செவ்வாய், டிசம்பர் 14, 2010

தமிழ் நாட்டில் இரண்டாவது விபச்சன (Vipassana ) மையம்

காந்தி கிராம், செட்டியாப்பட்டி என்னும் இடத்தின் அருகில் தமிழ் நாட்டின் இரண்டாவது விபச்சன மையம் வரவுள்ளது. திரு கோயங்கா அவர்கள் இதற்கு   தம்ம மதுரா (தம்மத்தின் இனிமை) என்னும் பெயரை வழங்கியுள்ளார். 100 மாணவர்கள் தங்கி பயிற்சி   செய்யும் வகையில் இந்த  மையம் கட்டப்பட உள்ளது







பிரதான சாலையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்,
திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும்
மதுரையிலிருந்து சுமார் 51 கிமீ தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது. சிறுமலை அடிவாரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது


நன்கொடைக்காக தொடர்புகொள்க:
திருமதி ரேணுகா மேத்தா 9443728116, 8903428116
திரு லால்ஜி வோரா - 9843052465
திரு விநாயகம் - 9444021622
திரு பரத் ஷா -9842347244
திரு அரவிந்த் தீட்சதர் - 9445391295

மின் அஞ்சல் - madhura.dhamma@gmail.com

நன்கொடை செய்ய வங்கி தொடர்பான தகவல்கள்
Vipassana Meditation Centre Madurai
State Bank of India
Account No 31262542660
SBI Branch IFS Code: SBINOO12764
SBI Swift Code : SBININBB454

அம்பேத்கரின் மகாபரிநிர்வானம் நினைவேந்தல்

6 டிசம்பர் 1956
01 . அறிவர் அண்ணல் அம்பேத்கரின் 53வது மகாபரிநிர்வாணம். பௌத்தர்களின் தீர்க்கதரிசி இந்த நாளில் அதாவது 06 -12 - 1956 . அவருடைய இல்லத்தில் இயற்க்கை எய்தினார். (26 வது அலிபூர் சாலை, புது தில்லி) 
02 . 05 -12 - 1956 அன்றிரவு அறிவர் அண்ணல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்" என்ற நூலுக்கு முன்னுரையை எழுதினார். இந்நூலை முடித்தப்பிறகு அந்நூலின் மீது கையை வைத்துக்கொண்டு உறக்கத்தில் தானாக விழுந்தார்.   
03 . தற்கால உலகத்திற்கு ஈடுகொடுக்கவும் பெளத்தத்தை நவீனமாக்கவும் பௌத்தர்களின் நூலான இந்நூலை 1951 ல் எழுத ஆரம்பித்தார்.
  
04 . 06 - டிசம்பர் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அறிவர் அண்ணல் அம்பேத்கரின் வேலையாள் தேநீர் கொடுக்க வரும் போது அசைவற்றும் முச்சற்றும் பூரண அமைதியல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் உறங்குவதை பார்த்தார். மனநிலை பாதிக்கப்பட்டவராக திரும்ப ஓடி    துயரத்தை உறவினர்களுக்கும் அங்கு வந்திருந்தவர்களுக்கும் தெரிவித்தார்.
05 . பெருந்தலைவரின் துயர மரணத்தை கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ந்தனர். இச்செய்தி காட்டுத் தீ போன்று நாடு முழுவதும் பரவியது. மக்கள் அத்துயர நிகழ்ச்சியை காண்பதற்கும் இதயப்பூர்வமான   மரியாதை செலுத்தவும் 26 , அலிபூர் சாலை, புது தில்லி நோக்கி ஓடினர். 
  
06 . உடனே இராசசபை லோக் சபை இரு அவைகளும்  பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்த ஒத்திவைதது.  இந்த  மரணச் செய்தியை அனைத்திந்திய வானொலி மூலம் ஒளிபரப்பியது. அப்போது அறிவர் அண்ணல் அம்பேத்கர் இராசசபையில் பாராளுமன்ற உறுப்பினராக    இருந்தார்.
07 . 04 டிசம்பரில்  அறிவர் அண்ணல் அம்பேத்கர் இராச சபைக்கு வந்திருந்ததால் மக்கள் முதலில் நம்பவில்லை.
இறுதி ஊர்வலம்
01 . அவருடைய உடல் புது தில்லி விமான நிலையத்திற்கு 06 -டிசம்பர் இரவு 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
02 . விமானம் இரவு 12 மணிக்கு பூறப்பட்டு இரவு 2 மணிக்கு பம்பாய் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதற்கிடையில் சுமார் 20,000 மக்கள் கடுங்குளிரில் காத்துக்கொண்டிருந்தனர்.
03 . 07 டிசம்பர் அதிகாலை அறிவர் அண்ணல் அம்பேத்கர் உடல் அவருடைய இல்லத்தை அடைந்தது. பிக்குகள் ஏற்க்கனவே அங்கு வந்திருந்தனர்.
04 . இறுதி சடங்கிற்காக நண்பகல் 2 மணிக்கு இல்லத்திலிருந்து  புறப்பட்டது (இராஜகிரகம்   - தாதர் - பம்பாய்). எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் சாலையின் இருமருங்கிலும் நின்றுகொண்டு   மலர்களையும் பூமாலையையும் அவரின் உடல் மீது தூவினர்.
05 . மரண துயிலிடத்தில் V.K கெய்க்வார்டு கூறினார்
இந்த மாதம் 15 ம் நாள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம்ம தீட்சையை  பெருந்திரளான மக்களுக்கு கொடுக்கப்போவதாக இருந்தார். நீங்கள் அவருடைய விருப்பத்தை நீறைவேற்றுவீர்களா? இதைக் கேட்டதும் 5,00,000 மக்கள் புத்த, தம்ம சங்கத்திடம் சரணடைந்தனார்.
  
