ஏனாத்தூர்
வழி : கோனேரி குப்பம் வழி ஏனாத்தூர் சாலை
வட்டம் : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்
தொலைவு : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,
பௌத்த அடையாளங்கள்
போதி சத்துவர் சிலை
தருமசக்கரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.
புத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள்
01.பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.
- புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.
- போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது 03. இரண்டு (அ) நான்கு கைகள்
- புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி
- போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே.
03. மறுபிறப்பு
- புத்தர் மறுபிறப்பு அற்றவர்
- போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்
சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால் மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின் மீது இருக்கும்.
அணிகலன்கள்
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின் மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.
சிலையின் முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக கூறினார்.
கைகள் முழங்கையின்றி உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால் மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின் மீது இருக்கும்.
அணிகலன்கள்
- இடுப்பை சுற்றி அணிகலன்
- கழுத்து அணிகலன்கள்
- இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band)
- தோள்பட்டையில் இருந்து தொடை வரை தொங்கும் ஆபரணம்
- தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
- தொப்புள் மேல் அணிகலன்
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின் மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.
சிலையின் முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக கூறினார்.
தருமசக்கரம்
புத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் (உத்திரபிரதேசம்) ஐவருக்கு அளித்தார். இவ்வுரைக்கு தம்ம சகர பரிவர்த்தன (அ) சக்கரத்தை சுழற்றுதல் என்று பெயர். நான்கு, எட்டு, பன்னிரண்டு மற்றும் இருபத்தி நான்கு ஆரங்களை கொண்ட தம்மச்சக்கரம் இருக்கிறது.
- நான்கு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் நான்கு உயர்ந்த உண்மைகளை குறிப்பிடுகிறது
- எட்டு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் ஆரிய அட்டாங்க மார்க்கம் என்னும் எண் முறை வழியை (அ) எட்டு வித ஒழுக்கத்தை குறிப்பிடுகிறது
- பன்னிரண்டு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் பன்னிரண்டு நிதானங்களை (காரண காரியம் (அ) பன்னிரு சார்பு) குறிப்பிடுகிறது.
- இருபத்தி நான்கு ஆரங்ளை கொண்ட தம்மச் சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிப்பிடுகிறது. இந்த 24 ஆரங்களில் பன்னிரண்டு ஆரங்கள், தோற்ற வரிசை (அ) பிறப்பிற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும், மீதம் இருக்கிற பன்னிரண்டு ஆரங்கள் மறைவு வரிசை (அ) இன்பத்திற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும் குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் காணப்படும் தம்ம சக்கரம்
- கணிகிலுப்பை -கீழ்நாயக்கன் பாளையம், (காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து வலத்தோட்டம் செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது,) வெம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்
- கூவம் - திருவள்ளூர் மாவட்டம்
- திருச்சி
- ஏனாத்தூர் , காஞ்சீவரம் வட்டம், காஞ்சீவரம் மாவட்டம்
ஏனாத்தூர் தருமசக்கரம்
- எட்டு ஆரங்களை கொண்டுள்ளது.
- தம்ம சக்கரத்தின் இருபுறமும் அம்பும் வில்லும் காணப்படுகிறது
- 1 1/2 அடி மண் மேலும், ஒரு அடி மண் அடியிலும் புதைந்துள்ளது
- சக்கரத்தின் அடியில் உள்ள எழுத்தினை பார்க்கும் பொழுது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்
இச்சிற்றுர் உள்ள ஒரு தெருவின் முடிவில் ஒரு தீர்த்தங்கரர் சிலையும் (வர்த்தமான மகாவீரர்) உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட போது, இந்த தீர்த்தங்கரர் சிலையை கண்டு எடுத்தனர்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக