02-03-2011 அன்று மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு எதிராக மும்பையில் உள்ள கன்ஹெரி புத்தர் குகையில் அமைதி புரட்சி.
கன்ஹெரி ஒரு பழமையான பல்கலைக்கழகம் கிரீஸ் (Greece) மற்றும்
சிரியா (Syria ) மாணவர்கள் தானங்கள்
கொடுத்துள்ளனர். அவர்களுடைய பெயர்கள் மற்றும் விவரங்கள் இந்த குகையில் குறிப்பிடபட்டுவுள்ளன. இங்கு 118 குகைகள், 30 அடி உயரமுள்ள இரண்டு புத்தர் சிலைகள் அமைந்துள்ளது.
அரசியல், அரசியல் சாராத தன்னார்வ தொண்டர்கள் சுமார் 200 ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.
சிவசேனா அல்லது பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய ஆந்திர பிரதேசத்தில் இருந்து அறியா தெலுங்கு மக்கள் அவர்களுடைய கடையை அமைத்துள்ளனர்.
வாயில் கதவு அருகில் புத்தர் பதாகை வைக்க Bharat Leni Sanwardhan Samittee (BLISS) அடியெடுத்துக்கொடுத்தது. மேலும் இந்த மகா சிவராத்திரி நாளை மகா தம்ம ஊர்வலம் "Maha -Dhamma Yatra " என்று அறிவித்தது.
குகைக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சுமார் 300 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) 1992ம் ஆண்டு கணேஷ் நாய்க்யை (Ganesh Naik) சிவன் கோவிலை கன்ஹெரி குகையில் கட்ட தூண்டிவிட்டிருக்கிறது . திரு பிரதீப் கைக்வாடு (Pradeep Gaikwad) மற்றும் நாக்பூர் & மும்பையிலிருந்த அவருடைய துணைவர்களின் முயற்சியினால் இந்த கோவில் வனத்துறையினால் தகர்க்கப்பட்டது. இப்பொழுது லிங்கம், சிலை அல்லது தெய்வம் போன்ற ஏதும் அங்கில்லை. இருந்தும் அறியா இந்துக்கள் ஒவ்வொரு சிவாராத்திரி அன்றும் இங்கு வழிபட வருகின்றனர்.
இந்த வருடம், (BLISS) இளைஞர் அணியை அறிமுகப்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து விழாவை சிறப்பித்தனர். அறியா இந்துக்கள் மகா சிவராத்திரிக்காக வருகைபுரியும் சிவன் கோவில் என்று அழைக்கப்பட்ட இடத்தின் உள்ளே புத்த வந்தனா போய்க்கொண்டு இருந்தது. இந்துக்களும் புத்த வந்தனாவை சொல்லிக்கொண்டு இருந்தனர்.
தெலுங்கர் நடத்தும் கடை ஒன்றின் உள்ளே உள்ள சிவன் படம் உடைய பதாகை அகற்றப்பட்டது. புத்தம் சரணம் கச்சாமி அடங்கிய சிறு துண்டு பிரசுரம் வந்திருந்த இந்துக்களுக்கு அளிக்கப்பட்டது. எல்லோரின் பைகளிலும் தேங்காய்,
பால், தயிர், எண்ணெய், சந்தானம்
இருக்கிறதா என சோதனை படுத்தப்பட்டு, அவைகளை
அனுமதிக்கவில்லை.
மாலை நிகழ்ச்சியில் சில இந்துக்கள் கைகளை கூப்பியும், சிலர் திரி சரணம் சொல்லியும் நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.
இது குறைந்தது ஒரு மணி நேரம்
எடுத்து கொண்டது, இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நிதிபதிகள் (Judge), ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் (DCP), ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் (IG) பலரும் கலந்துக்கொண்டனர். இந்திய தொல்லியல் துறை ஆவணத்தின் படி ( கிள்ளாக்கு (Token)இன்றி உள்ளே செல்ல அனுமதிப்பது இல்லை) சென்ற வருடம் 2010 மகா சிவராத்திரி அன்று வந்த இந்துக்களின் எண்ணிக்கை 22,913 பேர், இந்த ஆண்டு 10,130 மட்டும் வந்திருந்தனர்
இது தம்மத்தின் சாதனை,
அனைத்து பௌத்த இடங்களிலும் இதை செய்வோம்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக