செவ்வாய், டிசம்பர் 14, 2010

தமிழ் நாட்டில் இரண்டாவது விபச்சன (Vipassana ) மையம்

காந்தி கிராம், செட்டியாப்பட்டி என்னும் இடத்தின் அருகில் தமிழ் நாட்டின் இரண்டாவது விபச்சன மையம் வரவுள்ளது. திரு கோயங்கா அவர்கள் இதற்கு   தம்ம மதுரா (தம்மத்தின் இனிமை) என்னும் பெயரை வழங்கியுள்ளார். 100 மாணவர்கள் தங்கி பயிற்சி   செய்யும் வகையில் இந்த  மையம் கட்டப்பட உள்ளது







பிரதான சாலையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்,
திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும்
மதுரையிலிருந்து சுமார் 51 கிமீ தொலைவிலும் இவ்விடம் அமைந்துள்ளது. சிறுமலை அடிவாரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது


நன்கொடைக்காக தொடர்புகொள்க:
திருமதி ரேணுகா மேத்தா 9443728116, 8903428116
திரு லால்ஜி வோரா - 9843052465
திரு விநாயகம் - 9444021622
திரு பரத் ஷா -9842347244
திரு அரவிந்த் தீட்சதர் - 9445391295

மின் அஞ்சல் - madhura.dhamma@gmail.com

நன்கொடை செய்ய வங்கி தொடர்பான தகவல்கள்
Vipassana Meditation Centre Madurai
State Bank of India
Account No 31262542660
SBI Branch IFS Code: SBINOO12764
SBI Swift Code : SBININBB454

அம்பேத்கரின் மகாபரிநிர்வானம் நினைவேந்தல்

6 டிசம்பர் 1956
01 . அறிவர் அண்ணல் அம்பேத்கரின் 53வது மகாபரிநிர்வாணம். பௌத்தர்களின் தீர்க்கதரிசி இந்த நாளில் அதாவது 06 -12 - 1956 . அவருடைய இல்லத்தில் இயற்க்கை எய்தினார். (26 வது அலிபூர் சாலை, புது தில்லி) 
02 . 05 -12 - 1956 அன்றிரவு அறிவர் அண்ணல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்" என்ற நூலுக்கு முன்னுரையை எழுதினார். இந்நூலை முடித்தப்பிறகு அந்நூலின் மீது கையை வைத்துக்கொண்டு உறக்கத்தில் தானாக விழுந்தார்.   
03 . தற்கால உலகத்திற்கு ஈடுகொடுக்கவும் பெளத்தத்தை நவீனமாக்கவும் பௌத்தர்களின் நூலான இந்நூலை 1951 ல் எழுத ஆரம்பித்தார்.
  
04 . 06 - டிசம்பர் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அறிவர் அண்ணல் அம்பேத்கரின் வேலையாள் தேநீர் கொடுக்க வரும் போது அசைவற்றும் முச்சற்றும் பூரண அமைதியல் அறிவர் அண்ணல் அம்பேத்கர் உறங்குவதை பார்த்தார். மனநிலை பாதிக்கப்பட்டவராக திரும்ப ஓடி    துயரத்தை உறவினர்களுக்கும் அங்கு வந்திருந்தவர்களுக்கும் தெரிவித்தார்.
05 . பெருந்தலைவரின் துயர மரணத்தை கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ந்தனர். இச்செய்தி காட்டுத் தீ போன்று நாடு முழுவதும் பரவியது. மக்கள் அத்துயர நிகழ்ச்சியை காண்பதற்கும் இதயப்பூர்வமான   மரியாதை செலுத்தவும் 26 , அலிபூர் சாலை, புது தில்லி நோக்கி ஓடினர். 
  
06 . உடனே இராசசபை லோக் சபை இரு அவைகளும்  பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்த ஒத்திவைதது.  இந்த  மரணச் செய்தியை அனைத்திந்திய வானொலி மூலம் ஒளிபரப்பியது. அப்போது அறிவர் அண்ணல் அம்பேத்கர் இராசசபையில் பாராளுமன்ற உறுப்பினராக    இருந்தார்.
07 . 04 டிசம்பரில்  அறிவர் அண்ணல் அம்பேத்கர் இராச சபைக்கு வந்திருந்ததால் மக்கள் முதலில் நம்பவில்லை.
இறுதி ஊர்வலம்
01 . அவருடைய உடல் புது தில்லி விமான நிலையத்திற்கு 06 -டிசம்பர் இரவு 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
02 . விமானம் இரவு 12 மணிக்கு பூறப்பட்டு இரவு 2 மணிக்கு பம்பாய் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதற்கிடையில் சுமார் 20,000 மக்கள் கடுங்குளிரில் காத்துக்கொண்டிருந்தனர்.
03 . 07 டிசம்பர் அதிகாலை அறிவர் அண்ணல் அம்பேத்கர் உடல் அவருடைய இல்லத்தை அடைந்தது. பிக்குகள் ஏற்க்கனவே அங்கு வந்திருந்தனர்.
04 . இறுதி சடங்கிற்காக நண்பகல் 2 மணிக்கு இல்லத்திலிருந்து  புறப்பட்டது (இராஜகிரகம்   - தாதர் - பம்பாய்). எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் சாலையின் இருமருங்கிலும் நின்றுகொண்டு   மலர்களையும் பூமாலையையும் அவரின் உடல் மீது தூவினர்.
05 . மரண துயிலிடத்தில் V.K கெய்க்வார்டு கூறினார்
இந்த மாதம் 15 ம் நாள் அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம்ம தீட்சையை  பெருந்திரளான மக்களுக்கு கொடுக்கப்போவதாக இருந்தார். நீங்கள் அவருடைய விருப்பத்தை நீறைவேற்றுவீர்களா? இதைக் கேட்டதும் 5,00,000 மக்கள் புத்த, தம்ம சங்கத்திடம் சரணடைந்தனார்.
  
06 . இந்த வழியில் அவரது இறுதி சடங்கு உயரிய பிக்குகள் கண்ணிருடன் செய்யப்பட்டது.   
 முழுநிகழ்ச்சியும் மிகுந்த அமைதியுடன் நடந்தெரியது.
நன்றி : சக்தி சாதனா மிச்சியன் (தேஹ்ரடுன்

சனி, டிசம்பர் 04, 2010

அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம்

அண்ணல் அம்பேத்கரின் உருவத்தை பயன்படுத்தாத கட்சிகள் இந்தியாவில் இல்லை, புதிதாக முளைக்கும் கட்சிகளும்,  அண்ணலுடன் முற்றிலும் முரண்படுவோரும் உள்பட


அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகள் புத்தருக்கு முன் இந்தியாவில் எந்த மதமும் வரைந்தது இல்லை. புத்தருக்கு பின் அறிவர் அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்தியாவில் இந்தியர்கள் மதத்தினால், மொழியால், சாதியால் சமமானவர்கள் இல்லை. சமத்துவத்தில் நம்பிக்கை இல்லாத வன்முறையை துணைகொண்டு மக்களை வேறுபடுத்தி பிறப்பின் அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கப்பட்டது. மனுவை எரித்து மானுட விதியை படைத்த அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தினால் மட்டுமே இந்தியர்கள் அனைவரும் சமமானார்கள்


கபிலர், புத்தர், மகாத்மா சோதி ராவ் போன்ற சமுதாயச் சீர்திருத்தவாதிகளை தாம் வழிகாட்டியாக கொண்டவர்.


எதற்கும் உதவாத திரைப்படத்திற்கு எல்லாம் வகைவகையான எண்ணிக்கை அடங்காத விளம்பரங்கள். அறிவர் அண்ணலின் திரைப்படத்தை தமிழில் வெளியிட முட்டுக்கட்டைகள் தான் எத்தனை எத்தனை

பகுத்தறிவாளிகளை இருட்டடிப்பு செய்வது அரசு பட புத்தகங்களில் மட்டும் அல்ல தொலைகாட்சி, திரைப்படம் என அனைத்து ஊடகங்களிலும். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், நினைவு நாளில் ஒரு செய்தியாக கூட தொலைகாட்சிகளில் கண்டது இல்லை (பொதிகை தொலைக்காட்சியை தவிர). ஆனால் எந்த ஆண்டும் இல்லாத இந்த ஆண்டு மட்டும் ஏன் தமிழர் பிணம் தின்னும் இந்த காங்கிரஸ் அம்பேத்கரின் மீது இவ்வளவு பற்று. சென்னையில் காணுமிடங்களில் எல்லாம் அம்பேத்கரின் நினவு நாள் குறித்து காங்கிரசுகரர்களின் பதாகைகள்



இந்தியாவிற்கு தற்போது உள்ள மதங்கள் ஏதும் இந்தியாவில் தோன்றியது இல்லை. இந்தியாவில் தோன்றியவை சைனாமும் பௌத்தமும்.

உலக நாடுகளில் பண்டைய இந்தியாவின் பெருமைக்கு காரணம் புத்தர் அன்றி வேறு யாரும் இல்லை. புத்தர் பெருமானின் 2550 வது பரி நிப்பாண ஆண்டை இந்தியா அரசு ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்தது. அந்த ஆண்டு கூட அரசு விடுமுறை அளிக்கவில்லை. சமத்துவத்தின் மீது நம்பிக்கை அற்று வன்முறையை கையாண்ட மதங்களுக்கு எல்லாம் விழாக்கள், அரசு விடுமுறை. துவக்க விழா நிறைவு விழா இவ்விரண்டையும் அரசியல் விழாவாக விழா நடத்தி முடித்து விட்டது கலைவாணர் அரங்கில் தமிழக அரசு. பண்பாற்ற அறிவுக்கு ஒவ்வாத கதை பூரான பாத்திரங்களுக்கு திராவிட கட்சி என்று சொல்லும் தொலைகாட்சிகளில் தடை இன்றி வளம் வருகிறது. (காணுங்கள் இந்தியாவின் புத்தருக்கான முதல் தொலைக்காட்சி http://lordbuddhatv.com ) பௌத்தத்தை மீண்டும் இந்தியாவிற்கு தந்தவர் அறிவர் அண்ணல் அம்பேத்கர்.


தலித் இன தலைவன்,
அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவான் என்று சொல்லி அரசியல் வியாபாரம் செய்கின்றவன்கூட இந்தப் படம் தமிழில் வெளிவராதது குறித்து கவலைப்படவில்லை. அடிவருடி எலும்பு பொறுக்கி தின்னிகளை இனியாவது அடையலாம் கண்டு புறம் தள்ளுவோம்.

இத்திரைப்படம் வெளிவர உழைத்த அனைவருக்கும் நன்றி
வழக்கறிஞர் சத்தியசந்திரன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
திரு எடிட்டர் பி. லெனின்
வே. மதிமாறன்
பா.லெமூரியன்

வியாழன், செப்டம்பர் 23, 2010

யார் தீண்டத்தகாதவன்? Vasala Sutta

மனிதனின் தீய குணங்களை புத்தர் இந்த வசல சுத்தத்தில் பட்டியல் இட்டுக் காட்டுகிறார். மேலும் பிறப்பால் எந்த ஒருவரும் உயர் அடைவதில்லை என்று ஆணித்தரமாக விளக்கியுள்ளார்.

ஒரு நாள் புத்தர் உணவு ஏற்கும் பொருட்டு சாவதி நகருக்குள் சென்றார். அப்பொழுது பாரத்வாஜர் என்ற அந்தணர் பிரம்மயாகத்தை முடித்து ஒரு நல்ல சகுணத்திற்காகக் காத்திருந்த பொழுது புத்தர் தனது இல்லத்தை நோக்கி வந்து கொண்டுருப்பதை கண்ணுற்ற அவர், புத்தரை நோக்கி கடுஞ் சொற்களில் கூறலானார்.

"அங்கேயே நில்லும்"
"தலையை மழித்திருக்கும் துறவியே
அனுதாபத்திற்க்குரிய யோகியே
தீண்டத்தகாதவனே"

புத்தர் வினவுகிறார் :
உமக்கு தெரியுமா அந்தணரே யார் ஒருவன் தீண்டத்தகாதவன் என்று? நாம் கூறுபவைகளை மனதில் நன்கு இருத்திக் கொள்வீராக.

01. எளிதில் வெகுளிக்கு உட்படுபவன், நீங்கா வெறுப்பை மனதில் கொண்டவன், நன்மை இருந்து விலகிச் செல்பவன், முரண்பாட்டுக் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவன்

02 . மண்ணுயிர்களுக்குத் தீங்கை வீளைவிப்பவன், அவன் ஒரு முறை பிறந்தவன் ஆயினும், இரு முறை பிறந்தவன் ஆயினும் உலக உயிர்களின்பால் கருணை இல்லாதவன்.
அந்தணர்கள் உபநயத்திற்கு முன்பு ஒரு பிறவி ஆகவும், பூணுலை தரித்து தொடரப்படும் வாழ்வை இரண்டாம் பிறவி ஆகவும் கருதிக்கொள்வதால் புத்தர் ஒரு பிறவி பிறந்தாலும் இரு பிறவி எடுத்தாலும் என்று கூறுகிறார்
03. கிராமங்களையும், சிறிய சந்தைப் புறங்களையும் முற்றகையிற்று, அவைகளை எல்லாம் அழித்து ஆக்கிரமிப்புச் செய்பவன்.

04. கிராமத்தில் இருந்தாலும், வனத்தில் வாழ்ந்தாலும் ஒருவன் தனக்கு வழங்கப்படாததும், பிறரிடம் இருந்து கவர்ந்ததுமான பொருளைக் கொண்டு வாழ்கிறவன்

05. கடனைப் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பிச் செலுத்துமாறு ஆணையிடப்படும் பொழுது "உமக்கு நான் கடன்பட்டவன் அல்ல" என்றுகூறி ஓடி மறைகிறவன். 

06. சிறிய அற்ப பொருள்களின் மீது ஆவா கொண்டு, தனிவழியே செல்லும் ஒருவனை கொன்று அவன் கைப்போருளை கவர்கிறவன்

07. தன் பொருட்டோ அல்லது பிறரின் பொருட்டோ அல்லது பெரும் செல்வத்தின் பொருட்டோ சாட்சியம் கூற அழைக்கப்பாட்டிருக்கும் பொழுது பொய் உரை கூறுகிறவன்.

08. வன்முறையாலோ அல்லது ஒப்புதலுடனோ உறவினர்களின்  மற்றும் நண்பர்களின் துணைவிகளுடன் கூட ஒழுக்கம் கொண்டுள்ளவன்.

