சென்னை பலகலைக்கழகம் பௌத்த பயிலுதலுக்கான (Buddhist Studies) சான்றிதல் படிப்பை (Certificate Course) வருகின்ற கல்வியாண்டில் 2011-12 அறிமுகபடுத்தியுள்ளது. பின்னாளில் இது பட்டயம் (Diploma) முதுநிலை பட்டயம் (P.G.Diploma) இளநிலை (Bachelor Degree) முதுநிலை (Master Degree) என உயர இருக்கிறது.
ஆர்வமிக்கவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள்.
- சனி / ஞாயிறு நாட்களில் வகுப்பு
- ஆறு மாத கலம் (அ) 100 மணி நேரம்
- மதுரையில் உள்ள தர்ம விஜய மகா விகாரையில் இருக்கும் பிக்கு போதி பாலாவும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர். மதுரையில் பாலி மொழி வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கும் பிக்கு போதி பாலா ஒரு தமிழர்.
- குறைந்த பட்ச கல்வி தகுதி +2 (அ) இளநிலை பயில தகுதியுடையவர்கள்
- விண்ணப்பத்தொகை 300 /- . தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி (SC/ST) வகுப்பினர்க்கு 150/- . உறுதிச்சான்றளிக்கப்பட்ட (Attested Copy) சாதி சான்றிதல் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பம் சென்னை பல்கலை கழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் அ) சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து இறக்கம் (download) செய்து கொள்ளலாம். இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் இறக்கம் செய்யப்பட்டால், விண்ணப்பம் சமர்பிக்கும் பொழுது விண்ணப்பத்தொகை செலுத்தப்பட வேண்டும்.
- விண்ணப்பம் பெற மற்றும் சமர்பிக்க கடைசி நாள் 29-07-2011
- விரிவாக பார்க்க http://www.unom.ac.in/downloads/ProspectusCBCS-2011-12.படப்
பவது சப்ப மங்களங் - அனைத்து மங்கலமும் உண்டாகட்டும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக