வியாழன், ஜூலை 08, 2010

இந்தியாவின் மே தின தந்தை

                   இந்தியாவின் முதல் தொழிலாளர் நல அமைச்சர்
                        [1942  பிரிட்டிஷ் வைசிராய் கவுன்சில்]

          இந்தியாவின் தொழிலாளர் - அரசு  உழியர்களின் சட்ட பாதுகாப்பின் தோழர்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் - M.A., Ph.D., M.Sc., D.Sc., L.L.D., D.Litt, BAR-AT-LAW



1942ம் ஆண்டு பிரிட்டிஷ் வைஸ்ராய் மாண்புமிகு லின்லித்தோ பிரபுவின் அமைச்சரவையில் முதல் தொழிலாளர் நல அம்மைச்சரக "இந்தியாவின் தொழிலாளர்கள் - அரசு உழியர்களின் சட்ட பாதுகாப்பு தோழராக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜூலை 20ம் தேதி பதவியேற்றார் .


1880ல் ஐரோப்பா, வட, தென் அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரிய ஆகிய நாடுகளில் முதல் முறையாக 8 மணி நேர வேலை வேண்டி பாட்டாளி வர்க்கம் வேலை நிறுதத்தை ஆரம்பித்தது. 1888ல் ஜப்பானிலும் 1885ல் ரஷ்யாவிலும் 1886ல் பிரான்சிலும் வேலை நிறுத்தமும் ஆரம்பித்தனர். 1886ல் சிக்காகோ நகரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி 8 மணி நேரம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போதிருந்த அமெரிக்க முதலாளிகள் கூட்டம் அரசின் துணையோடு காவல் துறையை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லபட்டர்கள்.  இரத்த ஆறு வெள்ளமென ஓடியது. அந்நிகழ்வில் இன்று வரையில் அங்கு எத்தனை தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற விவரம் உலகிற்கு புரியாத புதிராகும். அதன் பின்னர் 1888ல் லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் மகா சபை மே தினத்தை சர்வதேச தொழிலாளர்களின்   போரட்ட தினமாக கருத வேண்டுமென தீர்மானம் நீறைவேற்றியது.  1891ல்  மே தினம் அதிகரபூர்வமாக சர்வதேச தொழிலாளர் இயக்கதின்  நினைவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1917ல் ரஷியாவில் அக்டோபர் புரட்சிக்கு பின் மே தினம் அதிகரபூர்வமான தேசிய விடுமுறையாக அறிவிக்கபட்டது.


ஆனால் அதிகபடியாக எந்தவகையான போராட்டமும், உயிர் இழப்புகளும் இன்றி, ஒரு சொட்டு இரதம் கூட சிந்தாமல், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய தொழிலாளர்களின் அரசாங்க கூட்டத்தில் மத்திய மாநிய அரசுகளின் சார்பாக 8 மணி நேர வேலையை பெற்றுத்தந்தார்கள்.


அப்போது 8 மணி நேர வேலைகோப்பில் கையெழுத்து இட்டுவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வருகின்றபோது அந்த அலுவலகத்தை விட்டு வெளிய வருகின்ற போது அந்த அலுவலகத்தின் 18 படிகளிலும் 18 தொழிலாளர்கள் குப்புர படுத்துகொண்டு இருந்தார்கள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் உதவியாளர் திரு நானக் சந்த்ரட்டுவை அழைத்து வினவிய போது, நமது நாட்டிற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தல் தோழர். சுப்பையா அவர்களது தலமையில் 8 மணி நேர வேலை வேண்டி நடத்திய போரட்டத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் 8 மணி நேர வேலை வாங்கித்தந்த அண்ணலுக்கு  நன்றி கடன் செலுத்தும் வகையில் அண்ணலுடைய காலால் எங்கள் முதுகுமீது நடந்து செல்லவேண்டும் என
தொழிலாளர்கள்  கூறி படுத்து கொண்டு இருகிறறார்களம் என உதவியாளர் கூறினார். அப்போது அண்ணல் அவர்கள் இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்று கூறி, அவர்களை எழுந்திருக்க வைத்து பின் அண்ணல் அவர்கள் வீடு திரும்பினர்கள்.


மேற்கண்ட 8  மணி நேர வேலையை பெற்றுத் தந்த பிறகு.

1.  வேலைக்கு உத்தரவதம்

2 . சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு விடுமுறை

3 . தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் குறித்த சட்டம் (Trade Union Act)

4. தொழிலாளர்கள் வீபத்துகாலங்களில் விடுப்பு யிடுதல் (Medical Leave)

5 . தொழிற்சங்க கூட்டங்களில் கலந்துகொண்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

6. பெண் ஊழியர்களுக்கு மகப்பெறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Maternity Benefit Act)

7. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு

8.ஊழியர்களின் வீடுப்புகளை சேர்த்து அதனை பணப்பயனாக மற்றிகொள்ளும்   ஈட்டிய விடுப்பு ( Earned Leave)

9. அலுவலக நேரம் போக மிகுதி நேரம் பணிபுரிந்தால் அதற்க்கு தனிச்சம்பளம் வழங்குதல் (Over Time OT)

போன்றதொழிலாளர் நலச்சட்டங்களை இந்திய திருநாட்டில் கொண்டுவந்த மாமேதை தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

1942ல் ஆகஸ்ட் மதம் 7 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் டெல்லியில், முதலாளி-தொழிலாளிகளின் இணைப்பு மாநாடு நடத்தி தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும், தத்தமது பிரச்சனைகளை நேரிலே சந்தித்து ஊரையாடி சமரசம் (Conciliation) செய்துகொள்ள வழிவகை கண்டார். அந்த நடைமுறைகள் தான் இன்றும் தொழிலாளர் நல துறையில் பிரதான பணியாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அதன் பின்னேர் 1946ல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை (Minimum Wages Act) தாக்கல் செய்து  குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948ல் நடைமுறைக்கு வர ஊழைத்த உத்தமராவார்.


1945ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி மத்திய தொழிலாளர் நல  ஆணையர் (Central Labour Commissioner) என்ற புதிய பதவியினை ஏற்படுத்தி தொழிலாளர்களின் நலனை பாதுகாத்த மாபெரும் மகான் ஆவார்.

ஆகவே   இந்தியாவின் மே தினத்தையும், தொழிலாளர்கள் - அரசு ஊழியர்களின் சட்டபாதுகாப்பு தோழராகவும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றும் இன்றும் என்றும் உள்ளார்.

  G . ஆறுமுகம் B.Sc., M.A., B.L.,

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக