புதன், ஜூன் 03, 2026

பௌத்த சமயத்தின் இருமொழிகள் (அ) இரு பிரிவுகள்

ஏன் திரிபிடகம் எழுதப்பட்டது?

கௌதம புத்தரின் தாய்மொழி மகதி பிராகிருதம் (Magadhi Prakrit) (அ) அர்த்தமகதி ஆகும். இது தற்கால பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசப்
பகுதிகளில் புழக்கத்தில் இருந்த ஒரு பழங்கால பேச்சு வழக்குப் மொழியாகும்.
 
பலர் புத்தரிடம் வேண்டியும் பௌத்த போதனைகளை எழுத்து வடிவில் பதிய புத்தர் விரும்பவில்லை. பகவன் புத்தர் காலத்தில் எந்த தத்துவங்களும் எழுத்து வடிவில் இல்லை. சூத்திரங்கள் பிக்குகள், பிக்குணிகள் மற்றும் இல்லறத்தோர் ஆகியோர் மனப்பாடம் செய்து வாய்மொழியாகவே அடுத்த தலைமுறைக்குக் கடத்தினர். கௌதம புத்தரின் பரிநிப்பாணத்திற்குப் பிறகு, அவரது போதனைகளைப் பாதுகாக்கவும், ஒழுக்க விதிகளைத் தொகுக்கவும் திரிபிடகம் பாலி மொழியில் எழுதப்பட்டது.
 
புத்தரின் போதனைகளை அழிக்காமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், பிக்குகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் திரிபிடகம் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது.
 
பௌத்த போதனைகள் முதன் முதலில் பாலி மொழியில் எழுதப்பட்டது பின்னர் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.

பாலி மொழி


முதல் பௌத்த சங்கம்
கௌதம புத்தரின் பரிநிப்பாணத்திற்குப் பிறகு, அவரது போதனைகளைப் பாதுகாக்கவும், ஒழுக்க விதிகளைத் தொகுக்கவும் முதல் பௌத்த சங்கம் கூட்டப்பட்டது. இந்தியாவின் ராஜகிருகத்தில் இச்சங்கத்தில், வணக்கத்திற்குரிய மகாகாசியபர் தலைமையில் 500 அரகந்த பிக்குகள் ஒன்று கூடினர். புத்தரின் போதனைகள் அனைத்தையும் ஓதிப் பார்த்தனர். வணக்கத்திற்குரிய உபாலி ஓதிய 'வினயம்' 'வினய பிடகம்' என ஏற்றுக்கொள்ளப்பட்டது. வணக்கத்திற்குரிய ஆனந்தர் ஓதிய 'தம்மம்' 'சூத்திர பிடகம்' என நிலைநிறுத்தப்பட்டது.

காலம் கிமு 483 (புத்தர் மறைந்த ஆண்டு).
இடம்: ராஜகிரகத்தில் உள்ள சப்தபர்னி (சத்தபானி) குகை, பிகார்.
தலைமை: மூத்த துறவி மகாகாசியபர்.
ஆதரவு: மகதப் பேரரசர் அஜாதசத்ரு.

இரண்டாவது பௌத்த சங்கம்
கௌதம புத்தரின் பரிநிர்வாணத்திற்குப் பிறகு, கிமு 383-ல் (சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்தியாவின், பண்டைய பீகாரின் வைசாலி நகரத்தில் நடைபெற்றது.

புத்தரின் பரிநிப்பாணம் நிகழ்ந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, வினயம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை விவாதிப்பதற்காக இரண்டாவது பௌத்த சங்கம் வைசாலியில் கூடியது. அப்போது சங்கத்தில் முதல் பிளவு ஏற்பட்டது. இதில் மகாசங்கிகா பிரிவினர் (மகாயானம்), தேரவாதிகளை விட்டுப் பிரிந்து சென்றனர்.
 
புத்தரின் போதனைகளுக்குச் சூத்திரங்களையும் வினயத்தையும் மட்டுமே இறுதி அதிகாரமாகக் கொள்ள மகாசங்கிகா பிரிவினர் தயக்கம் காட்டியதே இப்பிரிவினைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
 
இப்பிரிவினையே பிற்காலத்தில் மகாயான பௌத்தத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இப்பிரிவே பின்னர் வட ஆசியப் பிராந்தியத்தில் (சீனா, திபெத், ஜப்பான், கொரியா) பௌத்தத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்தது.


மூன்றாவது பௌத்த சங்கம்
மூன்றாவது பௌத்த சங்கம் (Third Buddhist Council) கி.மு. 250-ல் மௌரியப் பேரரசர் அசோகரின் ஆதரவில் பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா) கூட்டப்பட்டது.

கொள்கை சார்ந்த கருத்துகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் மேலும் பல பிளவுகளுக்கு வழிவகுத்து. இச்சங்கத்தில் அபிதம்ம பிடகம் ஓதிப் பார்க்கப்பட்டது. நவீன பாலி திரிபிடகம் இப்போது அடிப்படையில் முழுமை பெற்றுள்ளது. 


நான்காவது பௌத்த சங்கம்
நான்காவது பௌத்த சங்கம் (Fourth Buddhist Council) என்பது பௌத்த மத வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது கி.பி. 72-ஆம் நூற்றாண்டில் குஷான மன்னரான கனிஷ்கரின் (Kanishka) ஆதரவின் கீழ், காஷ்மீரில் உள்ள குண்டல்வனத்தில் (ஸ்ரீநகர்) நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு பௌத்த அறிஞர் வசுமித்ரர் (Vasumitra) தலைவராகவும், அஸ்வகோஷர் (Asvaghosa) துணைத் தலைவராகவும் தலைமை தாங்கினர்.