09 . பெரும் செல்வம் உடையவனாக இருந்தும் தங்களது இளமைக் காலத்தைக் கடந்து முதுமையுற்றிருக்கும் பொற்றோர்களைப் பேண மறுக்கிறவன்.

10. தனது தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மாமன், மாமி இவர்களை அடித்துத் துன்புறுத்திக் கடுஞ்சொல் கூறி அவர்களின்  மனதைப் புண்படுத்துகிறவன்.

11 . நன்மை யாது? என விளக்கம் கேட்கப்படும் பொழுது, நன்மையை மறைத்து தீமையைப் போதிக்கிறவன்.

12 .தீமையை செய்துவிட்டு பிறர் அதை அறியக்கூடாது என்பதற்காக அதை மறைக்கிறவன்.

13. பிறரின் இல்லம் சென்று நல்விருந்து அருந்திக் களித்துவிட்டு அவர்களுக்குத் திரும்ப அதே போன்ற விருந்தோம்பலைச் செய்ய மறுக்கிறவன்

14 .ஓர் அறவோரையோ, ஒரு ஞானியையோ, ஒரு துறவியையோ       பொய்யுரை கூறி ஏமாற்றுகின்றவன்.

15. ஓர் அறவோரையோ, ஒரு ஞானியையோ, ஒரு துறவியையோ கடுஞ்சொல் கூறி அவர்களை வெறுப்படையச் செய்து, உணவு வேலை வரும் பொழுது அவர்களுக்கு உணவு கொடுக்க மறுக்கிறவன்.

16 .இவ்வுலகில் தான் அறியாமையால் பீடிக்கப்பட்டு இல்லாத ஒன்று நிகழும் என இறைவாக்குக் கூறி அதன் பொருட்டு பொருளை எதிர்நோக்குகிறவன்

17 . தன்னை உயர்த்தி பிறரைத் தாழ்த்தி தற்பெருமையால் தவறிழைக்கிறவன்

18. மற்றவரை வெறுப்படையச்செய்து, செல்வத்தின் மீது பற்று கொண்டு சிற்றின்பங்களில் நாட்டம் கொண்டு சுயநலமிக்கவனாக பிறரை வஞ்சிகிறவன் தீயவற்றை செய்வதற்கு அச்சமும் நாணமும் அற்றவனாக இருககிறவன்.

19. புதர்களையோ, அவர்களது சீடர்களையோ,ஏகாந்த வாழ்க்கை வாழும் பரிவிராஜகர்களையோ, இல்லறத்தார்களையோ, கடுஞ்சொற்களால் விமரிசிப்பவன்.

20. அரகந்த நிலையை அடையாது, தாம் அரகந்த நிலையை அடைந்து விட்டதாக கூறிகொள்கிறவன். இவர்களே தீண்டத்தகாதவர்கள்.


பிறப்பால் ஒருவர் தீண்டத்தகாதவர் அல்ல
பிறப்பால் ஒருவர் அந்தணர் அல்ல
அவரவர் செயலால் ஒருவர் தீண்டத்தகாதவராகிறார்
அவரவர் செயலால் ஒருவர் அந்தணராகிறார்


அந்தணரின் காழ்ப்புஉணர்வுக்கு காரணம்  
01. புத்தரும் நிகண்ட நாத புத்திரர் என்ற மகா வீரரும்தான்,  தங்களது சீடர்கள் தலையை மழித்துக்  கொள்ளவேண்டும் என்ற ஒரு புதிய முறையை ஏற்படுத்தினார்கள்.

02 . இது இந்திய துறவியல் முறைக்கு முற்றிலும் புதியது மட்டுமல்ல முரண்பட்டதும் கூட. ஏனெனில் இந்திய யோகிகளும், துறவிகளும், தவ சீலர்களும் நீண்ட ஜடாமுடியைக் கொண்டு மரஉரி ஆடைகள் அல்லது மான், புலி போன்ற விலங்கினங்களின்  தோல்களை ஆடையாக அணிந்து  இருந்தினர்.

03 . புத்தர் முற்றிலும் வேறுபாடான தூய மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த செந்நிற ஆடைகளான "சீவர ஆடையை"  இந்திய ஆன்மிக வரலாற்றில் புதிதாக புகுத்தினார்.

04 . அந்தணர்களுக்கே உரியது என்று கருதப்பட்ட சந்நியாச தீட்சையைப் புத்தர் பெருமான் எல்லோருக்கும் தடை இன்றி பெறுவதற்கு அனுமதி அளித்தார்.

திங்கள், செப்டம்பர் 13, 2010

புத்த நெறி - சிறு குறிப்புகள்

திரி சரணம்
01 புத்தம்
02 தம்மம்
03 சங்கம்

மூன்று வகையான ஆவாக்கள்
01 . காம தன்ஹா- புலன் இன்பங்களுக்கான ஆவா
02 . பவ தன்ஹா - இருத்தலுக்கான ஆவா
03 . விபவ தன்ஹா - இல்லாதிருக்க ஆவா

நான்கு உயரிய உண்மைகள்
01 . துக்கம் - அனைத்து உயிர்களையும் பாதிக்கும் பிணி
02 . காரணம் -ஆவா அப்பிணியை விளைவிக்கும் காரணம்
03 . நிவாரணம் - பிணியை ஒழிக்க இயலும்
04 . நிவாரண மார்க்கம் - பிணியை ஒழிக்கும் மருந்து
      ( உன்னத எண் வழிப்பாதை)

சீலம்
01 . பஞ்ச சீலம் - இல்லறத்தாருக்கு உரியது
02 . அஷ்ட சீலம் - சற்று உயர் நிலை அடைந்தவருக்கு உரியது
03 . தச சீலம் - துறவிக்கு உரியது

பஞ்ச சீலம்
01 உயிர் வதைப் புரிவதை தவிர்த்திடும் அறம்
02 . பிறர் பொருள் கவரலை தவிர்த்திடும் அறம்
03 . பிழையுறு காமத்தைத் தவிர்த்திடும் அறம்
04 . பொய்யுரை புகழலை தவிர்த்திடும் அறம்
05 . மனதினை மயக்கியே பிழை செய்ய தூண்டிடும்
       -மதுக்குடி வெறியினை தவிர்த்திடும் அறம்

EIGHT FOLD PATH / உன்னத எண் வழிப் பதை (அட்டாங்க மார்க்கம் )

I .  WISH DOM/மெய்யறிவு (பஞ்ஞா)
01 . RIGHT UNDERSTANDING / நற்காட்சி (சம்மாதித்தி)
02 . RIGHT THOUGHT / நற்கருத்து (சம்மா சங்கப்போ)

II . ETHICAL / நல்லொழுக்கம் (சீலம்)
03 . RIGHT SPEECH / நல்வாய்மை (சம்மா வாச்சா)
04 . RIGHT ACTION / நற்செய்கை (சம்மா கமந்தோ)
05 . RIGHT LIVELIHOOD / நல்வாழ்க்கை (சம்மா அறிவோ)

III MENTAL DISCIPLINE / நற்சாமதி (சமாதி)
06 . RIGHT EFFORT / நன்முயற்சி (சம்மா வியாயமோ)
07 . RIGHT MINDFULNESS / நற்கடைபிடி (சம்மா சத்தி)
08 . RIGHT CONCENTRATION / நல்லமைதி (சம்மா சாமதி)

தீவீணைகள்/ (அகுசஸல கம்ம)
I உடலால்/(காயகம்ம)
01 . கொலை
02 . களவு
03 . காமம்

II . நாவினால்/(வசிகம்ம)
04 . பொய் கூறல்
05 . புறங் கூறல்
06 . கடுஞ் சொல் கூறல்
07 . பயனில் சொல் கூறல்

III . மனதால்/ (மனோகம்ம)
08 . வெஃகல் - பிறர் பொருள் விழையாமை
09 . பொல்லாக் கட்சி
10 . வெகுளல்

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

PRABHAVA SUTTA / வீழ்ச்சிக்கான காரணங்கள் (பராபவ சுத்தங்)

மனிதனின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் மனித இனத்தின் ஒழுக்கம், பண்பு, தரம் குறைந்து போவதின் காரணங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் பராபவ சூத்திரம் என்னும் உரையில் பகவான் புத்தர் விளக்கியுள்ளார்.

இடம் : சாவத்தி என்னும் நகரத்தின் அருகேயுள்ள ஜேதவனப் புஞ்சோலை

01 . தர்மத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்

02 . தீயவர்கள் அவர்களுக்கு பிரியமானவர்கள்

03 . தூக்கம், ஊர் சுற்றுவது, சோம்பேறித்தனம்

04 . தாய் தந்தையைக் காப்பற்றாமல் இருப்பது

05 . பொய் சொல்லி ஏமாற்றுதல்

06 . சுயநலம் - தான் தனியே பொருள்களை அனுபவித்தல்

07 . தனது சுற்றத்தாரை வெறுப்பது

08 . விபச்சாரம், குடிபழக்கம், சூதாட்டம்

09 . பிறன் மனைவி நோக்கல்

10 . வயதான ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்தல்

11 . அதிகாப்பூர்வமான இடத்தில் குடிபழக்கம், வீண் செலவு செய்பவரிடம் அதிகாரத்ததை ஒப்படைத்தல்.

12 . பேராசை, சுயநலம்

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

Sri Lanka Guardian: The Buddha was against animal sacrifice

Sri Lanka Guardian: The Buddha was against animal sacrifice

Tamil people who lived for more than 2,500 years in the northern and eastern parts of Sri Lanka are living in eternal fear to express their feelings. They do not have even fundamental rights. Let the world to investigate the international genocide in Sri Lanka

The Singhalese Buddhist claims that they are pure Buddhist. When the teaching of the Buddha and the practice of the Singhalese are discordant, how can they be as Buddhist?

The teaching of the Buddha was more egalitarian. Then how the justice can be different to two sets of people? How the violation of doctrine of Buddha, can be Buddhist?


Police have powers to record statements, investigate and prosecute offenders. The concentrations of powers allowed the police to increase in torture, disappearances and deaths. The police and army coming to house, raping with no fear of punishment and rub chilly powder into sensitive parts of body. Women and children were forcibly dragged from their home raped in public while the police officers were watching. Schoolgirls stopped on their way to school, returning from school (even 6 years old) gang raped by one after another then and killed them.


Singhalese Buddhists have the habit of collect Tamils one place and bomb and kill them. They forced the civilians to come to “No fire zone". Everyday hundreds of people taken out of the camps and killed and then deny no such things had happened. They separated the children from the parents, husband from wife. Many of the Tamils do not know whether their family members are alive or dead. No one knows how many detainees are still alive

Used the Banned Weapons including Cluster Bombs, White Phosphorous Chemical massive heavy weapons. Uses Food and Medicine as weapons of war, use the harvest season to disrupt Tamil rice cultivation and burns crops to food shortages


Homes were demolished; made hundreds of thousand of Tamils homeless and destitute, not letting thousands of children go to school, memorials and cemeteries were destructed.

Churches and Hindu Temples were damaged and attacked by Sinhala Buddhist monk. There are ancient Tamil Buddhist texts, but the Sinhalese people never allowed read over a loudspeaker

Journalists criticizing have been tortured and disappeared.

No government have the license to kill its own citizens’ en-mass under any circumstances

Stop using the name “Buddha” for all your unwholesome deeds. Stop Genocide



“Though much he recites the Sacred Texts, but acts not accordingly, that heedless man is like a cowherd who counts others' kine. He has no share in the fruits of the Holy life”The Dhammapada Yammakavagga – The Pairs -19

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பௌத்த சமயத்தைத் தழுவியபோது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

01. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.


02. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.


03. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.


04. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.


05. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.


06. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.


07. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.


08. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.


09. மானுட சமத்துவத்தை நம்புவேன்.


10. சமுத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.


11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.


12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்


13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.


14. பொய் பேச மாட்டேன்.


15. களவு செய்ய மாட்டேன்.


16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.


18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.


19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்ககொள்கிறேன்.


20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.


21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.


22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

புகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் பட்டம் பெற்ற ஆராட்சியாளர்

திரு அன்பு பொன்னோவியம் அவர்கள், உணவில் ஒளிந்து இருக்கும் சாதி என்ற நூலில் அண்ணல் அம்பேத்கரை பற்றி குறிப்பிட்டவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.


சிறப்பு
௦௦௦01 இந்திய அரசியல் அறிஞர்களிடையே அதிகமான பட்டறிவு பெற்றவர் - இந்திய 6 அறிவாளிகளில் ஒருவர் - மனுவை எரித்து மானுட விதியை படைத்தவர்

02 . அனைத்து வசதிகள் மகாத்மாவுக்கு கிடைத்தது போல பெரியருக்கோ, பெரியருக்கு கிடைத்தது போல பேரறிஞக்கோ கிடைக்கவில்லை

03 . புகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் வரலாறு, சட்டம் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்ற ஆராட்சியாளர்
a . லண்டன் -
b . ஜெர்மன் -
c . கொலம்பிய -


அறிவர் அண்ணல் அம்பேத்கர் நிலை கால வரிசை படி

1920 -25 களில்
a . பொருளாதார கல்லூரி பேராசிரியர்
b . கொல்காப்பூர் மாநாட்டில் உரை
c . சமுதாய தலைவராக அறிமுகமாதல்
d . நாகபுரி மாநாட்டில் சாதி இந்துக்களை நம்பாதிர்கள் என்று எச்சரித்தார்.
e . இலண்டன் பொருளாதார கல்லூரியில் பட்டயப் படிப்பு
f . பிரிட்டானிய மாநிலங்களில் நிதி எவ்வாறு பரவலாக்கப்பட வேண்டும் ரூபாயின் பிரச்சனை போன்ற ஆய்வேடுக்கான பட்டம்
g .கிரெஇன் நிலையத்தின் சட்டத்திற்காக பார்-அட்-லா பட்டம்
h . ஜேர்மனி பான் கலை கழகத்தில் DSC பட்டம்
i . பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்
j . ஒடுக்கப்பட்டோருக்காக மாணவர் விடுதி, மன்றம், நூலகம், விளையாட்டுத் திடல்
k . வணிகச்சட்டம் விரிவுரையாளர்

1926 -30 களில்
a . பம்பாய் சட்டமன்ற உறுப்பினர்
b . டெல்லி நாடளுமன்ற உறுப்பினர்
c . சௌதார் குளம் போராட்டம்
d . காலாராம் கோவில் நுழைவு போராட்டம்
e . மனுஸ்மிருதி எரிதல்
f . சைமன் குழுவிடம் ஆலோசனை வழங்குதலும், திட்டங்கள் தருதலும்