06 . இந்த வழியில் அவரது இறுதி சடங்கு உயரிய பிக்குகள் கண்ணிருடன் செய்யப்பட்டது.   
 முழுநிகழ்ச்சியும் மிகுந்த அமைதியுடன் நடந்தெரியது.
நன்றி : சக்தி சாதனா மிச்சியன் (தேஹ்ரடுன்

சனி, டிசம்பர் 04, 2010

அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம்

அண்ணல் அம்பேத்கரின் உருவத்தை பயன்படுத்தாத கட்சிகள் இந்தியாவில் இல்லை, புதிதாக முளைக்கும் கட்சிகளும்,  அண்ணலுடன் முற்றிலும் முரண்படுவோரும் உள்பட


அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகள் புத்தருக்கு முன் இந்தியாவில் எந்த மதமும் வரைந்தது இல்லை. புத்தருக்கு பின் அறிவர் அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்தியாவில் இந்தியர்கள் மதத்தினால், மொழியால், சாதியால் சமமானவர்கள் இல்லை. சமத்துவத்தில் நம்பிக்கை இல்லாத வன்முறையை துணைகொண்டு மக்களை வேறுபடுத்தி பிறப்பின் அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கப்பட்டது. மனுவை எரித்து மானுட விதியை படைத்த அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தினால் மட்டுமே இந்தியர்கள் அனைவரும் சமமானார்கள்


கபிலர், புத்தர், மகாத்மா சோதி ராவ் போன்ற சமுதாயச் சீர்திருத்தவாதிகளை தாம் வழிகாட்டியாக கொண்டவர்.


எதற்கும் உதவாத திரைப்படத்திற்கு எல்லாம் வகைவகையான எண்ணிக்கை அடங்காத விளம்பரங்கள். அறிவர் அண்ணலின் திரைப்படத்தை தமிழில் வெளியிட முட்டுக்கட்டைகள் தான் எத்தனை எத்தனை

பகுத்தறிவாளிகளை இருட்டடிப்பு செய்வது அரசு பட புத்தகங்களில் மட்டும் அல்ல தொலைகாட்சி, திரைப்படம் என அனைத்து ஊடகங்களிலும். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், நினைவு நாளில் ஒரு செய்தியாக கூட தொலைகாட்சிகளில் கண்டது இல்லை (பொதிகை தொலைக்காட்சியை தவிர). ஆனால் எந்த ஆண்டும் இல்லாத இந்த ஆண்டு மட்டும் ஏன் தமிழர் பிணம் தின்னும் இந்த காங்கிரஸ் அம்பேத்கரின் மீது இவ்வளவு பற்று. சென்னையில் காணுமிடங்களில் எல்லாம் அம்பேத்கரின் நினவு நாள் குறித்து காங்கிரசுகரர்களின் பதாகைகள்



இந்தியாவிற்கு தற்போது உள்ள மதங்கள் ஏதும் இந்தியாவில் தோன்றியது இல்லை. இந்தியாவில் தோன்றியவை சைனாமும் பௌத்தமும்.

உலக நாடுகளில் பண்டைய இந்தியாவின் பெருமைக்கு காரணம் புத்தர் அன்றி வேறு யாரும் இல்லை. புத்தர் பெருமானின் 2550 வது பரி நிப்பாண ஆண்டை இந்தியா அரசு ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்தது. அந்த ஆண்டு கூட அரசு விடுமுறை அளிக்கவில்லை. சமத்துவத்தின் மீது நம்பிக்கை அற்று வன்முறையை கையாண்ட மதங்களுக்கு எல்லாம் விழாக்கள், அரசு விடுமுறை. துவக்க விழா நிறைவு விழா இவ்விரண்டையும் அரசியல் விழாவாக விழா நடத்தி முடித்து விட்டது கலைவாணர் அரங்கில் தமிழக அரசு. பண்பாற்ற அறிவுக்கு ஒவ்வாத கதை பூரான பாத்திரங்களுக்கு திராவிட கட்சி என்று சொல்லும் தொலைகாட்சிகளில் தடை இன்றி வளம் வருகிறது. (காணுங்கள் இந்தியாவின் புத்தருக்கான முதல் தொலைக்காட்சி http://lordbuddhatv.com ) பௌத்தத்தை மீண்டும் இந்தியாவிற்கு தந்தவர் அறிவர் அண்ணல் அம்பேத்கர்.


தலித் இன தலைவன்,
அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவான் என்று சொல்லி அரசியல் வியாபாரம் செய்கின்றவன்கூட இந்தப் படம் தமிழில் வெளிவராதது குறித்து கவலைப்படவில்லை. அடிவருடி எலும்பு பொறுக்கி தின்னிகளை இனியாவது அடையலாம் கண்டு புறம் தள்ளுவோம்.

இத்திரைப்படம் வெளிவர உழைத்த அனைவருக்கும் நன்றி
வழக்கறிஞர் சத்தியசந்திரன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
திரு எடிட்டர் பி. லெனின்
வே. மதிமாறன்
பா.லெமூரியன்