திங்கள், ஜனவரி 24, 2011

பௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்



01 . ஓவ்வொரு பௌத்தரும் தமக்கு மிக அருகாமையில் உள்ள பௌத்த கற்றூண் சிற்பங்கள், குகைகள் மற்றும் பண்டைய கால எஞ்சியுள்ள உயரிய தலங்களுக்கு 
ஓவ்வொரு முழுநிலவு  (Full Moon Day ) நாளில் சென்று
வணங்கவேண்டும்

02 . இந்தியாவில் கற்சிலைகள் மற்றும் சிற்பங்கள் வடிப்பதும்
குகைகள் உருவாக்குவதும் சாம்ராட் அசோகன் காலத்தில்தான்
தொடங்கி வைக்கப்பட்டது. அவருக்கு முன்பு இம்முயற்சிகள் 
இந்தியாவில் தோன்றவில்லை

03 .இந்தியாவில் ஏறத்தாழ 2000 குகைகளும், சீனாவில் 4000 குகைகளும் பாகிஸ்தானில் 2500 குகைகளும் உள்ளன.

04 . இந்தியாவில் உள்ள 2000 குகைகளில் சிதைக்கப்பட்ட சில
 பௌத்த இடங்கள்.
  • திருப்பதி வெங்கடாசலபதி
  • சிறிசைலம்
  • காஞ்சிபுரம்  -100 க்கும் மேற்பட்ட விகாரைகள்
  • மதுரை மீனாட்சியம்மன் கோவில் 
  • சபரிமலை ஐயப்பன்
  • பாந்தர்பூரின் விட்டாலா
  • கேதர்நாத்
  • பத்ரிநாத் 
  • அமர்நாத் 
  • விஷ்ணு தேவி 
  • பஸ்தாரின் தண்டிச்வரி 
  • கார்லாவின்  ஏக்வீரதேவி
  • வீராரின் ஜீவதானி
  • பூரி ஜெகநாதர்
  • நாக்பூர் அருகில் உள்ள இராம் தேக் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள்

05 .தற்போது 200 -300 பௌத்த தலங்கள் சிதைந்து அழியும் நிலையில் விடப்பட்டுள்ளன. 

06 . திரு அலெக்சாண்டர்   கன்னிங்காம் இந்திய முழுவதும் அகழ் ஆராய்சி செய்த போது கிடைத்த பொருள்கள் மற்றும் நினைவு சின்னங்கள் யாவும் பௌத்த நெறி சார்ந்தவையே எனக் கண்டார். இதனை  தனது படைப்பாக 23 தொகுதிகளாக 30 ஆண்டு அளவாக (1840 - 1870 ) எழுதினார்.

07 . தலை சிறந்த சீனப்பயணி யுவான் சுவாங் ஒவ்வொரு  சங்கம் விகாரைகள் அமைந்த பகுதிகளாக காண்டதாக எழுதியு உள்ளவைகள்
  • காஷ்மீர்
  • ராஜேஸ்தான்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகம்
  • கேரளா
  • தமிழ் நாடு
  • ஒரிசா
  • உத்திரப்பிரதேசம்
  • அரியானா
  • இமாச்சலப்பிரதேசம் 
  • மற்றும் எல்லா இடங்களிலும் (1000 - 4000 ) வரை பௌத்த பிக்குகள் இருந்ததார்கள்   

08 .பண்டைய இந்தியாவின் தலைசிறந்தப் பேரரசராக விளங்கிய அசோகர் அகில உலகெங்கும் 84000 கற்றூண் சிற்பங்கள், கட்டிஎழுப்பிய  குகைகள், கற்றூண்களில்  
பொறிக்கப்பட்ட எழுத்துகளை நாடியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1200 லிருந்து 1500 வரையிலான புனிதமாக்கப்பட்ட குகைகள் உள்ளன. இவற்றில் நமக்கு தெரிந்தவைகள் 10 முதல் 15 குகைகள் மட்டுமே. எப்படி சாவித்திரிபாய் பூலேயின்  புரட்சிகர பணியை எந்தவொரு நாளிலும் முக்கியப்படுத்தாது போல பௌத்தக் குகைகளில் உள்ள வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் எவரும் எங்கும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு  இந்தியாவின் பார்ப்பனியச் சாதியே முழுமுதற் காரணம். பார்பனர்கள் இந்த சிற்பங்களை உடைத்து, சிதைத்து, முகப்பொலிவை சீரழித்து உள்ளனர். இந்த     அழிவு வேலைகளை அவர்களோ அல்லது பிறர் உதவியுடனோ செய்தனர்.

09 .பீகாரின் புத்தகயாவுக்கு அருகாமையில் உள்ள ஒரு புத்தர் சிலை "டோலிய பாபா" என்றழைக்கப்படுகிறது. இதனை   கல்லேறிந்து வழிபட்டால் புண்ணியம் பெறலாம் எனப் பார்பனர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். மூடநம்பிக்கை  கொண்ட மக்களும் தமது பாலின வல்லுறவாக்கத்தில் ஈடுபடுவதைக்கூட கடவுளின் அன்பு செய்யும் செயலாகக் கருதி புத்தர் சிலையை கல்லெறிந்து   வழிபடுகின்றனர்.

10 . ஒரிசாவில் புத்தர் சிலையின்   மீது எண்ணெய் ஊற்றப்படுகின்றது.

11 . புத்தர் சிலைகள் கண்மூடித்தனமாக சேதப்படுத்தப்பட்டு அல்லது உருக்குலையச் செய்து பிராமணக் கடவுளர்களின் தெய்வச்சிலைகள் குகைகளில் நிறுவப்பட்டுள்ளன. பௌத்த சிற்பங்கள் மீது அடர்ந்த செந்தூர வண்ணக் கலவை (காவி நிறம்) பூசி மறைக்கப்பட்டுள்ளது.

12 . மும்பையில் உள்ள யோகேசுவரி குகைகளின் கிழக்குபகுதியின்  நிலையோ மிகமோசமாக இருக்கிறது. குகைகள் இருக்கும் இடத்திலேயே குடிசைகள் மற்றும் சேரிகள் உருவாகியிருக்கின்றன. கழிவு நீரையும், குப்பைகளையும் குகைக்குள் ஓடவிடுகின்றனர். 2007 இல்  மும்பை உயர்நீதி மன்றம் யோகேஸ்வரி குகையை சுற்றி 200 மீட்டர் அளவிலான குடியிருப்புகள்  அகற்றப்பட ஆணை பிறப்பித்தது. ஆனால் மும்பை நகராட்சியோ, குடிசைகள் அதே இடத்தில் தொடர்ந்து இருந்திட ஒழுங்கமைக்குமாறு மகாராஷ்டிரா அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. முறைதவறி 1995 ஆம் ஆண்டுக்கு முன் எழுப்பிய கட்டிடங்களை அகற்ற ஆவன செய்ய வேண்டும் என்று அரசு தீர்மானம் இருப்பினும் மண்டபெஷாவர் குகைகளில் ஒரு கிறிஸ்துவச் சிலுவை, அங்குள்ள புத்தர் சிலையை சிதைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  குகைக்கு மேலே ஒரு கிறிஸ்துவ ஆலையம் எழுப்பப்பட்டுள்ளது. குகைக்குள் உள்ள புத்தர் சிலையை அழித்து சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

13 பூனாவுக்கு அருகில் உள்ள ஜுன்னர் குகையில் உள்ள புத்தர் சிலையை சிதைத்தும் அதன் கலை அழகை   அழித்தும் பிள்ளையார் போன்று முகம் திருத்தியும், தெய்வ அம்மன்களாக செந்தூர (காவி) வண்ணமிட்டும் உள்ளனர். கார்லே மற்றும் பாஜே குகைகளுக்கு முன்புறம் பார்ப்பனர்களின் தெய்வமான ஏக்வீர தேவியை நிருவியுள்ளனர். இங்கு    விலங்குகளை பலியிட்டு  வழிபடுகின்றனர். இதுவும்   புத்தரின் கொல்லாமை கொள்கையை இழிவுபடுத்தவே  செய்கின்றனர்.

பௌத்தக் குகைகளின் சிதைவுக்கு பௌத்தர்களின் அலட்சியமே அல்லது 
பாராமுகமே முதன்மைக் காரணம் என்று உணர்கிறோம்.

பௌத்தர்களே, பௌத்தக் குகைகளை பயன்படுத்தாமல்
 பௌத்த நெறி அல்லாதோரை குறைசொல்வது 
முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடேயாகும். இந்த வாய்ப்புகளை
நன்கு பயன்படுத்தி அல்லது உருவாக்கிக் கொண்டு
பார்பனர்கள் தங்கள் கடவுளர்களைப்  பௌத்தக் குகைகளில்
நிறுவியுள்ளனர். எனவே சிக்கலின் முக்கிய உயிர்கூறினை
அடையாளம் கண்ட பௌதர்கள்  இனி பௌத்தத் தலங்களை
அடிக்கடி சென்று பயன்படுத்த முடிவேடுக்கவேண்டும்.  
இதற்க்காக  மாதத்தில் ஒரு நாளை அதாவது முழு நிலவு
(Full Moon Day ) நாளில் பௌததலங்களுக்கு சென்று
தியானிக்கவும் தங்கவும் வணக்கம் செலுத்தவும் வேண்டும்.

இதனை நடைமுறைபடுத்த பாரத் லேனி சன்வார்தன் சமிதி
(Bharat Leni Sanwardhan Samitee - BLISS )  என்ற பெயரில் அமைப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. Ref http://www.buddhistheritage.net/

திங்கள், ஜனவரி 10, 2011

The Makers of the Universe

அக்ஸ்போர்ட் பல்கலைகழகம் "உலகை படைத்தவர்கள்" என்ற ஒரு நூலை தற்போது வெளியிட்டிருக்கிறது. 10,000 ஆண்டுகளில் யாரெல்லாம் சிறப்பான பங்களிப்பை உலகிற்கு அளித்தார்களோ, எவர்களின்   பங்களிப்பை கண்டு உலகம் வியந்ததோ அவர்களில் 100 பேரை வரிசைப்படுத்தியுள்ளது.  முதலிடத்தில் உயர் வெய்திய பகவான் புத்தரையும் நான்காவது வரிசையில் அறிவர் அண்ணல் அம்பேத்கரையும் வரிசைபடுத்தியுள்ளது. இது பெறும் மகிழ்ச்சியான செய்தி  

புத்தர் என்பது ஒரு பொது பெயர். மனிதனாக பிறந்த எவரும் புத்தராகலாம். கௌதம புத்தர் 25வது புத்தர். எனவே இறந்தகால  புத்தருக்கும், நிகழ்கால புத்தருக்கும் வருங்காலங் புத்தருக்கும் வணக்கம் செலுத்தப்படுகிறது. பௌத்தத்தின் திரிசரணம் (அ) மும்மணி என அழைக்கப்படுவது "புத்தம் தம்மம் சங்கம் ".

அறிவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திரிசரணம் என அழைக்கப்படுவது  " கற்பி புரட்சி செய் ஒன்று சேர் "

 பகவான் புத்தர் துன்பத்திற்கான காரணத்தை அறிய பல அறிஞர்களை நோக்கி நடந்தார். பல முறைகள கற்று தேர்ந்தார். ஆனால் அவர்களிடமிருந்து அதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.  தனது சுய முயற்சியினாலே அதற்க்கான காரணத்தை கண்டுபிடித்தார். அவற்றை  தாம் கடைபிடித்தும் பிறருக்கும் 45 ஆண்டுகள் போதித்தார்.

அறிவர் அண்ணல் அம்பேத்கர் பெரும்பான்மையான மக்களின் இழிவான நிலைக்கான காரணத்தை அறிய பல நூல்களை பயின்றார். சட்டம் இயற்றினார், சட்டத்தின் முன் அனைரையும் சமமாக்கினார். சமத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாத மதத்தில், செயலின் அடிப்படையில் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மதம் பெரும்பான்மையான மக்களின் சமயம் அல்ல பெரும்பான்மையான மக்கள் பூர்வகுடி பௌத்தர்கள் என்பதை பல ஆய்வுகள் நடத்தி நிருபித்து தாமும் இலட்சகணக்கான மக்களும் பௌத்தம் பூண்டனர்.

அண்ணல் அம்பேத்கர் தமது வழிகாடியா  கொண்டவர்கள்
01 தத்துவ ஞானி கபிலர்
02 . உயர் வெய்திய புத்தர் மற்றும்
03 . சமுக புரட்சியின்   தந்தை ஜோதி பா பூலே

இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்

நம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்று மதங்களும் இந்தியாவிற்கு வந்த மதங்கள். ஆனால் சைனமும் பௌத்தமும் இந்தியாவில் தோன்றிய சமயங்கள். சைனமும் பௌத்தமும் தோன்றிய போது இந்துமதம் என்று ஒன்று இல்லை. அது வைதிக தர்மமாக இருந்தது. இசுலாமும் கிறித்துவமும் தோன்றவேயில்லை

இந்து என்ற சொல் இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இல்லாத சொல். எந்த பூரான இதிகாசத்திலும் கையாளப்படாத சொல். 1799ல் சர். வில்லியம் ஜோன்சு உள்நாட்டு நீதி நெறிகளை தொகுத்து அதற்கு இந்து சட்டம் என்று பெயரிட்டார். அப்போது தான் இந்து என்ற சொல் முதன் முதலாக அரசு அங்கீகாரம் பெற்றது. இந்து ஒரு சமய சார்புடைய சொல்லல்ல. கிறித்துவரல்லாத, இசுலாமியரல்லாத பார்சியல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்று வரைவிலக்கணம் கொண்டு உள்ளது. தம்முடன் முற்றிலும் முரண்பாடுடைய, தாம் தொடர்ந்து தாக்கி அழித்த சமயங்களான சைனத்தையும் பௌத்தத்தையும் தன்னுள் இணைத்துக்கொண்டது.

மொழியிலும், பண்பாட்டிலும் வேறுபட்டிருந்த திராவிடர்களை குறைந்த பண்பாடும் நிறைந்த காட்டுமிராண்டித்தனமும் காணப்பட்ட ஆரியர்கள் வருண கோட்பாட்டை உருவாக்கி திராவிடர்களை தமக்கு கிழானவர்களாக ஆக்கிக்கொண்டனர்.

இந்தியாவிற்கு வெளியே வாழும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு சாதாரண இந்தியா என்றால் புத்தனின் நாடு என்றே பொருள்படுகிறது. புத்தரின் சமயமான பௌத்தம் தொடங்கும் போதே புரட்சி முறையில் தொடங்கியது. ஒழுக்கத்தினையே வற்புறுத்தியது. சிந்தனை சுதந்திரத்தை அளித்து தர்க்கத்தை ஊக்குவித்தது. அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகளை விஞ்ஜானத் தன்மையுடன் அளித்தது.

புத்தர் அகிம்சையை போதித்தார்,நான்கு வருணத்தை எதிர்த்தார், சதுர்வருண முறை தலைகிழாக புரட்டிப்போட்டார், சாதி வேறுபாடு, பாலின வேறுபாடு பார்க்காமல் அனைவரும் துறவு மேற்கொள்ள முடிந்தது. சமுதாய சீர்த்திருத்தில் பல சாதனைகளை செய்தார். நாத்திகராக வாழ்ந்தார் கடவுள் போல மதிக்கப்பட்டார். எளிமையாக சராசரி மனிதரிடையே உலா வந்தார். அவர் காலத்தில் அறிவொளி வீசியது பகுத்தறிவு கோலோச்சியது.

பௌத்தத்தின் எழுச்சி

01. பௌத்த சமயம் உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தது மும்மணிகலே. (புத்தம், தம்மம் மற்றும் சங்கம்). வெள்ளி, ௦ ஜூலை 30 2010 அன்று "இந்தியாவின் முதல் சமுக புரட்சியாளர் பகவன் புத்தர்" என்ற தலைப்பில் வெளிடப்பட்ட கட்டுரையில் இயல்பு மற்றும் தம்மம் ஆகியவற்றை பார்க்கவும்.

02. புத்தரும் அவரின் சங்கமும் ஒருபோதும் பலாத்காரத்தின் மூலமோ அல்லது நிர்பந்தத்தின் மூலமோ யாரையும் தங்களுடைய சமயத்தில் சேர்க்க முயற்சிக்கவில்லை. தர்மத்தை போதித்து பௌத்தத்தை பரப்பினார்கள். பௌத்த சமய மாற்ற வரலாற்றில் இதுவரை ஒருபோதும் இரத்தக் கலறியோ அல்லது வன்முறையோ கண்டதில்லை.
புத்தர் இரு வகையான சமய மாற்றங்கள் செய்தார்.
     01 . உபாசகர் - இல்லறம்
     02 . பிக்கு - துறவறம்

பெற்றோர்களின் சம்மதத்தை பெறாதவர்கள் எவரையும் புத்தர் சேர்த்துக்கொண்டதில்லை. ஆண், பெண், அரசன், செல்வந்தர், வறியவர், கொள்ளையர் என எந்த சிறு வேறுபாடும் பாராட்டாமல் அனைத்து வகுப்பினரையும் தம் சமயத்தில் சேர்த்துக்கொண்டார். புத்தர் பிக்குகளாக சேர்த்துக் கொண்டவர்கள்

   -நன்கு கற்றறிந்தவர்கள் - யச்சன், காசயபர், ஜீவக
   -அரசர்கள் - பிம்பிசாரர், பசேஞ்சித்தர், அஜாதசத்ரு
   -செல்வந்தர்கள் - அநாதபிண்டிகர், இரத்தபாலா
   -பிராமணர்கள் - சாரிபுத்தா, மெக்கல்லானா
   -உறவினர்கள் -
     a . இராகுலன் - மகன்
     b . மகா பிராஜபதி கோதமி - சிற்றன்னை முதல் பிக்குணி
     c . யசோதர - மனைவி
   -தீண்டதகாதவர்கள்
     a . உபாலி - நாவிதர்
     b . சோபகா/ சுப்பியா - சுடுகாடு காவலர் குழந்தைகள்
   -பெண்கள் (பிக்குணி)
     a . சுனிதா - துப்புரவு பணி
     b . பிராக்நதி - சண்டாளி
   -நோயாளி - சுப்ரபுத்தா - குஷ்டரோகி
   -கொள்ளைகாரன் – அன்குலிமாரன்

03 . பௌத்த மடங்களில் துறவிகள் மருத்துவம் பயின்றதோடு மக்களுக்கு இலவசமாக மருந்தும் கொடுத்து உதவினர். கல்வி மற்றும் புத்தரின் அறநெறிகள் கற்பித்து வந்தனர். குருடர், செவிடர், முடவர் முதலானோர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவு கொடுத்து உதவும் அறச்சாலைகளையும் அமைத்தனர். தீண்டமை, சாதி, உயர்வு, தாழ்வு என்பது ஏதுமில்லை

04 . பௌத்த நெறி அரசர்கள் ஆட்சி செய்யும் போது கூட, தாம் பௌத்தத்திற்கு அளிக்கும் அதே மதிப்பை பிற மதத்தினருக்கும் அளித்தனர்.

05 . அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழியில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தனர்.

06 . எறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 10ம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. கி.பி. 5 , 6 , 7ம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண பௌத்த சமயமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில் பெரும்பாலோர் சைனராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்

07 . கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்ட மௌரிய மன்னர் அசோகர் பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கியக்காரணமாக அமைந்தவர். அசோகர் புத்தருடைய சாம்பல் கொண்டு சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான அளவில் தூபிகளையும் புனித தலங்களையும் மற்ற பௌத்த நினைவு சின்னங்களையும் கட்டினார்

08 . பௌத்தம் உலகில் பரவிய முறை ஆசாதாரமானது. ஆயுதப் பலத்தையோ அரசியல் பலத்தையோ பயன்படுத்தாமல் இந்தியாவிற்கு வெளியே பரவச் செய்யப்பட்டது.

  இலங்கை -கி.மு 247
  தாய்லாந்த், பர்மா -கி.மு முதல் நூற்றாண்டு
  லாவ்ஸ், கம்போடிய -  கி.மு முதல் நூற்றாண்டு
  சீனா - கி.மு 68
  விட்நாம் - கி.மு 150
  ஜப்பான் - கி.பி 538
  தீபெத், தாய்வான்,மங்கோலிய,கொரியா

-மஸ்கோலியா மற்றும் திபேத்தின் பண்டைய இலக்கிய நூல்களில் பெருமளவுக்கு பௌத்த சமய நூல்கள் பரவி  இருக்கிறது.

 -சீனாவில் நிகழ்ந்த பொருளாதார மாறுதல்களுக்கும்  குறிப்பாக கி.பி 5, 6 நூற்றாண்டுகளில் சீனாக் கிராமங்களின் வளர்ச்சிக்கு பௌதப் பள்ளிகளுக்கு பங்கு மிகவும் அதிகம்.

-மத்திய ஆசியாவின் சில பகுதிகளுடன் கூட  இந்தியாவையும் குஷணர்கள் ஆண்டார்கள். ஆயினும்  அவர்கள் பௌத்த மதத்தை தவிர வேறு பல இந்திய
 வழிபாடுகளையும் சிவன் போன்ற கடவுள்களையும் ஆதரித்தனர். ஆனால் அக்கடவுள்களின் (சிவன்)வழிபாடு  பௌத்த மதத்தைப் போல  ளிநாடுகளில் அந்த அளவில் பரவவில்லை.

09 . பெரும்பான்மையான நாடுகள் புத்த சமயத்தை பின்பற்றுவதாக இருப்பதிலிருந்து இந்தியாவில் புத்த சமயம் ஒரு காலத்தில் எவ்வளவு செழித்தோங்கி இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள இயலும்.

நூல்கள்

பாலி மொழியில்
திரிபிடகம் என்பது மூன்று கூடை என்று பொருள். புத்தரின் 45 ஆண்டுகால கருத்துகளை நூல் வடிவமாக எழுதிவைக்கவில்லை. இராஜகிருகத்தில் பிக்குகளின் முதல் மாநாடு நடந்தது, இம்மாநாட்டில் தான் புத்தரின் போதனைகள் தொகுக்கப்பட்டன. இம்மாநாட்டில்

   -தலைமை தாங்கியவர்- மகாகாசிபர்.
   -விநய போதனைகளை ஒப்புவித்தவர் -உபாலி
   -(அபி தம்ம) தம்ம போதனைகளை ஒப்புவித்தவர் - ஆனந்தர்
   -சூத்திரப்பிடகம் என்னும் மூன்றாவது பிடகம் அபிதம்ம
பிடகத்திலிர்ந்து பிற்காலத்தில் பிரித்து தொகுக்கப்பட்டன

1 விநய பிடகம்
1.1 விநயபிடகம்
1.2. பாதிமோக்கம்

2 சூத்திர பிடகம்
2.1 தீக நிகாய
2.2 மஜ்ஜிம நிகாய
2.3 சம்யுத்த நிகாய
2.4 அங்குத்தர நிகாய
2.5 குட்டக நிகாய
   2.5.1 குட்டக பாதம்
   2.5.2 தம்ம பதம்
   2.5.3 உதானம்
   2.5.4 இதிவுத் தகம்
   2.5.5 ஸத்தநி பாதம்
   2.5.6 விமான வத்து
   2.5.7 பேதவத்து
   2.5.8 தேரகாதை
   2.5.9 தேரிகாதை
   2.5.10 ஜாதம்
   2.5.11 (மகா) நித்தேசம்
   2.5.12 படிசம்ஹித மக்கா
   2.5.13 அபதானம்
   2 5.14 புத்த வம்சம்
   2.5.15 சரியா பிடகம்

3 அபிதம்ம பிடகம்
3.1 தம்மசங்கணீ
3.2 விபங்கம்
3.3 கதாவத்து
3.4 பண்ணத்தி
3.5 தாதுகதை
3.6 யமகம்
3.7 பட்டானம்

என்பனவாக்கும். இவையன்றி இன்னும் சில நூல்கள் தேரவாத பௌத்தத்தில் உள்ளன. மகாயான பௌத்த நூல்கள் வட மொழில் எழுதிவைத்தனர்.

தமிழில்
01 . மணிமேகலை - சீத்தலை சாத்தனார்
02 . குண்டலகேசி - நாதகுத்தனார் (இறந்துவிட்டது)
03 . வளையாபதி - (இறந்துவிட்டது)
04 . வீரசோழியம் - புத்தமித்திரனார் (இறந்துவிட்டது)
05 . சித்தாந்த தொகை - (இறந்துவிட்டது)
06 . திருப்பதிகம் - (இறந்துவிட்டது)
07 . விம்பசார கதை - (இறந்துவிட்டது)

தமிழ் நாட்டு பௌத்த ஆசிரியர்கள் இயற்றிய பாலி மொழி நூல்கள் மட்டும் எவ்வாறு இன்றும் நின்று நிலவுகின்ற என்றால் அவை இலங்கை பர்மா முதலான தேசத்து பௌத்தர்களால் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. தமிழ் பௌத்த நூல்களை போற்றுவதற்கு தமிழ் பௌத்தர்கள் இல்லாததால் அவை இறந்து விட்டன.

கல்வெட்டுச் சாசனம்
பெரிய கல்வெட்டுச் சாசனம்
1. தவுலி (Dhauli ) - பூரி மாவட்டம் - ஒரிசா
2. கிர்னர் (Girnar ) - ஜெனகாத் - குஜராத்
3. ஜகடா (Jaugada ) - கன்சம் மாவட்டம் - ஒரிசா
4. கல்சி (Kalsi ) - தெர டூன் மாவட்டம் - உத்திரப்பிரதேசம்
5. சோப்ர (Sopra ) - தேனே மாவட்டம் - மகாராடிராம்
6. எர்ரகுடி (Yerragudi ) - கூர்நூல் மாவட்டம் - அந்தரபிரதேஷம்
7. மன்செற (Mansehra ) அசார மாவட்டம் - மேற்கு பாகிஸ்தான்

சிறிய கல்வெட்டுச் சாசனம்
1. Ahraura (அருர) - மிசபூர் மாவட்டம் - உத்திரப்பிரதேசம்
2. அமர் காலனி - டெல்லி
3. Bairat (பைரட்) - ஜெய்ப்பூர் மாவட்டம் - இரஜஸ்த்தான்
4. பிராமகிரி - சித்தர துர்கா மாவட்டம் - மைசூர்
5. கவிமத் - மைசூர் மாவட்டம் - மைசூர்
6. Gujarra (குஜ்ற) டாடிய மாவட்டம் - மத்திய பிரதேஷம்
7. ஜடிங்க - ராமேஸ்வர் சித்தர துர்கா மாவட்டம் - மைசூர்
8. மஸ்கி - ரைச்சூர் மாவட்டம் - மைசூர்
9. பால்கி குண்டு - ரைச்சூர் மாவட்டம் - மைசூர்
10. இராசுல மண்டகிரி - கூர்நூல் மாவட்டம் -ஆந்திரபிரதேஷம்
11. ரூப்நாத் - ஜபல்பூர் மாவட்டம் - மத்திய பிரதேஷம்
12. சகாசரம் - சகாபத் மாவட்டம் - பீகார்
13. சித்தாபுரா - சித்தர துர்கா மாவட்டம் - மைசூர்
14. எர்ராகுடி - கூர்நூல் மாவட்டம் - அந்தரபிரதேஷம்

பெரிய கல்தூண்கள்
1. கோசம்பி - அலகாபாத் மாவட்டம் - உத்திர பிரதேஷம்
2. லாரிய -அரராஜ் (Araraj ) சாம்ராஜ் மாவட்டம் - பீகார்
3. லாரிய (Lauriya ) - நந்த்கர் மதியா - சாம்ராஜ் மாவட்டம் - பீகார்
4. மிராத் - மீரூட் (Meerut ) - உத்திர பிரதேஷம்
5. இராம்பூர்வ - சமரான் மாவட்டம் - பீகார்
6. தொபர - அம்பால மாவட்டம் - ஹரியான

சிறிய கல்தூண்கள்
1. கோசம்பி - அலகாபாத் மாவட்டம் - உத்திர பிரதேஷம்
2. சஞ்சி - சஞ்சி -மத்திய பிரதேஷம்
3. சாரநாத் - சாரநாத்

திருப்பாதிகள்
1. லும்பினி - கௌதம புத்தர் பிறந்த இடம்
2. புத்த காய - புத்தராக ஞானம் பெற்ற இடம்
3. சாரநாத் - முதல் பேருரை
4. குசி நகர் - மகா பரிநிர்வாணம் அடைந்த இடம்

தமிழ் நாட்டில்
தமிழ்நாட்டில் இருந்த பௌத்த திருப்திகள்

காவிரிப்பூம்பட்டினம்,பூதமங்கலம்,புத்தமங்கலம்,சங்கமங்கலம், போதிமங்கலம் திருவிளந்துறைக் கோயில், கும்பகோணம், திருவலஞ்சுழி பட்டீச்சரம், எலயனூர், பொன்பற்றி, புத்தகுடி, உறையூர், பெருஞ்சேரி, கோட்டப்பாடி, மயூரபட்டணம் நாகைப்பட்டினம்,வெள்ளனூர், செட்டிபட்டி,ஆலங்குடிபட்டி, காஞ்சிபுரம், திருப்பாதிரிப்புலியூர்,சங்கமங்கை, ஆவுர், கூவம், ஞாயர், நாவலூர்,திருச்சோபுரம், பல்லாவரம், மாங்காடு, இரண்டாங்காடு, மதுரை, அரிட்டாபட்டி, பொதிகை, தஞ்சை, திருமாலிருஞ்சோலை, தென்கரை, வஞ்சிமாநகர், கொங்கர் பாண்டவமலை, கழுகுமலை, அழகர் மலை, புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி,நாகமலை, திருப்பரங்குன்றம், குன்னக்குடி, விருச்சியூர், வீரசிகாமணி, மருகால்தலை திருச்சிராப்பள்ளி, திருச்சாணத்துமலை, ஸ்ரீமூலவாசம், சித்தர்மலை, ஆனைமலை

திருப்தி கோவில் பௌத்த கோவில் என்பற்கான ஆதர பூர்வமான கட்டுரைhttp://www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf

நாளந்தா

• நாளந்தா என்றால் குறைவற்ற கொடை என்று பொருள்

• கல்வின் கலங்கரை விளக்கமாக விளங்கியது.

• கி.மு 415 லிருந்து 455 வரை இருந்த மன்னர் சக்ரதித்ய என்ற குமர குப்தர் இதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கினார்

• 4 நுழைவு வாயில்கள் - 10 தனித்தனியாக வளாகங்கள் - 10 கோவில்கள் - 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகள் - கருத்தரங்க அரங்குகள் - தியான மண்டபங்கள் - தர்மத்தின் புதையல் என்று அழைக்கப்பட்ட ' தர்ம கஞ்ச்' என்ற 9 மாடி நூலகம் அமைந்திருந்தது. மாணவர்கள் தங்க அனைத்து வசதிகளோடு 11 விடுதிகளில் 11500 அறைகள் இருந்தன. 10000 மாணர்கள் 2000 பேராசிரியர்கள் நாளந்தாவில் இருந்தனர்.

• பல்கலைக்கழக மதிற்சுவரின் வெளியே பெரிய ஏரிகளும், பூங்காக்களும் இருந்தன.

• இந்த பல்கலைக்கழகத்திற்கு துருக்கி, கீரிஸ், இந்தோனோஷிய, சீனா,திபெத், ஜப்பான், கொரியா, பெர்சிய போன்ற வெளிநாடுகளிருந்து மாணவர்கள் வந்து தங்கி கல்வி பயின்றனர்.

• இந்த நூலகத்தில் பௌத்தம், இந்து மதம், வானிலை, அறிவியல், மருத்துவம், கணிதம், தர்க்கவியல், யோக சாஸ்திரம் விதவிதமான ஓலைச்சுவடிகள் நிரம்ப இருந்தன.

• இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங் தன்னுடைய பயணக் குறிப்பில் - வானுயரக் கோபுரங்கள் - பனிப்படலத்தை தொடும் அளவுக்கு இருந்ததாக குறிப்பிடுகிறார்

• 1193 ம் ஆண்டு கீர்த்தி பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், துருக்கியைச் சேர்ந்த மன்னர் பக்தியார் கில்ஜியாரால் சிரழிக்கப்பட்டது. இந்த நூலகத்தை பக்தியார் கில்ஜி எரித்தபோது அங்கிருந்த உயிரோட்டமான ஓலைச் சுவடிகள் எரிந்து சம்பலாகவே 6 மாதங்கள் ஆயின என்று வரலாறு கூறுகிறது.

• பெர்சியான் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ் இசிரஜ் பக்தியார் கில்ஜியின் படையெடுப்பால் பல்கலைகழகம் மட்டும் எரியாமல், பல புத்த பிக்குகள் எரிக்கப்பட்டதகவும், ஆயிரக்காணக்காண பிக்குகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறார்

விழ்ச்சி

புத்தர் காலத்தில் சைனம், ஆசிவகம், வைதிகம் ஆகியவை இருந்தன. ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடவை, பெறும் பகை கொண்டவை. இந்த மூன்றும் பௌத்த சமயத்தோடு தொடக்கம் முதல் போரிட்டுக் கொண்டுடிருந்தன.


பௌத்தத்தின் விழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் பௌத்தத்தில் ஏற்ப்பட்ட அகப் பகையே. அகப் பகை என்பது பௌத்த சமயத்தில் தோன்றிய பெரும் உட்பிரிவுகள் ஹீனயானம், மகாயானம் .

-ஹீனயானம்- (தேரவாதம்) அல்லது குறைபாடுள்ள வழி என என்று தவறாக பெயர் வழங்கப்பட்டது. - இது பழைய பிரிவு- பௌத்த நூல்கள்எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன

- தேரவாதத்தை பின்பற்றுகின்றன பெரும்பான்மையான நாடுகள் கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், மியான்மார், வங்காளதேசம், மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனிசியா, சிங்கபூர்

மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என்பது பொருள். மகாயான நூல்கள் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. பாலி மொழி பௌத்த இலக்கியங்களை விஞ்சி நிற்க வேண்டும் என்பதற்காக வடமொழி இலக்கியங்களில் விஞ்சி எழுதப்பட்டன. இது புதிய கொள்கைகளை கொண்டது. திரிபிடகத்தில் உள்ள சில பகுதிகளைத் தள்ளியும், கௌதம புத்தர் கூறாத வேறு சில கருத்துக்களைப் புகுத்தியும் மகாயான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. வரலாற்று பூர்வமான ஆதாரமற்ற பல போதிசத்துவர்களை மகயானம் அறிமுக படுத்தியுள்ளது.

- மகாயான பௌத்தத்தை பின்பற்றுகின்றன நாடுகள் சீனா, தாய்வான், கொரியா, வியட்நாம், திபெத், ஜப்பான்

புறப்பகை- தொடர்ந்து தாக்கிய வண்ணமாய் இருந்த சைனதுடன், வைதிகத்துடன் அகப்பகையினால் போரிடவோ போட்டியிடவோ இயலாமல் செல்வாக்கை இழந்தது அதன் விழ்ச்சிக்கு வழிகோலியது.

இரு பிரிவுகள் தோன்றிய பின் சைனம் தலை எடுத்து செல்வாக்கு பெற்றது. தன்னுடைய கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாக இருந்த பெளத்தை முன்னைவிட கடுமையாக தாக்கி அதை நிலை குலையச் செய்தது. பௌத்தக் கோயில்கள், மலைக்குகைகள் எல்லாம் சைனருக்கு மாற்றப்பட்டன.


வைதிகம்

வைதிக மதம் யாகத்தில் உயிர்க் கொலை செய்யும் வழக்கத்தை கொண்டு இருந்தது. அந்நாளில் பலியிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கையும் அவற்றின் வகைகளும் இந்நாளில் நம்பவே முடியாது. கிட்டத்தட்ட எல்லா மிருகங்களும் பறவைகளும் கொல்லப்பட்டன என்று யசுர் வேதமும் பிராமணங்களும் கூறுகின்றன. யாகத்திற்கு சிறந்தது என்று உயர்வாக கருதப்பட்ட பலி மிருகங்கள் - மனிதன், காளை, ஆண் குதிரை முதலியான.

அசோகரின் பெரரசில் பிராமணர்கள் அரசின் ஆதரவுகள் அனைத்தும் இழந்து இரண்டாம் இடத்துக்குப் தள்ளப்பட்டுக் குறுநிலையை அடைந்தார்கள். காரணம் உயிர்பலிகள் அனைத்தையும் தடை செய்ததே.பிராமணர்கள் அரசு ஆதரவு மட்டுமின்றி தங்களின் தொழிலையும் இழந்தனர். யாகங்கள் நடத்துவதே முக்கியமாக் அவர்களின் தொழிலாகயிருந்தது. இந்தத் தட்சணை பல சமயங்களில் மிகவும் கனிசமாக இருந்தது. வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. எனவே பிராமணர்கள் மௌரியப் பேரரசில் சுமார் 140 ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்ட மக்களாகவே வாழ்க்கை நடத்தி வந்தனர்கள்

நால்வகை பாகுபாடு உடையதாய் பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் கொள்கை உடையதாக இருந்தது. பிராமணர்கள் தவிர மற்றவர்கள் வேதத்தை படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டது. இதனால் பொது மக்களின் செல்வாக்கு பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது.

பௌத்ததுடன் தொடர்ந்து சண்டை இட்டுக் கொண்டிருந்த வைதிக மதம் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் தம் கோட்பாடுகளில் பல மாற்றம் செய்தது. பௌத்த கோட்பாடுகள் பலவற்றை உள்வாங்கிக் கொண்டது. புத்தர் திருமாலின் அவதாரம் என்று மக்களை அறியாமையில் மூல்கடிக்கவைத்தது. வைணமும் சைவமும் போன்ற பிரிவினைகள் இன்றி ஒரே மதமாக இருந்தது பௌத்தத்தை விழ்த்த துணையாய் இருந்தது.

பக்தி இயக்கம்

ஏழாம் நூற்றாண்டு இந்தியாவில் "சமயக் கொடுமைகள் நிறைந்த நூற்றாண்டு" என ஸ்மித் சுட்டிக்கட்டுகிறார். இந்த 7 நூற்றாண்டில் தெனிந்தியாவில் பௌத்தர்களை கொடூரமாகக் கொன்றார்கள். சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் கொண்ட பக்தி இயக்கமும், ஆதிசங்கரரின் வேதாந்த இயக்கமும் இந்தியாவில் இருந்து பௌத்தம் அழிய காரணமாய் இருந்தது.


01.திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம் திருவிளையாடற்புராணம் தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுகிறது.

02.திருமங்கையாழ்வார் நாகைபட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்து பொன்னாலான புத்த சிலையை கவர்ந்து சென்று திருவரங்கத்தில் திருப்பணி செய்தார்

03. சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டு. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்தது.

புஷ்யமித்திரன்
புஷ்யமித்திரன் நோக்கம், பௌத்தம் அரசு மதமாக இருப்பதை ஒழித்துக்கட்டுவதும், பிரமணர்களை இந்தியாவின் இறையாண்மை பெற்ற ஆட்சியாளர்களாக ஆக்குவதும்.. எனவே

01. புஷ்யமித்திரன் அரியணை ஏறியபின் அசுவமேத வேள்வி நடத்தினான். இது 5 நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமுத்திரகுப்தன் காலத்திலும் அவனுக்கு பின் வந்த காலத்திலும் முழு அளவுக்கு வளர்ச்சி அடைந்தது.

02.மனுஸ்மிருதி, சுமதி பார்காவா என்பவரால் கி.மு 185 க்குப் பின்னர் தான் எழுதப்பெற்றது. அது முதன் முதலாக புஷ்யமித்திரனின் ஆட்சியில் தான் வெளிடப்பட்டது. பிராமணர்கள் மனம் கோனும்படியான எதையும் மன்னன் செய்யக்கூடாது என்றது மனு.

03.புஷ்யமித்திரன் ஒவ்வொரு பௌத்த பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்தான்.

04. Dr ஹரப்பிரகாஷ் சாஸ்த்ரி குறிப்பிடுகிறார்
“வைதிக வெறியும் பிற மத வெறுப்பும் கொண்ட சுங்கப் பேரரசர்களின் ஆடசியில் பௌத்தர்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதை கற்பனை கூடச் செய்து பார்க்கக் முடியாது. பல பௌத்தர்கள் இப்போதும் கூட புஷ்யமித்திரனின் பெயரை மிக வெறுப்போடு சாபமிடும் முறையில் தான் உச்சரிக்கிறார்கள் என்று சீனா ஆதாரங்களிருந்து தெரிகிறது”.

பிற இந்து அரசர்கள்

பிராமணியம் புத்த மதத்தை வேருடன் அழிப்பதற்கான அரசியல் அதிகாரத்தை அடைந்தது. அவ்வாறே அழித்தும் விட்டது.

01.அஜதேவன் கி.பி 1174 - 6 ல் குஜராத்தின் அரசனானான். பட்டத்திற்கு வந்தவுடன் சமணர்களை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்த முற்ப்பட்டான். அவர்களின் தலைவரை சித்திரவதை செய்து கொன்றான்.

02. வின்சென்ட் ஸ்மித் கூறுகிறார் சசங்கன் ஹர்ஷரின் சகோதரரை கொடூரமாக கொன்றான். இவன் சிவனை வழிபட்டான். பெளத்தை வெறுத்தான். பெளத்தை வேரோடு பிடுங்கியெறிந்து அதனை அழித்தான். புத்த கயாவிலிருந்து போதி மரத்தைத் தோண்டி எடுத்து கொளுத்தினான். அதுமட்டும் அல்ல பாடலிபுத்திரத்தில் புத்தரின் பாதச் சுவடு பொறித்திருந்த கல் கலகையை உடைத்தான்.

03.மிஹிரகுலன் அமைதியாக திகழ்ந்த பௌதப் பண்பாட்டை நாசப்படுத்தினான், ஸ்தூபிகள், மடங்கள் ஆகியவற்றின் செல்வங்களை கொள்ளை அடித்து அவற்றை சுவடு தெரியாமல் தரை மட்டமாக்கினான்.


பிராமணியம் அது புத்த சமயத்தை வெளியேற்றிவிட்டு அதனுடைய இடத்தில் தன் (இந்து மதம் ) அமர்ந்துக்கொண்டது.


இசுலாம்
உருவ வழிபட்டுக் கோட்பாடுடைய எல்லா சமயங்களும் முஸ்லிம்களுக்கு ஒன்றுதான். அவர்களுடைய சமயக் குறிக்கோளே உருவச் சிலைகளை உடைக்க வேண்டும் என்பதே ஆகும். இதன் அடிப்படையில்தான் பௌத்தத்தை உடைக்கவேண்டும் என்பது அவர்களின் சமய நோக்கமாயிற்று. இவ்வாறு பௌத்த சமயத்தை இந்தியாவில் மட்டும் அல்லாது எங்கெல்லாம் இசுலாம் பரவிவதோ அங்கெல்லாம் கூட அச் சமயத்தை அழித்துவிட்டது

   -பாக்தீரியா, பார்த்தியா, ஆப்கானிஸ்தான், காந்தாரம், சீனா,
துருக்கெஸ்தான்மற்றும் கூறப்போனால் ஆசிய முழுவதுமே
தனக்கு முன்னிருந்த பௌத்த சமயத்தை இசுலாம் அழித்து
விட்டது.
 







-பாமியானில் (ஆப்கானிஸ்தான்) இயற்கையான பாறைகளால்  குடைந்து செதுக்கப்பட்ட 60 மீட்டர் உயரமுள்ள ஒரு மிகப்
பெரிய புத்தர் சிலை. ஆப்கான் உள்நாட்டுப் போரில் தாலிபான் தீவிரவாதிகளால்28 -11 - 2001 பாமியானில் இந்தச் சிலை குண்டு
வைத்துக் தகர்க்கப்பட்டது.


முகம்மது இபின் காசிம்
இந்தியாவின் மீது முகம்மது இபின் காசிம் என்பவன் கி.பி 712 ல் நடத்திய படையெடுப்புதான் முதல் இசுலாமியர் படையெடுப்பாகும். ஆனால் அதிக சேதம் விளைவிக்கவில்லை.

முகமது கஜினி
முகம்மது இபின் காசிமுக்கு பின் முகமது கஜினி படையெடுத்து வந்தான். இவன் இந்துக் கோயில்களையும் பௌத்த மடங்களையும் நாசப்படுத்தி கோயில் பூசாரியையும் பௌத்த பிக்குகளையும் படுகொலை செய்தான்.

முகமது கோரி
முகமது கஜினிக்கு பின் படையெடுத்து வந்த முகமது கோரியும் முகமது கஜினி செய்ததைத்தான் செய்தான்.

இசுலாம் படையெடுப்பாளர்கள் நடத்திய கொடூரமான படுகொலைகள் வைதிக இந்துக்கள் நடத்தியதை விட பயங்கரமானது.

   -இசுலாமியர் தளபதிகளால் பெருந்தொகையானவர்கள்
படுகொலை செய்யப்பட்டனர்.

   -வெற்றி வாகை சுடிய முஸ்லிம் தளபதி பௌத்த மடங்களில்
பல நூலகங்கள் இருப்பதை கண்டான். இந்த நூல்களில் எத்தகைய புத்தகங்கள் இடம் பெற்றுருக்கின்றன என்பதையும் இப் புத்தகங்களில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்துக் கொள்ள அவன் விரும்பினான். ஆனால் இவற்றை அவனுக்கு படித்துக் கட்டக் கூடிய
ஒரு பிக்கு கூட உயிரோடில்லை. அந்த அளவுக்கு பௌத்த பிக்குகள்
1000 க் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

   -இசுலாமியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பஞ்சாப்,
காஷ்மீரம், பேஹார் ஷிரிபைக் சுற்றியுள்ள மாவட்டம் வங்காளத்தின் வடகிழக்குப் பகுதிகள் முதலியன வலுவான பௌத்த கேந்திங்களாக இருந்தன. ஆனால் இன்று இங்கேல்லாம் இசுலாமியரின் மக்கள் தொகையே மேலோங்கி
நிற்கிறது.


பௌத்த சமய குருமார்கள் அமைப்பு இசுலாமியர்களின் வாளுக்கு இரையானது. இந்த தாக்குதலிருந்து அது மீளவே இல்லை. இதைப்போலவே இசுலாமியரால் பிரமணர்களை ஒரே அடியால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. காரணம்

-300 ஆண்டுகாலம் நிகழ்ந்த இசுலாமியரின் படையெடுப்புகளின் போது இந்தியா முழுவதும் ஆண்ட அரசர்கள் யாவரும் வைதிகப் பிராமண சமயத்தை பின்பற்றியவர்கள். பிராமணியம் அரசின் ஆதரவை பெற்றிருந்தது. பௌத்தம் அவ்வாறு அரசின் ஆதரவை பெற்று இருக்கவில்லை. இந்நாட்டில் உருவ வழிபாட்டை அழிக்க வேண்டும் என்பது இசுலாமுக்கு ஆரம்பத்தில் இருந்த வெறி மறைந்து அது அமைதியான மதமாகும் வரை பிராமணர்களுக்கு அரசின்  ஆதரவு இருந்தது

-ஒருவர் பிக்கு வாகச் செயல்படும் முன் ஏற்கனவே சமயத் சடங்களின் படி பிக்குவான ஒருவரால் அவனுக்குத் தீட்சை அளிக்கப்பட வேண்டும். இசுலாமியர்கள் பௌத்தப் பிக்குகளைப்படுகொலை செய்துவிட்ட பிறகு புதிய பிக்குகளை உருவாவதர்க்குப் பழைய பிக்குகள் இல்லாது போய் விட்டனர்.

பௌத்தத்தை சேர்ந்த அரசர்கள் ஆண்ட போது பிராமணர்களை அடக்கி ஒடுக்கினார்கள் என்று கூறுவதற்கான ஒரு சில சான்று கூட கிடையாது. பிராமணர்களை பௌத்தப் பிக்குகளைப் போலவே மிகவும் சுதந்திரமாக வாழும் படி செய்தனர். ஆனால் பௌத்தர்கள் பிராமணர்களை ஆதரிக்குமாறு இந்திய அரசர்களால் பெரிதும் கொடுமைப் படுத்தப்பட்டனர். இக்கொடுமையிலிருந்து தப்பிக்க பௌத்தர்கள் இசுலாம் சமயத்தில் சேர்ந்து பௌத்தத்தை துறந்தனர்கி.பி 7 ம் நூற்றண்டுக்கு பிறகு மங்கத் தொடங்கியபௌத்தம் கி.பி 12 ம் நூற்றாண்டில் முழுமையாக மறைந்து விட்டது.


