சனி, ஜூன் 25, 2011

பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அம்பேத்கரின் பங்கு

சென்னை பல்கலைக்கழகம், அறிவர் அண்ணல் அம்பேத்கர் மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு Dr . ஆ. பத்மநாபன் IAS (ஓய்வு) (முன்னாள் மேதகு ஆளுநர், மிசோரம் ) ஆற்றிய உரையின் சில துளிகள்.

01) பௌத்தத்தின் மறுமலர்ச்சி 1891ல் அநாகரிக தர்மபால ஆரம்பித்து வைத்தார். அதனை அறிவர் அண்ணல் அம்பேத்கர் 1956ல் அதன் உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்றார். 1891ம் ஆண்டு அறிவர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தார். பௌத்தத்தின் மறுமலர்ச்சியும் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும் ஒன்றாக நிகழ்ந்தது.

02) 1907ல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் மேட்ரிகுலேசன் தேறியபோது அவருடைய ஆசிரியர் கிறிஸ்ராஜ் அர்ஜுன் கேலூஸ்கர் என்பவர் மராத்தி மொழியில் எழுதப்பட்ட கௌதம புத்தரின் வரலாற்று நூலை அவருக்கு பரிசாக அளித்தார்.

03) நாசிக் பிரகடனம். நான் ஒரு இந்துவாக பிறந்து விட்டேன் ஆனால் நான் இறக்கும் பொழுது ஒரு இந்துவாக இருக்கமாட்டேன்.

04) பௌத்த சின்னங்களான தர்ம சக்கரத்தையும் சாரனாத்தில் அசோகரின் தூணில் இருந்த நான்கு சிங்கம் கொண்ட சின்னத்தையும் இந்திய தேசிய சின்னங்களாக மாற்றினார்.

05) 1945ல் மக்கள் கல்வி சங்கத்தை ஆரம்பித்தார். சித்தார்த்தா கல்லூரியை நிறுவினார். அவர் மாநாடு கூட்டிய இடத்திற்கு புத்தர் நகர் என்று பெயரிட்டார்.

06) ஔரங்கபாத்தில் பௌத்தம் தழுவிய கிரேக்க அரசர் மிரிலிண்டர் (அ) மியாண்ட என்பவரின் நினைவாக மிலாண்டு பலகலைகழகத்தை நிறுவினார்.

07) பேரசிரியர் பி.லட்சுமி நரசு அவர்கள் எழுதிய Essence of Buddhisim என்னும் பௌத்த சாரத்தை புதுப்பித்தார்.

08) இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களே கி.பி 4ம் நூற்றாண்டில் குப்தா மன்னர்களால் நசுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்று அறிவர் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.

09) 1950 மே மாதம் 3ம் நாள் டெல்லியில் பௌத்தர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்.

10)  புத்தரும் அவர் எதிர்கால சமயமும் என்னும் பொருள் பற்றி கல்கத்தாவில் இருந்து வெளிவந்த மகாபோதி பத்திரிக்கையில் எழுதினார்.

11)  1950 மே மாதம் 25 ம் நாள் - கண்டியில் புத்த பெருமானின் பல் இருக்கும் கோவிலில் உலக பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பௌத்த சமயத்தின் தோற்றமும் வீழ்ச்சியையும் பற்றி பேசினார்.

12)  தம் தொண்டர்களுக்கு பௌத்த உபாசனா என்ற பௌத்த சூத்திரங்களை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

13) 1954ல் பௌத்தத்தை பரப்புவதற்காக "Buddhist Society of India" இந்திய பௌத்த சங்கத்தை ஆரம்பித்தார்.

14) 1954ல் மே மாதம் 15நாள் - பர்மாவில் நடந்த புத்த ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார்.

15)  1954 ஜூன் மாதம் - பௌத்தத்தை போதிப்பதற்காக ஒரு பயிற்சி பள்ளி ஆரம்பிக்க போவதாக கூறினார்.