1931 -35 களில்
a . வட்டமேசை மாநாட்டில் மும்முறை பங்கேற்றல்
b . அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரிலும் அதிகமாக படித்தார் என்று புகழப்படுத்தல்
c . பூனா ஒப்பந்தம்

1936 -40 களில்
a . யோள மாநாட்டில் மதம் மாற்றம் பற்றிய முடிவு
b . சாதி ஒழிப்பு பற்றிய உரை
c . ஹரிஜன் என்ற பெயர் சூட்டலுக்கு எதிர்ப்பு
d . பம்பாய் சட்டக் கல்லூரி முதல்வராதல்
e . ரயில்வே தொழிலாளர் பற்றி கருத்துரை
f . ஆலை தொழிலாளர் பற்றி கருத்துரை
g . Independant Labour Party (ILP) தோற்றம்
h . ILP தேர்தலில் வெற்றி
i . மில் தொழிலாளர் போராட்டம்
j . தொழிலாளர் தலைவராக அம்பேத்கர்
k . கீதையின் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுப்பு

1941 -50 களில்
a . அகில இந்திய செட்யுல்டு வகுப்பினர் பெடரெஷேன் என்ற அரசில் அமைப்பை தோற்றுவித்தல்
b . மத்திய தொழில் அமைச்சராகுதல்
c . பாகிஸ்தான் பற்றிய எண்ணங்கள்
d . காங்கிரசும் காந்தியும் தாழ்த்தபட்டோருக்கு செய்ததென்ன?
e . சூத்திரர்கள் யார்?
f . People Education Society (PES)
g . ஒளரங்கபாத்தில் மிலிந்த் கல்லூரி ஆரம்பித்தால்
h . கல்கத்தா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் திரு சரத் சந்திரபோசை அதிக வித்தியாசத்தில் பொதுத்தேர்தலில் வெற்றி
i . அரசியல் அமைப்பு வரைவு குழுவிற்கு தலைவராதல், சட்டம் இயற்றுதல்

1951 -56 களில்
a . ராஜேந்திர பிரசாத், பட்டேல் எதிர்ப்பு / விளக்கம்
b . பாரதிய பௌத்த மகா சபை ஏற்படுத்துதல்
c . பம்பாய் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தல்
d . அமெரிக்க கொலம்பியா பல்கலை கழகத்திலிருந்து கௌரவ பட்டம் பெறுதல்
e . ஹைதராபாத் உஷ்மானிய பல்கலை கழகத்திலிருந்து முனைவர் பட்டம்
f . பம்பாய் நாடளுமன்ற தேர்தலில் திரு நேரு தந்திரத்தால் சாதாரன காங்கிரஸ் பால் வணிகரிடம் தோற்றல்
g . பிரபுத்த பாரத் என்ற ஏட்டை ஆரம்பித்தால்
h . புத்தரும் அவர் தம்மமும் - நூல்
i . பௌத்த நெறி தழுவுதல் - முதல் நாள் 3 இலட்சம் - 2 ம் நாள் 1 இலட்சம் - வீடுபேரின் போது 16 ம் நாள் 1 இலட்சம்


சட்ட படைப்பில் அண்ணல் அம்பேத்கரின் பணி
01 . கிருஷ்ணமாச்சரி புகழும் போது, வரைவு குழுவிற்கு 7 பேர்கள் நியமிக்கப்பட்டர்கள்.

     1 . ஒருவர் இறந்துவிட்டார் - வேறொருவர் நியமிக்கப்படவில்லை
     2 .ஒருவர் விலகிக்கொண்டார்
     3 . ஒருவர் அமெரிக்க சென்றுவிட்டார்
     4 . ஒருவர் வேறொரு அலுவலில் ஈடுபட்டுவிட்டார்
     5 . இருவர் உடல் நலமில்லாமல் டெல்லிக்கு தொலை தூரத்தில் இருந்துவிட்டனர்
     பொறுப்பு முழுவதும் அம்பேத்கர் மீது விழுந்துவிட்டது.

02 . அரசியல் சட்டத்தை எழுதி முடித்து நாடளுமன்றத்தில் வழங்கிய அந்த நாளில் அதை
     - சிறப்பித்து பேசியவர்கள் - 44 பேர்கள்
     - நன்கு பாராட்டி பேசியவர்கள் - 28 பேர்கள்
     - மிகைபட புகழ்ந்தவர்கள் - 04 பேர்கள்
     பாராட்டி பேசியவர்கள் மொத்தம் -76 பேர்கள்

     - பாராட்டியும் குறைகூறியும் பேசியவர்கள் - 6 பேர்கள்
     -பாராட்டாமலும் குறைகூறாமலும் பேசியவர்கள் - 2 பேர்கள்
     - மிக்க குறைகூறி பேசியவர்கள் - 4 பேர்கள்
     குறைகூறி பேசியவர்கள் மொத்தம் - 12 பேர்கள்


     மிக்க குறைகூறி பேசியவர்கள்
     1 . அரசியல் சாசனத்தில் இந்திய கலாச்சாரத்தை கூறவில்லை
     2 . இந்து தர்மத்தைப் பற்றி குறிப்பிடவில்லை
    3 . கடவுள் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை
     4 . காந்தியை பற்றியும் அவரின் தத்துவத்தை பற்றியும் சொல்லவில்லை என்றும் கூறினார்கள்

 03 . வரைவுக் குழுவின் சார்பாக கையெழுத்திடும் இந்த நேரத்தில் நான் (அண்ணல் அம்பேத்கர்) ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

எல்லா உறுப்பினர்களும், எல்லா கூடங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் ஆனால் அனைத்து கூடங்களிலும் முடிவெடுக்க போதுமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இத்தகவலை பார்க்கும் போது சட்ட படைப்பில் அவரது பங்கு பணி அதிகம்.
திரு அன்பு பொன்னோவியம்


                                                                   


வெள்ளி, ஜூலை 30, 2010

இந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்

புத்தர்

கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார்.

தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்)
தயார் - மகா மாயா (சித்தார்த்த பிறந்த 7ம் நாள் இறந்தார்)

இயற் பெயர் - சித்தார்த்த (பொருள் வீருப்பம் நிறைவேரியவர்)
குடும்ப பெயர் - கௌதமர்
குலப் பெயர் - சாக்கியர்

மகாமாயாவின் மறைவினால் சுத்தோதனர் மகாமாயாவின் தங்கை மகா பிரஜாபதியை மணந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் நந்தா. நந்தா சித்தார்த்தவின் இளைய தம்பி. அத்தை மகன் தேவதத்தன்.

8 வயதில் கல்வியை தொடங்கினர். 16ம் வயதில் ஒத்த வயதுடைய மாமன் மகளான யசோதரையை மணந்தார். 20 வயதில் சக்கிய சங்கத்தில் ஊறுப்பினரானார். 28 வயது அடைந்த போது பெரும் மோதல் நீகழ்ந்து விட்டது. துறவு மேற்கொண்ட போது அவருக்கு வயது 29 , ஓர் ஆண் குழந்தை இராகுலன் பிறந்து இருந்தது. கபில வசதுவில் இருந்த பரத்வாஜரிடம் துறவு ஏற்றார்.

கபில வசதுவை விட்டு மகத நாட்டின் தலைநகரான இராஜகிரகத்தை 400 மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

நிலையான வசிபிடத்தை வைத்துக்கொள்ளாமல் ஒரு மரத்தின் நிழல் அல்லது தனிமையான குகையிலேயே தங்கினர். வெறுங்காளோடும் வெறுந்தலையோடும் பல மைல்கள் நடந்தே சென்றார். தலையையும், முகத்தையும் மழித்துக்கொண்டும், உணவு ஏற்பத்ற்கு ஒரு பாத்திரமும் ஊடலை மறைக்க போதுமான உடையுடன் பல அறிஞர்களை நோக்கி நடந்தார்.

தவ முறை, பக்தி முயற்சி, யாக முயற்சி இவற்றை தேர்ந்து எடுக்கவில்லை. வைசாலியில் உள்ள ஆராதகலாம் என்பவரிடம் தியான மார்க்கத்தின் 7 நிலைகளையும் நன்கு கற்று அறிந்தார். உத்தக ராமபுத்தகர் என்பவரிடம் தியான மார்க்கத்தின் 8 நிலையை கற்று அறிந்தார். கொண்டண்ண, பத்திய, வாப்பா, மகா நாமா, அச்சாசி என்ற 5 துறவிகளுடன் சேர்ந்து கயாவில் உள்ள நிரஞ்சனை ஆற்றங்கரையில் உடலை வருத்தி கடும் வீரத முயற்சியில் ஈடுபட்டார்.

வாழ்வின் உண்மைத் தன்மையை அவர்களால் விளக்க இயலவில்லை என்பதால் உண்மையை உணரத் தாமே முயற்சி செய்ய முடிவேடுத்தார். எனவே கடும் வீரத முயற்சியை சுஜாதா என்ற பெண் கொண்டுவந்த ஊணவை பெற்றுக்கொண்டு வீரதத்தை முடித்துக்கொண்டார்.

தம்முடைய 35 வயதில் புத்தரானார். இது வரை 25 புத்தர்கள் தோன்றினார்கள். அவர்களில் கடைசியாக வந்தவர் கௌதம புத்தர். தமது 80 வது வயதில் கி. மு 483ல் குசி நகரில் (பீகார் உத்தர பிரதேஷ்) நிர்வான மோட்சம் அடைந்தார்.

சைன சமயத்தின் நிறுவனரான
வர்த்தமான மகாவீரர்
ஆசிவக மதத்தின் நிறுவனரான
கோசலி மக்கலி என்பவரும் புத்தர் காலத்திலேயே வாழ்ந்து
இருக்கிறார்கள்.

இயல்பு

01 . புத்தராய் ஆவதற்கு முன் 10 வாழ்வுகளில் போதி சத்துவராக இருந்தாக வேண்டும்.

02 . ஆண், பெண், அரசன், செல்வந்தர், வறியவர், கொள்ளையர் என எந்த சிறு வேறுபாடும் பாராட்டாமல் அனைத்து வகுப்பர்க்கும் அவருடைய போதனைகளை தொடர்ந்து 45 ஆண்டுகள் அளித்தார். தீண்டாமை, சாதி, உயர்வு, தாழ்வு என்பது ஏதும் இல்லை.

03 . முன் மாதிரியாக வாழ்ந்தார். தாம் கடைபிடித்தவையே போதித்தார், போதித்தவையே கடைபிடித்ததார்.

04 . புத்தர் பிறரை போன்று இயல்பன மனிதர் என்பதற்கு மேலான எதையும் அவர் கோரவில்லை. அவரை கடவுள் அல்லது இறைதூதர் என வருணிக்கப்படுவதையும் மறுத்தார்.

05 . புத்தரின் போதனைகள் அனைத்தும் அவருடைய புதியகண்டுபிடிப்பேயாகும். அனைத்தும் விஞ்ஞான தன்மை
உடையவை. அவற்றில் அதிசயங்கள் விசிதிரங்கள் ஏதும் இல்லை. இயற்கை மீறிய சக்தி (தெய்விகம்) இருப்பாதகவும் கூறவில்லை.

௦06 . புத்தர் ஒருவரே மோட்சம் அளிப்பதாக உறுதிமொழி எதையும் அளிக்காத போதகர். தானே தனக்கு பாதுகாவலன், ஒருவனை மற்றவன் காக்க இயலாது.

07. தம் சமயத்தில் தனக்கு என இடத்தை வைத்துக்கொள்ள புத்தர் முனையவில்லை. தன் சமயத்துக்கு வெளியிலேயே தன்னை நிறுத்திக்கொண்டர்.
08 . தம்மீது உள்ள மதிப்பின் காரணமாக மட்டும் அவருடைய போதனைகளை ஏற்றுக்கொள்ளகூடாது என முழு சிந்தனை சுதந்திரத்தை அளித்தார். இயற்கை மீறிய சக்திகளின் பால் கொள்ளும் அச்சத்தை அகற்றவும், குருட்டு நம்பிக்கைகளை நிராகரிக்கவும், உள்ளதை உள்ளவாறு அறிய சிந்தனை சுதந்திரத்தை வழங்கி தர்க்கத்தை ஊக்குவித்தார்.

09 . உண்மைகளை உணர்ந்துக்கொள்ள போதனைகள் புத்தரிடமிருந்து வருகிறதா அல்லது வேறு ஒருவரிடமிருந்து வருகிறதா என்று பார்க்கக் கூடாது. அப்போதனைகளில் உண்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்

10 . குறைகள் அற்றவை என ஏதுமில்லை. இறுதியானது என ஏதுமில்லை. மறுபரிசிலனைக்கும் மறுபரிசோதனைக்கும் உரியவை. உண்மையை அறிய கருத்து சுதந்திரம் வேண்டும். யாரும் கேள்விகளால் பரிசிலிக்கவும் எவ்வளவு தூரம் அதில் உண்மையுள்ளது என்று அறிய கூடிய வகையில் அவருடைய போதனைகள் வெளிப்படையாக மக்கள் நன்கு அறிந்த அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய் மொழியிலேயே அளிக்கப்பட்டது.

11 . வந்து நம்புங்கள் (Come and Believe) என்று இல்லாமல், புத்தரின் போதனைகள் புரிதல் மற்றும் கண்டுணர்தல் இவற்றை அடிப்படையாக கொண்டவை (Come and See).

நம்பிக்கை என்பதில் கண்டுணர்தல் என்பது இல்லை. அறிவு என்பது முதுமை போன்று ஒருவர் விரும்பினாலும் விரும்பிபாவிட்டாலும் அவரை வந்து அடையும் ஒரு பொருள் அல்ல.

அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும்.

எனென்றால் ஐயம் ஐயமில்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது.

புரிந்துணர்தல் இல்லாமல் ஒருவரை சந்தேகம் கொள்ளக் கூடாது என்று சொல்லுவதும் அப்படியே ஏற்க்க வேண்டும் என கட்டாயப்படுதுவதும் அறிவுடமையாகாது.

எனவேதான் புத்தர் இறக்கும் தருவாயிலும் பிக்குகளிடம் ஐயம் இருக்குமாயின் கேட்கும் படி பல முறை கேட்டுக்கொண்டார்.

12 . புத்தர் தன்னிடம் கேட்கப்பட்ட எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்கவில்லை. உத்தேசமான வினாக்களுக்கு விடை தேடுவதை விட அவசியமானதுயாதுவெனில் உண்மையான பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றிற்கான சரியான தீர்வை காண்பதே என்பதால் மாலுங்யாபுத்த என்பவருடைய 10 வினாக்களுக்கு விடை அளிக்கவில்லை.

