ஒரு கல்வெட்டு மற்றும்
03. ஒரு போதி மரம்.
பகவன் புத்தர் சென்னைக்கு வருகைபுரிந்தற்க்கு நேரிடையான ஆதாரங்கள் ஏதுமில்லை, எனினும் பகவன் புத்தர் தமிழகத்தில் இரு இடங்களுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஒன்று காஞ்சிபுரம் மற்றொன்று புத்தவேடு.
பகவன் புத்தர் காஞ்சிவரத்திர்க்கு அடிக்கடி வருகை புரிந்து தர்மத்தைப் போதித்துள்ளார். அசோக மன்னர் பகவன் புத்தர் வந்து சென்ற காஞ்சிபுரத்தில் ஞாபகார்த்தமாக தூபிகளை நாட்டினார் என்று காஞ்சிபுரத்திற்கு கி.பி 640ல் வந்த சீனா அறிஞர் யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார். (Buddhisim in South India பக் 18)
பகவன் புத்தர் காஞ்சிவரத்திர்க்கு அடிக்கடி வருகை புரிந்து தர்மத்தைப் போதித்துள்ளார். அசோக மன்னர் பகவன் புத்தர் வந்து சென்ற காஞ்சிபுரத்தில் ஞாபகார்த்தமாக தூபிகளை நாட்டினார் என்று காஞ்சிபுரத்திற்கு கி.பி 640ல் வந்த சீனா அறிஞர் யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார். (Buddhisim in South India பக் 18)
சீனா அறிஞர் யுவாங் சுவாங் கருத்தை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையினால் 1970-71ல் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் வெட்டப்பட்ட அகழாய்வு குழியினால் கண்டறியப்பட்ட ஸ்துபம்.
சிலையமைப்பு கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் தோரணம் மகர தோரணம் அரசர் சோழர் கால சிற்பம் நூற்றாண்டு கி.பி 10 நூற்றாண்டு.
புத்தவேடு கல்வெட்டு முதலாம் கொனேரின் மெய்க்கண்ட சுந்தர பாண்டிய தேவர் கி.பி 1251-64 காலத்தில் இந்த கிராமம் பள்ளி சந்தமாக (கொடையாக) வழங்கப்பட்டது. பௌத்த சங்கத்திற்கு ஊர் முழுவதையும் கொடையாக அளித்துள்ளது.
தஞ்சையை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த முதலாம் இராஜராஜ சோழன் காலத்தை சார்ந்த 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மூன்று புத்தர் சிலைகள் நிறுவப்பட்டிருந்ததாகவும் செய்தி கூறுகிறது. ஒரு சிலை மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது என்று இலங்கை செய்தி ஒன்று கூறுகிறது. இதனை மறுக்கிறது சென்னை அருங்காட்சியகம்.
புத்தவேடு விகாரம்
புத்தவேடு விகாரத்தை நிறுவியவர் வண. முதலக்குவிய இரத்தின ஜோதி தேரோ 11 மே 2003 அன்று நிறுவப்பட்டது. இலங்கையை சேர்ந்த திரு E.W. பாலாசூர்யா மற்றும் திருமதி ஜெயாபாலா சூரியா அவர்களின் உதவியால் இவ்விகார் கட்டப்பட்டது. இலங்கை தேவரம் மகா விகாரில் இருந்து 01-06-2006 அன்று கொடையாக கொண்டுவரப்பட்ட புத்தர் அஸ்தி கலசம் இங்கு வைக்கப்பட்டுள்ளது. புத்த கயா போதி மரக்கன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது. விகாரில் ஒரு பழமையான போதி மரமும் உள்ளது.
வண. முதலக்குவிய இரத்தின சோதி தேரோ புத்தவேட்டில்
இந்த கூடு ஏரிக்கரை அருகில் கண்டெடுக்கப்பட்டது.
புத்த பகவன் வந்திருந்த தமிழ் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தலம்.
பதிலளிநீக்குஐயா, பகவன் புத்தர் தென்னிந்தியாவிற்கு வருகை தந்ததில்லை.எந்த ஆதாரமும் அதற்க்கு இல்லை. //பகவன் புத்தரின் வருகை இலங்கை மற்றும் தென்இந்தியா// என்ற பதிவையும் பார்க்கவும் நன்றி
பதிலளிநீக்குமகிழ்ச்சி
பதிலளிநீக்கு