16)  1954 அக்டோபர் மாதம் - பர்மாவிற்கு சென்றார் அங்கு நடந்த உலக பௌத்த மாநாட்டில் அவர் கண்களில் நீர் தளும்ப " நான் மிக வேதனையுடன் கூறிக் கொள்கிறேன். இந்த மாபெரும் புத்தர் பெருமான் பிறந்த மண்ணில் பௌத்தம் அழிந்து விட்டது. இது எவ்வளவு வேதனை தரும் விஷயம் என்றார்.

17)  1954 டிசம்பர் மாதம் - பர்மாவில் இருந்தபோது மாண்டலே நகரத்தில் இருந்தபொழுது உலகபௌத்த கலாச்சார கல்வி நிறுவனத்தை ஆரம்பித்த Dr . R. L. சோனி என்பவருடன் தங்கிருந்தார். அவர் 2500வது புத்த ஜெயந்தி விழாவில் என்னுடைய தொண்டர்களுடன் பௌத்தத்தில் சேரப்போகிறேன் என்று கூறினார்.

18)  இந்தியாவிற்கு திரும்பிய பிறகு அவர் பௌத்த சங்கத்தை மாற்றி அமைத்தார்.

19)  மே மாதம் 1956ல் 2500வது புத்த ஜெயந்தி விழாவில் அக்டோபர் மாதம் பௌத்தம் தழுவபோவதாக கூறினார்.

20)  14 அக்டோபர் 1956 . அக்டோபர் 14ம் நாள் ஏன் தேர்ந்து எடுத்தார்?. அன்று தான் தர்ம விஜயம் செய்த அசோக சக்கரவர்த்தி பௌத்தம் தழுவினார். நாக்புரியை தேர்ந்து எடுக்க காரணம் அங்கு நாக் என்ற ஆறு ஓடியது. அதன் கரையில் நாகர்கள் என்ற பௌத்தர்கள் வாழ்ந்தார்கள்.

21) 14 அக்டோபர் 1956 ஞயிற்று கிழமை நான்கு இலட்சம் பேருடன் திரிசரணம்,பஞ்சசீலம் கூறி பௌத்தம் தழுவினார்கள். மறுநாள் ஒரு இலட்சம் பேர் பௌத்தம் தழுவினார்கள்.

22) அறிவர் அண்ணல் அம்பேத்கர் 22 உறுதி மொழிகளை தயாரித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

23)  15 அக்டோபர் 1956 அறிவர் அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தின் பிரிவுகளான வஜ்ராயனத்திலோ அல்லது மகாயனத்திலோ சேரப்போவதில்லை என்று புதிய பௌத்த சமயமான நவயானத்தில் சேரப்போவதாக கூறினார்.

24)  15 நவம்பர் 1956 லிருந்து 20 நவம்பர் 1956 வரை நான்காவது உலக பௌத்த மாநாடு காட்மன்டுவில் நடந்தபோது Dr. அம்பேத்கர் உரையாற்றினார். அந்த மாநாட்டின் தலைவர் Dr. மல்லசேகரா பேசும் போது சற்று ஒரு மாத்திற்கு முன்புதான் 14 அக்டோபர் 1956 ல் நாகபுரியில் ஒரு அதிசயம் நடந்தது. Dr. அம்பேத்கர் தலைமையின் கீழ் ஐந்து இலட்சம் மக்கள் பௌத்தத்தில் சேர்ந்தனர். உலக வரலாற்றில் இப்படி ஐந்து இலட்சம் மக்கள் ஒரே நிகழ்ச்சியில் ஒரு மதத்திற்கு மாறியது கிடையாது.

25) தமது கடைசி பயணத்தை புத்தகய, சாரநாத் மற்றும் குஷிநகர் முதலிய இடங்களுக்கு சென்றார்.

26) அறிவர் அண்ணல் அம்பேத்கரின் இறுதி நூல் "புத்தரும் அவர் தம்மமும்"



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக