திங்கள், மார்ச் 21, 2011

பள்ளூர் புத்தர் சிலைகள்

காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பள்ளூர்.  பள்ளூர் பேருந்து நிற்கும் இடத்தில் இருந்து 1 கி. மீ தொலைவு நடந்து செல்லவேண்டும்.  பள்ளூர் புத்தர் தெருவில் உள்ள மூன்று சிலைகள் ஒரே மேடையில்  உள்ளன. 77 ஆண்டுகளுக்கு முன்பு திரு பு. நாகப்ப முதலியார் புல் வெட்டும் பொழுது, பூமியில்  இச்சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிடைத்தன. இவ்வுரைச் சுற்றிலும் அகழ்வராயச்சி செய்தால் மேலும் பல சான்றுகள் கிடைக்கும். இச் சிலை பற்றி தமிழ் ஆராட்சி அறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் "தமிழும் பௌத்தமும் " என்ற தம்முடைய நூலில் பக்கம் 322 குறிப்பிட்டு இருக்கிறார். 



1996  வாக்கில் ICFயில் இருந்து ஓய்வு பெற்ற திரு S . கோதண்டன் என்பவர் பள்ளுருக்கு  சென்றிருந்த போது, இச்சிலைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை அறிந்தார். தாய்லாந்தை சேர்ந்த  சோம்சாய் குசல சிட்டோ (Ven. Somsai kushala chito) பிக்கு அவர்களின் வழிகாட்டுதலின் படி பள்ளுரில் ஒவ்வொரு பௌர்ணமி (Full Moon Day ) அன்றும் திரி சரணம், பஞ்சசீலம், புத்த வந்தன ... சொல்லியும்,


மக்களுக்கு சிறு சிறு உதவிகளும் புத்தரை பற்றியும் சிறு சிறு விளக்கங்களும் செல்லிக்கொண்டு வந்தனர். பின்னர்  1998யில் விகார் கட்டப்பட்டது. 

1 கருத்து :