மறுமலர்ச்சி

01. பௌத்தத்தின் மறுமலர்ச்சியின் காலத்தை திரு. அலெக்ஸ்ண்டர் கன்னிங்காம் அவர்களால் தான் அறிகிறோம் என்று புகழ் பெற்ற அறிஞரான திரு. D.C ஆகிர் கூறியிருக்கிறார் . திரு. அலெக்ஸ்ண்டர் கன்னிங்காம் (1814 - 1893 )(இந்திய அகழ் ஆராய்சி நிலையத்தின் முதல் இயக்குநர்) அவர்களின் விட முயற்சியால் பல சுவையான சின்னங்கள்கிடைக்கப் பெற்றன. புதை பொருள் ஆய்வு செய்து கண்டுபிடித்தவைகள்.
- அசோகா சக்ரவர்த்தியின் தூண்கள்
-சாரனாத்தில் இருந்த சின்னங்கள்
-சாஞ்சியில் இருந்த சின்னங்கள்
- புத்த பெருமானின் பிரதம சீடரான சாரிபுத்தர் அஸ்தி
- புத்த பெருமானின் பிரதம சீடரான பௌத்த கல்யாயனர்
அஸ்தி. வேறு பல சின்னங்கள்.

02 பௌத்தத்தின் மறுமலர்ச்சி 1891ல் இந்தியாவில் ஆரம்பமாகியது. அதனை அநாகரிக தர்மபால (1864 - 1933 ) ஆரம்பித்து வைத்தார்.

-அநாகரிக தர்மபால இந்திய மகாபோதி சங்கத்தை ஆரம்பித்து
புத்தர்பெருமானின் போதனைகளை பரப்பினார்.

-1893 ல் சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் புத்தர் பெருமானுக்கு இந்த உலகம் செலுத்த வேண்டிய கடன் என்பது பற்றி அவர்பேசிய பேச்சு அங்கு வந்திருந்த மக்களிடையே ஓர் அழுத்தத்தை உண்டாக்கியது. இதே மாநாட்டில் தான் சுவாமி விவேகானந்தர் இந்து
மதத்தை பற்றி பேசினார்.

க.அயோத்திதாசர்  (1845 -1914 )

03. 1890ல்பெளத்தத்தின் உண்மைகளை முழுமையாக ஏற்று 1898ல்இலங்கை சென்று பஞ்சசீலம் பெற்று பெளத்தரானார்.இராயப்பேட்டையில் தென்னிந்திய சாக்கைய புத்த சங்கத்தை நிறுவினார். .


பெளத்தத்தின் கருத்துகளை விரிவான அளவில் பரப்புவதற்காக 1907ல் தமிழன் என்னும் பெயரில் வாரப் பத்திரிகையொன்றைத் தொடங்கி நடத்தினார்.

வைதிகம் உரிமைகொண்டாடும் சொல்லாடல்கள், சமயக்கொள்கைகள், இலக்கியவரலாறுகள் அனைத்தையும் நுட்பத்துடன் ஆராய்ந்து அவை அனைத்தும் பெளத்தமூலத்திலிருந்து திரிக்கப்பட்டவை என்பதையும் பெளத்தத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் திட்டவட்டமாக நிறுவினார்.

இந்துக் கோயில்களுக்குரிய அரசமரம், தாமரைத் தடாகம், வேப்பமரம் சூழ்ந்த கட்டடங்கள் யோகாசன சிலைவடிவ அறப்பள்ளிகள் ஆகியவை இவை அனைத்தும் பூர்வபெளத்த சங்கத்தாரின் மடங்களே. பூர்வபெளத்த குடிகளான பறையர்களை உள்ளே நுழைய விட்டால் இவற்றைக் கண்டுபிடித்து தங்களின் மடங்களைக் கைப்பற்றுவார்களோ என்னும் பீதியாலேயே ஆலயப் பிரவேசத்தடை விதிக்கபட்டிருக்கவேண்டும் என்று கருத்துரைக்கிறார்

04 . நவீன போதி சத்துவராக அறிவர் அண்ணல் அம்பேத்கர்
உருவெடுத்தார். 1907 ல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் மேட்ரிக்குலேசன் தேறிய போது அவர் பாராட்டப்பட்டார். அவருடைய ஆசிரியர் கிறிஸ்ராஜ் அர்ஜுன் கேலுக்கஸ் என்பவர் மராத்தி மொழியில் எழுதப்பட்ட கௌதம புத்தரின் வரலாற்று நூலை அவருக்கு பரிசாக அளித்தார். அந்த சிறிய பரிசு அறிவர் அண்ணல் அம்பேத்கரின் மனதில் புத்தரை பற்றியும் அவர் போதனைகளைப் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளத்தூண்டியது.

-பௌத்த சின்னமான தர்ம சக்கரத்தையும் சாரனாத்தில் அசோகரின் தூணில் இருந்த நான்கு சிங்கம் கொண்ட சின்னத்தையும் இந்திய தேசிய சின்னங்களாக மாற்றினார்

-1945 ல் மக்கள் கல்வி சங்கத்தை ஆரம்பித்தார். சித்தார்த்த கல்லூரியை நிறுவினார்.

-அவர் மாநாடு கூட்டிய இடத்திற்கு புத்தர் நகர் என்று பெயரிட்டார். ஒளரங்காபாத்தில் பௌத்தம் தழுவிய கிரேக்க அரசர் மிரிலிண்டர் என்பவரின் நினைவாக மிலாண்டு பல்கலைக்கழகத்தை நிறுவினார்

-1948 ல் பேராசிரியர் பி. லட்சுமி நரசு அவர்கள் எழுதிய Essence of Buddhism (1907) என்னும் பௌத்த சாரத்தை புதுப்பித்தார்.

-இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனமக்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களே கி.பி 4 ம் நூற்றாண்டில் குப்தா மன்னர்களால் நசுக்கப்பட்டு தீண்டத்தகாவர்களாக ஆனார்கள் என்றார் அம்பேத்கர்.

03/05/1950 - டெல்லியில் பௌத்தர்கள் பேரணி ஒன்றை
நடத்தினார்.25/05/1950 - கண்டியில் உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவில் பௌத்த சமயத்தின் தோற்றமும்
விழ்ச்சியும் பற்றி பேசினார்.

பௌத்த உபாசனா என்ற பௌத்த சூத்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
1954 இந்திய பௌத்த சங்கத்தை ஆரம்பித்தார்.14/10/1956 நாக்பூரில்5,00,000 பேருடன் பௌத்தம் தழுவினார். 05/12/1956 புத்தரும் அவர் தம்மமும் என்ற தம் நூலுக்கு முன்னுரை எழுதினார்.