13 . வேள்வி செய்வது - கடவுளுக்கு அர்பணம் செய்வது - பேய் பிசாசு விரட்டுதல்- ஜாதகம் கணித்தல் - நல்ல நாள் குறித்தல் இவைகளில் இருந்து புத்தர் விலகி இருந்தார்.

14 . புத்தர் பௌத்தர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல. புத்தருக்கு பின் வந்த எல்லா மதங்களும் பல நல்ல கருத்துகளை புத்தரிடம் இருந்து பெற்றுக்கொன்டுள்ளது. அனைவருக்கும் பொருந்தும் நெறிமுறைகள் புத்தருக்கு முன் இந்தியாவில் எந்த மதமும் வரைந்தது இல்லை.

15 . தம் கோட்பாட்டை போன்று பிற மத கோட்பாட்டுக்கும் மதித்தது மட்டும் அல்லாமல் ஒருபோதும் கடிந்தது (Condemn) இல்லை. தவறுதலாக கூட ஒருபோதும் கனிவற்ற வார்த்தைகள் அவர் உதடுகள் உச்சரித்து இல்லை, கோபத்தில் கொதித்ததும் இல்லை.

16 . மனித வரலாற்றில் முதன் முறையாக உயிர்களை பலி இடுதல் கூடாது, காணிக்கை அளிக்கக்கூடாது என மக்களிடம் முறையிட்டார். பௌத்தத்தில் வழிபடுதல் என்பது ஏதும் இல்லை மாறாக மரியாதையை செலுத்துவதாகவே உள்ளது.

17 . பெண்களுக்கான முதல் சமய மரபை நிறுவினவர்- அடிமை முறையை முதன் முறையாக அகற்றுவதர்க்கு முயற்சித்தவர்.

18 . கடவுளின் உதவி ஏதும் இன்றி மனிதன் தன் வாழ்நாளில் தாமே விடுதலை (முக்தி) அடையமுடியும் என முதன் முதலில் உரைத்தவர் புத்தர்.

தம்மம்
01 . புத்தரின் போதனைகள் தம்மம் என அழைக்கப்படுகிறது. தம்மம் அனுமானத்தை அடிப்படையாக கொண்டது இல்லை. இது காரண காரியத்தை (Cause and Effect) அடிப்படையாக கொண்டது.

02. பௌத்ததில் நம்பிக்கை, புனிதம், பாவம், சொர்க்கம், நரகம் என்பது இல்லை.

03 . புத்தரின் போதனைகள் விரக்தி தத்துவமோ அல்லது களிப்பு தத்துவமோ அல்ல மாறாக நடுநிலையானது

04 . புத்தரின் போதனைகள் மனித வாழ்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை துன்பத்தின் இருப்பிடத்தை அறியவும் அவற்றை நீக்கும் வழியைக் கூறுவதாகவும் உள்ளது.

05 . அவருடைய போதனைகள் கடவுள் மற்றும் ஆன்மாவோடு எந்தத் தொடர்பும் இல்லாததாய் இருக்கிறது.

06 . அவருடைய போதனைகள் இறப்புக்கு பின்னான வாழ்க்கையோடு எந்தத் தொடர்பும் இல்லாததாய் இருக்கிறது. இங்கு வாழும் வாழ்க்கைக்கே உரியது.

07 . சடங்குகள், சம்பிரதாயங்கள் எதையும் அவருடைய தம்மம் பொருட்படுத்துவாதயில்லை .

08. அவருடைய போதனைகள் பல பிற மதங்களில் பின்பற்றபடுகின்றன

I )
a ) இந்து மதம் வேள்விகளில் உயிர் கொலைகளை நீக்கி மாமிச
உணவை நீறுத்தி சைவ உணவை ஏற்கத் தொடங்கியது.
b ) அரச மர வணக்கத்தை ஏற்றுக்கொண்டது
c ) பௌத்த மடங்களை பின்பற்றி இந்து மதத்தினர் மடங்களை
அமைத்தது
d ) சங்கரர் சூனியவாத பெளத்தத்தின்று மாயாவாத கருத்தினை
பெற்றுக்கொண்டார்

II ) புத்தர் புதுப்பித்தவை
a ) கர்மா கோட்பாட்டை புதிய கம்மா என்றும்
b ) கூடு விட்டு கூடு பாய்தல் கோட்பாட்டை புது பிறப்பு என்றும்
c ) ஆன்மாவின் மோட்சம் என்ற கோட்பாட்டை நிப்பணம்
என்றும் புதுப்பித்தார்

III ) புத்தர் மிகச் சிறந்தவையாக அப்படியே ஏற்றுக்கொண்டது
கபிலரின் சாங்கிய தத்துவமே. இது காரண காரியத்தை ( Cause
and Effect) அடிப்படையாகக் கொண்டது.

"உலகம் எக்கலாத்திலும் அறிந்துள்ள
ஒழுக்க கோட்பாடுகளில் முழு நிறைவனது
 புத்தரின் கோட்பாடகும்"  பேராசிரியர் மாக்ஸ் முல்லர்

வியாழன், ஜூலை 08, 2010

அறிவர் அண்ணல் அம்பேத்கர்

எவ்வளவு அறிவு சிந்தனையும், கல்வி அறிவும் கொண்டு சமுக புரட்சி செய்து இருந்தாலும், புராணத்திற்கும், முடநம்பிக்கைக்கும் முக்கியத்துவம் அளிபவர்கள் சமுக புரட்சிக்கு, அறிவுசிந்தனைக்கு மதிப்பு அளிப்பது இல்லை.


அறிவாளிகள், நற்குணம் உடைவர்கள் என எந்த ஒரு சாதியையும், மதத்தினரையும், மொழி பேசுபவர்களையும், நாட்டவர்களையும் சொல்ல முடியாது


அறிவர் அண்ணல் அம்பேத்கர்ரை குறை சொல்பவர்கள்,அவறுடன் ஒப்பிட்டு சமுக புரட்சி செய்தவர்கள் யார் யார்? எவ்வாறு என்று சொல்லுங்கள்.

மெத்த படித்த பலர் இருந்தாலும், அரசியல் சட்டம் எழுத முடியவில்லை. இந்து சட்டம் ஒன்றை எழுத, மெத்த படித்த பலர் இருந்தாலும் அதை ஆங்கிலேயன் எழுதி விட்டு சென்றான்.

பெண் கல்வி, சொத்து உரிமை, மறுமணம், கோவில் செல்ல அனுமதி போன்ற பல சமுக உயர்வுக்கு (சமத்துவம்) இவற்றுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்களை (புத்தர், மகாத்மா ஜோதிப புலே, அண்ணல் அம்பேத்கர், மற்றும் பலர்) சாதி மதம் மொழி என பிரித்து பார்த்து, பிறப்பின் அடிபடையில் மரியாதை அளிக்காமல், செயல் அடிபடையில் மரியாதை அளியுங்கள்.

எந்த சாமியாராவது பெண் கல்வி, சொத்து உரிமை, மறுமணம் பற்றி சீரிய சிந்தனை போதித்தனறா.

கல்வி கடவுள் என சொல்லப்படும் சரஸ்வதி கூட
-கல்வி (அறிவு) முக்கியத்தை பற்றி ஏதும் வாய் திருந்தது இல்லை
-பெண் கல்வி பற்றி நீனைததும் இல்லை
-கல்வி கடவுள் என சொல்லபடாத கடவுள், புனிதம் என சொல்லப்படும் "பகவத் கீதை" அளிக்கும் போது, ஏன் இந்த கல்வி கடவுள் என சொல்லப்படும் சரஸ்வதியால் கொடுக்கமுடிவல்லை?

இக்கல்வி கடவுள் சரஸ்வதியால் எப்படி பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். இதை போன்று செல்வக்கடவுள் என சொல்லப்படும் இலட்சுமியால் எப்படி பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

அறிவர் அண்ணல் அம்பேத்கர்ரை குறை சொல்பவர்கள், அவரால் அனுபவிப்பதை பெற மறுபிர்களா. உங்கள் பெண் குழந்தைகளுக்கு கல்வி, சொத்து உரிமை, கோவில் செல்ல மறுபிர்களா?

இந்தியாவின் மே தின தந்தை

                   இந்தியாவின் முதல் தொழிலாளர் நல அமைச்சர்
                        [1942  பிரிட்டிஷ் வைசிராய் கவுன்சில்]

          இந்தியாவின் தொழிலாளர் - அரசு  உழியர்களின் சட்ட பாதுகாப்பின் தோழர்
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் - M.A., Ph.D., M.Sc., D.Sc., L.L.D., D.Litt, BAR-AT-LAW



1942ம் ஆண்டு பிரிட்டிஷ் வைஸ்ராய் மாண்புமிகு லின்லித்தோ பிரபுவின் அமைச்சரவையில் முதல் தொழிலாளர் நல அம்மைச்சரக "இந்தியாவின் தொழிலாளர்கள் - அரசு உழியர்களின் சட்ட பாதுகாப்பு தோழராக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜூலை 20ம் தேதி பதவியேற்றார் .


1880ல் ஐரோப்பா, வட, தென் அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரிய ஆகிய நாடுகளில் முதல் முறையாக 8 மணி நேர வேலை வேண்டி பாட்டாளி வர்க்கம் வேலை நிறுதத்தை ஆரம்பித்தது. 1888ல் ஜப்பானிலும் 1885ல் ரஷ்யாவிலும் 1886ல் பிரான்சிலும் வேலை நிறுத்தமும் ஆரம்பித்தனர். 1886ல் சிக்காகோ நகரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி 8 மணி நேரம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போதிருந்த அமெரிக்க முதலாளிகள் கூட்டம் அரசின் துணையோடு காவல் துறையை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டு கொல்லபட்டர்கள்.  இரத்த ஆறு வெள்ளமென ஓடியது. அந்நிகழ்வில் இன்று வரையில் அங்கு எத்தனை தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற விவரம் உலகிற்கு புரியாத புதிராகும். அதன் பின்னர் 1888ல் லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் மகா சபை மே தினத்தை சர்வதேச தொழிலாளர்களின்   போரட்ட தினமாக கருத வேண்டுமென தீர்மானம் நீறைவேற்றியது.  1891ல்  மே தினம் அதிகரபூர்வமாக சர்வதேச தொழிலாளர் இயக்கதின்  நினைவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 1917ல் ரஷியாவில் அக்டோபர் புரட்சிக்கு பின் மே தினம் அதிகரபூர்வமான தேசிய விடுமுறையாக அறிவிக்கபட்டது.


ஆனால் அதிகபடியாக எந்தவகையான போராட்டமும், உயிர் இழப்புகளும் இன்றி, ஒரு சொட்டு இரதம் கூட சிந்தாமல், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த நேரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய தொழிலாளர்களின் அரசாங்க கூட்டத்தில் மத்திய மாநிய அரசுகளின் சார்பாக 8 மணி நேர வேலையை பெற்றுத்தந்தார்கள்.


அப்போது 8 மணி நேர வேலைகோப்பில் கையெழுத்து இட்டுவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வருகின்றபோது அந்த அலுவலகத்தை விட்டு வெளிய வருகின்ற போது அந்த அலுவலகத்தின் 18 படிகளிலும் 18 தொழிலாளர்கள் குப்புர படுத்துகொண்டு இருந்தார்கள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் உதவியாளர் திரு நானக் சந்த்ரட்டுவை அழைத்து வினவிய போது, நமது நாட்டிற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தல் தோழர். சுப்பையா அவர்களது தலமையில் 8 மணி நேர வேலை வேண்டி நடத்திய போரட்டத்தில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் 8 மணி நேர வேலை வாங்கித்தந்த அண்ணலுக்கு  நன்றி கடன் செலுத்தும் வகையில் அண்ணலுடைய காலால் எங்கள் முதுகுமீது நடந்து செல்லவேண்டும் என
தொழிலாளர்கள்  கூறி படுத்து கொண்டு இருகிறறார்களம் என உதவியாளர் கூறினார். அப்போது அண்ணல் அவர்கள் இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்று கூறி, அவர்களை எழுந்திருக்க வைத்து பின் அண்ணல் அவர்கள் வீடு திரும்பினர்கள்.


மேற்கண்ட 8  மணி நேர வேலையை பெற்றுத் தந்த பிறகு.

1.  வேலைக்கு உத்தரவதம்

2 . சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு விடுமுறை

3 . தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் குறித்த சட்டம் (Trade Union Act)

4. தொழிலாளர்கள் வீபத்துகாலங்களில் விடுப்பு யிடுதல் (Medical Leave)

5 . தொழிற்சங்க கூட்டங்களில் கலந்துகொண்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

6. பெண் ஊழியர்களுக்கு மகப்பெறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Maternity Benefit Act)

7. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு

8.ஊழியர்களின் வீடுப்புகளை சேர்த்து அதனை பணப்பயனாக மற்றிகொள்ளும்   ஈட்டிய விடுப்பு ( Earned Leave)

9. அலுவலக நேரம் போக மிகுதி நேரம் பணிபுரிந்தால் அதற்க்கு தனிச்சம்பளம் வழங்குதல் (Over Time OT)

போன்றதொழிலாளர் நலச்சட்டங்களை இந்திய திருநாட்டில் கொண்டுவந்த மாமேதை தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

1942ல் ஆகஸ்ட் மதம் 7 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் டெல்லியில், முதலாளி-தொழிலாளிகளின் இணைப்பு மாநாடு நடத்தி தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும், தத்தமது பிரச்சனைகளை நேரிலே சந்தித்து ஊரையாடி சமரசம் (Conciliation) செய்துகொள்ள வழிவகை கண்டார். அந்த நடைமுறைகள் தான் இன்றும் தொழிலாளர் நல துறையில் பிரதான பணியாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. அதன் பின்னேர் 1946ல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை (Minimum Wages Act) தாக்கல் செய்து  குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948ல் நடைமுறைக்கு வர ஊழைத்த உத்தமராவார்.


1945ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி மத்திய தொழிலாளர் நல  ஆணையர் (Central Labour Commissioner) என்ற புதிய பதவியினை ஏற்படுத்தி தொழிலாளர்களின் நலனை பாதுகாத்த மாபெரும் மகான் ஆவார்.

ஆகவே   இந்தியாவின் மே தினத்தையும், தொழிலாளர்கள் - அரசு ஊழியர்களின் சட்டபாதுகாப்பு தோழராகவும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றும் இன்றும் என்றும் உள்ளார்.

  G . ஆறுமுகம் B.Sc., M.A., B.L.,