புதன், நவம்பர் 16, 2011

ஏழாம் அறிவு


மதிப்பிற்குரிய போதி தர்மா புத்தரல்ல. புத்தராக முயன்றவர்களில் ஒருவர், போதி சத்துவர் என அழைக்கப்படுபவர்.

போதி தருமரை புத்தருக்கு சமமாக கருதப்பட்டவர் என இத்திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. புத்தருக்கு சமமானவர் யாருமில்லை.

போதி சத்துவர்க்கு கோவில்கள் கட்டப்பட்டது, தமிழ் மருத்துவத்திலும் சிலம்பத்திலும் கைதேர்ந்தவர் என்பதால் தான் என இத்திரைப்பட இயக்குனர் தவறாக கருதுகின்றார்.

உயர்வெய்திய பகவன் புத்தரை கடவுளாக கருதும் மகாயான பிரிவை சார்ந்த துறவி (பிக்கு) தான் போதி தருமர். சுவாசத்தை கவனிக்கும் (ஆனா பானா -பகவன் புத்தரின் தியான முறை) நுணுக்கத்தை கற்றுக்கொடுத்தார். தியான மார்க்கத்தை சீனாவிலும் ஜப்பானிலும் பரப்பியவர். இந்தியாவில் அழிந்த புத்தரின் தியானம் மீண்டும் திரு S.N. கோயங்கா அவர்களால் கொண்டுவரட்ப்பட்டது (Vipassana Meditation).

இலங்கையில் இனவெறியின் காரணமாக அழிக்கப்பட்ட நூலகத்தை குறிப்பிடும் இத்திரைப்படம் மதவெறியின் காரணமாக இந்தியாவில் அழிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை குறிப்பிடவில்லை. தர்க்கத்தை ஊக்குவிக்கும் நூல்கள், மருத்துவ நூல்கள், மூடநம்பிக்கையை அழித்தொழிக்கும் பல நன்னெறி
நூல்கள் தமிழ் நாட்டிலேயே இறந்துபோகசெய்யப்பட்டது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. போதி தருமரை தமிழராக மட்டுமே இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.

தமிழை அவமதித்தால் வாயிலேபோடுவேன்.
கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்தும் தமிழ் இன்றும் ஊமையாக இருக்கிறது. நீசமொழி என்றுரைப்பவரின் வாயிலேயே போட்டால் சிறப்பாக இருக்கும்

7 ஆம் அறிவு என்பது D.N.A என இத்திரைப்படம் சொல்கின்றது என நினைக்கிறேன்.  D.N.A 7 ஆம் அறிவாக  முடியாது.

தமிழ் நாட்டிலிருந்து சென்ற போதி தருமர் சீனாவிலும் ஜப்பானிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தம் பல நாடுகளில் சிறப்பாக இருக்கின்றது. பௌத்தம் பிறந்த நாட்டிலேயே கொன்றழிக்கப்பட்டது. போதி தருமரை பற்றி 20 நிமிடம் திரைப்படத்தில் சிறப்பாக காண்பித்த அனைவரின் முயற்சிக்கும் நன்றி.

1 கருத்து :

  1. pls upload the history of bhodi dharman and some more information about the bhodi dharman and his role in development of bhudist principle. and very thanks to you to given this valuable information. AND I AM VERY PROUD ABOUT YOUR GREAT INVOLVEMENT IN THIS) THANK YOU
    BY ANBARASAN. MBA, MUTTIYUR VILLAGE. TINDIVANAM TAMILNADU

    பதிலளிநீக்கு