இந்தச் சங்கத்தின் போதுதான் பௌத்தம் அதிகாரப்பூர்வமாக ஹீனயானம் (Theravada) மற்றும் மகாயானம் (Mahayana) என இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிந்தது.

திரிபீடக (Tripitaka) நூல்களுக்கு விரிவான விளக்கவுரைகள் தொகுக்கப்பட்டு, 'மகாவீபாஷா' (Maha-Vibhasa) என்னும் தத்துவார்த்த நூல் சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்டது.
பௌத்தக் கலப்பு சமஸ்கிருதம்


எப்பொழுது திரிபிடகம் எழுதப்பட்டது?

கௌதம புத்தரின் போதனைகளைக் கொண்ட திரிபீடக (Tipitaka) நூல், முதன்முதலில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் (1st Century BCE) இலங்கையில் பாலி மொழியில் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது.

அதன்பின், பொ.ஆ. 1-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், மகாஞான பௌத்த (Mahayana) பிரிவைச் சேர்ந்த அறிஞர்களால் புத்தரின் போதனைகள் சமஸ்கிருத மொழியில் (Buddhist Hybrid Sanskrit) மொழிபெயர்க்கப்பட்டு, அவை சமஸ்கிருத திரிபீடகமாக உருவாக்கத் தொடங்கின. 

நான்காவது பௌத்த சங்கம் பிறகு திரிபிடகம் பாலிமொழில் முதன் முதலில் எழுதப்பட்டது. பின்னர் சமஸ்கிருதத்தில் திரிபிடகம் எழுதப்பட்டது.  புத்தரின் போதனைகள் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அவை சமஸ்கிருத திரிபீடகமாக உருவாக்கத் தொடங்கின. இது பௌத்தக் கலப்பு சமஸ்கிருதம் (Buddhist Hybrid Sanskrit) என்று குறிப்பிடப்படுகிறது


பாலி மொழி (Pali) மற்றும் சமஸ்கிருத மொழி (Sanskrit) இடையே உள்ள வேறுபாடுகள்

01)தேரவாத பௌத்தம் திரிபிடகம் எழுதப் பாலி மொழியைப் பயன்படுத்தியது. மகாயான பௌத்தம் திரிபிடகம் எழுதப் வடமொழியைத் (சமஸ்கிருதம்) பயன்படுத்தியது.

02)பாலி மக்கள் மொழி, எளிதில் அணுகக்கூடிய வட்டார மொழி. சமஸ்கிருத மொழி பேச்சு மொழியல்ல. கடவுளை வழிபட, துதிக்க மந்திரங்களை ஓதிய வாய் மொழி.

03) பாலி மொழியில் தான் திரிபிடகம் முதன் முதலில் எழுதப்பட்டது. பாலி மொழிக்கு பிறகு சமஸ்கிருத மொழியில் திரிபிடகம் எழுதப்பட்டது.

04)இந்திய வட்டார மொழிகளில் ஒன்று பாலி மொழி. சமஸ்கிருத மொழி இந்தியவிற்கு வந்த அந்நிய மொழி.

05) பாலி மொழில் பகவன் புத்தர் வழிகாட்டி (தாதகர்). வரலாற்று ரீதியான, ஞானம் பெற்ற மனித ஆசிரியராகக் புத்தர் கூறப்படுகிறார். தேரவாத பௌத்தம் புத்தரின் அசல் போதனைகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறது. சமஸ்கிருத மொழில் பகவன் புத்தர் கடவுளாக கூறப்படுகிறார். பக்தியையும் உள்ளடக்கியுள்ளது சமஸ்கிருத மொழி.

06) பாலி மொழி வரலாறு மற்றும் சான்றுகளை கொண்டது. பாலி மொழி பகவன் புத்தர் மனிதர்கள் செய்யும் செயலை தவிர வேறு செயலை செய்ததில்லை. சமஸ்கிருத மொழி பல கற்பனைகளை கொண்டது, மனிதர்களால் செய்ய முடியாத செயலை பகவன் புத்தர் செய்துள்ளார். 

07)தேரவாத பௌத்தம் (இலங்கை, தாய்லாந்து, மியான்மர், கம்போடியா மற்றும் லாவோஸ்) ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மகாயான பௌத்தம் இந்தியா, திபெத், கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

08) பாலி மக்கள் மொழி, மொழியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. சமஸ்கிருதம் ஒரு பிராமண வழிபாட்டு மொழியாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே வடமொழி படிக்க, ஓத தகுதியானவர்கள். தகுதியற்றவர்கள் சமஸ்கிருத மொழியை கேட்டாலோ, ஓதினாலோ கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்.

09) மகாயானம் இந்தியாவுக்கு வெளியே பரவியபோது, இதன் சமஸ்கிருத நூல்கள் பாரம்பரிய சீன மொழி, திபெத்திய மொழி, ஜப்பானிய மொழி மற்றும் கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தாமரை சூத்திரம் மற்றும் இதய சூத்திரம்.

10) பாலி சூத்திரங்கள் விநய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம். மகாயான சூத்திரங்கள் பிரஜ்ஞாபாரமித சூத்திரம் (Prajnaparamita Sutra) சூனியவாதம், சத்தர்ம புண்டரீக சூத்திரம் (Lotus Sutra), அவதம்சக சூத்திரம் (Avatamsaka Sutra).

 

 * சமஸ்கிருதம் (சம்ஸ்கிருதம்) என்ற சொல்லின் உண்மையான பொருளே செப்பனிடப்பட்ட மொழி அல்லது நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதாகும்.

* மகாயான பௌத்தத்தின் மிகப்பெரிய தவறு சமஸ்கிருத மொழி தேர்வு