புத்தரென்பவர் யார்?
ஒரு சமயம் துரோணர் என்ற அந்தணர் புத்தரை அணுகி வினவலானார்.
வணக்கத்திற்குரியவரே, தாங்கள் ஒரு தேவரா?
இல்லவே இல்லை, அந்தணரே. நான் ஒரு தேவனல்லன் என்று பதிலளித்தார் புத்தர் அப்படியானால், போற்றுவதற்குரியவரே, தாங்கள் ஒரு கந்தர்வரா இருப்பீர்களா?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு கந்தர்வனல்லன்
அப்படியானால், தாங்கள் ஒரு யகசரோ?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு யக்னல்லன்
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு மனிதனல்லான்
அப்படியானால், போற்றுவதற்குரியவரே, வணங்கி கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் யார்?
புத்தர் தனது மறுமொழியில், தேவன், கந்தர்வன், யக்சன் (அ) மகான் கட்டாயமாக பிறப்பெடுக்க வைக்கும். மானமாசுக்களை எல்லாம் அழித்தது விட்ட ஒருவர் தாம் என்று கூறியதுடன்.
" ஆசைக்குரிய அழகுத் தாமரை
நீரினால் தூய்மை இழந்திடுவ தில்லை"
நாவிவ் வுலகினால் மாசடைவ தில்லையால்
உத்தம அந்தணா நானொரு புத்தன்"
என்றார் புத்தர்
நிபாத சுத்த
~*~ புத்தர் தம்மை இந்துக்களின் கடவுளான மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பவரே விஷ்ணு என்று பகவத் கீதை கூறுகிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக