மனித மாமிசம் உண்ணும் ஆலாவகன் புத்தரிடம் கேட்டான்?
இங்கே மனிதனின் உடமைகளிற் சிறந்தது எது?
எதை நன்றாக பயிற்சி செய்தால் மகிழ்ச்சியளிக்கும்?
சுவைகளில் மிகச் சிறந்த சுவை எது?
சுவைகளில் மிகச் சிறந்த சுவை எது?
எப்படி வாழ்ந்தால் சிறந்த வாழ்க்கை எனப்படும்?
இந்த வினாக்களுக்கு புத்தர் இவ்வாறு பதிலளித்தார்.
இங்கே தன்னம்பிக்கையே மனிதனின் சிறந்த உடமை
தம்மத்தை நன்கு பயின்றொழுகினால் மகிழ்ச்சியளிக்கும்
வாய்மையே சுவைகளில் மிகச் சிறந்த சுவை
புரிந்துணர்வோடு வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்
அடுத்து ஆலாவகன் புத்தரைக் கேட்டான்?
வெள்ளத்தை ஒருவன் கடப்பதெப்படி?
கடலை ஒருவன் கடப்பதெப்படி?
துக்கத்தை ஒருவன் வெல்வதெப்படி?
புத்தர் பதிலளித்தார்
தன்னம்பிக்கையால் ஒருவன்
வெள்ளத்தை கடப்பான்
கவனத்தால் ஒருவன்
கடலை கடப்பான்
உழைப்பால் ஒருவன்
துக்கத்தை வெல்வான்
ஞானத்தால் ஒருவன்
தூய்மை அடைவான்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக