புதன், ஜனவரி 13, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XII புத்தகரம்

 புத்தகரம்

அமைவிடம்
ஊர்                     : புத்தகரம்*
வட்டம்             : வாலாஜாபாத் வட்டம்
மாவட்டம்       : காஞ்சிவரம் மாவட்டம்

வாலாஜாபாத் பேருந்து  நிலையத்திலிருந்து (அ) காஞ்சிவரம் பேருந்து நிலையத்திலிருந்து புத்தகரம் செல்லலாம்.
01. வாலாஜாபாத் பேருந்து  நிலையத்திலிருந்து புத்தகரம் சாலை வழி 8.5 கி. மீ 
02. காஞ்சிவரம் பேருந்து நிலையத்திலிருந்து வையாவூர்  வழி 13.60 கி. மீ 
*புத்தகரம் என்பது புத்தர் கரம் (Hand/கை) என்று பொருள் கொள்ள முடியாது. புத்தகிரகம் என்பது தான் புத்தகரம் என்று மருவியிருக்க வேண்டும். புத்தகிரகம் என்பது புத்தவிகாரம். புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்தவிகாரம் என்று அழைக்கப்படும். தமிழில் கிருகம் கிரகம் இல்லை

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை  இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம்  ¾ அடி உயரம்

சிலையின்  பின்புறம் தலை பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது. பின்புறமுள்ள உடல் பகுதியில் (முதுகு) சீவர ஆடை மிக அழைகாக வடிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது 


தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிவரத்தில் உள்ள புத்த கரத்தில் மட்டுமே பௌத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது, அகழாய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அகழாய்வு 

காஞ்சிவரம் ஏனாத்தூர் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு 2008-09 ம் ஆண்டு புத்தகரத்தில் அகழாய்வு மேற்கொண்டது. காஞ்சிவரம் புத்தகரத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் இடையே உள்ள இடத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். 

இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டது.
01. பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை இங்கு மனிதர்கள் வாழ்ந்து இருக்கின்றனர்.
02. பல்லவ காலத்திற்கு முந்திய குடியேற்றங்கள் இந்த அகழாய்வில் அறியப்பட்டது.
03. அகழாய்வில் கண்டறியப்பட்ட சிலையின் உடைந்த பகுதி விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அது நின்ற நிலையில் இருந்த சிலையின் தொடைப்பகுதி.
*தமிழ் பௌத்தம் என்ற நூலின் ஆசிரியர் திரு வி. போதி தேவவரம் அவர்கள் அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் பழங்கால புத்தர் திருமேனி ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 36). நின்ற நிலையில் இருந்த சிலையின் உடைந்த தொடைப்பகுதியை வைத்து பகவன் புத்தர் சிலை என்று கூறிவிட முடியாது.


புத்தகரம் கல்வெட்டு செய்தி 
போரெற்று நாயினார் அவர்கள் திருவத்தியூர் நின்றருளிய அருளாளப் பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் தொகைக்காக புத்தகரம் என்ற கிராம வருவாய் 400 பொன் கொடையளிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பண்டாரத்தார், கோயில் நிர்வாகியான எட்டூர் திருமாலை குமாரதத்த்தாச்சாரியாரின் முகவரான பெரிய திருமாலை நம்பி சக்கராயர் ஆகியோர் அவரது தர்மத்தை நடத்த ஒப்புக்கொண்டு கல்வெட்டு வெட்டிக்கொடுத்துள்ளார்.
காணி ஆட்சி உரிமை கிராமத்தின் பெயரில் அடகு வைக்கப்பட்டமையும், 100 பொன்னுக்கு மாதம் 4 பணம் வட்டி என்பதும் எழுதப்பட்ட ஆவணம். தவணை முறி என்பதும் கூடுதலாக அறியப்படும் பொருளாதார நடைமுறை செய்தியாகும். 
இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 499/1919 ஊர் கல்வெட்டு எண் 234 அரசு விஜய நகர் நூற்றாண்டு  கி.பி 16  இடம் அருளாளப் பெருமாள் கோயில் திருச்சுற்று தெற்கு சுவர் நூல் குறிப்பு காஞ்சீவரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் தொகுதி 2

தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்கள்
01.வாலாஜாபாத் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம் 629656
02. மாதவரம் வட்டம், திருவள்ளூர் மாவட்டம் 629199
03. திருமகல் ஊராட்சி, நாகை வட்டம், நாகை மாவட்டம் 609701
04. கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் 638518
05.மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் 638317
06. திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம் 631099
07. திருகோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 633092

திருவள்ளூர் மாவட்டம்
தொண்டை மண்டலத்தில் பௌத்தம் என்ற நூலின் ஆசிரியர் திரு மு. நீலகண்டன் அவர்கள் இரண்டு புத்தகரங்களை பற்றி குறிப்பிடுகிறார். ஒன்று காஞ்சிவர மாவட்டத்தில் உள்ள புத்தகரம் மற்றொன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம் அருகில் சுமார் ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ள ஜனப்பசத்திரத்தில் ஒரு புத்தர் சிலை இருந்ததாகவும் அச்சிலையை அம்மக்கள் வழிபட்டு வந்ததாகவும் தற்பொழுது அச்சிலையை அருகில் உள்ள கிராம மக்கள் எடுத்து சென்றதாகவும், அச்சிலை தற்பொழுது எங்கு உள்ளது என தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார். பக்கம் 42

நாகை மாவட்டம்
களப்பணி மற்றும் ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் நன்னிலம்-சன்னாநல்லூர் ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம் அடுத்து உள்ள புத்தகரத்திற்கு களப்பணிக்காக 20.1.1999 சென்றதை தமது வலைதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தகரத்தை ஏனங்குடி புத்தகரம் என்று கூறுகின்றனர். இங்கு புத்தர் சிலையோ, தடயமோ எதுவும் இல்லை. திரு இராஜேந்திரன் (கிராம நிருவாக அலுவலர், ஆதலையூர், நாகை வட்டம்) அவர்களைச் சந்தித்தேன். எங்கோ புத்தர் சிலை பார்த்த நினைவு என்று கூறினார். 
குறிப்பு - 
காஞ்சிவரத்தில் உள்ள புத்தகரத்தில் அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை இருப்பதாக Dr K சிவராமலிங்கம்  அவர்கள்  15/08/1997ல் வெளியிட்ட தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu) . 

பாசறை செல்வராஜ்  அவர்கள் தங்களின் புத்தகரம் கிராமத்திற்கு சென்று புத்தர் சிலையை பார்த்து எடுத்த படம்