செவ்வாய், அக்டோபர் 06, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XI அங்கம்பாக்கம்

அங்கம்பாக்கம்
அமைவிடம்
ஊர் : அங்கம்பாக்கம் (வாலாஜாபாத் பேருந்து அருகில்)
வட்டம் :வாலாஜாபாத் வட்டம்
மாவட்டம் :காஞ்சீவரம் மாவட்டம்


~*~ அங்கம்பாக்கம் கிராமத்தின் சாலை ஓரத்தில் இருந்த பழமையான விநாயகர் கோவிலில் புத்தர் சிலை இருந்தது. இக்கோவில் பாழடைந்து இருந்ததால் புத்தர் சிலையை  அக்கோவில் அருகிலிருந்த பழமையான பெரிய போதி மரத்தடியில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது புதிதாக கோவில் கட்டுவதற்காக பாழடைந்திருந்த அந்த கோவில்  இடித்து தள்ளப்பட்டுள்ளது.   

சிலையமைப்பு
கை
சிந்தனை கை. கை மணிக்கட்டுகள் சிதைந்துள்ளது. கையில் தாமரை மலர் வடிக்கப்பட்டுள்ளது. 
கால்
செம்பாதி தாமரை அமர்வு 
ஞான முடி
தலை வரை மட்டுமே சிலை காணப்படுகிறது அதனால் ஞான முடியை அறியமுடியவில்லை.
தலைமுடி
சுருள் சுருளான முடிகள்  
கழுத்து கோடுகள்
மூன்று  
சீவர ஆடை
உடல் பகுதி 1/2 அங்குல அளவு தேய்வுற்றுள்ளது  எனவே சீவர ஆடையை தெளிவாக காண முடியவில்லை. கை மணிக்கட்டுகள் சிதைந்துள்ளதால் கைகளிலும் சீவர ஆடையைகாண முடியவில்லை. கால்களில் சீவர ஆடையை காணமுடிகிறது.
சிலை உயரம்
 2 அடி உயரம் 

குறிப்பு
01. முகம் சிதைந்தும் தேய்ந்தும் காணப்படுகிறது. நெற்றி திலகம் காணப்படுகிறது.  அரை வட்ட வடிவிலான தோரணம் உடைந்துள்ளது. 

02. 04 டிசம்பர் 2014 வாலஜாபாத் நாக்பூர் தீட்ச பூமி பயணக்குழு தங்களின் கருத்தரங்கம் முடித்து சென்ற பொழுது அங்கம்பாக்கம் சிலையை பற்றி அறிந்து நேரில் பார்வையிட்டு  புத்தர் சிலை என்று முகநூல் வழியாக வெளியிட்டனர். மருத்துவர் தமிழ்கனல், மழைக்காதர் வ.திருமாறன், ஆனந்த வளவன், சி. தூயவன், பருத்திகுலம் பார்த்திபன், தாவீது, மதி ஆதவன், தீபக்ரஜனி   போன்றோர். 

03. பௌத்தர் மற்றும் போராளி இராணுவ வீரர் அங்கம்பக்கம் குப்புசாமி பிறந்த ஊர் இக்கிராமம்

04.அங்கம்பக்கம் சுற்றியுள்ள பௌத்த பெயர்கொண்ட இடங்கள் தம்மனூர் மற்றும் பழைய சீவரம். தம்மன் ஊர். தம்மா என்பது பாலி மொழி சொல்.